Author Topic: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy  (Read 5738 times)

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« on: April 22, 2013, 12:00:22 PM »


A few weeks back I had posted Adi Shankara's Vaithyanatha Ashtakam in this forum .I am interested to know whether the famous Tamil Saivite Saints ( Appar , Sundarar , Sambandhar , Manickavachagar etc ) have sung Pathigams in this Temple for Vaithyanatha Swamy . If any specific Pathigam is there kindly share their names and reference .

Om Peace .
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

ksksat27

  • Hero Member
  • *****
  • Posts: 951
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #1 on: April 22, 2013, 12:03:40 PM »


A few weeks back I had posted Adi Shankara's Vaithyanatha Ashtakam in this forum .I am interested to know whether the famous Tamil Saivite Saints ( Appar , Sundarar , Sambandhar , Manickavachagar etc ) have sung Pathigams in this Temple for Vaithyanatha Swamy . If any specific Pathigam is there kindly share their names and reference .

Om Peace .

sir,  if you go to http://www.shaivam.org/tamil/thiru_sam_talam.htm   all padigams templewise are listed there.  it will help to find other padigams as well.
« Last Edit: April 22, 2013, 12:07:25 PM by ksksat27 »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #2 on: April 22, 2013, 12:54:54 PM »
Dear Atmavichar100, Krishnan,

The present Viatheeswaran Kovil near Chidambaram, was called puLLirukku vELur in Saiva Canons.  puL = bird, Jatayu is
said to have prayed here. irukku = Rg.  Rg. Vedam is said to have prayed there. vEL = Murugan.  Murugan is also said to
have prayed here.  There is a separate  shrine for Muruga within the temple for Muruga, maintained by Dharmapura Adeenam.

Incidentally, I  am sure Manikkavachagar has not sung about this temple. Tiru Jnana Sambandhar has sung about this temple
(Siva) in Canon 2, Sthalam (place) 42.  The Padigam (actually eleven verses) starts with - kaLLArntha poonkonRai madhamattam
kadhir madhiyam......

As Krishnan said, You can check up with Canon 2 of Tirumurai in Saivam.com.

About Tiru Navukkarasar and Sundaramurti - I have to check my copies of books.

Arunachala Siva.     

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #3 on: April 22, 2013, 01:00:56 PM »
Dear atmavichar100, Krishnan,

This is Tiru Jnana Sambandhar's



459    கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.   01

460    தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.   02

461    வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.   03

462    மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.   04

463    கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.   05

464    திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.   06

465    அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.   07

466    பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.   08

467    வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.   09

468   கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.   10

469    செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.    11


Arunachala Siva.

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #4 on: April 22, 2013, 01:06:43 PM »
Subramanim Sir

Thanks for sharing Jnanasambandhar's Pathigam . Waiting for pathigams from other saints also( like Thiruvanukarasar , Sundarar etc )  .I feel even Ramalinga Swamigal has sung in this temple and the same is available in Thiruarutpa .

Kskat

Thanks for the links to all Saivite Pathigams .
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #5 on: April 22, 2013, 01:14:03 PM »
One more query .I am basically asking this for a cousin of mine who is facing severe stomach pain due to Gastric and Intestinal problem and right now he has crossed the danger mark but he is still worried and upset and is in a low mood .To boost his spirits I sent him Adi Shankara's Vaithyanatha Ashtakam but since he does not know Sanskrit ,I told him I will send him some Tamil Pathigams related to Vaithyanatha Swamy . I advised him a visit to Vaitheeswaran Temple and also our Kula Deivam Subramanya Swamy Temple near Trichy .
So if any specific pathigam addresing cure for stomach related problem is shared here I will be very happy .
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #6 on: April 22, 2013, 01:31:17 PM »
Dear atmavichar100, Krishnan,

This is from Tiru Navukkarasar, in Saiva Canon 5, Sthalam No. 79.  There is one more in Saiva Canon, 6, Sthalam 54.
I shall give one and another in the next post.

If the patient takes medicine along with the reading of these padigams, he is sure to be cured.  In Vaitheeswaran Kovil,
they also give sand-balls, salt, pepper mixture if someone asks for it. One can consume that also.     



787    வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.   5.79.1

788    மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.   5.79.2

789    அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.   5.79.3

790    தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.   5.79.4

791    செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.   5.79.5

792    குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.   5.79.6

793    கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.   5.79.7

794    உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.   5.79.8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.   5.79.9

795    அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.   5.79.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வைத்தியநாதர், தேவியார் - தையல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்


Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #7 on: April 22, 2013, 01:34:54 PM »
Dear atmavichar 100, Krishnan,

This is from Tiru Navukkarasar's Saiva Canon 6, sthalam 54.

541    ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.1

542    சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.2

543    பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.3

544    இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.4

545    மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.5

546    அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.6

547    நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.7

548    பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.8

549    பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.9

550    இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.10

திருச்சிற்றம்பலம்

Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #8 on: April 22, 2013, 02:05:15 PM »
Dear atmavichar100, Krishnan,

I checked up with Saiva Canon 7 of Sundaramurti Swamigal.  There is no decad on puLLirukku vELur.

Arunachala Siva.

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #9 on: April 22, 2013, 04:49:24 PM »
Quote
was called puLLirukku vELur in Saiva Canons. puL = bird, Jatayu is
said to have prayed here. irukku = Rg.  Rg. Vedam is said to have prayed there. vEL = Murugan.  Murugan is also said to
have prayed here.

Subramaniam Sir

Why is pul called bird ? Is this an ancient Tamil word for bird ?
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #10 on: April 22, 2013, 04:54:18 PM »
Dear atmavichar 100,

puL is the classical name for bird generally. Sri Bhagavan has also used this word in His  Verse 8 of Sri Arunachala Ashtakam.

Arunachala Siva.

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #11 on: April 22, 2013, 08:11:30 PM »
This is Vaithyanathar Pathigam by Saint Ramalinga Swamigal from his work ThiruArutpa மூன்றாம் திருமுறை


   அஃதாவது புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதப் பெருமானைப் பணிந்து அருள் ஞானம் வேண்டிப் பரவும் பத்துப் பாட்டுக்களைக் கொண்ட பாமாலை என்பதாம்.

    புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதப் பெருமான் எழுந்தருளும் திருக்கோயில் திருத்தருமை யாதீனத்தின் அருளாட்சியில் இயங்குவது. செல்வமிக்க பெருங்கோயில்கள் பலவற்றைக் கண்காணிக்கும் பொறுப்புடைமை பற்றி ஆங்காங்குத் திருமடத்துத் தம்பிரான்களை விடுத்துத் தெய்வப்பணி சீராக நடைபெறச் செய்வது ஆதீனம் புரியும் அறப்பணியாகும். தம்பிரான்கள் பலரும் சைவ வொழுக்கமும் தவநெறியும் சிவஞானமும் சிறக்கப் பெற்றவராவர். வடலூர் வள்ளலார் வேளூர்க்குச் சென்றிருந்த போது, அங்கே இருந்த உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் வள்ளலாரை வரவேற்று மிக்க அன்பு பாராட்டி மகிழ்ந்தார். யாவராயினும் சிவத்தொண்டரெனின் அவர்களை மெய்யன்புடன் ஏற்று மகிழ்வதும் மகிழ்விப்பதும் சைவச் செந்நெறியாளர்க்கு அறமும் பெரிய ஒழுக்கமுமாகும். சுவாமிகளோடு அளவளாவியிருந்த வள்ளற்பெருமான் தமது சென்னை வாழ்வில் உண்டான அனுபவங்களைத் தம்பிரான் சுவாமிகட்குத் தெரிவிக்கும் முகத்தால் வைத்தியாநாதப் பெருமானை முன்னிலைப் படுத்தி அனுபவத்தால் உண்டான மனநோயைத் தீர்க்கத் தக்க திருவருள் வழங்குக என இப்பதிகத்தில் வேண்டுகின்றார்.

 

      இதன்கண் முதல் நான்கு பாட்டுக்களில் பெண்ணின்பமே பெரிதென வாதிக்கும் உலகாயதக் கொள்கையும், கயவர் கயமையும், காமுகர் செருக்கும், பொய் கூறும் சிறுமையும் நோயாய் மக்களை வருத்துவது ஒருபாலாக, சைவ மெய்த் தொண்டரை இகழ்வதும், விரத ஞான வொழுக்கங்களை மறுப்பதும், மெய்யன்புடன் வழிபடுவோரையும் சான்றோர்களையும் இகழ்ந்து பேசுவதும் ஒருபால் நிலவுவதை எடுத்தோதி, இறுதியில் இறைவன் திருவடி நீழற் சிறப்பை அழகொழுக வனைந்து கூறுகின்றார்.

 

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மூன்றாம் திருமுறை
8. வைத்தியநாதர் பதிகம்
புள்ளிருக்கு வேளூர்
( 2418 )
ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
உந்தியே வைகுந்தம்மேல்
ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
ஊறலே அமுதம்அவர்தம்
பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
பார்வையே கருணைநோக்கம்
பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
பரமசுக மாகும்இந்த
யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
உறுசுவைப் பழம்எறிந்தே
உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
லோரைநிந் திப்பர்அவர்தம்
வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2419 )
உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
உற்றறிய மாட்டார்களாய்
உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
டுறுபிறவி உண்டுதுன்பத்
தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
சொர்க்கமுண் டிவையும்அன்றித்
தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
துர்ப்புத்தி யால்உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
கொங்கையும் வெறுத்துக்கையில்
கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
கொள்ளுவீர் என்பர்அந்த
வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2420 )
உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
உரைத்தவாய் மைகளைநாடி
ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
ஒதிபோல நிற்பதுமலால்
கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
கலங்கொள்ள வேண்டும்என்பர்
இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
இவர்க்கேது தெரியும்என்பர்
இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
இட்டகட் டென்பர்அந்த
வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2421 )
கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
கனிந்தகனி யாச்செய்யலாம்
கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்
மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள்குறியே
எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2422 )
படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
பழுத்தபழ மோபூசுணைப்
பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
பாழாகு கின்றார்களோர்
பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
பித்தேற்ற தோஅறிகிலேன்
செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
தெரிந்திடக் காட்டிநகைதான்
செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
செம்மாப்பர் அவர்வாய்மதம்
மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2423 )
பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
பெறவே விரும்பிவீணில்
பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
பசைஅற்று மேல்எழும்பப்
பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
பாவம்இவர் உண்மைஅறியார்
கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
காட்டிச் சிரித்துநீண்ட
கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
கயவர்வாய் மதமுழுதுமே
மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2424 )
திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
தியங்குவீர் அழியாச்சுகம்
சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
சேரவா ருங்கள்என்றால்
இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
இறுகப்பி டித்தணைக்கப்
பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
பெண்ணகப் படுமாகிலோ
பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
பிறகிதோ வருவம்என்பார்
வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2425 )
பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
பேச்சிவை எலாம்வேதனாம்
பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
பெரும்புரட் டாகும்அல்லால்
ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
ஒருசிறிதும் இல்லைஇல்லை
உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
விரைமலர்த் தொடைஆதியா
வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
விளையாடு வீர்கள்என்பார்
வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2426 )
ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
எண்ணிநல் லோர்கள்ஒருபால்
இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்­ர்
இறைப்பஅது கண்டுநின்று
ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
நம்உலகில் ஒருவர்அலவே
ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
நகைப்பர்சும் மாஅழுகிலோ
ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
உயர்பெண்டு சாக்கொடுத்த
ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
உளறுவார் வாய்அடங்க
மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2427 )
கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
காண்பதே அருமைஅருமை
கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
கருணையால் அவர்வலியவந்
திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
புல்லாதி உணும்உயிர்களும்
போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
புறச்சுவர் எனப்புகலலாம்
வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2428 )
மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
விளம்பஎனில் இவ்வுலகிலோ
மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
மேவுமண் ணெனினும்உதவக்
கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
களவுகட் காமம்முதலாக்
கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
கனவிலும் கண்டறிகிலார்
ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
அங்கைதாங் கங்கைஎன்னும்
ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
வசுத்தநீங் காதுகண்டாய்
மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே

( 2429 )
இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
இலங்குமர மியஅணையுமாய்த்
தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
தழைத்திடு நிலாக்காலமாய்த்
தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
தன்னிசைப் பாடல்இடமாய்
களவேக லந்தகற் புடையமட வரல்புடை
கலந்தநய வார்த்தைஉடனாய்க்
களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
கழல்நிழற் சுகநிகருமே
வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே


Source :
Quote
திருச்சிற்றம்பலம்
 
திருவருட்பிரகாச வள்ளலார்
சிதம்பரம் இராமலிங்க அடிகள் இயற்றிய
திருவருட்பா
 
மூலமும் - உரையும்
 
உரைவேந்தர்
ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரை
http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm
« Last Edit: April 22, 2013, 08:21:25 PM by atmavichar100 »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

  • Hero Member
  • *****
  • Posts: 2200
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #12 on: April 22, 2013, 08:25:21 PM »
நல்ல மருந்து  - This is another popular song of Saint Ramalinga Swamigal from this work ThiruArutpa  மூன்றாம் திருமுறை
9. நல்ல மருந்து
புள்ளிருக்கு வேளூர்
( 2430 )
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து

( 2431 )
அருள்வடி வான மருந்து - நம்முள்
அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
கின்புரு வாக இருந்த மருந்து நல்ல

( 2432 )
சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
தானோதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல

( 2433 )
வித்தக மான மருந்து - சதுர்
வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல

( 2434 )
பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல

( 2435 )
நானது வாகு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோந வடிவா மருந்து - சீவன்
முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல

( 2436 )
புத்தமு தாகு மருந்து - பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு
பானமுந் தானாம் பரம மருந்து நல்ல

( 2437 )
மாலயன் தேடு மருந்து - முன்ன
மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல

( 2438 )
தற்பர யோக மருந்து - உப
சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்
தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து நல்ல

( 2439 )
அம்பலத் தாடு மருந்து - பர
மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
எம்பல மாகு மருந்து - வேளூர்
என்னுந் தலத்தி லிருக்கு மருந்து நல்ல

( 2440 )
சேதப்ப டாத மருந்து - உண்டால்
தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
பேதப்ப டாத மருந்து - மலைப்
பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல

( 2441 )
ஆர்க்கு மரிதா மருந்து - தானே
ஆதி யநாதியு மான மருந்து
சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
தேடுவோர் தங்களை நாடு மருந்து நல்ல

( 2442 )
புண்ணியர்க் கான மருந்து - பரி
பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம
தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து நல்ல

( 2443 )
பால்வண்ண மாகு மருந்து - அதில்
பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து நல்ல

( 2444 )
பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல

( 2445 )
கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
மாதொரு பாக மருந்து - என்னை
வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல

( 2446 )
ஏக வுருவா மருந்து - மிக்க
ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
சோதியென் றன்பர் துதிக்கு மருந்து நல்ல

( 2447 )
கோமளங் கூடு மருந்து - நலங்
கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை
நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல

( 2448 )
செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்
தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர
நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து நல்ல

( 2449 )
வாய்பிடி யாத மருந்து - மத
வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து நல்ல

( 2450 )
பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல

( 2451 )
என்றுங் கெடாத மருந்து - வரும்
எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்
சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து நல்ல

( 2452 )
கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து
விண்ணொளி யாரு மருந்து - பர
வீடு தருங்கங்கை வேணி மருந்து நல்ல

( 2453 )
காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
தாயாங் கருணை மருந்து - சிற்
சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து நல்ல

( 2454 )
அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
அருமை யருமை யருமை மருந்து
உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து நல்ல

( 2455 )
தன்மய மாகு மருந்து - சிவ
சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
சின்மய ஜோதி மருந்து - அட்ட
சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து நல்ல

( 2456 )
மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
மறவா தவருள் வழங்கு மருந்து
இறந்தா லெழுப்பு மருந்து - எனக்
கென்றுந் துணையா யிருக்கு மருந்து நல்ல

( 2457 )
கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
இரும்பைக் குழைக்கு மருந்து - பே
ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து நல்ல

( 2458 )
அணிமணி கண்ட மருந்து - அருள்
ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
பேசா மருந்தென்று பேசு மருந்து நல்ல

( 2459 )
மூவர்க் கரிய மருந்து - செல்வ
முத்துக் குமாரனை யீன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து - தையல்
நாயகி கண்டு தழுவு மருந்து
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #13 on: April 23, 2013, 02:42:14 PM »
Dear atmavichar 100,

Arunagiri Nathar who lived earlier than Ramalinga Swamigal has composed a few songs on Vaitheeswaran Kovil, Muruga.
I am able to see 3 songs from Guruji Raghavan's collection.  One is as under: 


உரத்துறை போதத் ...... தனியான

உனைச்சிறி தோதத் ...... தெரியாது

மரத்துறை போலுற் ...... றடியேனும்

மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ

பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே

பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே

வரத்துறை நீதர்க் ...... கொருசேயே

வயித்திய நாதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உரத்துறை போதத் தனியான ... உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான

உனைச்சிறிதோதத் தெரியாது ... உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல்

மரத்துறை போலுற்று அடியேனும் ... மரக்கட்டை போன்று இருந்து அடியேனும்

மலத்திருள் மூடிக் கெடலாமோ ... ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ?

பரத்துறை சீலத்தவர் வாழ்வே ... மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே,

பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே ... உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே,

வரத்துறை நீதர்க்கு ஒருசேயே ... வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே,

வயித்திய நாதப் பெருமாளே. ... வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே.

*****

Arunachala Siva.


Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43574
    • View Profile
Re: Tamil Pathigams for Vaitheeswaran Koil Vaithyanatha Swamy
« Reply #14 on: April 23, 2013, 02:45:41 PM »
Dear atmavichar100,

This is another song of Arunagiri Nathar on Vaitheeswaran Kovil, Muruga:


எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ

இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ

சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்

சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே

நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே

நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா

பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா

பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி ... எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும்,

எத்தனை கோடி போனது அளவேதோ ... இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ?

இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி ... இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து

இப்படி யாவ தேது ... மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்?

இனிமேல் யோசித்திடில் ... இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால்,

சீசி சீசி குத்திர மாய மாயை ... சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை.

சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை ... இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை,

சித்தினில் ஆடலோடு ... அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து,

முத்தமிழ் வாணர் ஓது ... மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற

சித்திர ஞான பாதம் அருள்வாயே ... உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக.

நித்தமும் ஓதுவார்கள் ... நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின்

சித்தமெ வீடதாக ... உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு

நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே ... அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே,

நிட்கள ரூபர் பாதி பச்சுருவான ... உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும்,

மூணு நெட்டிலை சூல பாணி ... மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான

அருள்பாலா ... சிவபெருமான் அருளிய புதல்வனே,

பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது ... ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை

பீறு பத்திர பாத ... கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய

நீல மயில் வீரா ... நீல மயில் மீது வரும் வீரனே,

பச்சிள பூக பாளை ... பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது

செய்க்கயல் தாவு வேளூர் ... வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில்*

பற்றிய மூவர் தேவர் பெருமாளே. ... விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.




* புள்ளிருக்கும் வேளூர் இப்போது வைத்தீசுரன் கோயில் என்று அறியப்படுகிறது.
சீர்காழிக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.


Arunachala Siva.