Author Topic: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy  (Read 8682 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #15 on: April 23, 2013, 02:52:29 PM »   
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
     தான தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
     காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
     சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
     சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாலினாலெடுத்த கந்தல் ... ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு,

சோறினால் வளர்த்த பொந்தி ... சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சரீரம்,

மாறி யாடெடுத்தசிந்தை ... மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம்,

அநியாய மாயையாலெடுத்து மங்கினேன் ... இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன்.

ஐயாஎ னக்கிரங்கி வாரையா ... ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா,

இனிப்பி றந்து இறவாமல் ... இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்,

வேலினால் வினைக்கணங்கள் தூளதா எரித்து ... உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து,

உன்றன் வீடு தா ... உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.

பரித்த அன்பர் கணமூடே ... அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில்

மேவி யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து ... யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும்

கந்த வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே ... கந்த வேளே நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக.

காலினாலெனப்ப ரந்த சூரர் மாள ... காற்றிலே பரந்ததுபோலப் பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி

வெற்றி கொண்ட கால பாநு ... ஜயம் கொண்ட, யமன் போன்ற வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த

சத்தி யங்கை முருகோனே ... சக்திவேலை அழகிய கையிலே கொண்ட முருகனே,

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த ... மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த

காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா ... திருமாலாகிய ரிஷபத்தின்  மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே,

சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து ... சேல் மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,

சீரை யோது பத்தரன்பிலுறைவோனே ... உன் புகழை ஓதும் பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக ... தேவர்களும், பெண்டிரும், சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்

வேளுருக்கு உகந்த ... புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன் கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,

சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே. ... சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.


Arunachala Siva.atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2429
  • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #16 on: April 23, 2013, 06:00:04 PM »
Subramaniam Sir

Thanks for sharing the songs of Arunagiri Nathar also here . Now we are getting a good collection of Songs related to Vaithyanatha Swamy from various saints .
One thing is u have noticed is that the earlier Thevaram saints have not addressed him as Vaithyanatha  Swamy but as pul-irruku-velor and later saints like Arunagiri and Ramalinga Swamigal have addressed him as Vaithyanatha Swamy .
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #17 on: April 23, 2013, 06:28:52 PM »
Dear atmavichar 100,

Yes.  The classical name of puL irukku vELur has been discontinued by later poets/saints and Vaitheeswaran Kovil
has been taken. For example, Chidambararam has been named as simply Kovil or Tillai and not as Chidamabaram
in the works of Nayanmars. Later, the name Chidambaram has been accepted for use.

Arunachala Siva.,     

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2429
  • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #18 on: May 01, 2013, 09:53:17 PM »
வைத்தியநாதர் கோவில், திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)
http://www.shivatemples.com/nofct/nct16.php

தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

கோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.

சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பாரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

தினந்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருளுவார்.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #19 on: May 02, 2013, 11:20:00 AM »
Dear atmavichar100,

Brief but nice write up on Vaitheeswaran Kovil.  Muruga is not only having Peacock as his vehicle but also Elephant sometimes,
and even Goat some other times. Here in Vaitheeswaran Kovil, he is having Goat as his vehicle. In Swamimalai and Pazhani
where he is a young ascetic, there is no vehicle at all. Only coupinam and dandam.  Sri Sankara mentions it in his single
stotra called Pazhani Andavan Dhyana Slokam, which runs as kalpathrumam prnamadham, kamalarunApam, skandam bhuja
tvayam, kAtyayani priya sudham, coupina, danda dhara dakshina hastha meede!         


Arunachla Siva.