முருகா ... முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற சொல்லுக்கு முருகா)
சுடராக வந்தவேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
(அழகென்ற ... )
ஆண்டியாய் நின்றவேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா (2)
பழம் நீ அப்பனே முருகா (2)
ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா
(அழகென்ற ... )
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற ... )
குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)
சக்தி உமை பாலனே முருகா (2)
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
(அழகென்ற ... )
ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா (2)
அரகரா ஷண்முகா முருகா (2)
என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா
(அழகென்ற ... )
அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா (2)
கண்கண்ட தெய்வமே முருகா (2)
எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா
(அழகென்ற ... )
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற ... )
முருகா ... முருகா ... முருகா ... .

| | azhagendRa sollukku murugA For the word 'azhagu' (beauty), Oh, MurugA!
undhan aruLandRi ulagilE poruLEdhu murugA can there be any explanation other than that of your Grace in this world? Oh, MurugA?
sudarAga vandhavEl murugA You came in the form of 'rays' (from the third eye of Lord ShivA), Oh, MurugA!
kodum sUrarai pOrilE vendRavEl murugA You won in the battle with the terrible 'SUrApadman' (the dEmon), Oh, MurugA with the mighty 'vEl' (spear)!
kanikkAga manam nondha murugA You were saddened (and angered) during the episode of the 'fruit', Oh, MurugA!
mukkaniyAna thamizhthandha selvamE murugA You gave us the 'three fruit combination' - the 'Thamizh' language (three aspects of which are: iyal - Literature; isai - Music; and nAdagam - Drama), Oh, precious MurugA!
ANdiyAi nindRavEl murugA You stood as an 'ANdi' (the form of a recluse - in Pazhani), Oh, MurugA with the mighty 'vEl' (spear)!
unnai aNdinOr vAzhvilE inbamE murugA those who sought refuge in You will have their lives filled with joy, Oh, MurugA!
pazham nee appanE murugA You are the fruit (of intellect), Oh, MurugA!
gnAnap pazham unnai allAdhu pazhamEdhu murugA there can be no intellectual 'fruit' other than You, Oh, MurugA!
kundRARum kudikoNda murugA You reside in the six hills, Oh, MurugA!
pakthar kuRai neekkum vaLLal nee allavO murugA Isn't it You? The generous One who eliminates the deficiencies of Your Devotees? Oh, MurugA?
sakthi umai bAlanE murugA You are the Son of Shakthi (UmAdhEvi), Oh, MurugA!
manidha sakthikku ettAtha thaththuvamE murugA You are the 'philosophy' which is unattainable by ordinary human strength, Oh, MurugA!
praNavap poruLkaNda thiru murugA You saw (show) the meaning of 'praNavam' (Aum), Oh, MurugA!
param poruLukku guruvAna dhEsigA murugA You became the Great Teacher for the Almighty Lord ShivA, Oh, MurugA!
aragarA shaNmugA murugA 'ara - harA - shaNmugA - murugA'
endRE pAduvOr eNNaththil AduvAi murugA You dance in the minds of those who sing (with the above lines - 'ara - harA - shaNmugA - murugA'), Oh, MurugA!
anbiRku ellaiyO murugA Is there a limit to (Your) Love? Oh, MurugA?
undhan aruLukku ellaithAn illaiyE murugA There is no limit to Your Grace, Oh, MurugA!
kaNkaNdadheivamE murugA You are the God who appeared in our vision, Oh, MurugA!
endhan kaliyuga varadhanE aruLthArum murugA my Generous One in this aeon - (kali-yugA), Give us Your Grace! Oh, MurugA!
murugA ... murugA ... murugA ... .
|