Author Topic: 8th day festival in Thiruvannamalai Shiva in the form of Bhikshadanar  (Read 995 times)

ksksat27

  • Hero Member
  • *****
  • Posts: 951
    • View Profile
Taken from below site with photos available:

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6763&cat=3

The date of 8th day festival is: 3-Dec-2014 Wednesday.

கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ம் நாளான நேற்று பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்  பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் 8ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடமை,  பாசங்களில் நீங்குதல், தன்வயப்படுத்துதல், பேரருள் உடமை, ஆற்றளுடமை, இயற்கை உணர்வுடமை, தூய உடம்புடையனாதல் ஆகிய எட்டு வகையான  குணங்களையும் உடையவர் இறைவன்.

இந்த எட்டு குணங்களையும் ஆன்மாக்களுக்கு அருளவே, எட்டாம் நாள் விழா நடைபெறுவதன் உட்பொருளாகும். இதையொட்டி, நேற்று காலை சுவாமிக்கும்,  அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தன. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர்  3ம் பிரகாரத்தை வலம்வந்து, திட்டி வாசல் வழியாக அலங்கார மண்டபத்தில் காலை 11 மணி அளவில் எழுந்தருளினர். அப்போது, சுவாமிக்கு தூப தீபாராதனை  நடைபெற்றது. பின்னர், மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சுவாமி திருவீதியுலாவின் போது, அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை ருக்கு முன்சென்றது. காலை உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதியில்  திரண்டிருந்தனர். இரவு 10.45 மணி அளவில் இரவு உற்சவம் தொடங்கியது. ராஜகோபுரம் எதிரே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த  பக்தர்கள், ?அண்ணாமலையாருக்கு அரோகரா? என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத  அண்ணாமலையாரும், குதிரை வாகனங்களில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வந்தனர். நள்ளிரவு 1 மணி வரை சுவாமி வீதியுலா  நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

பிச்சாண்டவர் வீதியுலா

தீபத்திருவிழாவின் 8ம் நாளில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறுவது தனிச்சிறப்பாகும். அதன்படி, நேற்று மாலை 5.45 மணி அளவில், பிச்சை தேவர்,  பிச்சாடனர் என அழைக்கப்படும் பிச்சாண்டவர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கபாலம் ஏந்திய கரத்துடனும் பிச்சாண்டவர் பவனி வந்தார். இத்தோற்றத்தில் இறைவன் காட்சியளிப்பதன் நோக்கம், நான் எனும் செருக்கை கைவிட்டு, அவன் அருளால் தான் புலனடக்கம் உண்டாக வேண்டும் என்ற  தத்துவத்தை உணர்த்துவதாகும். கையில் மண்டை ஓடு இருப்பதன் உட்பொருள், பரம்பொருளைத் தவிர மற்றெல்லாம் அழியக்கூடியதே என்பதை குறிப்பால்  உணர்த்துகிறது.