Author Topic: Tevaram - Some select verses.  (Read 564137 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4230 on: July 11, 2016, 09:33:13 AM »
Verse  442:


பரமர் தந்திருப் பறியலூர்
    வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
    கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
    அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
    எதிர்கொளச் செல்வார்.


சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து, பொருந்திய அன்பால் அங்கு நின்றும் கடலின் கரையை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரின் பல திருப்பதிகளையும் சென்று வணங்கிச் சீகாழித் தலைவரான பிள்ளையார், அங்கங்கும் தொண்டர்கள் சூழ வந்து வரவேற்கச் செல்பவராய்,

(English translation not available.)

Arunachala Siva.
« Last Edit: July 11, 2016, 09:36:11 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4231 on: July 11, 2016, 09:37:12 AM »
Verse 443:


அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
    குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
    டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
    குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
    நெறிகாட்டும் பவள வாயர்.To the delight of the devotees he worshipped
At Tiruvettakkudi and proceeding on the marge
Of the sea, came to the great shrines of the Chozha realm--
Rich in fields of fragrant flowers--, and adored
The Lord thither; he of the coral-hued lips who declared
Unto the world that the dogmas of the Samanas
And Saakhyas are fraught with flaws and he who
Showed the way of deliverance, reached Dharmapuram
From whose fort-like walls, streamers wafted aloft.

Arunachala Siva.   
« Last Edit: July 11, 2016, 09:38:51 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4232 on: July 11, 2016, 09:39:42 AM »
Verse  444:தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
    பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
    டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
    பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
    பயிற்றும்பே றருளிச் செய்தார்.
From Dharmapuram hailed the holy mother
Of Perumpaanar; he was therefore received there
By his kin who hailed his feet and praised him;
Glorious and great Paanar narrated to them
The happenings and apprised them of his beatitude
Of accompanying on his Yaazh the godly child, when he,
In grace sang his rare decades.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4233 on: July 11, 2016, 09:42:08 AM »
Verse 445:கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
    பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
    அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
    வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
    பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
The kin that hearkened to him spake thus:
"As you with ease and rapture capture the music
Of the beautiful decades in your Yaazh and render it
With fitting charm, their glory pervades the whole world."
When Tirunilakantappaanar heard this,
His heart atremble, he fell at the feet
Of the Prince of Pukali and spake to him thus:   

Arunachala Siva.
« Last Edit: July 11, 2016, 09:47:47 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4234 on: July 11, 2016, 09:44:52 AM »
Verse  446:

அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
    வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
    அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
    ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
    யான்காட்டப் பெறுவ னென்றார்.


"If you deign to bless me with a divine decade
That will be hailed by all,
Demonstrating palpably the truth, not only to these
But to the whole world
That the aeviternal music of your divine hymns
Will defy rendering by
(any) instrument,
It will be my good fortune to reveal unto them
That your music of unique glory
Cannot be rendered by
(my) Yaazh."

Arunachala Siva.

« Last Edit: July 11, 2016, 09:47:01 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4235 on: July 12, 2016, 08:56:45 AM »
Verse 447:


வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
    தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
    நிலத்தநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
    வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
    வானவரும் வணங்கி ஏத்த.
மறைகளின் நெறியை வளர்ப்பவரான பிள்ளை யாரும் ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவர் திருமுன்பு நின்று, திருப்பதிகத்தின் உண்மைத் திறமானது, உலகத்தவரின் மிடற்றிலும் கருவியிலும், உலகினர் மறைவழிவகுத்த இசைநூல்களின் நாத வகை களினாலும் அடங்காத வகையினை அறியக் காட்டுமாறு நிலைநாட்டு பவராய்த் தேவர்களும் வணங்கிப் போற்றும்படி `மாதர் மடப்பிடி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.

(English Translation not available)

Arunachala Siva.

« Last Edit: July 12, 2016, 08:58:54 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4236 on: July 12, 2016, 08:59:47 AM »
Verse  448:


வண்புகலி வேதியனார் மாதர்மடப்
    பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
    அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
    கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
    இடஅடங்கிற் றில்லை யன்றே.When the Brahmin child of bounteous Pukali sang
Wondrously the decade, "Maathar madappidi"
And concluded it in its haunting tune,
The great Paanar neared him and essayed
To render it, as was his wont, in his Yaazh;
The music of the divine decade, however,
Far exceeded the valiance of the tuneful strings
Of his Yaazh.

Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:01:32 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4237 on: July 12, 2016, 09:02:32 AM »
Verse 449:அப்பொழுது திருநீல கண்டஇசைப்
    பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
    கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
    திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
    றோஎன்று தெளிந்து செய்வார்.


அதுபொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் வாசிப்பதைக் கைவிட்டு, உடலில் நடுக்கமும், உள்ளத்தில் வருத்தமும் பொருந்தப் பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, அவரைப்பார்த்து, `இந்தப் பெரியவர் அருளிச் செய்த திருப் பதிகத்தின் இசையை யாழில் இசைப்பேன் என்று மேற்கொள்ளச் செய்த இந்த யாழ்க் கருவியை நான் தொடுதலால் விளைந்ததன்றோ!' என்று உள்ளத்தில் தெளிந்து, அதற்குத்தக, மேற்கொண்ட செயலைச் செய்வாராய்,

(English translation not available.)


Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:07:35 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4238 on: July 12, 2016, 09:08:41 AM »
Verse  450:


வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
    திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
    உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
    வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
    வாயர்பணித் தருளு கின்றார்.


"This is on account of the yaazh strung with guts."
So, when he lifted it up to dash it to pieces
The godly child whose lips are ever fragrant with the Milk,
The very form of Truth, and who came to be born
By the world's blessedness, preventing his act
Commanded him thus: "O great one, give me this Yaazh
On which you play in unison with the laws
Propounded by the works on music."
Receiving it from him he spake thus:

Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:12:02 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4239 on: July 12, 2016, 09:13:04 AM »
Verse 451:


ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
    ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
    பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
    மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
    வையின்இயற்றல் வழக்கே என்றார்."O great one! How is it that you think of destroying
This Yaazh? Can this instrument encompass
All the glory of the grace of the red-haired Lord who is
Concorporate with His Consort? Yet in keeping with
Our capacity and subject to its limitations, it will spell
Good to play it for men on earth to know of it."


Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:14:52 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4240 on: July 12, 2016, 09:15:59 AM »
Verse  452:


சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
    செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
    பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
    எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
    பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
"Can the glory of music that defies thought, be
Bounded by the act
(of rendering)? Render with this
Very Yaazh the music of the Lord's divine decades
As befits it. " Then Perumpaanar adoringly
Received the Yaazh from the Prince of Pukali
And reverentially placed it on his crown.

Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:17:51 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4241 on: July 12, 2016, 09:18:50 AM »
Verse  453:அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
    ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
    தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
    அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
    பதிபிறவும் பணியச் செல்வார்.

சூழ இருந்த சுற்றத்தாருடன் பெரும்பாணர், ஆளுடைய பிள்ளையாரின் இரு மலர் அனைய திருவடிகளையும் வணங்கிப் போற்றிட, சீகாழியில் தோன்றிய தலைவரும், ஒப்பில்லாத பெருஞ்சிறப்புக்களை அவர்களுக்கு அளித்து, தம் தொண்டர்களு டனே அப்பதியில் இனிதாய் அமர்ந்திருந்த பின், அவர் பெரிய நீண்ட துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவரின் பிற பதிகளை யும் வணங்கச் செல்பவராய்,

(English translation not available)

Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:23:19 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4242 on: July 12, 2016, 09:24:31 AM »
Verse  454:


பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
    டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
    எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
    தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
    அமர்ந்தருளுந் திருநள் ளாறு.


Reaching the many great shrines of the Chozha realm
Dight with tanks of green-leaved lotuses, he adored Him;
He hailed the many shrines, where the Lord who shares
In His frame His Consort, abides in joy; the chief
Of the Brahmins with the great Pannar whose Yaazh
Is the abode of music, came to Tirunallaaru
Where is enshrined the Lord whose mount is
The wrathful Bull and whose hands sport
The fawn and the Mazhu.


Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:26:08 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4243 on: July 12, 2016, 09:27:07 AM »
Verse 455:


நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
    தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
    சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
    புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
    தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.


The devotees of Nallaaru, in love, received him
Joyously accompained with them he moved on, and adored
The ever-divine tower of the Lord; the Child
Ever conscious of God, circumambulated the shrine
Of spiritual opulence, and prostrated before the Deity.Arunchala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #4244 on: July 12, 2016, 09:29:22 AM »
Verse 456:உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
    நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
    மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
    வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
    முலையாள்என் றெடுத்துப் போற்றி.In great longing which causes love to melt,
His heart melted; his body was bathed
In overflowing love; on his thrilled body the hair
Stood erect; from his eyes cascaded tears which
Seemed to feed
(the standing crops) of his hair;
Poised thus, he hymned the decade beginning
With the words: "Bhogamaartha Poon Mulaiyaal?"   


Arunachala Siva.
« Last Edit: July 12, 2016, 09:31:32 AM by Subramanian.R »