Author Topic: Vedanta Choodamani of Sivapraksam Swamigal:  (Read 928 times)

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 47198
    • View Profile
Vedanta Choodamani of Sivapraksam Swamigal:
« on: January 24, 2013, 05:26:04 PM »
Like Vivekachoodamani, there is one Vedanta Choodamani, written by Sivaprakasam Swamigal. This is based on Saiva
Siddhanta theology.  I shall give the meanings in English in due course, verse by verse. 

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

வேதாந்த சூடாமணி - (மூலம்)


               பாயிரம்

         தநுணமா துமைமுகத் தாம ரைக்கெழு
         மநுணனா மெனவுதித் தடியர் பாற்புரி
         கருணைமா மதமெனக் காட்டு மாமுகன்
         சரணவா ரிசமலர் தலையிற் கொள்ளுவாம்.             1


            சிறப்புப் பாயிரம்

         அருமறையின் பொருடெரித்த விவேகசிந்தா
            மணியதனு ளறைவே தாந்தப்
         பொருளினைமுந் நீர்வரைப்பி னுலகறியச்
            செந்தமி   ழற் புனைதல் செய்தான்
         பெருகுசுவை நறவொழுகு செஞ்சொன்மல
            ராற்புனைபாப் பெருந்தண் மாலைக்
         கருமிடற்று வானவற்கே சாத்துசிவப்
            பிரகாசன் கவிஞர் வேந்தே.             2


               வேறு

      சீர்கொண்ட ளருமறையின் முடிமணியைத் தெய்வ
         சிகாமணியை யடியவர்தங் கண்மணியை மாயைப்
      பேர்கொண்ட விருளிரிக்குந் தினமணியை முக்கட்
         பெருமணியை யகத்தினுக்கோர் விளக்காக விருத்தி
      யேர்கொண்ட விவேகசிந்தா மணியெனுநூ லதனு
         ளெடுத்தியம்பும் வேதாந்தப் பரிச்சேதப் பொருளை
      நேர்கொண்ட தமிழ்விருத்த யாப்பதனாற் றெரிய
         நிகழ்த்துவன்வே தாந்தசூடா மணியென் றன்றே.          3

            - பாயிரம் முற்றிற்று -

               நூல்

      வேதமொரு நான்குமா றங்கமுநன் னியாய
         மீமாஞ்சை யொடுமிருதி புராணமுமீ ரேழா
      வோதலுறும் வித்தைகளா மவற்றுண்மீ மாஞ்சை
         யுயர்ந்ததா யைந்நான்கத் தியாயமா யருத்த
      பேதமுற விருகூறா மவற்றுண்முதற் கூறே
         பிறங்குமருட் சைமினிசூத் திரரூப மாகிப்
      போதுமீரா றத்தியா யங்களாய்க் கருமப்
         பொருளுணர்த்திப் பூருவமீ மாஞ்சையெனப் படுமால்.          1

      சாற்றியவச் சைமினிசூத் திரத்திற்கு மிக்க
         சாபரமென் றொருபா டியம்புரியப் பட்ட
      தேற்றமிகு மம்மீமாஞ் சைக்குமதம் பாட்ட
         மெனவொன்று பட்டாசா ரியனால்வந் தன்று
      போற்றுமவன் சீடனா கியபிரபா கரனாற்
         புகழ்பிரபா கரமெனவோர் மதாந்தரநன் கமைய
      வாற்றியவச் சாபரபா டியமதற்கு விளங்க
         வாக்கப்பட் டுலகமெலா மறிந்திடநின் றதுவே.          2

      உரைத்தவிரண் டாங்கூறு பிரமமுரைப் பதனா
         லுத்தரமீ மாஞ்சையெனப் பட்டருள்கூர் வியாதன்
      றெரித்தசூத் திரவடிவ மாகியிரு நான்கத்
         தியாயமா மவற்றுண்முத னான்கத்தி யாயம்
      விரித்தலுறு தேவதா காண்டமெனப் பட்டு
         விளங்குறுதெய் வதவிலக்க ணம்பலபத் திரனா
      னிரைத்துரைசெய் யப்படுமே னான்கத்தி யாய
         நிகழ்பிரம காண்டமென வேநிகழ்த்தப் படுமால்.          3

      அப்பிரம காண்டத்துட் சிவமொடுயி ரயிக்க
         மறைதலாற் சங்கரா சாரியனாங் குருவா
      லொப்பரிய பாடியமொன் றுரைக்கப்பட் டதுபின்
         னுரைத்ததற்கு விவரணா சாரியனென் பவனாற்
      செப்பரிய விவரணமாக் குறப்பட்ட ததுவே
         தெரியின்வே தாந்தநூ லென்றுரைக்கப் படுமா
      லிப்பெரிய வேதாந்த நூற்பொருளி னகல
         மெங்ஙனமென் றிடினுரைத்து மியம்பியநூன் முறையே.          4

      வாய்த்தநூன் முகத்துரைக்கு மங்களா சரணை
         வாழ்த்துவணக் கொடுவத்து நிர்த்தேச மெனமூன்
      றாத்தபதம் பதப்பொருளே வாக்கியயோ சனையே
         யறிவினா விடையிவை யைந்துரையினிலக் கணமாங்
      கோத்துரைசெய் விசேடவிசே டியங்கருத்தா கருமங்
         கொள்கிரியை யிவையந்து வயவிலக் கணமாஞ்
      சாற்றுமனு பந்தசதுட் டயநூற்கு விடயஞ்
         சம்பந்தம் பயனதிகா ரிகளெனநான் கறியே.             5

      விடயமது சிவசீவர் தமதேகத் துவமாம்
         விமலனொடு நூற்கறையப் படலறையுந் தன்மை
      யடைதலுறு சம்பந்தம் பயன்றுயரெ லாநீத்
         தானந்தப் பதம்பெறுதல் சாதனநான் கினையு
      முடையவனே யதிகாரி யென்றறைவ ரறிஞ
         ருரைத்தசா தனசதுட் டயநித்த வநித்தப்
      படுபொருளின் விவேகமிக பரபோக விராகம்
         பழிப்பரிய சமைமுமூட் சுத்வமெனப் படுமால்.          6

      நித்தியமான் மாவேபொய் விடயமெலா மெனத்தேர்
         நிலைதருநித் தியாநித் தியவத்து விவேக
      மெத்திவரு மிகமுடனுத் தரத்தில்வரு போக
         விராகமிம்மை மறுமையுள விடயநுகர் வனைத்தும்
      பொய்த்தழியு மிடும்பைமய மெனவிடுத லாகும்
         புகழ்சமையே முதலாய சட்குணங்கள் பெறுதல்
      வைத்தசமை யியல்பாய முத்திவிருப் பதுவே
         வயங்குமுமூட் சுத்துவமென் றறிந்திடுக மதித்தே.          7

      சமைதமையே திதீககையுப ரதிசிரத்தை சமாதி
         சமைமுதலா மறுகுணங்க ளுட்கரண மடக்கல்
      சமைதமைதான் புறக்கரண மடக்குதல்கா மாதி
         தணித்திடுகை திதீக்கைகரு மங்களனைத் தினையுஞ்
      சுமையெனவே விடுதலுப ரதிசுருதி குருவைத்
         துணிவினா னம்புமதே சிரத்தைகுரு மொழிநெஞ்
      சமைவுறவே திட்பமுறல் சமாதியிச்சா தனஞ்சே
         ரதிகாரி செயுங்குருசே வையினையெடுத் தியம்பில்.          8

      ஆத்தமுட னங்கமே தானஞ்சற் பாவ
         மாமவற்றுட் குருபரனுக் கனுகூல விருத்தி
      யாத்தமுயர் கருபரன்குற் றேவலே யங்க
         மருட்குரவர்க் குரியமனை நிலமுதலா மவற்றைக்
      காத்தலது தானமாஞ் சற்குருவே மெய்யாக்
         கண்டசிவ மெனநம்பு மதுவேசற் பாவ
      மேத்துகரு மம்பத்தி மிகுஞான காண்ட
         மெனுமிவற்றான் மூவதிகா ரிகள்வேறு முளரால்.          9

      உடம்பினையும் வருகுடும்பந் தனையுமியா னெனதென்
         றுளன்கரும காண்டியெலாக் கிரியையுமீ சற்கே
      திடம்பெறநின் றாக்குமவ னேபத்தி காண்டி
         செயுங்கரும மனைத்தினுக்குங் கரிதானென் றிருப்போன்
      மடந்தவிரு நன்ஞான காண்டியென லாகு
         மற்றுமுள ரைவரொரு வர்க்கொருவ ருயர்வா
      யடைந்தவதி காரிகளங் கவர்கருமி முமுட்சோ
         டறையுமப் பியாசியநு பவியுடனா ரூடன்.             10

      மூடமொடு தன்சாதி கருமமே பற்றி
         முத்தனா மவனூறு பிறப்பினிலொண் கருமி
      நீடுலக மின்மையென நினைந்துபுறக் கரும
         நிட்டனாய் முப்பிறப்பின் முத்தனா மவனே
      நாடரிய முமூட்சுலகங் கனவெனங்கண் டுள்ள
         நற்கருமஞ் சேர்ந்துபிறப் பிரண்டுளனப் பியாசி
      வீடுலக விவகார நினையாமல் விவேக
         மேவியோர் பிறப்பினான் முத்தனனு பவியே.          11

      உலகநிலை தோன்றாமற் றன்றிகழ்ஞா னத்தா
         லுண்மைமுத்த னாமவனே யாரூடன் மற்று
      முலகமுதல் யாதெனத்தேர் வொடுகுருவை யடைந்து
         முடம்பாதி பொய்யெனக்கண் டருட்குருவை யடைந்து
      முலகிலொரு குரவன்றன் மகற்குபதே சஞ்செய்
         துறக்கேட்டு முயர்தருஞ னிகளாகி முத்தி
      யுலகுதொழு விவேகமொடு விரத்திதெய்வ கதியா
         லுற்றிடுவோர் மூவரதி காரிகளா குவரால்.             12

      சாதகர்க ளாஞ்சீடர் பேதத்தாற் குரவர்
         தாமும்போ தககுருவே முதலாக விருநாற்
      பேதமடை குவரவருட் போதகன்முன் னூலிற்
         பெரும்பொருள்கூ றிடுபவன்றத் துவந்திகழ்த்து பவனே
      வேதகனல் வசியாதி யாலிம்மை யின்பம்
         வெந்துயரங் குதவுமவ னிசிதகுரு வறத்தைப்
      போதகஞ்செய் திருமையினு மின்பமருள் பவனே
         புகழ்தருகா மியகுருவென் றறைகுவர்மூ தறிஞர்.          13

      சூசகனாம் விவேகத்தாற் சமைமுதலாங் குணங்க
         டொகுப்பவன்பொய் விடயமெனவான்மவிருப் பருள்வோன்
      வாசகனாஞ் சிவசீவ ரயிக்கியஞங னத்தை
         வழங்குமவன் காரகனை யந்தவிர்த்து நிலைத்த
      வாசகலு முத்தியரு¢பவன்விகித குருவா
         மதிகா ரிகளாகு மெனமுன்னர்க் கூறு
      நேசமுறு சீடர்தம்மு ளொருவன்முத் தாப
         நெருப்பினால் வெந்துசிந்தா குலமுடைய னாகி.          14

      நானாரிப் பவமெனக்கு வந்தவா றென்கொ
         னசிப்பதெவ ராலெனவாய்ந் தலர்கரங்கொண் டேகி
      யானாநற் கல்வியறி வடக்கம்வை ராக
         மாதியாங் குணமுடைச்சற் குருவையடைந் தெதிர்மண்
      ணூனாரப் பணிந்தெழுந்தன் பாற்கரங்கள் குவித்தே
         யுறவழுத்தி யருட்குருவே யென்பாசத் தொழிவு
      தானாமெத் திறத்தினா லெனவினவல் சீடன்
         றனதுவிதி வத்துபசன் னத்துவமா மன்றே.             15

      அனையவன ததிகாரந் தெரிந்தருளா னோக்கி
         யஞ்சலோம் பென்றபய கரஞ்சிரத்தி லிருத்திப்
      புனையவருஞ் சுருதியுத்தி யாலவன தனான்ம
         புத்தியினை யொழித்துத்தா தான்மியவாக் கியத்தா
      னினையலரு மொருபிரம நீயேயென் றுள்ள
         நிலையையுணர்த் துதல்குரவ னுபதேச மாகு
      மினையவுப தேசமுறை யுத்தேசத் துடனே
         யிலக்கணஞ்சோ தனையெனுமூன் றினையுமுடைத்தாமால்.       16

      அறியவுணர்த் துறுபொருளை நாமமாத் திரத்தா
         லறைந்திடுத லுத்தேச மாங்களகம் பளமாங்
      குறியுடைய தானெனல்போ லப்பொருளிற் சிறந்த
         குறியுரைத்த லிலக்கணமவ் விலக்கியமாம் பொருளிற்
      செறிவுறுமவ் விலக்கணமுண் டோவிலையோ வென்னத்
         தெரிந்திடுதல் பரிட்சையோர் பொருளறிந்து பெறற்குப்
      பொறியுறல்செய் காட்சியா மளவைமுத லாகப்
         பொருந்துபிர மாணங்க ளெட்டுளவா மன்றே.          17

      கடமுதலா மவற்றினது காண்கை தானே
         காட்சிபுகை யாலங்கி ஞானமனு மானந்
      திடமருவு மவ்வனுமா னம்பதிஞை யேது
         திட்டாந்த மெனுமங்க முடைத்தவற்றுட் பதிஞை
      யிடமலைவெவ் வழலுடைத்தென் பதுபுகையுண் மையினா
         லெனலேது மடைப்பளிபோ லென்பதுதிட் டாந்த
      முடைமையுண ராத்தனுரை யானதிதீ ராதி
         யுறுகனியா திகளுண்மை ஞானமா கமமாம்.             18

      பகற்பொழுதுண் ணானொருவ னிளையாமை கண்டு
         பரிந்திரவூண் கற்பித்தல் காணருத்தா பத்தி
      யகத்தினிலை யுறுதேவ தத்தனெனி லிருப்ப
         னவன்வேறோ ரிடத்திலெனத் தெரிந்திடுத றன்னைத்
      தகப்பெரியர் கேள்வியருத் தாபத்தி யென்பர்
         தகும்பசுவோ டொக்குமரை யெனுமொழிகேட் டிருந்தோன்
      புகப்படரும் வனத்திலதன் விடயஞா னந்தான்
         பொருந்துதலே யுவமானப் பிரமாண மாகும்.             19

      இந்நிலனிற் கடமில்லை யென்பதனாற் றோன்று
         மின்மையுணர் வபாவமா மாயிரமா கியவெண்
      டன்னிலொரு நூறெனுமெண் ணுண்டெனுஞா னந்தான்
         சம்பவமா மிம்மரத்தி னியக்கனுள னென்னுஞ்
      சொன்னிகழ்வில் வருமியக்க விடயவுணர் வதனைச்
         சொற்றிடுவ ரறிஞரை திகமாகு மளவை
      யென்னவிவண் டொகுத்துரைத்த காட்சிமுத லாய
         வெண்வகையிற் சமயர்கொள லின்னவென வுரைப்பாம்.       20

      புகலுலகா யுதனுக்குக் காட்சியொன் றேசைன
         புத்தவைசே டியர்கடமக் கிரண்டனுமா னத்தோ
      டுகலருஞ்சாங் கியர்க்குமூன் றுரையொடுநான் குவமை
         யொடுநியாயர்க் கருத்தா பத்தியொடைந் தாகு
      மிகுபிரபா கரற்காறா மபாவமொடு பாட்ட
         வேதாந்தி கட்காகு மெனவறிக தெறிவுற்
      றிகலருமொண் புராணிகர்க டமக்களவை யெட்டா
         மென்றுரைப்பர் சம்பவவை திகங்களுட னன்றே.          21

      திருந்தியவே தாந்தநூ லியம்புறுவ திருக்குத்
         திரிசயமென் றிருபொருளங் கவற்றின்முதற் றிருக்கில்
      வரைந்திடுவ சுவகதந்தன் சாதிவிசா திகளா
         மற்றவைமூன் றினுக்குமுதா ரணமுறையே மொழியில்
      விரிந்தநிழ றருநெடும்பூம் பணைமரமொன் றிற்கு
         ஞிமிறினங்கள் புக்குமுகத் துழுதுபெரு குறுதே
      னருந்துநறு மலர்முதலா யினவும்வே றுள்ள
         வணிமரமுங் கன்முதலா யினவும்போ லாமால்.          22

      நிரவயவ மாதலினா னுஞ்சத்து வேறு
         நிகழாமை யானுமிறை தனக்குமுத னடுவின்
      றொருவுறுக விவ்வுலக காரணமா மாயை
         யுண்மையினா னிறுதியதி லென்பதென்கொ லென்னில் 
      வரைவுதரு சித்தரிகன் சித்திரசத் தியைப்போன்
         மாயையுஞ்சன் மாத்திரமாம் பிரமத்தின் வேறாய்த
      தெரிவதிலா மையினென்றுஞ் சச்சிதா னந்த
         சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க தெரிந்தே.          23

      சுருதியினு ளேகமே வாத்துவித மென்னுஞ்
         சொற்கிடையு ளேகமெனுஞ் சொல்லதனுக் கயிகக
      மரிதிலுண ரேவவெனு மிடைச்சொற்குத் தேற்ற
         மத்துவித மெனுமொழிக்குத் துவிதவிலக் காகக்
      கருதுபொருள் வருதலினா லிம்முறையே மாயா
         கற்பனைகள் கடந்துநிர வயமாகி யென்றுந்
      திரிதலில்சின் மயமாகு மொருபிரமந் தனக்குத்
         தெரித்தசுவ கதமுதலா யினமூன்று மிலையே.             24

      அத்தியா ரோபமப வாதமென விரண்டா
         யறைகுவர்கற் பிதமத்தி யாரோப முள்ள
      சுத்தியூ டிலாதவிர சதம்விளைத்தல் போலச்
         சொல்பிரம சத்தினில்லா வுலகதுகற் பித்த
      லெய்த்திதுதான் வெள்ளியதன் றிப்பியெனல் போலோர்ந்
         திறைமெய்பொய் யுலகமெனத் தௌ¤தலப வாத
      மெய்த்தபொரு ளறியுமிலக் கணமூன்றா மவைதாம்
         விளங்கதத்து வாவிருத்தி தடத்தமொடு சொரூபம்.          25

      ஆகமுத லனநியதி செய்து நின்ற
         வாருயிரை யறிவித்த லதத்துவா விருத்தி
      சாகைநுனி மதியுளதென் றுணர்த்தலிற்பூ தாதி
         சகமாய காரணங்கொண் டறிவுணர்த்தல் தடத்த
      மாகனலி விளங்குகதிர்ச் சொருபனெனல் போலான்
         மாவினிச சொருபமிது வெனவுணர்த்தல் சொருப
      நீகடவு சொருபநிசஞ் சச்சிதா னந்த
         நித்தியம்பூ ரணமாக நீநினைந்து கொள்ளே.             26

      மதித்தன்மதி யாமைநன வாதிகளிற் றனக்கோர்
         வாதையிலா துண்டெனல்சத் தவத்தையனைத் தினுமே
      யுதித்தவிட யங்களைநின் றறிந்திடுதல் சித்தா
         முவப்பினுக்கு விடயமாந் தன்மையா னந்தந்
      திதித்தசதோ திதநித்த மனைத்துஞ்சா தகமாந்
         திறத்தினா லனைத்தினுஞ்சம் பந்தநிறை வெனவே
      விதித்திடுக வுயிர்சச்சி தானந்த மயமேல்
         விளங்கியதி லவற்றுளா னந்தமெங்கு மெனினே.          27

      வெம்மையொளி யுருவாய வழல்விளக்கி னொளியே
         விளங்கியிடும் புனலிடத்தின் வெம்மையே விரியும்
      வெம்மையொளி யிரண்டுமெழும் விறகினிலவ் வகைபோல்
         விமலசத்தொன் றேதிகழுங் கன்முதலா மவற்றின்
      மெய்ம்மைதவிர் புத்தியது தமோகுணத்தின் மூட
         விருத்தியினு மிராசதத்தின் கோரவிருத் தியினு
      மெய்ம்மையசச்சித்தாகுஞ் சத்துவத்திற் சாந்த
         விருத்தியினிற் சச்சிதா னந்தங்க டோன்றும்.             28

      ஆதலினா லானந்த மயமாமான் மாவவ்
         வைந்தினுக்கு முபாதியுள வவைமுறையே மொழியிற்
      பேதமுறுஞ் சத்துமூன் றாம்விவகா ரிகம்பின்
         பிராதிபா திகம்பார மார்த்திகசத் தெனவே
      மூதுணர்விற் சுழுத்தியிற்றோண் றாதுநன வுற்று
         முத்தியுறு மளவுமுறுங் கடாதிமுத லதுவாம்
      போதுகன வினிற்றோன்றி யழிவதிடை யதுவாம்
         பொன்றாத பிரமசத்தே யிதியதா மன்றே.             29

      சீவனொ டீசன்கூ டத்தன்பி ரமமென்னச்
         சித்துநான் காங்குடநீர் கதுவுறுவெண் மீன்வான்
      றூவுபனி நீர்விம்ப வனுமிதா காசஞ்
         சொல்கடா வச்சினா காசமொடு மாவான்
      மேவுமிவை யவற்றினுக்குத் திட்டாந்த முறையாம்
         விடயமொடு பிரமம்வா சனைமுக்கி யம்பின்
      னேவுநிச வான்மாவோ டத்துவிதம் வித்தை
         யெனுமிவற்றின் பெயராலெண் வகைப்Ī