Verse 12 and 13 of the Exposition of Truth:
வாராய் என் மகனே தன்னை
மறந்தவன் பிறந்து இறந்து
தீராத சுழல் காற்றுற்ற
செத்தை போல் சுற்றிச் சுற்றிப்
பேராத கால நேமிப்
பிரமையில் திரிவன் போதம்
ஆராயும் தன்னைத் தான் என்று
அறியும் அவ்வளவும் தானே. (12)
தன்னையும் தனக்கு ஆதாரத்
தலைவனையும் கண்டானேல்
பின்னை அத் தலைவன் தானாய்ப்
பிரமமாய் பிறப்புத் தீர்வன்
உன்னை நீ அறிந்தாயாகில்
உனக்கொரு கேடும் இல்லை
என்னை நீ கேட்கையாலே
ஈது உபதேசித்தேனே. (13)
Master: Son, he who has forgotten his true nature is alternately born and dies, turning round and
round in the unceasing wheel of time, like a feather caught up in a whirlwind, until he realizes the
true nature of the Self. If he comes to see the individual self and its substratum, the Overself, then he becomes the substratum, i.e., Brahman, and escapes rebirths. Should you know
yourself, no harm will befall you. As you asked, I have told you this.
Arunachala Siva.