மெய்தரு வேதியனாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி யாடக மதுரை யரசே போற்றி கூட லிலங்கு குருமணி போற்றி தென்றில்லை மன்றினு ளாடி போற்றி யின்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னா ருருவ விகிர்தா போற்றி கன்னா ருரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி யாவா வென்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி யிடரைக் களையு மெந்தாய் போற்றி யீச போற்றி யிறைவ போற்றி தேசப் பளிங்கின் றிரளே யரைசே போற்றி யமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி யாதி போற்றி யறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி யுடையாய் போற்றி யுணர்வே போற்றி கடையே னடிமை கண்டாய் போற்றி யையா போற்றி யணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க்கரிய மருந்தே போற்றி யேனோர்க் கெளிய விறைவா போற்றி மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை யாழா மேயரு ளரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றி யென்வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி யத்தா போற்றி யரனே போற்றி யுரையணர் விறந்த வொருவ போற்றி விரிகட லிலகின் விளைவே போற்றி யருமையி லெளிய வழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி யென்னையு மொருவ னாக்கி யிருங்கழற் சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி யழிவிலா வானந்த வாரி போற்றி யழிவது மாவதுங் கடந்தாய் போற்றி முழுவது மிறந்த முதல்வா போற்றி மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி யளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவினிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலு நாயேற் கருளினை போற்றி யிடைமரு துறையு மெந்தாய் போற்றி சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி யாரூ ரமர்ந்த வரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி யண்ணா மலையெம் மண்ணா போற்றி கண்ணா ரமுதக் கடலே போற்றி யேகம்பத்துறை யெந்தாய் போற்றி பாசம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோலே போற்றி யீங்கோய் மலையெம் யெந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி யடைந்தவர்க் கருளு மப்பா போற்றி யித்தி தன்னின் கீழிரு மூவர்க் தத்திக் கருளிய வரசே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி யெந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி யேனக் கருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி யருளிட வேண்டு மம்மான் போற்றி யிருள்கெட வருளு மிறைவா போற்றி தளர்ந்தே னடியேன் றமியேன் போற்றி களங்கொளக் கருத வருளாய் போற்றி யஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி யத்தா போற்றி யையா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி யரியாய் போற்றி யமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி யுறவே போற்றி யுயிரே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி யலந்தே னாயே னடியேன் போற்றி யிலங்கு சுடரெம் மீசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைகா டுடைய மன்னே போற்றி கலையா ரரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவனத் தரனே போற்றி யருவமு முருவமு மானாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி யாளா னவர்கட் கன்பா போற்றி பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி யறுகின் றாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி யெந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி யலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி யிரும்புலன் புலர விசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி யடியொடு நடுவீ றானாய் போற்றி நரகொடு சுவர்க்க நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி யொழிவற நிறைந்த வொருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மைய றுணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல வெரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி. (திருச்சிற்றம்பலம்).
| | Glory, O Lord that, in shape of Brahmin Teacher Of truth, to crush my karma didst hold out Helping hand. Glory, O King of Golden Madura, Glory, O Gem among Teachers that shonst in its courts Glory, Dancer in the hall of Southern Tillai,* [* Chidambaram, where he is represented in the attitude of dancer, the dance representing the operations of the universe.] This day unto me thou become hast ambrosia. Glory, Lord of the Vedas that age not. Glory, Siva of the Victorious Ox-banner, Glory, O ripe fruit peeled from the rock. Save me, O mountain of gold. Alas, have mercy on me. Glory, Thou who createst, preservest, destroyest. Glory, O Father that rootest out danger. Glory, O Lord, Glory, O Sovereign. Glory, O Friend, Glory, O Comrade, Glory, my Joy, Glory, my Treasure, Glory, O peerless One that art where speech and thought are dead. Glory, Mountain of teeming holy grace. Glory, O Warrior, that madest a man of even me. And deigned to place thy feet upon my head. Thou rubbest away pain from the hand that worshippeth Thee. Glory, Ocean of Eternal bliss. Glory, Thou who art beyond death and birth. Glory, Bridegroom of the Gazelle-eyed, Glory, Mother of the celestials. Glory, Thou who standest as five in the Earth, Glory, Thou who standest as four in water, Glory, Thou who standest as two in air, Glory, Thou who standest as one in space. Glory, Thou who art ambrosia in the hearts of the well-ripened ones. Glory, Thou who art inaccessible even in dream to the celestials. Glory, Thou who to me, a dog, in waking hours didst graciously appear. Glory, O Destroyer of confusion and doubt in them that worship Thee. Deign to accept this garland of tender words from me, an ignorant dog. Glory, ancient One. Glory, O First cause. Victory, Victory unto Thee. |