We all have various desires and pray to God to fulfill those desires .This post is from an online blog and takes 2 poems each of Bharati and Vallalar that describes about their desires using the word வேண்டும் .Here Subramania Bharati prays to Goddess Parasakthi and Vallalar Prays to Lord Subramania of Kandakottam . வள்ளலாரும் பாரதியும் நாமும்http://blog.richmondtamilsangam.org/2012/09/blog-post.htmlநமக்கு எப்பவுமே ஒரு இலக்கு இருந்து கொண்டே இருக்கும். நாம் வைத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஒரு இல'க்கு' வைத்து விடும். இதற்கு சிலபல உதாரணங்கள் இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் காணலாம்.
ஒரு பள்ளி சிறந்த பள்ளி என்று பெயரெடுத்துவிட்டால் போதும், அவர் பையனை அங்கு விட்டார் என்று, இவரும் விடுவார். இவர் ஏழையாக இருந்தாலும், சமூக உந்துதல் இவரை விடாது. இதே போல சைக்கிளுக்கே வழியில்லாதவராக இருந்தாலும், அவர் வைத்திருக்கிறார் என இவர் கார் வாங்குவார். இப்படித் தொடங்கிய பயணம் ஒரு முடிவுக்கே வராது, அது வேண்டும், இது வேண்டும் என்று தவிதவிக்கும்.
பாரதியாரும் அவர் பங்கிற்கு எழுதிய பாடல் எத்துனை சான்று.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.அவர் வேண்டியவற்றை, நாம் அப்படியே பின்பற்றி, காணி நிலம் என்ன, கண் காணும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு(ம்) இருக்கிறோம். பாரதியார் கேட்டவை ஒரு சிறு காணி நிலமும், அதனைச் சுற்றி அழகிய சுற்றுப் புறமும், ஒரு மாளிகையும், அன்பு மனைவியும், கத்தும் குயிலோசையும். படிக்கக் கேட்க பாடல் அற்புதம். அதில் சிறு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நிலையில் நில்லாது, அடுத்து அடுத்து எனத் தாவி இன்று எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பது எவருக்குமே தெரியும்.
இத்தனையும் வேண்டும் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே உதவாது என்பதை நாம் உணரவேண்டும். உணர்ந்தால், நமது இலக்கை நமக்கு அடுத்தவர் எப்படி அமைக்க முடியும்?! வேடிக்கை என்னவென்றால், இந்தக் காலத் தலைமுறையினர், பொய் சொல்வது குற்றம் என்றோ, பெரியவர்களை அவமதிப்பதைத் தவறு என்றோ உணர்ந்தார்களில்லை. எல்லா 'வேண்டும்'களுக்கும் பின்னே, பெற்றோர் அலைவதால் ஏற்பட்ட கொடுமை தானோ இது ?!!!
அன்றைய காலகட்டத்தில், பலரும் தத்தமது 'வேண்டும்'களைப் பாடல்களில் தெரிவித்து இருக்கலாம். அப்படி, வள்ளலாரின் 'வேண்டும்'கள் சமீபத்தில் கேட்ட பொழுது உடல் சற்றே சிலிர்க்கத் தான் செய்தது. மேற்கண்ட 'வேண்டும்'களில் இருந்து மிகவே மாறுபட்டு, நல்லறிவும், நல்உறவும், நற்சிந்தனையும் வேண்டும் என்கிறார்.
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!
காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!
Note :
I am adding this piece from Brahati's Poetry which is again a poem wishing for positive and healthy things in life to make us mentally strong and more efficient in our day to day activities . This can also be used as a daily prayer . This poem was not in the original post but I have added it here . Others can point our similar poems by other great poets of Tamil Nadu
வேண்டுவன
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் 1
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.