Author Topic: Our Bhagavan-Stories  (Read 356158 times)

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1680 on: March 18, 2018, 01:44:47 AM »
மனங்கவர் ரமணன்  1
*******************************
பகவானால் ஆமோதித்து அனுமதிக்கப் பெற்ற ரமணாஷ்டோத்திரத்தை உலகெங்கும் உள்ள ரமண சத்சங்களில் பூஜையில் ஓதுவதை நினைக்கும்போது எனக்கு ஒரு சமயம் விசுவநாத சுவாமி தெரிவித்த விஷயம் ஞாபகம் வருகிறது :

என் ( விஷ்வநாத சுவாமியின் ) தாயாருக்குத் தமிழிலும் , சமஸ்கிருதத்திலும் நல்ல பாண்டித்யம் இருந்தது. பகவானின் தீவிர பக்தையான அவரிடம் ஒரு மிகச் சிறிய நோட்டுப்புத்தகம் இருந்தது. அதை அவர் தினம் ஆராதித்து வந்ததுடன் , யாரையும் அதைத் தொடக்கூட விடமாட்டார்.

அவர் காலத்திற்குப் பின்தான் அது எப்பேர்ப்பட்ட அரிய பொக்கிஷம் என்பதை அறிந்தோம். பகவான் மீது நான் எழுதியிருந்த அஷ்டோத்திரத்தைத் தானே தைத்த அந்த மிகச் சிறிய நோட்டுப் புத்தகத்தில் , அழகிய சின்னச் சின்ன கிரந்த எழுத்துக்களில் எழுதி , அட்டையில்  ரமண அஷ்டோத்ர சத நாமஸ்துதி  என்று குறிப்பிட்டு , தன் தங்கக் கையினால் பகவான் என் அம்மாவுக்கு அளித்திருந்தார். அந்த அரிய ரத்தினத்தை என் தாய் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதது இயற்கைதானே !

நான் பகவான் மீது சில நாமாவளிகள் இயற்றி அவ்வப்போது பகவானிடம் சமர்ப்பிப்பது உண்டு. அதை பகவான் ,  நம்ம விஸ்வநாதன் என்மீது அஷ்டோத்திரம் எழுகிறான்  என்று நாயனாவிடம் ( காவ்ய கண்ட கணபதி முனிவரிடம் ) காண்பிப்பார். இதேபோல் இது போன்ற ஒவ்வொரு தாளையும் , ஆங்காங்கே திருத்தங்கள் செய்து , பகவானிடமே திருப்பித் தருவார் நாயனா. இந்த விதம் , அஷ்டோத்திர நாமம் முழுவதும் எழுதப்பெற்று , அது என் ஆசான் நாயனாவினாலும் , பிரபு பகவானாலும் அங்கீகரிக்கப் பெற்றது. பகவானின் 108 நாமங்களை எழுத வேண்டுமென்ற என் நெடுநாளைய ஆவலும் பூர்த்தியடைந்தது !

 ஒரு சமயம் அடியார் ஒருவர் பகவானிடம் , தான் பாராயணம் செய்வதற்கேற்ற ஒரு ஸ்தோத்திரம் அருளும்படி வேண்ட , பகவான் இந்த அஷ்டோத்திரத்தின் ஒவ்வொரு நாமத்தையும் விரிவாக்கினாலே , சரிதமாகிவிடும் என்றார். இதிலிருந்தே அஷ்டோத்திரத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் என்றார் விஸ்வநாத சுவாமி.

ஸ்ரீ ரமண நினைவலைகள் என்னும் நூலிலிருந்து.

from fb ramana mandiram madurai
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1681 on: March 23, 2018, 03:28:56 PM »
ராம தரிசனம் அருளிய ரமணர்
****************************
1933 ஆம் ஆண்டு மே மாதம் என் முப்பத்தாறாவது பிறந்த நாளன்று காலையில் ஸ்நானம் , பாராயணம் , பூஜை ஆகிய நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ பகவான் முன்னிலையில் வந்து அமர்ந்தேன். ஒரு காகிதத்தில்  ஓ பகவான் ! முப்பத்தைந்து வருடங்கள் நிறைவுற்ற எனக்கு உண்மை ஞான அனுபவம் இன்னும் சித்திக்கவில்லையே ! இன்றாவது தங்களது அருள் எனக்குச் சித்திக்கப் பிரார்த்திக்கிறேன்  என்று என் உணர்ச்சிகளையெல்லாம் திரட்டி வேண்டுகோள் ஒன்றை , தமிழ் விருத்தப் பாவின் மூலம் சமர்ப்பித்து , நமஸ்கரித்தேன்.

இன்று யான்பிறந்தே ஏழைத் தாண்டாயிற்றே
என்று யான்பிறப்பேன் இறைரமண இதயத்தே
என்று யான்இறப்பேன் இறவாத சிறப்பதனில்
என்று நான்இறக்க இரங்கும் அருட்கண்ணேயோ

பகவான் சைகை மூலம் என்னை அமரச் செய்துவிட்டு அவரது ஆழ்ந்த அருட்கடாக்ஷத்தை என்மீது பாய்ச்சினார் எதிர்பார்ப்பு கலந்த தீவிர பிரார்த்தனை பாவத்துடன் இருந்த எனக்கு , திடீரென்று என் உடல் உணர்வு மறைந்தது ; மஹரிஷிகளினுள் ஒன்று கலந்தேன் ; உள்முகப்பட்ட என்னை நான் விரும்பியதைக் காணும்படி பணிக்கும் ஸ்ரீ பகவானது குரலைக் கேட்டேன். ஸ்ரீ ராம பக்தனான நான் ஸ்ரீ ராமபிரானது தரிசனம் கிடைத்தால் என் வாழ்வு நிறைவுபெறும் என்று எண்ணினேன். எண்ணிய மாத்திரத்திலேயே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் தரிசனம்  சீதா , லக்ஷ்மண , பரத , சத்ருக்ன , ஹனுமத் ஸமேதராகக் கிடைக்கப் பெற்றேன். அந்த அனுபவ ஆனந்தம் விவரிக்க இயலாத ஒன்று ! அதை அனுபவித்தவாறு அப்படியே அமர்ந்து இருந்தேன். மஹரிஷிகளின் தீர்க்கமான பார்வை என்னுள் செலுத்தப்பட்டிருக்கலாம். அக்காட்சியில் என்னை இழந்தவாறு ஆழ்ந்த அமைதியில் இரண்டு மணி நேரத்திற்குமேல் அமர்ந்து இருந்தேன். அக்காட்சி மறைந்த பின்பு மயிர்க்கூச்செரிய ஆனந்த பாஷ்பத்துடன் நெடுங்கிடையாக ஸ்ரீ மஹரிஷிகளின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தேன். பகவான் வினவியதின் பேரில் என் இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராமபிரானின் தரிசனம் கண்டு களித்தேன் என்றேன்.

ஸ்ரீ பகவான்  தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர  நூலைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டி என்னைப் படிக்கச் சொன்னார். நான் அதுவரை தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திரம் படித்ததில்லை. அதில் கடைசியிலிருந்து ஐந்தாவது நாமாவளி  ஓம் ஸ்ரீ யோக பட்டாபிராமாய நம :  என்பதாம். ஸ்ரீ பகவான் இதைக் குறித்து  ஸ்ரீ ராமர்தான் தக்ஷிணாமூர்த்தி ; தக்ஷிணாமூர்த்திதான் ஸ்ரீ ராமர்.  அயோத்யா  எங்குள்ளது தெரியுமா  வேத நூல்களின்படி சூரியனில் உள்ளது.  அஷ்டசக்ர நவத்வாரா தேவானாம் புராயோத்யா  ( தேவபுரி அயோத்யா ஒன்பது நுழைவாயில்களும் , எண்கோண வடிவம் கொண்டதும் ஆகும் ). அருணாசலமும் எண்கோண வடிவில் உள்ள நகராகும். ஸ்ரீ அருணாசலேச்வரர்தான் ஸ்ரீ ராமர் ; அவரேதான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியும் ஆவார். ஸ்ரீராமரையோ அல்லது அயோத்தியையோ தரிசிக்க ஒருவரும் சூரியனிடம் செல்ல வேண்டாம் ; இங்கேயே அவை நிதர்சனம்  என்று விளக்கம் அளித்தார்.

இப்படி எனக்கு ஸ்ரீ ரமணர்  ஸ்ரீ ராமபிரானாக  காட்சியளித்தார்  மகாத்மாக்கள் எந்த இஷ்ட தெய்வத்தின் உருவத்திலும் காட்சியளிப்பர் என்ற நீண்ட வழக்கிலுள்ள கூற்றை நிரூபிப்பதாக எனது மேற்கொண்ட அனுபவம் அமைந்தது. ஸ்ரீ ரமண கீதை 18 வது அத்தியாயம் பாடல் 26  இல் இதைக் காணலாம். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ பகவான் ஹனுமானுக்கு ஸ்ரீ ராமனாகக் காட்சி அளிக்கவில்லையா  நான் கண்ட காட்சி தியாகபிரம்மம் கண்டு களித்த ஸ்ரீ ராமதரிசனத்தின் சித்திரத்தை ஒத்திருந்தது. ஆனால் நான் எங்கே  தியாகபிரம்மம் எங்கே ! ஒரு கணம் கூட அத்தைகைய ஒப்பீடு சம்மதமாகாது.

டி.கே.சுந்தரேச அய்யர் அவர்களின் ஸ்ரீ பகவான் திருவடிகளில் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.

வருகின்ற ஞாயிற்றுகிழமை ( 25  03  2018 ) ஸ்ரீ ராம நவமி & பங்குனி மாத புனர்வசு நக்ஷத்திரமும் கூட அதை முன்னிட்டு வெளியிடப்படும். சிறப்புக் கட்டுரை.

from fb ramana mandiram madurai
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1682 on: March 23, 2018, 04:28:33 PM »
Sri ramana mandiram
அருளும் பரிவும் 2
*********************
நாம் சந்திக்க நேரிடும் இடர்கள் இறையருளால் வியக்கும் வண்ணம் விலகுவது பற்றி பகவானுடன் ஒருமுறை பேசினேன். ஒருநாள் பிற்பகல் ஆச்ரமத்துக்கு வந்த அன்பர் ஒருவர் பகவானைத் தரிசித்தபின் தமது பையை அலுவலகத்தை அடுத்துள்ள தாழ்வாரத்தில் வைத்துவிட்டு , விபூதிப் பிரசாதம் பெறுவதற்காக அலுவலகத்துள் சென்றார். அவர் திரும்பி வந்தபோது தமது பையை ஒரு குரங்கு கவர்ந்து சென்றிருக்கக் கண்டார். அவர் பையில் பகவான் பிரசாதமாகப் பெற்ற பழங்களுடன், துணிமணிகளும் பணமும் இருந்தன. குரங்கைத் துரத்திப் பையைத் திரும்பப்பெறும் முயற்சிகள் வீணாயின. ஊர் திரும்புவதற்கான ரயில் கட்டணத்திற்குத் தேவைப்படும். பணமும் தம்மிடம் இல்லாத இக்கட்டான நிலையில் இருந்தார் அவ்வன்பர். இது பகவானுக்கும் தெரியவந்தது. அன்பர் நிலையைக் கண்டு அனைவரும் பரிதாபப்பட்டனர். பகவான் தரிசனத்திற்காக வந்த அன்பருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது , குரங்கு தனக்குப் பிடித்தமான பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பையை எறிந்து விட்டது.

பகவானிடம் இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும்போது , எனது சித்தூர் நண்பர்கள் கூறிய பிறிதொரு நிகழ்ச்சியையும் குறிப்பிட்டேன். எனது நண்பர்கள் மூவர் திருப்பதிக்குக் காரில் சென்றனர். ஏதோ ஒரு காரணத்தால் அவர்களால் அதேகாரில் ஊர் திரும்ப இயலாமல் போயிற்று. சற்று நேரத்தில் அந்தக் கார் அச்சு முறிந்து விபத்துக்குள்ளாது. இச்சம்வத்தை என்னிடம் கூறிய சித்தூர் நண்பர்கள் , திருவேங்கடமுடையான் திருவருளே தங்களை அக்காரில் பயணம் செய்யவிடாமல் தடுத்துக் காத்தது என்றனர். அப்போது நான் அவர்களிடம்  வேங்கடமுடையான் அருள் நீங்கள் காரில் இல்லாமல் தடுத்ததற்கு மாறாக , கார் அச்சு முறியாமலிருக்கும்படி செய்திருக்கலாமே  என்று ஆட்சேபித்தேன். தெய்வ நிந்தனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இவ்வாட்சேபத்தை எழுப்பவில்லை. எனக்குப் புரியாத புதிராக இருந்த ஐயத்தையே இப்படி வெளியிட்டேன். அந்நண்பர்களால் என் கேள்விக்கு விடையளிக்க முடியவில்லை.

இப்போது அதே கேள்வியை பகவானிடம் எழுப்பினேன்.  என் சித்தூர் நண்பர்களிடம் திருவருள் கார் விபத்துக்குள்ளாமல் தவிர்த்திருக்கலாமே என்று நான் கேட்டதுபோல் , பகவானைத் தரிசிக்க வந்த இவ்வன்பர் விஷயத்திலும் திருவருள் பை பறிபோகாமல் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே. அவ்வாறின்றி ஏன் முதலில் பையை இழந்து துயரத்துக் காளாகிப் பின்னர் நிவாரணம் பெற வேண்டும்  என்று கேட்டேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த பகவான் ,  அவ்வாறு நடந்திருந்தால் , சம்பந்தப்பட்டவர்கள் கடவுளைப் பற்றியோ அவரது அருளைப் பற்றியோ சிந்திப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்காது  என்றார். இத்தகைய சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது எனக்கு இப்போது விளங்குகிறது.

--- தொடரும்.

தேவராஜ முதலியார் அவர்களின் தாயும் நீயே ! தந்தையும் நீயே ! என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.


from fb ramana mandiram madurai
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1683 on: March 26, 2018, 03:22:36 PM »
அருளும் பரிவும்  3
*******************
என் இரண்டாவது பெண்ணின் மூன்றாவது பிரசவத்தின் போது நடந்த சம்பவத்தைப்பற்றி இப்போது கூறுகிறேன். அவள் உடல்நலக்குறை காரணத்தினாலும் இரண்டாவது பிரசவத்திற்கும் மூன்றாவது பிரசவத்திற்கும் பத்து வருட இடைவெளியிருந்த காரணத்தினாலும் நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அப்போது என் மனைவியும் காலமாகிவிட்டாள். உதவுவதற்கு மாமியாரோ , அனுபவமும் பொறுப்புமுள்ள மூதாட்டியோ மாப்பிள்ளை வீட்டில் இல்லை. அவள் இருந்த இடத்தில் வேலூரில் இருந்தது போன்ற மருத்துவ வசதி சிறிதளவும் இல்லை. என் கவலைகள் யாவற்றையும் பகவானுக்குக் கடிதம் மூலம் தெரிவித்து வந்தேன். பிரசவகாலம் நெருங்கியதும் என் மாப்பிள்ளைக்கு , நான் அவனுடன் இருப்பதால் பயனொன்றுமில்லை என்றும் எனவே அங்குச் செல்லாமல் பகவானிடம் செல்ல முடிவுசெய்துள்ளேன் என்றும் , தேவைப்பட்டால் அங்கு எனக்குத் தந்தி அனுப்புமாறும் கடிதம் எழுதினேன். இந்தத் திட்டத்தைப் பற்றி பகவானுக்கும் எழுதினேன். ? கவலைப்பட வேண்டாம் ; சுகப் பிரசவம் ஆகும்  என்று ஆசிரமத்திலிருந்து பதில் கடிதம் வந்தது. சாதாரணமாக இம்மாதிரியான பதில் ஆச்ரமத்திலிருந்து வராது. பகவான் அருளால் சுகப்பிரசவம் ஆகும் என நம்புகிறோம் என்ற போக்கில்தான் பொதுவாக அவர்கள் பதில் அமையும். திட்டமிட்டபடி நான் பகவானிடம் சென்று இரண்டு நாட்களுக்கு பிறகு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தெரிவித்து மாப்பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது.

பகவான் என்பாலும் என் குடும்பத்தினர்பாலும் ஆற்றிய மற்றொரு அதிசய அருட்செயலைப்பற்றி இங்கே கூறுவது பொருத்தமாகும். மேற்கூறிய என் பேரக்குழந்தை மூன்று வயதாகியிருந்தபோது கடும் ஜீரம் வந்தது. காஞ்சிபுரத்தில் அச்சமயம் தாசில்தாராக இருந்த என் மாப்பிள்ளை , அவ்வூரில் பெறக்கூடிய மருத்துவ சிகச்சை அனைத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார் ; ஆனால் பல நாட்களாகியும் ஜீரம் தணியவில்லை. ஒருநாள் இரவு ஜீரம் கடுமையாக இருந்ததால் துடிதுடித்துப்போன என் மாப்பிள்ளை , பகவான் குறுக்கிட்டுக் குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என்று பகவானிடம் முறையிடத் தீர்மானித்தார். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து எனக்கு எழுதிய கடிதத்தில் நிலைமையை விளக்கி , பகவான் குறுக்கிட்டுக் காப்பாற்ற வேண்டும் என வேண்டியிருந்தார் ( அப்போது நான் ஆசிரமத்தில் நிரந்தரமாகத் தங்கியிருந்தேன் ). ஒரு பஸ் கண்டக்டர் மூலமாகக் கடிதத்தை அனுப்பிவிட்டு , அவர் ஐந்து மணிக்கு மாடிக்குச் சென்று குழந்தையைப் பார்த்தபோது ஜீரம் தணிந்திருக்கக் கண்டார். கவலை நீங்கியதால் அவர் அடைந்த நிம்மதியும் , தம் அவசர வேண்டுகோளுக்கு உடனே செவிசாய்த்து அருள்பாலித்த பகவானிடத்தில் தோன்றிய நன்றியுணர்வும் எவ்வளவு என்று கூறவும் முடியுமோ ! எனக்கு இக்கடிதம் பஸ் கண்டக்டர் மூலம் 11 மணிக்கு பகவான் ஹாலைவிட்டுக் கிளம்பும் சமயத்தில் கிடைத்தது. பகவானிடம் விஷயத்தை அவசர அவசரமாகத் தெரிவித்துவிட்டு அவருடைய பிரசாதம் அனுப்புவதற்கு ஒப்புதலும் பெற்றுக்கொண்டேன். ஒருகடிதம் எழுதி , பிரசாதத்துடன் அதே பஸ் கண்டக்டர் மூலம் அனுப்பி வைத்தேன். கடிதத்தில் பகவானிடம் உங்கள் கடிதத்தைக் காட்டிய நேரமான 11 மணியிலிருந்தாவது நோயின் கடுமை குறைந்திருக்க வேண்டும்  என்று எழுதியிருந்தேன்.

என் மாப்பிள்ளை கடிதம் எழுதியவுடனேயே ஜீரம் குறைந்துவிட்டதென்று பின்னரே அறிந்தேன். நான் அனுப்பிய பிரசாதம் அடங்கிய கடிதத்தை பஸ் கண்டக்டர் , கவனக் குறைவால் காஞ்சிபுரம் செல்லும் வழியிலிருந்த ஆற்றில் போட்டுவிட்டார். ஆனால் நீரில் மிதந்து கொண்டிருந்த கடிதத்தைக் கண்ட யாரோ ஒருவர் அதனை எடுத்துச் சென்று என் மாப்பிள்ளையிடம் கொடுத்தார். நீரில் ஊறியதால் , எழுதிய விஷயம் ஆங்காங்கே படித்தறிந்து கொள்ளமுடியாத நிலையிலிருந்தாலும் , பிரசாதம் மட்டும் பாதிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

--- தொடரும்.

தேவராஜ முதலியார் அவர்களின் தாயும் நீயே ! தந்தையும் நீயே ! என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.


from fb ramana mandiram Madurai
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1684 on: April 17, 2018, 01:57:11 AM »
பஜனை ( 24  12  1949 )
**************
1943 டிசம்பர் ( மார்கழி ) மாதத்தில் ஒரு பஜனை கோஷ்டி கிரிப்பிரதக்ஷணம் செல்லும் வழியில் பகவான் சந்நிதிக்கு வந்து வணங்கி பஜனை செய்து கொண்டே ஹாலை வலம் வந்து சென்றார்கள். அவர்கள் சென்றதும் ராஜகோபல்லய்யர் பகவானிடம் ,  பகவான் பச்சையம்மன் கோயிலில் இருந்த நாட்களில் , யாரோ ஒருத்தர் ஒரு பெரிய பஜனைக்கு ஏற்பாடு செய்து பகவானையும் அதற்கு அழைத்துப் போனார்களாமே  நிஜந்தானா   என்றார்.

 ஆமாம். அப்பொழுது இந்த ஊரில் ப்ளேக் வந்து அலங்கோலமாக்கி விட்டு ஒருவிதமாகத் தணிந்த காலம். டவுன் ஜனங்கள் , போலீஸ்காரர்கள் எல்லோரும் கலந்து ஒரு பெரிய பஜனைக்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் முக்கியமான சிலர் அடிக்கடி நம்மிடம் வந்து போகிறவர்களாகையால் அவர்களெல்லோரும் , நானும் வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் எதற்கய்யா  என்றால் கேட்கவில்லை. சரி போகட்டும் பார்க்கலாமென்று போனேன். நான் பச்சையம்மன் கோயிலிலேயே இருந்து கொண்டிருந்தேன். அந்த கோயிலுக்கெதிரில் கொஞ்ச தூரத்தில் ஒரு ஏரி இருக்கிறதில்லையா  அதற்குப் பக்கத்திலிருக்கும் பெரிய மைதானத்தில் பந்தல் போட்டு பஜனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பஜனையென்றால் சாதாரணமாகச் செய்கிற பஜனையென்று நினைக்கிறீரா  பந்தலின் நடுவில் பஜனை கோஷ்டி பஜனை செய்வதற்காகக் காலி இடம் விட்டு , சர்க்கஸ் கூடாரத்தில் உள்ளதுபோல் ஊர்ஜனங்களுக்காகச் சுற்றிலும் எத்தனையோ நாற்காலிகள் போட்டிருந்தார்கள். டீ பார்ட்டிக்கு கொண்டு வருகிறது போல் , அநேகவிதமான தின்பண்டங்கள் கொண்டு வந்து எக்ஸிபிஷன் மாதிரி வரிசையாக வைத்திருந்தார்கள். பூமாலைகளுக்கும் கணக்கேயில்லை. கலெக்டர்கள் , தாசில்தார்கள் , போலீஸ் சிப்பந்திகள் எல்லோரும் வந்தார்கள். எனக்காகத் தனியாக ஒரு மேடை போட்டிருந்தார்கள். நான் போனதும் எல்லோருமெழுந்து நமஸ்காரம் பண்ணி ,  சுவாமி ! அந்த மேடை மேல் உட்காருங்கோ  என்றார்கள். இதேதுடா இத்தனை தடபுடல் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் என்ன செய்வது  இப்படி அமர்க்களம் பண்ணுவார்களென்று தெரியாது. வந்து விட்டோம். இனி வேறு வழியில்லையென்று மேடைமேல் உட்கார்ந்தேன். பூமாலை போடப் பார்த்தார்கள். நான் ஒப்புக் கொள்ளாமல் நீங்களெல்லோரும் போட்டுக் கொள்ளுங்கோ ஐயா என்றேன். அப்படியே செய்தார்கள். அது முடிகிற வரை பஜனை ஆரம்பிக்கவில்லை. நான் உட்கார்ந்த பிறகு அனுமதி பெற்று , ஆரம்பித்தார்கள் . ஒரு கோஷ்டி பஜனை பண்ணி முடிந்ததும் பலகாரம் பண்ணுவதும் , சோடா . கீடா குடிப்பதும் , ஓய்வெடுத்துக் கொள்வதும் இன்னொரு கோஷ்டி பஜனை ஆரம்பிப்பதுமாகவிருந்தது. இப்படியாக விடியற்காலைவரை மாற்றி மாற்றி பலகாரமும் பஜனையும் நடந்து கொண்டிருந்தன. நான் மாத்திரம் எதையும் தொடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை நம்மையும் சாப்பிடத்தான் வேண்டுமென்று நிர்பந்திக்காமல் விட்டார்களே என்று நினைத்துக் கொண்டேன். பொழுது விடிய எல்லாம் முடிந்து போயிற்று. ஒருவரும் அங்கேயில்லை. கொட்டகைச் சாமான்கள் எல்லாவற்றையும் எடுத்து விட்டார்கள். அவர்களெல்லோருக்கும் அவ்வளவு உற்சாகம் , ஊக்கம்  என்றார் பகவான்.  அந்த நாட்களிலேயே பகவானுக்கு இத்தனை கௌரவம் இருந்திருக்கு  என்றார் ராஜகோபாலய்யர்.  ஆங் , நான் போகும்வரை பஜனை ஆரம்பிக்கவில்லை  என்றார் பகவான்.  இந்த விஷயம் சரித்தரத்தில் இல்லையே  என்றேன். சரியாபோச்சு. அவர்களிடம் இதெல்லாம் எதற்குச் சொல்ல வேணும்  என்றார் பகவான்.  பகவான் இதுபோல் எத்தனை விஷயங்களை மறைத்திருக்கிறாரோ  என்றேன். பகவான் புன்சிரிப்புடன் மௌனம் பாலித்தார்.

ஸ்ரீ ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்  2 லிருந்து ஒரு பகுதி.

fb ramana mandiram
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1685 on: April 30, 2018, 02:46:01 AM »
One night during this visit Sri Bhagavan enquired whether country orange pickle was available in the ashram.  The sarvadhikari was annoyed to find there was none. The next afternoon Sri G.L.Narasimha Rao as usual submitted the outgoing ashram mail for Sri Bhagavan's perusal.  It contained a letter by the sarvadhikari to a Madurai devotee asking for a basket of country organges.
Sri Bhagavan flared up on reading it and called out angrily, To these people salvation seems to lie in country oranges! Otherwise why should we write to someone for them?  Would they not come of their own accord if they were destined to come? Well, do as you please.?
So saying, he threw that letter at Sri Narasimha Rao.   Just as the latter was withdrawing in trepidation, a railway contractor entered the hall with two sealed baskets.   They were parcels for which no R.R had been received.  In those days it was the invariable practice to show first to Sri Bhagavan anything that came to the ashram before it was taken inside.
Now Sri Bhagavan's mood completely changed.   With a great show of good humour he observed, What! Are these parcels country oranges?  Open them and see.
When the baskets were opened they both turned out to be full of country oranges.   They were immediately sent to the kitchen to be cut and pickled.   A few minutes later Sri Bhagavan remarked. Perhaps one basket has sour oranges and the other sweet oranges, and sent someone to the kitchen to make sure before mixing them up.
It turned out to be exactly as Sri Bhagavan had said. The sweet oranges were peeled first and the slices were distributed among all the devotees then and there.   Seized with wonder, I enquired whether we should consider the incident as a miracle or as mere chance coincidence.


from the power of presence vol III, David Godman

Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1686 on: May 01, 2018, 02:27:59 AM »
Sri Bhagavan always held up Lord Dakshinamurti as the ultimate example of a silent teacher.  This is what he wrote when he composed a brief preface to his translation of Sri Sankaracharya's hymns  in praise of Lord Dakshinamurti.34

Brahma the creator of the universe had four sons born of his mind, namely, Sanaka, Sanandana, Sanatkumara and Sanatsujata   They heard from their father that they were intended to help in such works as the creation of the universe.   But they were averse to the work and they desired peace.  So they went in search of those who could show them the way to peace   As they were fully ripe for initiation, the embodiment of the highest grace, the Supreme Lord himself, appeared before them as Dakshinamurti in the silent state of Self-abidance, manifesting chinmudra [the gesture of pure consciousness]. Seeing him, they were attracted like iron to the magnet, and in his presence they remained, like him in Self-abidance.

G V  Subbaramayya

34Bhagavan initially composed this introduction in Tamil.   Many years later he wrote a Telugu version.   This is Subbaramayya's translation of part of the Telugu version.

from the Power of the Presence Vol III David Godman
« Last Edit: May 01, 2018, 02:29:31 AM by Balaji »
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1687 on: May 08, 2018, 12:17:20 AM »
In the years that followed I always attempted to go to Sri Ramanasramam for Sri Bhagavan's Jayanti celebrations, but there were a few occasions when personal and family problems made it impossible.  One year Devaraja Mudaliar gently admonished me in Sri Bhagavan's presence for failing to attend the previous Jayanthi celebration.

He concluded by saying, I believe that Sri Bhagavan expects us, his children, to gather at his feet especially on such occasions.

Sri Bhagavan smiled at this remark, turned to me and said, The feet of Bhagavan are everywhere.   So where can we gather except at his feet.  Time and space are no barriers to the gathering of hearts.

G.V.Subbaramayya


The Power of the Presence, David Godman, Part III
« Last Edit: May 08, 2018, 12:19:09 AM by Balaji »
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1688 on: May 10, 2018, 09:11:19 PM »

கேள்வி: ஒருவன், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைத் தனது குருவாகக் கொள்ளலாமா?

மகரிஷி: குரு என்பது யார்? அது ஒருவனுடைய ஆன்மாதான். மனம் பக்குவ நிலைக்கு வந்தபிறகு, ஒருவனுடைய ஆன்மாவே குரு ரூபமாகக் காட்சியளிக்
கின்றது. அவதூதருக்கு 24 குரு உண்டு என்று கூறப் படுகின்றது. கடவுள், குரு, ஆன்மா எல்லாம் ஒன்றே! ஒருவன் கடவுள்தான் எங்கும் நிறைந்து சர்வசக்தி
படைத்தவன் என்று நினைத்து கடவுளைக் குருவாக ஏற்றுக் கொள்கிறான். பிறகு கடவுள் அவனை ஒரு குருவினிடம் அழைத்துச் செல்கின்றார், அல்லது அவரே குரு வடிவம் எடுத்து வருகின்றார். குருவைத் தஞ்சமடைந்த அவன் இறுதியில் அந்தக் குருவின் அருளால் அவனுள்ளே இருக்கும் ஆன்மாவே சத்தியம், தனக்கன்னியமாக வேறொன்றும் இல்லை என்று உணர்கின்றான்.

from  fb Ramana Mandiram
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1689 on: May 11, 2018, 01:48:16 AM »
People discuss whether Brahman is with form or without form, but I have seen Brahman on the slopes of Arunachala in the form of a frail old man, tottering about with a stick in his hand, opening out the large lotus petals of his eyes and looking round for souls to save.  He is none other than Sri Ramana.

Sri Ramana Deva Malai.V.201
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1690 on: May 23, 2018, 08:02:50 PM »
ஒரு ஞானியே , இன்னொரு ஞானியை அடையாளம் காண முடியும்.

வேதாந்த நூலான  கைவல்ய நவநீதம்  என்ற புத்தகம் ,  உண்மையான ஞானி என்பவர் யார்   என்று கேள்வி கேட்கிறது. அதற்கு அந்த புத்தகமே பதிலும் சொல்கிறது. எவர் ஒருவர் எல்லாக் காலத்திலும் நடுநிலையில் நிற்கிறாரோ , அவரே ஞானி ! நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன  தாமரை இலைத் தண்ணீர் போல , இந்த உலகத்துடன் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்பவர். தன்னை ஒரு சாதாரண மனிதர் என்று வெளிக்காட்டிக்கொள்வார். தன்னுடைய பண்டிதத் திறமையை ஒருபோதும் வெளியே பறைசாற்ற மாட்டார். எந்நேரமும் பலருக்கு உபகாரமாகவே இருப்பார்.

ஞானிகள் தவம் செய்பவர்களாக இருப்பார்கள் ; அல்லது , வாணிபம் செய்பவர்களாக இருப்பார்கள் ; உலகத்தை ஆளும் மன்னர்களாக இருப்பார்கள் ; இரந்து உண்ணும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். கடந்த காலத்தைப் பற்றி ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சிந்திக்க மாட்டார்கள். இடையறாது நிகழ்காலத்திலேயே இருப்பார்கள். உணவு ருசியற்று. எந்த உணவு எதிரே வைக்கப்பட்டதோ , அதை மௌனமாக உண்பார்கள். வானம் கீழே விழினும் , சூரியன் நிலவாக மாறினாலும் , பிணம் எழுந்து வந்தாலும். அதைப் புதுமையாகப் பார்க்கமாட்டார்கள். நன்மைக்கும் தீமைக்கும் நடுவே சாட்சியாக இருப்பார்கள்.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியும் இப்படித்தான் ஞானியாக ஜீவன் முக்தராக வாழ்ந்திருந்தார். இவை பல்வேறு நிகழ்ச்சிகளாக வெளிப்படுகின்றன. ஒருவர் , அடுத்தவருடைய வாழ்வைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது அவருடைய மோசமான குணம். தன்னால் பிறருக்கு என்ன உபயோகம் என்று பார்க்காமல் , பிறரால் தனக்கு என்ன உபயோகம் என்று இடையறாது சிந்திப்பது. இப்படி யோசிப்பதில் தன்னுடைய யோக்கியதை என்ன என்பது மறந்துபோகும். தன் யோக்கியதையை வளர்த்துக்கொள்வது என்பது குறைந்து போகும். அப்படிப்பட்ட மனம் , இடையறாத தந்திரத்தில் ஈடுபடும். தந்திரத்தில் ஈடுபட்ட மனம் , அமைதியாக இருக்காது. அமைதியாக இல்லாத மனம் , தன் குற்ற உணர்ச்சியை மறைக்க , ஆரவாரமாகப் பேச ஆரம்பிக்கும். ஆரவாரமாகப் பேசுவது மிக எளிதாக அடுத்தவருக்குப் புரிந்துபோய் , அது மிகப் பெரிய ஆபாசமாக காட்சியளிக்கும். தான் ஆபாசமாகக் காட்சியளிக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் , தொடர்ந்து அவர்கள் ஆரவாரமாக இருப்பார்கள்.

1908  ல் , பகவான் ஸ்ரீ ரமணர் , விரூபாக்ஷி குகையில் வாழ்ந்து வந்தார். அந்த குகைக்கு அருகே , பாலானந்தர் என்கிற இன்னொரு சாதுவும் இருந்தார். பாலானந்தருக்குப் பல மொழி அறிவுகள் உண்டு. பல நூல்கள் கற்றவர். சாமார்த்தியசாலி. தனக்குப் பலவிதமான சக்திகள் இருப்பதாக , எதிராளியாக எளிதில் நம்பச் செய்கிற தந்திரசாலி. முக்காலம் அறியும் ஞானம் இருக்கிறது என்பதை , தன்னை தேடி வருபவர்களுக்குச் சொல்லி , அவர்களிடமிருந்து காசோ பொருளோ வாங்கிக்கொள்ளுகிற எண்ணம் உடையவர். அதை மிகப் பெரிய சாமர்த்தியம் என்று கருதிக்கொள்பவர்.

விரூபாக்ஷி குகைக்கு பகவான் ரமண மகரிஷி வந்தார். அப்போது அவரை பிராமண சாமி என்றுதான் மக்கள் அறிவார்கள். திருவண்ணாமலைக்கு வந்து , ஆலய தரிசனம் முடித்து , மலைக்கு மேலே பக்தர் கூட்டம் வரும். மலையில் உள்ள சாதுக்களை நமஸ்கரித்துவிட்டு , தன்னால் இயன்ற உணவுகளையும் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போகும். இதற்காக , அந்த மலையில் வாழ்கிற பல சாதுக்கள் ஆவலாகக் காத்திருப்பார்கள். மலையேறி வருபவர்களை மடக்கி ,  இங்கு வா , என்னிடம் வந்து பேசு என்று வலியப் போய் உட்கார வைப்பார்கள்.

பிராமண சுவாமி என்று அழைக்கப்பட்ட பகவான் ரமண மஹரிஷி வந்த பிறகு. இந்த மாதிரியான சாதுக்களுக்கு வரும் கூட்டம் குறையத் துவங்கியது. தங்களுக்குக் காசு குறைவாக வருகிறதே என்ற வருத்தத்தைவிட , பிராமண சாமிக்கு அதிக வருமானம் வருகிறது என்ற ஆதங்கத்தில் பொசுங்கினார்கள்.

பகவானுக்கோ வரும் பொருட்கள் பற்றியும் , பணம் பற்றியும் எந்தச் சிந்தனையும் இல்லை. இந்தப் பற்றற்ற தன்மையையும் , அவருடைய ஆழ்ந்த மௌனத்தையும் , பாலானந்தர் அருமையாக உபயோகப்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார்.  உள்ளே இருக்கிற குழந்தை என்னுடைய சிஷ்யன்தான் ; அதற்கு வேண்டுவன கொடுங்கள். குழந்தாய் , அவர்கள் கொடுப்பதைத் தட்டாதே ! நான் சொல்கிறேன் , வாங்கிக்கொள் !  என்று உத்தரவு இடுவதைப்போல அலட்டுவார்.

பகவானுக்கு வந்த பொருட்களைத் தாராளமாகக் கையாளுவார். பகவானுக்கு இந்தச் சாதுவின் பலவீனம் தெரிந்தே இருந்தது. ஆனாலும் , அதைப் பற்றிய எந்த விமர்சனமும் இல்லாமல் , அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல மௌனமாக இருந்து விடுவார். இந்த மௌனத்தை இன்னும் அதிக அளவில் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்ளத் தீர்மானம் செய்தார் பாலானந்தர்.எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்களுடைய பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ( விகடன் வெளியீடு ) என்னும் நூலிலிருந்து.

from fb Ramana Mandiram
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1691 on: May 28, 2018, 11:16:28 PM »
G.V.Subbaramayya

from the Power of the Presence Vol.III, by David Godman

Sri V Anantachari took immense pains in the printing of the Telugu Sri Ramana Gita.  When his services were appreciatively referred to in the preface, he pleaded hard with Sri Bhagavan that his name should not be so mentioned.

Sri Bhagavan told him, Why do you worry? To ask for the omission of your name is as much egotism as to desire its inclusion.  So let it be.   After all, who knows whom Anantachari is?'

Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1692 on: June 10, 2018, 01:33:20 AM »
அண்ணாமலையாரை சுற்றி வருவது பற்றி
ஒரு உண்மை கதை...

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள், முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்  என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.
திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.
கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்
கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.
விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.
பெரியவரை நெருங்கிய வாலிபன், ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள் இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.
ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.
அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான் ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.
ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.
அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.
இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.
ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.
ஆமாம். அது என்ன தெரியுமா
விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார் ஓர் இளைஞன்.
ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!
எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன நம் குரு தேவரும் அப்படித்தான்.
அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!
கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்
ஓம் நமசிவாய சிவ சிவ அன்பே சிவம்..


from fb
« Last Edit: June 10, 2018, 01:35:37 AM by Balaji »
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1693 on: June 12, 2018, 12:45:09 PM »
எச்சம்மாள் தத்தெடுத்த பெண் செல்லம்மாள் பகவானைத் தரிசிக்க அடிக்கடி வருவதுண்டு. அவளுக்கு அப்போது 10-12 வயதிருக்கலாம். எச்சம்மாள் அடிக்கடி ஏகாதசி, கார்த்திகை என்று கூறிக்கொண்டு உபவாசம் இருப்பதுண்டு. செல்லம்மாளும் அவளுடன் உபவாசம் இருக்கத் தொடங்கினாள். செல்லம்மாவிற்கு சிறு வயதாதலால் அடிக்கடி உபவாசம் இருப்பது அவளுடைய உடல் நலத்தைப் பாதித்தது. எச்சம்மாள் அவள் மூலமாகத்தான் பகவானுக்குச் சாப்பாடு அனுப்புவாள். ஒரு கிருத்திகை நாளன்று பகவானுக்கு அவள் உணவோ அல்லது பாலோ கொண்டு தந்தாள்.

பக்தர்கள் நலனைப் பேணிப் பாதுகாக்கும் பகவான் வாடிய முகத்துடன் இருந்த செல்லம்மாளை நோக்கி,ஏன் முகம் வாடியிருக்கின்றது உணவு உட்கொண்டாயா என்று கேட்க அதற்கு அவள் அன்று கிருத்திகையாதலால் உபவாசம் இருப்பதாகக் கூறினாள். நீ இப்போது சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன் என்று பகவான் சொல்லி அவளது உபவாசத்தைக் கைவிடச் செய்து சாப்பிட வைத்தார்.

பகவானைக் காண அவள் மறுமுறை கீழிருந்து வந்தபோது வழியில் ஒரு காகிதத்தில் வடமொழியில் ஒரு சுலோகம் எழுதியிருப்பதைக் கண்டாள். கீழேயிருந்த அக்காகிகத்தை எடுத்து பகவானிடம் கொண்டுவந்து
கொடுத்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டாள்.

வடமொழி சுலோகத்தைப் படித்த பகவான், நேற்று நான் உன்னிடம் சொன்னதைத்தான் இந்தச் சுலோகம் கூறுகின்றதுஎன்றார். எதற்காக நியமங்கள் எல்லாம் பின்பற்றப்பட வேண்டும் (உண்மை நிலையில் என்றும் நிலைத்திருக்கும்) சாதுக்களுடைய நட்பை நாடிப் பெற்றால் எவ்வித நியமத்திற்கும் ஏதும் அவசியமில்லை. குளிர்ச்சி பொருந்திய தென்றல் காற்று வீசும்போது விசிறிக்கு என்ன வேலை என்று அதை விளக்கினார். அவள் கேட்டுக் கொண்டபடி அந்தப் பாடலைத் தமிழில் மொழி பெயர்த்தார். சாதுக்களாவார் சகவாசம் நண்ணினால் என்று தொடங்கும் இப்பாடல் பின்னர் உள்ளது நாற்பது. அனுபந்தத்தில் சேர்க்கப்பட்டது.

from fb tamil ramana maharishi
Om Namo Bagavathe Sri Ramanaya

Balaji

 • Hero Member
 • *****
 • Posts: 1174
  • View Profile
Re: Our Bhagavan-Stories
« Reply #1694 on: June 12, 2018, 01:58:52 PM »
The ladies tried to be in the kitchen  very early, but he was always there first, cooking the sambar.  One day some of the sambar was taken to a devotees's house, but when it was discovered that it was sambar cooked from previous day's leftovers, a special ceremony was ordered to purify the house.

On hearing this Bhagavan told the ladies,  Call the purifiers and get your kitchen purifed.  I shall never more enter you kithcen.

The women for the sake of their  orthodox customs, lost Bhagavan's constant presence, company and guidance.   It was a real tragedy.    All the devotees in the ashram believed that Bhagavan was God incarnate, and that he came to purify us, bless us, and put our feet firmly on the path to liberation.

Sadhu Trivenigiri Sundaram

The Power of the presence Vol III David Godman
Om Namo Bagavathe Sri Ramanaya