பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்
அநுபல்லவி
பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]
வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த
மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே
சரணம்
பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு
சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த
அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத
மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த
முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்
கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ நேரமாகுதல்லவோ [ஐயே]
| Pallavi Sire , it is very difficult, I am but your slave, It is very difficult for me to explain Anupallavi The place which the unfailing lord of the golden temple lives, Can be easily understood by those humans who are strong. Charanam 1.The religious books say that the fear of God of death, Is not there , due the salutation with devotion that Balakrishnan does, To the most holy teacher of Chidambaram, Due to the fact that it is a great temple and he being a good receiver. If one sees Him by his inner eye of wisdom through the arch surrounding the God, By the path of primeval fire which surrounds it, And worship Him and bow to Him , and leaves away the baser instincts, Which are in his Kundali, which will shake him and also surround him like a cloud, He would leave his pride and dignity and stand firmly, And he would become a captain of wisdom like a commander in chief. 2.Understand this , protect this truth , assimilate it within yourself , that is all that is sufficient, All your doubts will then vanish and by drinking the ebbing milk of understanding, All your body and mind would get relaxed and you would stand like a golden doll, You will start understanding everything , become wise and be a victor over everything. 3.Even if you undergo great strain by yogic methods , it would go away , It Would not be available , would not allow you near it, And whatever little that touches you would make the mind blunt, It would get exhausted and would disappear within you, You would neither get it by recitation of Vedic chants, Nor would you be able to get it through Yanthras, Not even by thanthric practices and in the end , All achievements would be of no use , And it Would become your weakness and be a useless silence. 4.To those who stand outside crossing the three useless divisions of life, This vision is not there for he would dance , keep rhythm by beats , Audiences will gather and would sing songs , There are no one who have seen this, and those have felt have not revealed it, And there all crores of universes would have joined together. Should this be told to you by one belonging to a debased caste. Sir, the time is getting late, shall I go there.
|