Verse 11 of Saiva Canon 5.095 of Tiru Navukkarasar:
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
செங்கண் உடையவனாந் திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறு பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் ` இங்கு உற்றேன் ` என்று இலிங்க வடிவில் தோன்றினான்.
Tirumal, the red eyed, and Brahma, searched everywhere and could not see Him. He with Ganga
on His matted hair, told them that He is there and showed them in the Linga.
The decade of eleven verses - all give the story of Arunachala, though it is a general
Padigam, (eleven verses).
Arunachala Siva