You are endowed with a Big Mouth!You are also PERIYA VA!
ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து!நீயும் பெரியவா தான்
(ரா.கணபதியின் அனுபவம்)
(இது வித்யாஸமான கட்டுரை.This is continued I think from a very fine narration by rA ganapathi called 'Maitreem Bhajata')
Maitreem Bhajata was a fine composition in sanskrit which Mahaperiyava had given as a message of Friendship and Love to the whole world-it was sung by smt MS Subhulakshmi in the United Nations -it was set to music by the famous film music director vasant desai.As such it received a standing ovation as M S finished singing it as the Final parting message.
Ra Ganapathi wished to share the Good news with mahaperiyava and had gone and met him.Hearing what ra ganapathi had to say,sri mahaperiyava said-'yes,we have given upadesa to the world but as far as one's life is concerned one is a cipher!(sondha vazhkaiyile cipher!).What made Sri Mahaperiyava castigate himself so critically?It was just the difference of opinion and lack of harmony that existed between the devotees of kanchi and sringeri mutt!Ra ganapathi could not accept mahaperiyava's words-and flatly said-"How is that this can be attributed to mahaperiyava?".Sri Mahaperiyava simply said that it is on account of deficiency in his tapas(tapas pOraley!).ra ganapthi did not pursue the matter further-He just went back home and wrote a letter to Sri Mahaperiyava that said-"If periyava's tapas is deficient so is that of Jesus Christ as well and all the other great ones as well.Nothing has stopped bad things from happening in this world!So,this cannot be attributed to mahaperiyava".Subsequently when Sri rA ganapthi met the sage,he said in a childlike manner-"Your words were very comforting!"(romba AAArudhala Irundhadhu!with a prolonged AAAA...).Comforting for whom!-this is the moot question which was never explicitly stated!
Many were the times when Mahaperiyava used to castigate himself whenever there were some untoward incidents and difference of opininons bordering on ill will between the devotees of two establishments both belonging to the sankara order.The Following incident is from one such conversation of ra ganapathi with this great sage and saint and here on account of the boundless grace of the guru ,the disciple is able to hold his fort and win the arguement against the Mahaguru!Hence the title of this article.
'பெரியவாள்'; என்கிறோமே, அதை மட்டும் விட்டு வைத்தாரா? மனப் புண்ணை ஆற்றத் தமக்கு ஏது சக்தி? தாமே நன்றாகக் காயப்படுத்தும் பெரிய 'வாள்'; அல்லவா என்று கூறிச் சிரித்தே புண்ணை ஆற்றினார்.
சட்டென்று பகவத்பாதாள் வாக்கு நினைவு வந்தது."விவேக விஜ்ஞான மஹா(அ)ஸி" என்று அவர் கூறியிருப்பது.
';மஹா அஸி'; என்றால் ';பெரியவாள்'; விவேகத்தில் பழுத்த அநுபவ ஞானம் என்ற பெரிய வாளினாலேயே அநாதியான மாயா பந்தத்தை வெட்டியெறிய முடியும் என்கிறார். எனவே
மாயையைக் களையவே வந்த விவேக விஜ்ஞான விக்கிரஹமானஸ்ரீ சரணரைப் ';பெரிய வாள்'; என்பதும் சரிதானே?.
இதனை நான் அவரிடம் நிவேதிக்க, குரூபிரான் குழந்தையாக குதூஹலித்தார். "ஞானாஸி" (ஞானவாள்) என்று கண்ணனும் மொழிந்திருப்பதை எடுத்துக் காட்டினார்.
கடோபநிஷத்தில் வாள்முனை நடையாகவே ஞான ஸாதனையைக்கூறி, குருவை அடைந்தே ஸாதனையில் ஸித்திகாணப்பணித்திருப்பதையும் விண்ணப்பத்தேன். அவ்வாறு வாள்முனையையும் மழுங்கச் செய்கிற குரு அதைவிடப்பெரிய வாளா';கத்தான் இருக்கவேண்டும் என்று கூற, மிகவும் ரஸித்தார்.
"குருன்னா ஹிம்ஸை ஸ்வரூபம்னு ரூபிச்சுட்டே" என்று விசித்ர வியாக்யானமும் செய்து சிரித்தார்!';பெரியவா'; என்றுதானே பேச்சு வழக்கில் சொல்கிறோம்? காய்,பாய்,வாய் ஆகிய வார்த்தைகளைப் பேச்சில் கா,பா, வா, என்றே சொல்வதை அவர் குறிப்பிட்டு, "வா(ய்) மூடாம ஓயாமப் பேசிண்டிருக்கேனோல்லியோ? அதுதான் பெரிய வா" என்று சிரித்தார்.
"மஹா வாக்கியம் (வேதத்தில் வரும் ஜீவ பிரம்ம ஐக்கிய வாக்கியம்) உபதேசிக்கிறது. மஹா வாயாகத்தானே இருக்கவேண்டும்" என்றேன். ஏதோ ஒரு துணிச்சலில் இதுபோலப் பல சமயங்களில் சொல்லியிருக்கேன்.
"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரிய வா தான்" என்று அத் தன்னிகரில்லாப் பெரியவர் சிரிக்க,இச்சிறியேனும் அதில் கலந்து கொண்டேன்
Namaskar.