Author Topic: Tevaram - Some select verses.  (Read 442789 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6405 on: February 08, 2017, 08:16:52 AM »
Verse  4:


அடுப்பது சிவன்பால் அன்பர்க்
    காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
    அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர்
    மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
    இருநிதி இன்மை யெண்ணார்.


He resolved thus: "Rendering service to the Lord
And His servitors alone befits me."
So coming by wealth through proper and possible means
He gave it away to the devotees; then he resolved
To build a temple for the joyous enshrining of the Lord
In whose matted hair, Ganga of deep waters, flows;
He did not at all think of his lack.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:19:05 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6406 on: February 08, 2017, 08:20:07 AM »
Verse  5:


மனத்தினால் கருதி எங்கும்
    மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி
    என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
    நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
    சிந்தையால் திரட்டிக் கொண்டார்.


He mentally went over the places where he could
Get abundant wealth; he painstakingly sought after it;
He could not however come by even a little; so he
Sorely languished thinking: "What am I to do?"
Then he resolved to build it in his mind; he gathered
The needed wherewithal bit by small bit.
And stored them all in his mind.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:22:14 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6407 on: February 08, 2017, 08:23:24 AM »
Verse 6:


சாதனத் தோடு தச்சர்
    தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய்
    நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால்
    அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங்
    கண்படா தெடுக்க லுற்றார்.

The materials apart, he mentally searched for
And commandeered the masons and the sculptors;
He fixed the auspicious day and the hour too
For commencing the work of building the temple;
He laid the foundation-stone in conformity
With the Aagamic rules; in love and devotion
He proceeded with the building of the temple
Even during night, with out sleep.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:25:25 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6408 on: February 08, 2017, 08:26:30 AM »
Verse  7:


அடிமுதல் உபான மாதி
    யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற
    மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும்
    முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில்
    நிரம்பிட நினைவால் செய்தார்.

He completely planned in his mind the base line,
The base and the basement and also the basal
Construction of the Gopura; so too he devised
The many picturesque tiers, one upon the other;
He also fixed the top of the Vimaana in unison
With the prescribed cubit-measurement; thus,
Even thus, for many many days on end,
He plied himself in the work of completing
The temple in his mind.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:28:14 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6409 on: February 08, 2017, 08:29:28 AM »
Verse 8:

தூபியும் நட்டு மிக்க
    சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
    கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
    வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
    விதித்தநாள் சாரும் நாளில்.


He fixed the Stupa; he did the plastering and made
The picturesque decorations, he had a well dug out;
He built the great walls within and without the temple;
He excavated a tank; he reared all else, needed
For the temple; the auspicious and fitting day
For consecrating the shrine drew near.

Arunachala Siva.

« Last Edit: February 08, 2017, 08:31:26 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6410 on: February 08, 2017, 08:32:24 AM »
Verse 9:


காடவர் கோமான் கச்சிக்
    கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப்
    பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத்
    தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
    இரவிடைக் கனவில் எய்தி.


While so, the Kaatavar king had in Kanchi built
A temple of granite, making extensive and rich
Endowments therefor; on the day preceding the day fixed
By him for consecrating the shrine of the deity who is unknown
To Vishnu, the Lord who wears petaled Konrai flowers,
Appeared in his dream during night, and said:

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:34:37 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6411 on: February 08, 2017, 08:35:40 AM »
Verse  10:


நின்றவூர்ப் பூசல் அன்பன்
    நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
    நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
    ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
    கோயில் கொண்டருளப் போந்தார்.   


On the morrow We move into the great and goodly
Temple built by the devotee--Poosal; lo!
He planned it and built it over many many days;
So you have the consecration-ceremony done
On any day after tomorrow." This said,
The Lord who wears in His matted hair Konrai flowers
Departed from him to move into the devotee's temple.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:37:49 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6412 on: February 08, 2017, 08:38:47 AM »
Verse  11:


தொண்டரை விளக்கத் தூயோன்
    அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
    திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
    என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
    நின்றவூர் வந்து சார்ந்தான்.


When the Holy One who (ever) proclaims the glory
Of His servitor, graced him thus, he woke up;
The puissant king then resolved thus: "I must
Behold him and pay obeisance to him who has
Rendered such holy service." With spiraling love
He proceeded to Ninravoor girt with gardens.

Arunachala Siva.
« Last Edit: February 08, 2017, 08:40:26 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6413 on: February 09, 2017, 09:02:00 AM »
Verse 12:


அப்பதி யணைந்து பூசல்
    அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
    எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
    செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
    வருகஎன் றுரைத்தான் வேந்தன்.


Reaching the town he inquired of the people who came
To him, thus: "Where indeed is the temple built
By the devotee--Poosal?" To this they answered:
"Here is no temple built by Poosal."
Thereupon the king spake thus: "May all Brahmins
Poised in truth be pleased to come hither."

Arunachala Siva.   
« Last Edit: February 09, 2017, 09:04:43 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6414 on: February 09, 2017, 09:05:33 AM »
Verse  13:

பூசுர ரெல்லாம் வந்து
    புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
    ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
    என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
    எய்தினான் வெய்ய வேலான்.


When the earthly celestial beings called on the king,
He asked them: "Who may this flawless Poosalaar be?"
Then all the Brahmins replied thus: "He is
A blemish-less Brahmin of this town." Then the King,
The wielder of a fearsome spear would not tell
Them to call him thither; he himself proceeded
To the presence of the Lord's devotee.

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:08:16 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6415 on: February 09, 2017, 09:09:08 AM »
Verse  14:


தொண்டரைச் சென்று கண்ட
    மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
    எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
    தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
    கண்ணுதல் அருள்பெற் றென்றான்.


The king who came and beheld the servitor, adored him
And said: "Where is the temple you have built
To be hailed by the dwellers in all
The eight directions? Coming to know, by the grace
Of the Lord who sports an eye in His forehead,
That this day is the day of the consecration of the shrine
Of the deity who is the Lord of the celestial beings, I have
Come here, to behold you and adore your feet."

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:10:52 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6416 on: February 09, 2017, 09:11:47 AM »
Verse  15:


மன்னவன் உரைப்பக் கேட்ட
    அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
    எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
    மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
    தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.

When he listened to the king, the servitor looked at
The king in bewilderment, and said: "Ha! the Lord
Had deemed even me as worthy and graced me.
For lack of the wherewithal, I but built a temple
Here in my mind." Then he explained to the king
How he planned and built the temple in his mind.

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:13:22 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6417 on: February 09, 2017, 09:14:24 AM »
Verse  16:


அரசனும் அதனைக் கேட்டங்
    கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
    பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
    நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
    மீண்டுதன் மூதூர் புக்கான்.


Hearkening to his words, the king was struck with wonder;
Thus he exclaimed: "Behold the glory of the servitor
Endowed with a flawless mind!" Even thus he hailed him
And with his fragrant garland touching the ground
He fell down prostrate and adored him. This done, the king
With his army that marched to the beat of drums
Repaired back to his hoary town.

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:16:19 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6418 on: February 09, 2017, 09:17:15 AM »
Verse  17:


அன்பரும் அமைத்த சிந்தை
    ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத்
    தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம்
    பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும்
    பொற்கழல் நீழல் புக்கார்.


The servitor consecrated Lord Hara's idol
In his mind's temple at the ordained auspicious hour;
Thereafter he performed all the poojas gloriously
And willingly for the Lord for many many days,
And thus flourished; then he reached the golden feet
Of the Lord-Dancer of Ponnambalam.

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:19:02 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47387
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #6419 on: February 09, 2017, 09:20:13 AM »
Verse  18:

நீண்டசெஞ் சடையி னார்க்கு
    நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத
    பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
    உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம்
    பாதங்கள் பரவ லுற்றேன்.

Hailing the golden feet of Poosalaar who was
Constantly devoted to the Lord of long and ruddy
Matted hair for whom he built a temple
In his mind, I proceed to hail the feet
Of the spiritually rich Paandi Maa Deviyaar--
The daughter of the heroic Chozha--,
Born to confer deliverance on the world.   

Poosalar Nayanar Puranam completed.

Arunachala Siva.
« Last Edit: February 09, 2017, 09:21:57 AM by Subramanian.R »