Author Topic: Quotes from Shankaracharya's  (Read 197734 times)

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4075
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #390 on: December 10, 2015, 06:47:09 AM »
A Priest meets mahaperiyava

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு,
தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை
அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள்
இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர்
எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.
காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!
திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி,
மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர்
சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு
முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை
பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ
பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை
துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய்
வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர
ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து
ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு
சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும்
என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்...."கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை
நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை
ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம்
பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள்,
சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள்
அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு
எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!


atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #391 on: December 17, 2015, 01:11:21 PM »
Since the Margazhi season is starting from today i.e Thu 17 Dec 2015 sharing here How Kanchi Mahaswamigal kindled the spirt of singing Anadal's Thiruppavai and Manickavasagar's Thiruvempavai during the Maragazhi season in 1949 and how that spirit still continues in many temples, houses in TN during Margazhi .

1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.

மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

?அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ??

உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.

ஒரே குரலில்,?தெரியாது? என்று பதில் வந்தது.

?அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா ? நல்ல ராகத்தோட..?

இரண்டு நிமிஷ நடை.

?இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..?

?ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..?

பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

?ராமமூர்த்தி.. திருப்பாவை ? திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..?

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!

திருவெம்பாவை ? திருப்பள்ளிஎழுச்சி ? திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.

?மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்? என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

?பிரகலாதன்? என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன்!

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் ? ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.

?ஞாபகம் இருக்கா? ? திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா ? ன்னு சொன்னேளே? ? இப்போ யாரவது பாடராளா???

இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Source: Maha Periyavaal Darisana Anubhavangal - Part 7
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #392 on: February 04, 2016, 05:57:10 PM »
It often occurs to me that two divine children demonstrated their purpose of descent to the earth through their very upanayana samskara. One of the two is Sri Adi Sankara who revived the Vedic religion and the other is Sri Thiru Gnanasambhandhar. The Tamil Periyapuranam mentions that Thiru Gnanasambhandhar?s upanayana was performed when he was a small child. They accomplished their respective missions only after their upanayana had been performed and after receiving Gayathri upadesam. This strongly emphasizes the importance of upanayana samskara to ordinary people like us. ? Pujya Sri Kanchi Maha Periyava
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #393 on: February 09, 2016, 11:46:30 AM »
Only Kanchi Pramacharya can spot the finer details in anything be it a poem , an idol , a place etc and this incident is another testimony of the same .

அபிராமி அந்தாதியும் -காமகோட்டமும்
------------------------------------------
மேலுள்ள தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீபெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் "அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடி இருக்கிறார் தெரியுமா?" என்றார். நான் "இல்லையே! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார்" என்றேன்.
ஸ்ரீ பெரியவர்கள், "அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனாதேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான்பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப்பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும். எப்படின்னு தெரியுமா?" என்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டைச்சொன்னார்கள் .

"துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே."

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம்திருகடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை .இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலாமூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறுஎங்குமில்லை."
பிறகு பெரியவர்கள் "காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?" என்று கேட்டபோது, நான் "பத்மாசனம்" என்றேன். அதற்கு பெரியவர்கள் "இல்லை, யோகாசனம்" என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள். பிறகு "இந்த யோகாசனத்தில் இரு பாதங்களும் ஒன்றாக இணையும். சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி, அசார்யாள், துர்வாசர் ஆகியமூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன(ர்)" என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து போய் காட்டினார்கள் .
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #394 on: February 09, 2016, 01:36:10 PM »
காயத்ரீ என்றால், ?எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது? என்பது அர்த்தம். கானம் பண்ணவதென்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமையுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. ? ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

?Whoever sings is protected,? that is ?Gayathri?. ?Sings? is not used here in the sense of singing a song. It means intoning or chanting (the mantra) with affection and devotion. People who chant the Gayathri in this manner are protected. ? Sri Kanchi Maha Periyava
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #395 on: February 10, 2016, 09:48:44 PM »
சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? -

மஹா பெரியவா


தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான்.

அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #396 on: February 10, 2016, 09:50:54 PM »
அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி'
(பெரியவாளின் சாட்டையடி பதில்)


(நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்யவேண்டும்.?
மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம்
கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்.? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா.? நாமம் போட்டுக் கொண்டார்களா.?....
"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

"சில யோகிகள்,சித்த புருஷர்கள் பல காலம் வரை
ஸ்நானம் செய்வதில்லை. ஜபம்,தவம் செய்வதில்லை.
ஆகார நியமங்களும் கிடையாது.

ஆனால், அவர்கள், பல அமானுஷ்யமான காரியங்களைச் செய்து காட்டி நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள். செப்பிடு வித்தை மாதிரி வெறும் பொய்த் தோற்றம் இல்லை.

அப்பிடியிருக்க, நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்ய
வேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்.? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா.?
நாமம் போட்டுக் கொண்டார்களா.?...."

- இத்தகைய குறும்புத்தனமான கேள்விகளைக் கேட்டார்
ஒருவர், பெரியவாளிடம்.

பெரியவாள் பார்வையை எங்கெங்கெல்லாமோ மெல்ல
மெதுவாகச் செலுத்திவிட்டு கிட்டத்துக்கு வந்தார்கள்.

"ஸந்த்யாவந்தனம் செய்யும் போது,
'அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி' என்கிறோம். அதாவது 'நமக்குள்ளே பகவான் இருக்கிறார். நான் பரப்ரஹ்ம வஸ்துவாக இருக்கிறேன்' என்கிறோம்.

பகவான் இருக்கிற இடம் பவித்ரமாக இருக்க வேண்டாமா.? அதனால்தான் ஸ்நானம்-ஸந்த்யை-தேவதார்ச்சனம் முதலியன ஏற்பட்டிருக்கு.

ஈஸ்வரத் தன்மையை அடைந்து விட்ட மகா புருஷர்களுக்கு, சித்தசுத்தி ஏற்பட்டு விட்டதால், ஸ்நானம் -ஜபம் - ஆசாரம் போன்றவை தேவையில்லை!"

கேள்வி கேட்டவர்,முற்றிலும் சந்தேகம் நீங்கியவராய்,
பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #397 on: March 05, 2016, 06:18:15 PM »
நாளை மஹாப்ரதோஷம்! சிவராத்ரிக்குமுன்
வரும் ப்ரதோஷம் மிகச் சிறந்ததாகக் கருதப்
படுகிறது!

சிவ பக்தி*....பெரியவா அருளுரை.

''सवे वेदा यद्पदमानन्ति ''

{ஸர்வேவேதா யத்பதம் ஆமனந்தி } முதலிய ச்ருதிகளால்
நாம் அறிவது என்னவென்றால் எல்லா யோகிகளும்
ரிஷிகளும் மற்றுமுள்ள ஞானிகளும் ஒன்றையே
அடைய விரும்புகிறார்கள். அந்த ஒன்று என்னவென்றால்
ஓம் என்பதுதான் ஓம் என்பது பற்றி மாண்டூக்ய உபனிஷத்தில்
விரிவாகவும் ஸ்பஷ்டமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

शान्तम् शिवम्,अद्वैतम्, चतूर्थम् मन्यन्ते ,आत्मा स विझेय:

சாந்த, சிவம், அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே ,
ஆத்மா ஸ விஜ்ஜேய:||

அதாவது , அந்த ப்ரம்மம் எல்லாம் ஒடுங்கினதும், சிவமென்று
குறிக்கத்தக்கதும்,இறண்டற்றதும், விச்வதைஜஸப்ராஜ்ஞனுக்கு
மேலானதுமாக இருக்கின்றது.

வித்யாஸு ச்ருதிருத்க்ருஷ்டா ருத்ரைகாதசினி ச்ருதௌ
தத்ர பத்மாக்ஷரீ தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம்||

வேதங்களுள் யஜுர்வேதம் முக்கியமானது. அதற்குள்
அதன் மத்ய பாகமாகிற நாலாவது கண்டம் முக்யமானது.
அதற்குள்ளும் மத்ய பாகமான நாலாவது ப்ரச்னம்
ஸ்ரீருத்ரம் மிக முக்கியமானது.அதற்குள்ளும் நம:சிவாய
என்ற பஞ்சாக்ஷர மத்தியிலிருக்கிறது. அதன் மத்தியில்
சிவ என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருக்கிறது. இதையே
ஜீவரத்னமென பெரியோர்கள் சொல்வார்கள். இதனை
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் ப்ரம்ம தர்க்க ஸ்தவத்தில்
சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம்
என்று தெரிகிறது.
அப்படிப்பட்ட சிவ ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாக
சிவ பக்தர்களெல்லாம் ஐந்துவிதமான காரியங்களைச் செய்து
கொண்டிருக்கவேண்டும்.

1)விபூதி பூசிக்கொள்ளுதல்

2)ருத்ராக்ஷம் அணிதல்.

3)பஞ்சாக்ஷர மந்த்ரத்தை ஜபித்தல்
பஞ்சாக்ஷர உபதேசம் பெறாதவர்கள் சிவ
என்ற நாமாவை ஜபித்தல்.

4)வில்வபத்ரத்தால் சிவனை பூஜை செய்தல்

5)ஹ்ருதயத்தில் சதா சிவனை த்யானம் செய்தல்.

இவை ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக்
கொடுக்க வல்லது.
விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். இதையே
ஈச்வரன் உடலில் பூசிக் கொண்டிருக்கிறார். இது அக்னியில்
எரிக்கப்பட்டு சுத்தி செய்யப்பட்டது.
ருத்ராக்ஷம் என்பது சிவனின் மூன்றாவது கண். அவர்
ஒருவர்தான் உலகத்தின் நடுவில் கண்ணுடன் உடையவர்.
லக்ஷ்மி உலகத்தில் ஐந்து இடங்களில் வசிக்கிறாள்.
அவை1)வில்வம்2)பசுவின் பின்புறம்,3)பதிவ்ரதையின்
ஸீமந்தம், 4)யானையின் மஸ்தகம், 5)பத்மம்.

லக்ஷ்மி நிவாச ஸ்தானங்களில் வில்வமும் ஒன்று .
ஆதலால் அதைக்கொண்டு செய்யும் பூஜையினால் சிவன்
சந்தோஷிப்பார். அதனால் எல்லாரும் பாஹ்யாராதனம்
செய்வதுடன் ஸதா சிவ சிவஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில்
த்யானம் செய்யவேண்டும்.

பெரியவா 11-10-32 ல் செய்த அருளுரை

ஜய ஜய சங்கரா.....
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #398 on: March 05, 2016, 06:38:38 PM »
அனைவருக்குமான நாமம் by Maha Periyava

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் ?நல்வழி? என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், ?சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை? என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #399 on: March 06, 2016, 04:18:24 PM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #400 on: March 07, 2016, 04:13:02 PM »
வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். ? ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #401 on: March 07, 2016, 04:15:05 PM »
It will indeed be very poor of us to be born in Bharatha Desam and cannot fast on important days like Vaikunta Ekadasi, Maha Sivaraathiri, Sri Rama Navami, Gokulashtami, etc. Even if our stomach is empty we need to ensure our mind is full. Bhagawan should give us the strength (sankalpam) to achieve this. ? Pujya Sri Kanchi Maha Periyava
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #402 on: March 07, 2016, 04:17:19 PM »
Jaya Jaya Shankara Hara Hara Shankara ? Where does ?SIVA? Naamaa reside in Vedas? What is its position? The greatest master explains about it and the Greatness of the Two letter word ?SIVA?. A small chapter but very informative. Let?s chant as much ?SIVA? naama as we can that has no restrictions as other manthras. Thanks to our Sathsangam volunteer team member for the translation (wish to remain anonymous). Siva Siva

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான ?சிவ? நாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ?த்ரயீ? என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக ?சிவ? என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் ?மெய்ப்பொருள்? என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக ? மெய்யாக ? வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது ?சிவ? நாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத(ன்) நாமம் நமச்சிவாயவே

வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு ?சிவ? நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) ?யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்? என்கிறார்.

The Position of ?Siva? Naama in Vedhaas ? By Maha Periyava

If we have a precious gem, where would we store it in the house? Will we keep it in a room facing the entrance door? Will we keep it in a room near to the garden in the backyard? We will try to keep it safely inside an iron box in an inner room at the center or the middle. Similar to this, the Vedhaas have safeguarded the gem of our lives, ?Siva? Name. In 4, middle is considered to be 2. In the 4 Vedhaas, the second one is ?Yajus? (Yajurvedhaa). Without including the ?Atharvavedhaa?, ?Rig?, ?Yajus? and ?Saamam? are together called as ?Thrayee?. Even then, ?Yajus? comes in between ?Rig? and ?Saamam?. ?Yajus? is divided into two ? ?Sukla Yajus? and ?Krishna Yajus?. Hence, if we 4 Vedhaas into 5, in ?Rig?, ?Sukla Yajus?, ?Krishna Yajus?, ?Saamam?, ?Atharvam?, Krishna Yajus is in the middle. In the Krishna Yajus, the 4th chapter (Kaandam) is in the middle. This, in turn, has the fifth ?Prasna? in the middle. In the middle of this fifth ?Prasna? is ?Sri Rudra Suktham? which has ?Nama Sivaaya? or ?Panchaaksharam? in the middle. In the ?Panchaaksharam*?, the name ?Siva?, which is the ?Dwayaksharam**?, is at the center and most important position amidst the complete Vedhic Hymns in praise and prayer of Lord Siva in ?Sri Rudra Suktham?.

According to us, our body is true. The ?Paramaatmaa? or the ?Divine Soul? inside us is said to be the ?True Meaning? or ?True thing? (?Meiporul?). What is called as ?Sathvasthu? in Vedhaanthaa is called as ?Meiporul? by Thiruvalluvar in Tamil. If we consider Vedhaas as the body that is true, the True meaning or the ?MeiPorul? lies in the ?Siva? name. If the soul or the ?Paramaatmaa? is positioned at the heart in a body, the heart lies in the center of the body. The same is stated by Thiru Gnyaanasambandhar.

Vedha Naanginum Meiporulaavadhu
Naadhan Naamam NamaSivaayave

Just like how the precious gem (jewel) is safeguarded in the middle or center of the house, the precious life giving gem, ?Siva? Name is present in the center of the body as ?the Great Soul? or ?Paramaatma?. The same is being stated by Sri Appayya Dikshithar in ?Brahma Dharga Sathvam? (Sloka 27): Yath-Jeeva Rathnam Akilagama Laalaneeyam.

* ? Panchaaksharam is represented by the 5 sanskrit letters ?Na, Ma, Si, Va, Ya?
** ? Dwayaksharam is represented by the 2 sanskrit letters ?Si,Va?
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #403 on: March 17, 2016, 01:29:49 PM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Nagaraj

 • Hero Member
 • *****
 • Posts: 5130
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #404 on: April 29, 2016, 10:01:57 AM »
sadhana chatushtayam [साधन चतुष्टयं] and
shatka sampatti [षट्क संपत्ति]
[4 means and 6 virtues].


What are the [ साधन चतुष्टयं ]
four-fold qualifications [4 means]?

1. Viveka [ विवेक ]
    Discrimination between the permanent and the impermanent;

2. Vairagya [ वैराघ्य ]
    Dispassion to the enjoyment of the fruits of actions here and hereafter;

3. Shatka-sampatti [ षट्क संपत्ति ]
    Disciplline or six-fold inner wealth [6 virtues] starting with 'sama'; and

4. Mumukshutvam [ मुमुक्षुत्वं ]
    Intense-Desire or yearning for Liberation.


What are the [षट्क संपत्ति  ]
six-fold inner wealth [6 virtues] ?


1. Samah [ शमः ]
    Mastery over the mind;

2. Damah [ दमः ]
    Control of the external senses;

3. Uparama [ उपरमः ]
    Observance of one's own dharma [duties];

4. Titiksha [ तितिक्षा ]
    Endurance of opposites [heat and cold, pleasure and pain, etc]

5. Sraddha [ श्रध्दा ] 
    Reverential Faith in the words of the Scriptures and the Guru;

6. Samadhanam  [ समाधानं ]
    cittaikAgratA, Resolve, reconciliation, profound absorbtion.


~ Adi Shankaracharya
« Last Edit: April 29, 2016, 10:11:11 AM by Nagaraj »
॥ शांतमात्मनि तिष्ट ॥
Remain quietly in the Self.
~ Vasishta