Author Topic: Self-Realization - Poems (Kural Venpa) in Tamil  (Read 342 times)

shanmugam

  • Newbie
  • *
  • Posts: 3
    • View Profile
Self-Realization - Poems (Kural Venpa) in Tamil
« on: August 23, 2018, 12:45:09 PM »


1. தன்னை உணர்ந்தறிந்து நானென்ற பொய்நீத்தல்
மன்னிடும் இன்பம் தரும்.

2. அறியும் அனைத்தும் திரைப்படம்போல் மாறும்
அறிநிலை மாறாத் திரை.

3. நானென தென்றப் பிரிவினையால் நேர்துன்பம்
ஞானத்தால் நீங்கி விடும்.

4. பன்மை மறைந்த நிலைபெற்றால் தன்னிருப்பின்
தன்மை புரிந்து விடும்.

5. நிறைவின்றி மந்திபோல் தாவும் மனது
குறைதீர்க்கும் உண்மை உணர்ந்து

6. பார்க்கும் பொருளின் நிலையாமை தேர்ந்துபயம்
தீர்க்கவே தன்னை அறிந்து

7. வெளியே குருவைநீ தேடாதே உள்ள
ஒளியே குருவென் றுணர்

8. சிவத்தினைத் தானென் றுணர்ந்தாற்றும் ஞானத்
தவத்தால் அடங்கும் மனது

9. வேந்தனும் ஏழையே மாயை எனும்கடலை
நீந்திக் கடந்தவன் முன்

10. உனக்குள்ளே தேடின் தெரியுமொளிக் கீற்று
மனக்கவலை மாய்க்கும் மருந்து

நேற்றிரவுதான் 'தன்னை உணர்தல்' என்ற தலைப்பில் பத்து குறள் வெண்பாக்களை எழுதிப் பதிவு செய்து இருந்தேன். பதிவு செய்தபின்புதான் அதில் ஒரு சிறிய பிழை இருப்பதை உண்ர்ந்தேன்.

வெண்பாவில் எப்போதும் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இரண்டு தளைகள் மட்டுமே வரவேண்டும். தளை என்றால் என்னவென்று நீங்கள் அறியவில்லை எனினும் பரவாயில்லை. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதில்தான் ஒரு நகைச்சுவை இருக்கிறது.

பதிவிடப் பட்டுவிட்ட என் கவிதையைப் படித்துச் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்தத் தவறை உணர்ந்தேன். எட்டாம் குறட்பாவிலே, 'சிவத்தைத் தானென்' என்று எழுதி இருந்தேன். இங்கு, 'மாமுன் நேர்' வருவதலால் தளை தட்டியது. 'மாமுன் நிரை' அல்லது 'விளமுன்நேர்' தான் வர வேண்டும். அதனால் அதை 'சிவத்தினைத் தானென்' என மாற்றி எழுதினேன். இப்போது 'விளமுன்நேர்'வருவதால் வெண்பாவின் செப்பலோசை மீண்டு எழுந்து விட்டது.

பின்புதான் இதை யோசித்தேன். ஒருவனுக்குத் தன்னை உணர ஒரு பெரும் தளையாக இருப்பது 'நான்' என்னும் அகங்காரம் மட்டுமே. இது ஒரு தளை மட்டும் அல்ல. அத்வதைமான பரம்பொருளை விட்டுத் தான் 'தனி' என்று உணர முளைத்த 'தலை' போலவும் கூட. பரம்பொருளாகிய இந்த சிவம் பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததாக ஒரு கதை உண்டு. அதே சிவம்தான் அகங்காரம் என்ற தளையையும் கொய்கிறது. இதை உணர்த்துவது போல்தான் சிவம் என்ற வார்த்தைக்கு அருகிலும் தளை தட்டியதோ என்று தோன்றியது! சிறிது சிரித்துக் கொண்டேன்.

தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது மனதின் இயல்பு. ஆங்கிலத்தில் இதை அபபீனியா (Apophenia) என்பார்கள். இப்போது நான் விளக்கியதும் அதற்கு ஒரு உதாரணம்தான்.

கீழே உள்ள ரொட்டித் துண்டில் இயேசுவின் படம் தெரிகிறதா? இதுவும் அபபீனியா தான்.



இது வெறும் மனம் செய்யும் மாயை. ஆனால் இந்த மாயையும் இக்குறட்பாக்கள் கூறும் உண்மையை எதிரொலித்தது ஒரு அழகான விஷயம்தான்!
« Last Edit: August 23, 2018, 01:07:55 PM by shanmugam »

shanmugam

  • Newbie
  • *
  • Posts: 3
    • View Profile
Re: Self-Realization - Poems (Kural Venpa) in Tamil
« Reply #1 on: August 23, 2018, 01:03:19 PM »