contd.,
நருமதை:
நருமதை, சோமமுகி, சோமசேகரப் பிரியை, மருமபீவி, சுமாமார்த்தினி, தரிசனி, சுப்பிரபை, சுலபை, புண்ணியை, இரேவை, மேகல கன்னிகை, சருவக்கியை என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் வச்சிராயுதம் போன்ற பாவத்தைத் தீர்ப்பாள்.
சரஸ்வதி:
சரஸ்வதி, சாந்தவை, சமரூபி, சமப்பிரதை, ஞானவயிராக்கியதை, ஞானரூபி, அஞ்ஞான விபேதினி, மேரு கோடரசம்பூதை, மேகநாத நுவாத்தினி, பிரதீசி, சண்டேகேஸ்வர், மாயா விச்சேதகாரிணி என்பனவாம். இவ்வன்னையை வணங்கினால் மெய்ஞானமும் வைராக்கியமும் கிடைக்கும்.
காவேரி:
பொன்னி, விதிசம்பூதை, கலியாணி, சாமதாயினி, கலியாண தீர்த்த ரூபி, சையாசவ உற்பவை, உலோபாமுத்திரா, சுவாசாஸ்யாமா, கும்ப சம்பவ வல்லவை, விண்டு மாயை, கோளிமாதா, தக்கணபதசாவனி என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் அகம்பாவம் நீங்கும். நினைத்தவற்றைப் பெறலாம்.
கோதாவரி:
கோதாவரி, கோதை, கவுதமவநாசிநி, சத்தஸ்ரோதை, சத்தியவதி, சத்தியரூபி, சுவாசினி, கலபை, சூக்குமதே காட்டியை, வேகாவர்த்தை, மலாபிகை, பத்தவிட்டதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் நினைத்தவற்றைத் தந்திடும் இயல்பினள்.
துங்கபத்திரா:
கன்னியா நதி, தேவி, கனகாயை, கரூச்சை, கலாவதி, காமதை, காமப்பிரிய வரப்பிரதை, காளி, காமப்பிரதை, காலதாயினீ, கடமாகலை, துங்கபத்திரா என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் 16,000 அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறலாம்.
கிருஷ்ணவேணி:
பயோட்டனி, பாபகாரிணி, பாலகை, பரிமோதினி, பூரனை, பூர்ணாவதி, மோகை, மேகாவதி, சுபை, அந்தர்வேகதி, வேகை, சரிவேச்சித பலப்பிரதை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் காமதேனு வாழும் உலகம் கிட்டும்.
சரயு:
சரயு, சண்டவே காட்டியை, இட்சுவாகு குல வல்லபை, ராமப் பிரியை, சுபாராம தடத்துவய விராசிதை, சரப்பிர விருத்தை, எக்யாங்கை எக்கிய பலதாயிணி, சீரங்க வல்லபை, மோகதாயினீ, பூரண காதை, பத்த விட்டதான சவுண்டீரை என்பனவாகும். இவ்வன்னையை வணங்கினால் கொடுங்கலியால் (சனி) படும் துயரைப் பறந்தோடச் செய்வாள்.
மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் திருக்கோயில்கள்
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு சோமேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொட்டையூர், கும்பகோணம் நகர்.
அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு அமிர்தகலசநாதசுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில், பாணாதுறை, கும்பகோணம் நகர்.
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஆதிகம்பட்டவிஸ்வநாத திருக்கோயில், கும்பகோணம் நகர்.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர்.
மகாமக குளத்திலுள்ள தீர்த்தங்களும் பலன்களும்
இந்திர தீர்த்தம் - வானுலக வாழ்வு அளிக்கும்
அக்கினி தீர்த்தம் - பிரமஹத்தி நீங்கும்
யம தீர்த்தம் - யம பயமில்லை
நிருதி தீர்த்தம் - பூத, பிரேத, பைசாச குற்றம் நீங்கும்
வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்
வாயு தீர்த்தம் - பிணிகள் அகலும்
குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்
ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்
பிரம தீர்த்தம் - பிதிர்களைக் கரையேற்றும்
கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்
யமுனை தீர்த்தம் - பொன்விருத்தி உண்டாகும்
கோதாவிரி தீர்த்தம் - இஷ்ட சித்தி உண்டாகும்
நருமதை தீர்த்தம் - திடகாத்திரம் உண்டாகும்
சரசுவதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்
காவிரி தீர்த்தம் - புருஹார்த்தங்களை நல்கும்
குமரி தீர்த்தம் - அசுவமேத பலன்களைக் கொடுக்கும்
பயோடினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்
சரயு தீர்த்தம் - மனக்கவலை தீரும்
கன்னிகா தீர்த்தம் (அறுபத்தாறு - துன்பம் நீங்கி இன்பம் கோடி தீர்த்தம்) கைகூடும்
தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவி கிட்டும்.
நீராடுவதன் நோக்கம்
புண்ணிய தீர்த்தங்களிலும், நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் பிறவி ஈடேறுவதற்காக தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.
பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.
ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப் படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
திருமுறைகளில் மகாமகம்
1. குடமூக்குப் பதிகம்
2. ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
அப்பர் தேவாரம் 6.75.10
3. பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்
திருத்தொண்டர் புராணம் 2307.
Arunachala Siva.