Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 ... 51 52 53 54 55 56 57 58 59 60 [61] 62 63 64 65 66 67 68 69 70 71 ... 79
901
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

================================

ரமணருக்கு முதுமையுடன் நோயும் சேர்ந்து உடல் மிக நலிந்திருந்த சமயம். ஆனால் எப்போதும் யாராவது அவரைத் தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். மருத்துவரோ கண்டிப்பாக ஒய்வு தேவை என்று கூறினார். குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்குப் பின் பகவான் சற்று ஒய்வு எடுக்கட்டும் என்று மிகுந்த நல்லெண்ணத்தோடு தீமானித்த நிர்வாகம் ஒரு போர்டு வைத்தது. ‘பகல் பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை யாருக்கும் அனுமதியில்லை’ என்று அதில் எழுதியிருந்தது.

சாப்பிடப் போயிருந்த பகவான் திரும்பி வந்தார். போர்டைப் பார்த்தார். பேசாமல் கூடத்துக்கு வெளியே உட்கார்ந்து விட்டார்.

‘பகவான் உள்ளே போகலாமே’ என்று மற்றவர்கள் கூறினர்.

‘யாருக்கும் அனுமதியில்லை என்று எழுதியிருக்கிறதே. அது நமக்கும் தானே’ என்று சொல்லிப் பகவான் எல்லோரையும் திகைக்க வைத்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

902
 Dear ksksat27 sir

I am a diabetic for the past 10 years due to heriditary. I am living in france, origin of Pondicherry. 

I am a vegetarian. I take morning 3 tablets Metformine 850 gms. Amarel 2mg. Onglyza .  I walk 45 mins on sunday morning in a neary by park.  Sometimes I take some 48 herbs of "Sakkari Kolli". My father got from local " Nattu Marundhu Kadai" at Pondicherry .My friends living here take insulin now. If you regulate your food we can bring control the sugar levels .  Avoid rice and Maidha .  Take 100 percent wheat and fibre foods. Morning Oats milk is good. Eat green vegetables.  Sometimes I get hungry at about 11 o clock morning. Pl Buy a Appartment Cycle and do exercise or yoga. Add  stevia sweetner 0 colories sugar .

904
General topics / Re: Happy Ram Navami Fri 19 April 2013
« on: April 19, 2013, 11:17:36 PM »
Subramanian Sir

Om Namo Bagavathe Sri Ramanaya

pl sing saranagathi song of Sri Ramana

905
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
==========================================

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

906
Arunachala / Re: Arunachala & Mahisa-asura-mardini
« on: April 17, 2013, 12:17:01 PM »
Long long ago there lived a demon (Asura) named Mahisha. He wanted to become invincible and so he prayed to Lord Brahma for the boon of invincibility. With this aim he performed severe penances and austerities.  All the three worlds trembled under the strength of his penance. This impressed Lord Brahma who then came down to grant him a boon. Mahisha asked for immortality, which the Lord said he could not have as every creature that was born had to die. Mahisha decided that he would cunningly ask for a boon that would make him as good as immortal. He asked that no man should be able to kill and if he had to die, it should only be at the hands of a woman. He was sure that no woman could ever fight against him however strong she would be.
 Now that Mahisha was invincible, he started doing evil deeds and terrorising the people on earth and boldly tried to conquer the gods in heaven. His attack was so powerful that even Indra’s mighty thunderbolt could not drive him away. Mahisha drove out the Gods and took over Indra’s throne and  started harassing all the pious people who continued praying to Vishnu or Shiva. Unable to tolerate his tyranny, the gods pleaded with Vishnu to put an end to the demon. The Trinity of Brahma, Vishnu and Maheswara (Shiva) joined together to create an all powerful female form with ten arms – Goddess Durga or ‘Mahamaya’, the Mother of the Universe who embodies the primeval source of all power. The gods then bestowed upon this Supreme creation their individual blessings and weapons. Armed like a warrior, the goddess appeared on the back of a fierce lion to battle with the Mahisasura. After a fierce combat the ‘Durgatinashini’ was able to slay the ‘Asura’ king with her trident. She thus earned the title of Mahishasura Mardhini – the destroyer of Mahishasura.  Heaven and earth rejoiced over her victory and everyone, gods and humans alike chanted loudly the  refrain of  supplication before this Supreme Power:
“Ya devi sarbabhuteshshu, sakti rupena sanksthita Namasteshwai Namasteshwai Namasteshwai namo namaha.”
Vijaya Dasami is the day on which this event happened. It is the tenth day after the nine nights of Navaratri and signifies the victory of the Goddess Durga over the powers  of darkness. It is believed that the famous battle between Durga and Mahishasura took place right here on the slopes of Arunachala. Thus the brave Parvathi took the form of Durga, the fierce Shakthi and screamed at Mahishasura, “This is a sacred place where only sages and devotees of Arunachala can reside, therefore do not incur the wrath of my Lord and be burnt by Him. It is ordained that I should fight and kill you.” Hence She took him outside the borders of Tiruvannamalai. After a nine day battle She slayed him and returned to Tiruvannamalai truimphantly, where She continued her tapas on the slopes of the holy mountain. Thus the Navaratri festival although celebrated all over India, has the greatest significance in Tiruvannamalai.

from the internet

907
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

=====================================

உற்சாகத்தின் ஊற்றாய் திகழ்ந்தவர் பகவான். எப்போதும் அவர் உற்சாகத்தோடு இருப்பார். அவர் கொட்டாவி விட்டோ அல்லது தூங்கியோ யாருமே பார்த்தது கிடையாது. அவரைத் தரிசிப்பவர்களிடத்திலெல்லாம் அந்த உற்சாகம் என்பது தானாகவே ஒட்டிக்கொள்ளும்

ஆரம்ப நாட்களில் அவரிடம், ஜயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என பக்தர்கள் சொன்னபோது, ‘நான் எங்கே பிறந்தேன்?’ என்று கேட்டார் பகவான். அதுமட்டுமல்ல; ஜயந்தி விழாவை கொண்டாட சம்மந்தமே தெரிவிக்கவில்லை.

1912ஆம் ஆண்டு, பக்தர்கள் மீண்டும் பகவானிடம், அவரது ஜயந்தி விழாவை கொண்டாட வேண்டும் எனக் கேட்ட போது, ‘ஜயந்தி விழாவை ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு வலுவான காரணத்தை சொல்லுங்கள்’ என்றார். அதற்கு பக்தர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

‘பகவானே, உங்களை தரிசிக்க தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள், உலகின் பல மூலைகளிலிருந்தும் வருகிறார்கள். ஒரு பக்தர், இன்னொரு பக்தரோடு தொடர்புகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஜயந்தி விழாவை கொண்டாடினால், பக்தர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக் கொள்ள வசதியாக இருக்குமே’ என்ற காரணத்தை அவர் முன் வைத்தார்கள். அதன் பிறகுதான், சரியென்று அதற்கு சம்மதம் தெரிவித்தார் பகவான் ஸ்ரீரமணர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

908
When Bhagavan was living on the hill, this incident took place. Bhagavan loved children and was charmed by their innocence. He admired their lack of hypocrisy. Vajreswari, the four year old daughter of Kavyakanta Ganapathi Muni, a staunch devotee of Bhagavan and a well known Sanskrit scholar, had full liberty with Bhagavan and would insist on sitting on his lap whenever she came. Bhagavan would often call her near him, and show her affection by putting her on his lap and talking to her.
Once Vajreswari came to the Skandasramam and as usual sat on Bhagavan’s lap. As Bhagavan was holding her and talking to her lovingly, a young monkey came up to them. The young monkey apparently got jealous of Vajreswari, pushed her off Bhagavan’s lap and took her place. Vajreswari started to cry, and she pleaded with Bhagavan, “Send this monkey out, I want to sit on your lap.” But the young monkey would not give up his privileged place and continued to sit there. This rivalry between the child and the young monkey thoroughly amused Bhagavan but at the same time, he wanted to appease both of them. He turned to the young monkey and said, “Look, Vajreswari is your sister. Is she not? Let her also sit on my lap with you. Give her some room.” Then he looked at Vajreswari who was standing near him and said. “Is he not your young brother? Come on both of you sit on my lap.”
Finally both the child and the monkey sat together on Bhagavan’s lap fully satisfied and enjoyed each other’s company. Is this not a practical demonstration of Bhagavan’s great love for all beings irrespective of their forms?

909
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There are no any short routes to reach the Feet of God.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அதிகாரியான எஃப். ஹெச். ஹம்ப்ரீஸ் என்பவர் பகவானை முதலில் பார்த்ததும் தனக்கு எப்படி இருந்தது என்ற உணர்வை அப்படியே எழுதியிருக்கிறார்.அதை பழம் பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். அதை இப்போது பார்க்கலாம்.

”குகையை அடைந்ததும் நான் அவரது காலடியில் வாய் திறக்காமல் உட்கார்ந்தேன். இப்படி ரொம்ப நேரம் மௌனமாக இருந்ததால் நான் என் வசமிழந்து என்னுள் ஓர் எழுச்சி உண்டாவதை உணர்ந்தேன். அரை மணி நேரம் நான் மகரிஷியின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவரது கண்கள் அசையவே இல்லை. புனித ஆவியின் ஆலயமே உடல் என்பதை நான் உணரத் துவங்கினேன்.என் எதிரே அமர்ந்திருந்த மகரிஷியின் உடல், அவர் அல்ல என்கிற உணர்வு தோன்றியது, கடவுளின் செயற்கருவியே அவர். எதிரே சும்மா அசைவற்று உட்கார்ந்த பாணியில் உள்ள உருவம் உயிரற்ற உடல் மட்டுமே. அந்த உடல் மூலம் கடவுள், சரம் சரமாகக் கதிரொளியைப் பரப்புகிறார்.என்னுள் எழுந்த எண்ணங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.’’

பாருங்கள். ஒரு கிறிஸ்துவர், அதுவும் கடுமையான பணி புரியும் காவல் துறை அதிகாரி எப்படி உணர்கிறார் பாருங்கள். அவர் மட்டுமல்ல, அன்று மட்டுமல்ல., இன்றைக்கும் நீங்கள் திருவண்ணாமலை ரமணாச்ரமம் சென்று அவரது சன்னதியின் முன்னால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கள். நீங்களும் ஹம்ப்ரீஸ் போல் உணர்வீர்கள்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

910
Thank you very much for your comments Mr Subramanian Sir .

911
காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார். நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர். பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர். பெரும் புகழ் படைத்தவர்.

அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.

1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது. ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச் சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.

தன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.

விடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.

குகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.
கணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, ”கற்க வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித் தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.

பகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை விளக்கி விட்டு பின்னர் உபதேசமும் அருளினார்.

”‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான் தவம்.’’

கணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன.

அன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை, ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம். ‘மருவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.

ஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட முதல் இடம். புனித பூமி.

ஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன.

அவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா?
காவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.

ரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

from the facebook

912
General Discussion / Re: Had darshan of Arunachala Ramana
« on: April 03, 2013, 03:05:34 PM »
Dear ksksat27

Very happy to hear your visit to Thiruvanamalai  . Pl hear this song
of Ilaiyaraja's Guru Ramana Geetham
 http://www.youtube.com/watch?v=J9Y3Mj22KAg

913
Ashrams / Re: Ramana Ashram
« on: April 02, 2013, 05:24:08 PM »
Announcements: Sri Ramanasramam Website Translations
The Ashram appreciates the spontaneous response of devotees to our request for translators for our website. We now have translators for German, Russian, French, Polish and Hebrew. We are still looking for a Spanish translator.

914
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

915
ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
===========================================

சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
==========================================

திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.

கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..

பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.

பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.

பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.

நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Pages: 1 ... 51 52 53 54 55 56 57 58 59 60 [61] 62 63 64 65 66 67 68 69 70 71 ... 79