Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 ... 33 34 35 36 37 38 39 40 41 42 [43] 44 45 46 47 48 49 50 51 52 53 ... 74
631
Translation by Michael James
The Bridal Garland of Letters in Praise of Sri Arunachala
 
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

தருண அருணமணி கிரண ஆவலி நிகர்
தரும் அக்ஷர மண மகிழ் மாலை
தெருள் நாடடிய திரு அடியார் தெருமரள்
தெளிய பரவுதள் பொருளாக
கருண ஆகர முனி ரமன ஆரியன் உவ
கையினாள் சோலியது கதி ஆக
அருணாசலம் என அகமே அறிவு ஒடும்
ஆழ்வார் சிவனுலகு ஆள்வார் ஏ

Those who sink into the Heart with the thought Arunachala taking as a means this joyful Akshara-manamalai-(the bridal  garland of letters), which is like a series of golden rays of the rising sun and which  was sung in divine ecstasy by our Guru, Muni Ramana, the Embodiment of Grace, as a refuge, as a prayer to dispel the ignorance of good devotees who seek enlightment –will rule Siva-Loka(that is, they wil  become one with Lord Siva Himself).     Sri Muruganar

632
Sri Ramana Maharshi - The Essence of Instruction (Upadesa Saram)(Translated by Prof. K. Swaminathan)


1.  Action yields fruit,
For so the Lord ordains it.
How can action be the Lord?
It is insentient.

2.  The fruit of action passes.
But action leaves behind
Seed of further action
Leading to an endless ocean of action;
Not at all to moksha.

3.  Disinterested action
Surrendered to the Lord
Purifies the mind and points
The way to moksha.


4.  This is certain:
Worship, praise and meditation,
Being work of body, speech and mind,
Are steps for orderly ascent.

5.  Ether, fire, air, water, earth,
Sun, moon, and living beings --
Worship of these,
Regarded all as forms of His,
Is perfect worship of the Lord.

6.  Better than hymns of praise
Is repetition of the Name;
Better low-voiced than loud,
But best of all
Is meditation in the mind.

7.  Better than spells of meditation
Is one continuous current,
Steady as a stream,
Or downward flow of oil.

8.  Better than viewing Him as Other,
Indeed the noblest attitude of all,
Is to hold Him as the `I' within,
The very `I'.

9.  Abidance in pure being
Transcending thought through love intense
Is the very essence
Of supreme devotion.

10.  Absorption in the Heart of being,
Whence we sprang,
Is the path of action, of devotion,
Of union and of knowledge.

11.  Holding the breath controls the mind,
Like a bird caught in a net.
Breath-regulation helps
Absorption in the Heart.

12.  Mind and breath (as thought and action)
Fork out like two branches.
But both spring
From a single root.

13.  Absorption is of two sorts:
Submergence and destruction.
Mind submerged rises again;
Dead, it revives no more.

14.  Breath controlled and thought restrained,
The mind turned one-way inward
Fades and dies.

15.  Mind extinct, the mighty seer
Returns to his own natural being
And has no action to perform.

16.  It is true wisdom
For the mind to turn away
From outer objects and behold
Its own effulgent form.

17.  When unceasingly the mind
Scans its own form,
There is nothing of the kind.
For everyone
This path direct is open.

18.  Thoughts alone make up the mind;
And of all thoughts the `I' thought is the root.
What is called mind is but the notion `I'.

19.  When one turns within and searches
Whence this `I' thought arises,
The shamed `I' vanishes
And wisdom's quest begins.

20.  Where this `I' notion fades,
Now there as I, as I, arises
The One, the very Self, The Infinite.

21.  Of the term, `I' the permanent import
Is `That'. For even in deep sleep
Where we have no sense of `I'
We do not cease to be.

22.  Body, senses, mind, breath, sleep --
All insentient and unreal --
Cannot be `I',
`I' who am the Real.

23.  For knowing That which Is
There is no other knower.
Hence Being is Awareness
And we are all Awareness.

24.  In the nature of their being, creature and creator
Are in substance one.
They differ only
In adjuncts and awareness.

25.  Seeing oneself free of all attributes
Is to see the Lord,
For He shines ever as the pure Self.

26.  To know the Self is but to be the Self,
For It is non-dual.
In such knowledge
One abides as That.

27.  That is true knowledge which transcends
Both knowledge and ignorance,
For in pure knowledge
There is no object to be known.

28.  Having known one's nature one abides
As being with no beginning and no end
In unbroken consciousness and bliss.

29.  Abiding in this state of bliss
Beyond bondage and release,
Is steadfastness
In service of the Lord.

30.  All ego gone,
Living as That alone
Is penance good for growth,
Sings Ramana, the Self.from fb

633
ரமணஜோதி 15(hari iyer iyerha2@gmail.com)
=======================
ஏகமும் அனேகமும்


எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
லிதுவோ வாண்மை யருணாசலா

நாயகி-நாயக பாவத்தில் இந்த ஈரடிகள் இயற்றப் பட்டுள்ளது. நாயகி நாயகனிடம் இறைஞ்சுகிறாள், “ நீ இப்போது வந்து என்னை யாட்க்கொள்ளாவிட்டால் நான் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிவ்டுவேன். நீ என்னை ஆட்க்கொள்ளாவிட்டால் உன் ஆண்மையை இந்த உலகம் பழிக்கும்”.

ஜீவான்மா பரமான்மாவிடம் கலப்பது இயற்கை.ஜிவான்மாவின் அந்த வேழ்க்கை இயற்கையானது.அதை நிறைவேற்ற வேண்டியது பிரமனின் கடைமை.

ஆண்-பெண் கல்வியேற்ப்படும்போது இருவரும் இரண்டற கலந்து விடுகிறார்கள்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் மற்ற எந்த ஒரு கர்மத்தில் ஈடுபடும்போதும் மனித மனம் அந்த கர்மத்திலிருந்து விலகி வேறு பலதையும் சிந்திக்கும். ஆனால் ஆண்-பெண் கலவியில் மட்டும் வேறு சிந்தனை ஏற்படாது..
அது போல் ஜீவான்மா பரமான்மா ஒருமிக்கும்போதும் வேறு சிந்தனை ஏர்ப்பட முடியாது.
ஒரே ஒரு வித்தியாசம்- நோக்கத்தில் மட்டும் தான். சிற்றின்ப நாட்டமும் பேரின்ப நாட்டமும் ஒரே போல் இருந்தாலும் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட ஜீவாத்மாவிற்கு மற்ற ஆசா பாசங்கள் எதுவும் ஏற்படாது.. எல்லாவற்றிலிருந்தும் முக்தனாகிவிடுகிறான். சிற்றின்பத்திலீடுபடுகிறவன் மற்ற இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களிலிரிந்து விடுதலை பெறுவதில்லை. கடலில் உண்டாகின்ற சுழலில் அகப்பட்ட கப்பல் போல் அதிலேயே உழலுகிறான். இந்த இகலோக வழக்கைக்கே உரித்தான கோப தாபங்களுக்கும் போட்டி பொறாமைகளுக்கும் ஆளாகிறான்.
முன்னது காமிய கர்மம்; பின்னது நிஷ்காமிய கர்மம்.
காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்கிறவன் களைத்துப் போய் நன்றாக உறங்குவான். அந்த உறக்கத்திலிருந்து திரும்பவும் விழித்து எழுந்து விடுவான். அவனது பழைய நினைவுகள் கவலைகள். ஆசா பாசங்கள் எல்லாம் அவனை ம்றுபடியும் பிடித்துக்கொள்ளும்.
நிஷ்காமிய கர்மம் செய்கிறவன் களைப்பதும் இல்லை, மறுபடியும் விழிப்பதும் இல்லை. அவனுக்கு நித்ய முக்தி கிடைக்கிறது.
நிஷ்காமிய கர்மத்தால் மனம் தெளிவடைகிறது.
மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. சித்த சுத்தியிலிருந்து ஒற்றுமை,சமத்துவம்,உண்மை,ஒழுக்கம்,உறுதி,அஹிம்சை நேர்மை,போன்ற நற்குணங்களுக்கு அவன் உரித்தாகிறான்.
நிஷ்கமிய கர்மம் அனுஷ்டிப்பவனுக்கு சப்தம்,ஸ்பரிசம் முதலிய இந்திரியங்கள் சம்பந்தப் பட்ட எந்த பாதிப்பும் இல்லை.
அவன் மனதில் எந்த விதமான கற்பனைகளும் உதிப்பதும் இல்லை.அவன் மனம் அலைகள் இல்லாத கடல் போல் சாந்தமாக இருக்கும்.
உபதேச வுந்தியாரில் பகவான் கூறுகிறார்-

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற
உ.உ 1
கர்மங்கள் நமக்கு முக்தியை தராது, ஏனென்றால் கர்மங்கள் முன்னாலேயே பிரமனால் நிச்சயிக்கப் பட்டவை.. அவை ஜடம்
ஆனால்
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற
உ.உ.2
கர்மங்கள் ஜடமாகயிருந்த்தும் அவையிருந்திலிருந்து விழக் கூடிய விதைகள் வேறு பல ஆசா பாசங்களை கிளப்பிவிடுவதால் முக்தி நல்கா.
பகவான் இங்கே கர்மங்கள் என்று கூறுவது காமிய கர்மங்களையே.

கருத்தனுக் கக்குநிட் காமிய கன்மங்
கருத்தைத் திருத்தியஃ துந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற

ஆனால் பலனை எதிர்பார்க்காமல் அந்த அருணாசலேஸ்வரனை மட்டும் நினைத்து செய்யும் கர்மங்கள் நமக்கு அருணாசலேஸ்வரனை நெருங்குவதற்க்கு வழி காண்பிக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிஷ்காமிய கர்மங்கள் மனதை சுத்தப் படுத்தி ஏனைய உலக ரீதியான இஷ்யானிஷ்டங்களிலிருந்து விடுதலையளிக்கும்..
நிஷ்காமிய கர்மங்கள் முக்தியை நேரடியாக நல்காவிட்டாலும் ஜீவன்மா பரமனில் லயிப்பதற்கான முதல் படி என்கிறார் ரமணர்..ஆகவே நிஷ்காமிய கர்மங்கள் பக்தியின் முதல் படி.

634
ரமணஜோதி 14-hari iyer iyerha2@gmail.com
--------------------------------------------
மனம் ஒரு குரங்கு

உனையே மாற்றி யோடா துளத்தின்மே
லுறுதியா யிருப்பா யருணாசலா

ஊர்சுற்றூளம்விடா துனைக்கண் டடங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா

மனத்தின் இயக்கம் ஒரு விசித்திரமானது.அது தன்னையே ஏமாற்றிக்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தது..மந்த்தை இயக்குவது இந்திரியங்கள்..இந்திரியங்களால் இயக்கப்படுகின்ற மனம் ஒரே நேரத்தில் பல திசைகளில் சஞ்சரிக்ககூடியது.
மன அடக்கம் என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.
ஒரு தமிழ் புலவர் கூறினார்,” மனத்தை அடக்குவதை விட எளிது தண்ணீரில் நடப்பதும் நெருப்பின் மீது உட்காருவதும்”.

பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறுவார்,’,மனத்தை அடக்க முயல்வதும் காற்றை தடுத்து நிறுத்த முயல்வது ஒரு போல்த் தான்.”
கபிலன் சிவபெருமானிடம் ஒருமுறை கூறினாராம்,” இந்த மனத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்;அதை பக்தி என்கின்ற கயிறால் கட்டிப் போட்டு விடுங்கள்.”
அதே போல் பகவான் ரமணர் அருணாசலரிடம் தன் உள்ளத்தில் உறுதியாக உட்கார்ந்து விடக் கூறுகிறார்.
“அப்படி என் மனம் எங்கேயாவது அலைந்து திரிய முற்பட்டால்,அருணாசலா நீ உன் அழகை காட்டி கட்டிப் போட்டு விடு.”
க்ரோதத்பவதி சம்மோஹ்ஃ சம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம்ஃ
ஸ்ம்ருதிப்ர்ம்சாத்புத்தினாசோ புதினாசத்ப்ரணச்யதி
பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் சாங்கிய யோகம்,63 ஆம் ஸ்லோகம்
சினத்தால் மனக்குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை; நினைவு நாசத்தால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் நிரந்தரமான அழிவு ஏற்படுகிறது. என்கிறது பகவத் கீதை இந்திரியங்களை பல விஷயங்களில் அலையவிடுவதால் நாம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆசையும் காமமும் கட்டுப்பாடின்மையிலிருந்து உண்டாகிறது. எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பது போல் மனத்தில் உருவாகும் எண்ணங்கள் ஆசையை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது.
ஆசையை தணிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் போது கோபம் உண்டாகிறது. அது பரஸ்பர விரோதத்தையுண்டாக்கிறது. விரோதம் சண்டையிலும் நாசத்திலும் சென்று முடிகிறது.
விஷயாதிகளால் கவரப்படும் மனத்தை எப்படி மீட்டெடுத்து இறைவன் பால் நிறுத்த முடியும்?
அதற்கு அந்த அருணாசலத்தின் அருள் தான் வேண்டும்
புயலில் சிக்கிய கப்பல் ஒரு நிலை கொள்ளாமல் அலைக்கழிக்கப் ப்டுவது போல் மனம் ஆசைப் புயலால் அலைக்கழிக்கப்பட்டு நம் நிம்மதியை அழிக்கிறது.

பகவான் ரமணர் அருணாசலத்தை உளத்தின் மேல் உறுதியாக இருக்கும்படி வேண்டுகிறார். பகவான் இன்னொரு நூலான உபதேச வுந்தியாரில் உளமும் அருணாசலமும் ஒன்றே தான் என்ற் சாதிக்கிறார்.
இருக்கு மியற்கையா லீசசீவர்க
ளொருபொருளேயாவருந்தீபற
வுபாதி யுணர்வேவே றுந்தீபற
ஸ்லோகம் 24,உபதேசவுந்தியார்

இயற்கையில் ஈசனும் (பரமாத்மாவும்) ஜீவாத்மாவும் ஒரு பொருளேயாவர். அதை உணர்வதில்த்தான் வேறுபாடுள்ளது.
அடுத்த ஸ்லோகத்தில் இதை இன்னும் தெளிவு படுத்துகிறார்.

தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வத லுந்தீபற
ஸ்லோகம் 26,உபதேசவுந்தியார்
தான் என்ற உணர்வை விட்டொழிப்பதின் மூலம் ஈசனை நாம் அடையாளம் காண்கிறோம். நாம் யார் என்றறிந்துவிட்டால் ஈசனை அடைந்தவர்களாகிறோம். ஈசன் தானே நம்முள்: ஒளிர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆகவே மனதை ஒருமுகப்படுத்துவதற்கு ஒரே வழி “நான் யார்” என்ற விசார மார்க்கமே.
அந்த மார்க்கத்தில் பயணம் செய்தால் தானாகவே அருணாசலத்தின் அழகு தென்படும். நாமும் அருனாசலமும் ஒன்றே தான்; வேறு சிந்தைக்கு இடமில்லை என்பது புரியும்
அதன் தொடர்ச்சியாகத்தான் பகவான் அருணாசலேசுவரரிடம் அவரது அழகை தனக்கு உணர்த்தச் சொல்கிறார். அந்த வெளிச்சம் நமக்கு தென்ப்பட்டு விட்டால் அப்புறம் நம் மனம் வேறு ஒன்றையும் நாடாது.

635
Ashrams / Re: Ramana Ashram
« on: February 02, 2014, 04:34:52 PM »
Om Namo Bhagavate Sri Ramanaya

Ashram website is developing an online communication system to inform devotees by email about major events such as live webcasting, Jayanti, Sri Vidya Havan, Maha Sivaratri etc.,

The participation is entirely voluntary and ashram will respect the privacy and confidentiality of information provided by the registrants.

Devotees can receive timely email notification of future events.

Please enter the following information to subscribe.
 
First Name:       
Last Name :       
 
Email ID       
 
 copied from the Sri Ramanamaharishi.org web site
        

636

Saranagathi Feb2014.


Events at Sri Ramanasramam: Nochur Sri Venkataraman on Aksharamanamalai

In the first month of this Aksharamanamali Centenary Year, Nochur
Sri Venkataraman gave a series of discourses on the genesis
and meaning of Sri Bhagavan’s 108-verse hymn. The gripping
seven-day programme (20th - 26th January) was among the first
complete series of discourses given by Nochur in English at the
Ashram, allowing Andhras, Kannadigas, Gujaratis, N. Indians and
Westerners unfamiliar with Tamil the opportunity to benefit from the
deep insights of this speaker. Known for his acquaintance with the
subtler aspects of Bhagavan’s teaching, Nochur focused on the
essence of the teaching as contained in Aksharamanamalai while
drawing from Bhagavan’s other compositions. Anecdotes from
Bhagavan’s life and the early days at Virupaksha Cave as well as
from the puranas and shastras, i.e. Srimad Bhagvatam, Ramayana,
the works of Adi Shankara, the Vedas and Upanishads were the
seasoning for a sumptuous fare. Venkataraman’s familiarity with Sanskrit, Tamil, Malayalam, Hindi and English afforded him the
possibility of interpersing his English commentary with songs or recited verses in their original languages. Devotees have wondered
what the relation was between Bhagavan Ramana and Holy Arunachala. The speaker says, “When Arunachala, the holy Unmoving
One, looked at the youngster from Tiruchuli, he rejoiced in beholding one that was even more Unmoving than Himself!”
 As Bhagavan was ‘bewitched’ by Arunachala, participants of this 7-day programme on Aksharamanamalai were bewitched by this
potent commentary. Taking leave on Sunday the 26th and facing the prospect of no discourse the following day, devotees maintained
their serenity by harbouring the silent hope that a sequel series (picking up with v. 9) might appear later in the Centenary year.
[Editor’s note: while streamed live from the Ashram website, those who missed the seven days of talks may still hear them by downloading
the audio recordings in mp3 format from the Ashram website CLICK HERE]

copied from the saranagathi Feb.2014

637
ரமண ஜோதி-9 hari iyer iyerha2@gmail.com
========================
அழகு சுந்தரம்போ லஹமும் னீயுமு
ற்ற்பின்னமா யிருப்போ மருணாசலா

தாச மார்க்கம்; சத் புத்திர மார்க்கம்; நட்பு மார்க்கம்; மற்றும் சன் மார்க்கம் என்ரு நாலு விதமான பக்தி மார்க்கங்கள் உண்டு என்று நாமறிவோம்.
.நம்மை பரமனின் அடியேனாக –வேலையளாக கருதி பக்தி செலுத்துவது முதல் மார்க்கம்.
இரண்டாவது மார்க்கத்தில் நாம் கடவுளை தந்தை ஸ்தானத்தில் காண்கிறோம்.
மூன்றாவது நாம் நட்புரிமை பாராட்டி கட்வுளுடன் நெருங்குகிறோம்;
நாலாவது எல்லாவற்றீலும் சால்ச் சிறந்தது.
அது நாம் கடவுளுடன் ஐக்கிமாகின்ற ஒரு நிலை.
ஒரு மார்கத்திலிருந்து அடுத்த மார்க்கத்திற்கு உயரும் பொது நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வருகிறது. முன் ஈரடிகளில் சொன்ன மாய ‘நான்’(ego) அழிந்து நாம் கடவுளுடன் ஒன்றாகும்போது, ‘நான் யார்’ என்ற பகவான் ரமணரின் சித்தாந்த்தின் கடைசி படியை அடைகிறோம்.
மாய நான் உண்மையான நான் என்று இரண்டு கிடையாது.அது நமது அறிவீனதினால் உண்டாவது.அந்த அறியாமை அழியும் போது நமும்-ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்ற அறிவுண்டாகிறது.நாம் முக்தனாகிறோம்.

இதையே தான் பகவான் அடுத இர்ண்டு வரிகளில் கூறுகிறார்.
தமிழில் அழகு என்று சொல்வதும் வடமொழியில் சுந்தரம் என்று சொல்வது ஒன்றயே குறிக்கிறது அவை இரண்டிற்கும் பின்னம் (வேறுபாடு) இல்லை.
எப்படி அவை அபின்னமாக இருக்கிறதோ அப்படி நாமும் பரமாத்மாவுடன் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
அதர்க்கு அருணாசலர் அருள் புரிவாராக.
தத்துவமசி என்பதன் பொருளும் இதுவே தான்.

638
ரமணஜோதி 10-
-----------------------
இதயம்-இறைவனின் ஆலயம்
மனம் ஆசைகளின் ஒரு கூடரம்.கீதையில் கூறியிருப்பதுபோல்,பொறிகள் புலங்களிடத்தில் ஒன்றுபடுவதால் நாம் இன்ப்-துன்பத்தை இந்த இக வாழ்வில் அனுபவிக்கிறோம்.ஆனால் இந்த இந்திரிய ஜனிதமான இன்ப-துன்பங்கள் தாற்காலிகமானவை.
அவை நிரந்தரமன்று. ஒரு நேரத்தில் இன்பமாக தோன்றுவது இன்னொரு நேரத்தில் துன்பமாக படுகிறது.ஆகையால் அவை அனைத்தும் அனித்தியமானவை. ஜீவாத்மாவும் அப்படியே.
ஆனால் பரமாத்மா வசிக்கின்ற இதயமோ புனிதமானது; கறை படியாதது; நித்தியமானது.
அந்த பரமனால் மட்டுமே நமது ஜீவாத்மாவை இந்த ஆசா பாசங்களிலிருந்து விடுவித்து அவனது வாசஸ்தானமான அந்த குகைக்குள் கொண்டு செல்ல முடியும்.
நமது முயற்சி இருந்தால்,.அவன் அதை எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்வன்
இதை மனதில்க் கொண்டு பகவான் ரமணர் சொல்கிறார்:

அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
யமர்வித்த தென்கொ லருணாசலா


என்னுள்ளே புகுந்து என்னை சிறை பிடித்து உன்னுடைய இதய குகைக்குள் எதற்காக வைத்தாய்?
பகவான் ரமணர் தெரியாமல் இதை கேட்கவில்லை.அவருக்குத் தெரியும் பரமன் எந்த எதிர்பர்ப்பும் இல்லாமல் இதை செய்கிறான் என்று.
பகவான் சூசகமாக உணர்த்த விரும்புவது என்ன்வென்றால்
இந்திரியங்கள் உடலை விட சூக்ஷ்மமானது.உடலை இயக்கி வைக்கின்றவையே அவை தான்.
ஆனால் மனமோ இந்திரியங்களை விட வலிமையானது.
மனதால் பலவிதமாக கற்பனை செய்ய முடியும்.
இல்லாததை உள்ளதாகவும் உள்ளதை இல்லாததாகவும் கற்பனை செய்கிறது.
கயிறை பம்பாகவும் முத்துச்சிப்பியை வெள்ளியாகவும் கட்சியளிக்க செய்கிற்து.
இந்த மனதை விட புத்தி இன்னும் வலிமையானது.
ஆனால் புத்தியால் கூட ஆன்மாவை அடையாளம் காணமுடியாது.
ஆசாபாசங்களும் கோபதாபங்களும் ஆன்மாவை மறைக்கின்றன.
பழத்தின் தோலை உரிப்பது போல நாம் ஒவ்வொரு தோலாக இந்திரியங்களால் படைக்கப்பட்ட ஆசா பாசங்கலைத் துறந்து மனம் புத்தி இவைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடு பட்டால்த் தான் சூக்ஷ்மமான ஆன்மாவை அடையளம் காணமுடியும்.

தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவ நீதத்தில் சொல்கிறார்:

“என்னுடை மனது புத்தி யின்திய சரீர மெல்லா
மென்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமேயாக்கி
யென்னுடை நீயு நானு மேகன்றைக்யங்செய்ய”

கதிரவனைக் கண்ட பனிபோல் என்னுடைய மனது ,புத்தி இந்திரியங்கள் எல்லாம் மறைந்து போக நீயும் நானும் ஒன்றே என்று ஆக்கி அருள் செய்வாயாக.
இதையேதான் பகவான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.
“என்னுடைய் உள்ளத்தில் புகுந்து நீ என்னுடைய ஆசாபாசங்களையெல்லாம் அழித்து என்னை சிறை செய்து உன்னுடன் ஐக்கியமக்கிக் கொண்டாய்,அருணாசலா”.என்று.
நாம் இந்த நேரத்தில் பகவன் ரமணர் மதுரையிலிருந்து திரு அருணை வந்து பதினேழு வருடம் ஒம்கார வடிவமான விரூபாக்ஷ குகையில் தவமிருந்தார் நினைவுகூர வேண்டும்.

639
ரமணஜோதி 12
---------------------------------------------------------
இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா

பகவான் வேண்டுகிறார் ,”அருணாசலா, நீ என்னை எக்காரணத்தைக் கொண்டும் கை விடாதே.அப்படி கை விட்டால்,உனக்கு ஏற்படக்கூடிய பழியை யாராலும் துடைக்க முடியாது. அடைக்கலம் கொடுத்து விட்ட பின் உன்னை இனி யார் விடுவார்?”
நாம் ஒரு முறை ஸஹஜ சமாதியின் அனுபவம் பெற்றுவிட்டால் பிறகு இந்த இகலோக இந்திரிய ஜனிதமான சுக துக்கங்களால் பாதிக்கப்பட மாட்டோம். பகவானின் வாழ்க்கையே அதற்கு ஒர் எடுத்துக் காட்டு. மதுரையில் ஏற்பட்ட ஞானப் பிராப்திக்குப் பின் பகவான் எந்தவிதமான இஷ்டானிஷ்டங்களுமில்லாமல் அந்த பர பிரம்மாகவே வாழ்ந்து வந்தார்.
சிறு வயதிலேயே பகவானுக்கு அந்த அனுபவம் ஏற்ப்ட்டு விட்டதால் அந்த ஸஹஜ நிலையை நிரந்தரமாக்குவதற்கு சிறிது காலமாயிற்று. திருவண்ணாமலைக்கு வந்த பின் சிறிது காலத்திற்கு தனிமை தரக்கூடிய இடங்களை தேடித் தேடிப் போனார். அந்தக் காலங்களில்க் கூட சிறுவர்கள் கல்லாலடித்த போதும் எந்த விகாரமும் இல்லாமலேயே இருந்தார். தனிமையை நாடிப் போனது தனது பூரண அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு விட்க் கூடாதே என்பதற்காகத் தான்.
ஆனால் அந்த ஞான நிலையிலும் கூட, எப்போதும் போல் உலகமும் அதன் விவகாரங்களும் விழிப்பில் தோன்றுவதும் தூக்கத்தில் மறைவதுமனுபவித்துக் கொண்டு தானிருந்தார்.
ஆனால் இவையெல்லாம் நிஜமல்ல;ஒரு மாயை தான் என்று உணர்ந்தே இருந்தார். தனக்கு அன்னியமாக ஒன்றுமேயில்லை என்று உணர்ந்து யார் யாருக்கு உபதேசிப்பது என்று மௌனமாகவே இருந்து வந்தார். உண்மையில் பகவான் யாரையும் சீடனாக ஏற்றுக்கொண்டதும் கிடையாது.
தனது உண்மையிருப்பிலேயே மூழ்கிப் போயிருந்தமையால் அவருக்கு தன் உடலைப் பற்றீ எந்த உணர்வும் இல்லாமலேயே இருந்தார். சிலகாலம் குளிப்பது கூட இல்லாமல் இருந்தார்..தலை முடியெல்லாம் சிக்குப் பிடித்து சடையாகிவிட்டது.பகவானின் இந்த நிலையைக்கண்டு ஒரு கிழவி ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து சீயக்காய்த் தூள் தேய்த்து குளிப்பாட்டி விட்டாளாம்.அந்த நேரங்களில் பகவான் ஒரு கற்சிலை போல் அமர்ந்திருப்பாராம்.ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்தவராகவும் இருப்பாராம்..
உணவு விஷயத்திலும் அப்படியே .பகவானுக்கு என்று விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.
ஆனால் விரூபாக்ஷ குகையை விட்டு வந்த பிற்பாடு அவ்ர் சர்வ சஹஜமாக வெளியுல்கத்துடன் விவகரித்தார். ஆனால் அவரை எதுவும் பாதிக்கவேயில்லை.
இம்மாதிரியான் நிலை பரம சுகமான ஒரு நிலை. இதை கை நழுவ விட யாருக்குத் தான் மனம் வரும்? ஆகவே தான் பகவான் அருணாசலரிடம் மேற்கண்டவாறு அதிக உரிமை எடுத்துக் கொண்டு பயமுறுத்துவது போல் வேண்டுகோள் விடுக்கிறார்.
உண்மையில் அவர் இயற்றிய இந்த ஈரடிகள் நமக்காகவே என்பதில் எந்த ஐய்யவும் வேண்டாம்.

640

ரமணஜோதி 13
தாயன்பே இறையன்பு
-----------------------------
அருணாசலத்தின் பலனை எதிர்பாராமல் அரவணைக்கும் கருணையை பகவான் அடுத்த ஈரடிகளில் தாயின் கருணையோடு ஒப்பிடுகிறார்.

ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா

நாம் ஏற்கனவே ரமணரின் தாயின் மீதுள்ள அன்பை அவரது செய்கைகளில் கண்டோம். அதை இங்கே அவர் வார்த்தைகளில் சொல்கிறார்.
தாய் எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் அன்பை செலுத்துகிறாள்.தன் கடமைகளை நிறைவேற்றுகிறாள்.. பத்து மாதம் தன்னுள்ளே சுமந்து, தான் உண்ணும் உணவின் ஒரு பகுதியை அந்த்க் குழந்தைக்கு அளித்து, தான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சின் மூலம் அதற்கு உயிர் மூச்சை அளித்து பெற்றெடுக்கிறாள்..பெற்றெடுத்த பின்னும் குழந்தையை தன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் தன்னின் ஒரு பாகமாகவே காண்கிறாள்..
எப்படி நாம் அனைவரும் அந்த சத் சித் ஆனந்த்தின் ஒரு பகுதியோ அது போல். அந்த சத் சித் ஆனந்தமும் நம்மை கை விடார் என்று பகவான் இந்த ஈரடிகள் மூலம் உணர்த்துகிறார்.

கர்ப்பப் பையில் குழந்தையை சுமக்கும் போது அவள் குழந்தைக்கு உணவும் உயிர்மூச்சும் மட்டுமல்ல கொடுக்கிறாள்..
அவள் காண்கின்ற கனவுகள்,பார்க்கின்ற காட்சிகள்,செய்கின்ற செயல்கள் ,ஏன் நினைக்கின்ற எண்ணங்கள் கூட அந்த குழந்தையில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.. ஆகவே தான் தாய்மையடைந்திருக்கும் போது
அவர்கள் கோரமான/கொடுமையான காட்சிகளைப் பார்க்கக் கூடாது,தவறான வார்த்தைகள் பேசக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறினார்கள். பலாக்காயை,பூசணிக்காயை கர்ப்பிணிகள் துண்டு போடக்கூடாது என்றார்கள்.
அப்படி துண்டாடும் போது அவள் தெரியாமலையே அறுக்கின்ற விதைகளும், அவை அறுபடும்போது அவள் கர்ப்ப பையில் இருக்கின்ற குழந்தையில் ஏற்படுத்துகின்ற தாக்கமும் அந்தக் பிஞ்சு சிசுவின் பிற்கால வாழ்வைப் பாதிக்கக் கூடும் என்பதால் தான் அவர்கள் அப்படிக் கூறியிருக்கக் கூடும்
ஆனால் இன்று தொலைக்காட்சி தொடர்களில் வருகின்ற மனிதர்களையும் அவர்கள் காட்டிக்கூட்டுகின்ற கோமாளித்தனங்களையும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற இன்றைய தலமுறை அடுத்த தலமுறையின் மீது ஏற்படுத்துகின்ற எதிர்மறையன விளைவுகளை நினைத்தால் கவலைப் படாமல் இருக்க முடியாது.
இவைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுபவர்கள் ஏராளம்..நமக்குத் தெரியாத உண்மைகள் எல்லாம் மூட நம்பிக்கை தான்.
கலீலியோ உலகம் உருண்டை என்ற போது அவரைப் பார்த்து பைத்தியம் என்று கூறிய உலகம் தானே இது.
அது இருக்கட்டும்..
அப்படிப்பட்ட தாயின் பேரன்பிற்கு மேலான அன்பு இந்த அருணாசலரின் அன்பு..
ஆகவே தான் அவரை தாயுமானவர் என்று கூறுகிறோம். அதே காரணத்தினால்த் தானோ என்னவோ பகவான் தன் தாயரின் சமாதி மீது கட்டப்பட்ட கோவிலில் மாதுருபூதேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

641
Ashrams / Re: visited Sri Ramanasramam
« on: January 30, 2014, 10:56:51 AM »
Dear ksksat

Very nice to hear your trip to Ramanashramam and talks with  Sri Nochur Ji.

642
Pankajamma

We called on her at her house in Tiruvannamalai today. Her home is not far from Sri Ramanashramam. A driveway led to the house built in the back, and two monkeys and two dogs welcomed us as we went in. One dog was a saint. He just sat in peace. The other was frisky and barked away in happiness. It's that sort of house. All are welcome.

Age is showing a bit in Pankajamma’s body. But not in her demeanor. She welcomed us with a fullness of affection that can only come from that ‘otherness’ that is Ramana.

Here’s a picture I took of her today…

Here’s Pankajamma’s story in brief…

She comes from a traditional Tamizh family of Cuddalore. Her parents were drawn to Bhagavan sri Ramana Maharshi, the sage of Arunachala, and would visit him often. Thus, even as a very young girl, she grew up in that atmosphere of Bhakti, and was keen to go with her parents and see the sage. Maybe because she was young, or for whatever other reason, her parents never took her along, although she pleaded. And then one day, when she was twelve, they gave her Aksharamanamaalai - the Tamizh song composed by Ramana. “I learnt it by heart in two days”, she says. “And immediately after that I also learnt ‘Kanda Shashti Kavacam’. And from the age of 12, till today, it has been my blessing that I have been reciting both these prayers every single day”, she says, looking the very picture of peace.

On my request, she told me something about her association with Bhagavan Ramana.

She first met Ramana when she was sixteen. Her parents took her along this time. And she found the Maharshi in the Ashram, sitting near a well. Some ladies were sitting on one side, and gents on another. Bhagavan was sitting on a reclining chair…

Pankajamma says, “It was as if I was meeting an old acquaintance, a close relative, after a long time. Of course I was happy. Very happy. Like I am happy seeing you all now. Same way. It wasn't as if the happiness was different…And I felt so ‘related’ to Him, that I did not feel shy at all, and I simply felt like singing Aksharamanamalai…And so I started singing it…Bhagavan immediately seemed to stiffen, and I continued to sing…And then I came to the lines ‘Kaantam irumbupol kavarndenai vidaamal kalandenodiruppaai Arunaachalaa!’(Like a magnet does iron, attract me ceaselessly, hold me, Abide with me , O Arunachalaa!)…”

Pankajamma continues…”Now, Bhagavan was not the sort to point out small errors. This was not as if it was a scholarly discussion on Vedanta. Had it been that, and had some scholars been questioning Bhagavan, well, then, he would have patiently answered all their queries. But this was not such an occasion. I was a simple young girl, dressed in Paavadai-Melaakku. And I was singing Aksharamanamalai. Having seen Bhagavan closely for many years, I know that normally He would have just been all attention, all silence, all love. He would have forgiven the small mistakes of pronunciations that the singer might commit. But not that time when I sang. And for that I am eternally grateful to Him! For the first time time in my life, and indeed the only time in my life, He spoke directly to me. I had pronounced the word Kaantham (magnet) as Gaantham. He immediately said “Oohum…” and looked directly at me. Into my eyes! That look! And gently told me, ‘Not Gaantham…Kaantham’…

That was it! From that day, that Kaantham (magnet) has taken me over completely. Nothing left here,” she said.

On our prodding, she told us of a few more ’special’ moments of ‘divine’, in her life.

“During one of my early visits, when I was once sitting in Bhagavan Ramana’s presence, I closed my eyes… And I had a distinct vision of a small Mayilvahana Murugan - Murugan on a peacock … From that moment I was certain of the identity of Ramana and Muruga.”

And as she said this, I remembered that she had mentioned that her daily parayana from the age of 12 consisted of chanting Aksharamanamalai and Kanda Shasti Kavacam … Ramana and Muruga …

Continuing her story, she said, “My parents found a match for me, and I was married to a boy from a landed family of Tanjore.”… And with a twinkle in her eye, she added “I must say that it was their family indeed that gained far more by their association with my family… For my husband was introduced to Bhagavan only because of marrying me. He came with me many times to the presence of Bhagavan.”

And during the course of further conversation, she spoke of a few very special moments in her life…

“I was 21, my son was just six months old, when there developed some painful growth in my neck. The local doctors at Tanjore could not effect a cure for this. I was then taken to Cuddalore, where my father lived. Cuddalore had a bigger hospital, and I was examined there. They diagnosed the growth to be a tumor that had to be immediately operated and removed. However, the tumor was in such a place that the surgery was very risky. The surgeon said that there was every risk of injuring some nerve, which might affect the brain itself… But there was no option and I was admitted to the hospital for surgery. Surprisingly, I wasn’t worried. Although my son was just six months, and my life was a serious question mark, I wasn’t feeling any sense of depression arising out of attachment to my child, nor any other worry. Somehow, I was not perturbed at all. I just submitted myself to whatever was asked of me.

On the day of the surgery, I was lying down on the operating table, when the doctor came to administer anesthesia… He asked me to count one-two-three etc to calm the mind as it slipped into unconsciousness. But instead of doing that, I started saying ‘Ramana! Ramana! Ramana!’ Quite involuntarily. It is not that I wanted to pray to him. It just happened that I spoke his name… And then I had a ’special’ experience…I was walking, my hands cupped in front of me, seeking Ramana, taking his name, walking towards him….And I slipped into unconsciousness…

The operation was completed. And as I emerged from unconsciousness, to the utter surprise of all people around me, I woke up with a feeling of great joy. This joy lasted for a long while after the surgery….

My mother asked me about it… And I told her the reason.

Sometime during the surgery, I had a vivid experience. In that experience, I was a small baby. And Bhagavan was holding me. Head to toe, I fitted within the cup of his two hands. And he was looking at me with great love…It was an exhilarating… It was that joy that I woke up with…”

“Once, we were to celebrate Vinayaka Caturti… We had bought a clay Ganesha for the function. The night before the festival, I was fast asleep… And I suddenly felt a wonderful sensation… Someone was patting me on my head, as I slept.” she said, running the palm of her hand softly from her top of her forehead, backward along the crown…”And I woke up with a start…And what do I see? A small sized Ganesha! He was patting me with his trunk…

Another time… It was the first friday in the month of Adi, a day special to Goddess… Early morning, some ladies came home, gave me traditional offering of Coconut and tamboolam… I have not seen them before… This repeated the next two Fridays as well…The fourth Friday, some ladies came, and gave me a cup of milk… And then on the last Friday of the month, a majestic lady came home. She was wearing a brilliant red silk saree, with large border… She looked glorious, ajaanubahoo (tall, and with long arms)… She had long hair, with lots of flowers.” (Pankajamma mentioned a particular flower species, but I forget which…)…

“I was so overwhelmed by her presence that I rushed to her and hugged her, saying ‘Amma!’.

I didn’t know who she was. Later I mentioned this to Sri Kunjuswami, who was staying with us those days. After listening to the description he told me that the lady was none other than Goddess Meenakshi!

I have never gone seeking for these experiences, never entertained any such desire. But they just happened.

After I came to Bhagavan, I suddenly started composing songs on Bhagavan. What do I know of these! I am but a fourth standard pass. But the words and the tune would just occur to me. I have no knowledge of classical music. I have no idea of raga or metre. But the tune and the name of the raga would occur to me. And so would the Taala (metre). More than a hundred such songs in Tamizh have been noted by me. Songs on Bhagavan! But sometime after 2000 AD, the songs stopped coming. I never went after them in the first place. Now that they don’t come, that’s fine too…”

She has been through some severe bouts of physical sufferings due to illnesses, in different times in her life.

“I know that these sufferings are but Karma being erased. This I know that this birth is the last one. All Karma will go by the grace of Bhagavan”, she said, with complete faith and confidence.

On our request, she sang the last song that had “come to her”. She was not keeping well and was also suffering from sore throat. But she didn’t hesitate to sing. After singing she excused herself saying, “Old age affects the body…Can’t help that…But what does that have to with real? Adu vEra AaLu (that Person is different)” she said tapping her spiritual heart (on the right side of the chest).

These were the kind of conversations that Pankajamma, the simple old lady, shared with us, on the eve of her 87th birthday. Her son and his family stay with her. There was a kid running in and out. It was a normal Indian family …. Except for this lady called Pankajamma!

from the fb

643
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ

இந்த நாலடிகள் தான் அக்ஷர மணமாலையின் மூலமந்திரம். அருணாசலமே சிவன்; சிவனே அருணாசலம்
அருணசலம் ஒரு காலத்தில் அக்னிப் பிழம்பாக இருந்ததாம்.
கிரிதா யுகத்தில் அருணாசலம் அக்னியாகவும் த்ரேதா யுகத்தில் வைரக் குவியலஆகவும் துவாபர யுகத்தில் தங்க மலையாகவும்,கலியுகத்தில் கல்லாகவும் காட்சியளிக்கிறது.என்றும் கூறுவார்கள்.

கிரிதா யுகத்தில் பிரம்மாவும் திருமாலும் அருணாசலத்தின் அடியையும் முடியையும் தேடிப் போனார்களாம். கண்டுபிடிக்க முடியவில்லயாம். இது ஒரு ஐதீகம் அல்லது மக்களுடையே நிலவி வரும் கதை.
இம்மாதிரியான கதைகளை ஆங்கிலத்தில் மித் (myth) என்பார்கள். எல்ல மித்து (myth)க்களின் பின்னாலும் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும். அந்த தத்துவத்தை விட்டு விட்டு கதையை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
காளிதாசன் கூறினான் “ நாம் உட்கர்ந்து கொன்டு இருக்கும் கிளையை வெட்டினால் நமக்கு மோக்ஷம்(சாவு) தான்.” நாம் உட்கார்ந்துகொன்டிருக்கின்ற கிளையை வெட்டினால் கீழே விழுந்து மரணம் அடைவோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.இது கூட தெரியாத காளிதாசன் ஒருமுட்டாள் என்று மக்களுடையே பரவியுல்ல கதை. அதன் பின்னால் ஒரு மகத்தான தத்துவம் உள்ளது என்று பெரும்பாலோரின் கண்களுக்கு /அறிவுக்கு தெரிவதில்லை. நாம் இந்த உலகிலுள்ள பந்த்தங்களையெல்லாம் வெட்டி விட்டால்த் தான் முக்தி அல்லது மோக்ஷம் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை மறந்து விடுகிறோம்.
அதே போல் அருணாசலத்தின் அடி முடியை பிரமனாலும் திருமாலாலும் காணமுடியவில்லை என்பதும் ஒரு மித்தாக்த் (myth)தான் இருக்க வேண்டும்.
பரமனான் பரமேஸ்வரனுக்கு அல்ல்து கிருஷ்ண பரமாத்மாவிற்கு அல்லது அந்த அந்தமில்லா பிரம்மத்திற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்பதே இதன் பொருளாக இருக்க வேண்டும்.
அருணாசலம் இன்றும் லிங்க வடிவிலேயே காணப்ப்டுகிறது.
பகவான் ரமணர் அருணாசலத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:
“கருணார்வமாய்க் கருதக் கதி யருணாசலமிதாம்”
அக்ஷர மணமாலை முழுக்க ஒவ்வொரு ஈரடிகளுக்கும் பிறகு இந்த மூல மந்திரத்தை சொல்வதன் மூலம் நாம் அந்தபிரம்மத்துடன் நெருங்கி செல்கிறோம்.
அஹம் ப்ரம்மாஸ்மி

அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணா சலா


இந்த முதல் ஈரடிகளில் பகவான் ‘அகம்’,’அஹம்’ இரு வார்த்தைகளைக் கொண்டு ஒரு சொல் சிலம்பம் ஆடியுள்ளார்.
அகம் என்றால் மனம் /உள்ளே என்று அர்த்தம்
.”அஹம்’ என்றால் ணான் எனும் அஹந்தை என்று பொருள்.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நாம் உள்ளத்தில் அருணாசலனை நினைத்துக் கொண்டிருந்தால் நம் அஹந்தை அழியும் என்று பொருள் கொள்ளலாம்.
சிறிது உள் புகுந்து யோசித்தால் வெளிப்படையான ‘ “நான்” அல்லது “மாய நான்” எவ்வாறு உண்மையான் நானை உண்ர விடாமல் தடுக்கிறது என்றும் அதனால் நாம் இகபரமான இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களால்,கோபதாபங்களால்,பொறாமை போட்டிகளால் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்ப் படுகிறோம்.
ஆகவே இந்த “மாய நானை” அழித்து உண்மையான பிரம்மத்துடன் ஐக்யமாக வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
அதற்கு ஒரே வழி அருணாசலத்தை த்யானம் செய்து அவனுடன் ஒன்றாவதே.
இதைத் தான் பகவன் முதல் இரண்டு வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.


from the fb

644
அக்ஷரம் என்றால் க்ஷரமில்லாதது;அழிவு இல்லாதது..
மணமாலையின் நோக்கம் இரு ஆன்மாக்களை ஒன்று சேர்ப்பது ஆகும்.பகவான் ரமணர் இயற்றிய மணமாலையின் நோக்கம் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பதற்காக என்று சொன்னால் தவறாகாது. இந்த மண்மாலை அழிவில்லாதது.
அக்ஷரம் என்ற வார்த்தையின் மூலம் இந்த மணமாலைக்கு என்றுமே அழிவில்லை என்றும் உணர்த்தப்படுகிறது.
இன்னொரு விதத்தில் வியாக்க்யானம் செய்தால் தமிழின் முதல் எழுத்தாம் ‘அ’ வையும் சம்ஸ்கிரதத்தின் கடைசி எழுத்தான ‘க்ஷ’வையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மணமாலை என்றும் சொல்லலாம்.
என்றும் நம்முடன் இருக்கும் சிரஞ்சீவியான பகவான் ரமணர் இயற்றிய மாலை என்றும் கொள்ளலாம்.
பகவான் இதை விரூபாக்ஷ குகையில் வசிக்கும் காலத்தில்.1914 ஆம் ஆண்டு இயற்றினார்.இந்த ஆண்டு அக்ஷர மண்மாலையின் நூறாவது ஆண்டு.
இதை இயற்றுவதற்கு பகவான் முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
பகவானது பக்தர்கள் பகவானிடம் ‘நாங்கள் பிட்சைக்கு பொகும்போது அல்லது கிரி வலம் பொகும் போது பாடுவதற்கு ஏற்ற ஒரு பாமாலை இயற்றித் தரவேண்டும்” என்று ஒரு நாள் கேட்டார்கள்.பகவான் உடனடியாகப் பதில் ஏதும் கூறவில்லை.”தேவாரம்,திருவாசகம் போன்ற மிகச் சிறந்த பாமாலைகள் இருக்க பிறிதொன்று எதற்கு?’என்று நினைத்தாரோ என்னவோ.!
பிறிதொரு நாள் கிரி வலம் சென்று கொண்டிருக்கும் பொழுது,திடீரென்று பகவான் மடை திறந்த வெள்ளம் போல் இந்த செய்யுள்களை சொல்ல ஆரம்பித்தார்.அன்பர் பழனிச்சாமி உடனையே எங்கிருந்தோ ஒரு பேப்பரும் எழுதுகோலும் கொண்டுவந்து கொடுத்தார்.இன்ப பெருவெள்ளம் போல் பகவானிடமிருந்து பாமாலைகள் வந்து விழுந்தன.
இந்த மணமாலையின் சிறப்புக்கள் சொல்லிலடங்கா. ஒரு சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.
* பக்தி மார்கமும் ஞானமார்கமும் ஒருங்கிணைந்து பாமாலைகளாக தரப்பட்டுள்ளன. இருமனம் கலந்தல் திருமணம் என்பதுபோல்.
* ரமணரின் தனிவழியான ‘நான் யார்’ மார்கமும் பாமரர்களுக்கு உதவும் ‘சரணாகதி’ மார்க்கமும் ஒன்றுசேர மணமாலையாக உருவெடுத்திருக்கிறது.
* இந்த நூல் இருவரிக் கண்ணிகளாக அமைந்துள்ளதால் சூத்திரம் போல் எளிதாக புரியும்படியும் பொருட்செறிவுள்ளதாகவும் இருக்கின்றன.
* ஓங்கரத்தின் முதலெழுத்தாம் அகரத்தில் தொடங்கும் இந்த அக்ஷர மணமாலை எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதாரமான பரமாத்மாவை நினைவூட்டும் விதத்திலும் உள்ளது.
* ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூறுகிறார்-“அக்ஷராணாம் அகாரோஸ்மி”-அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்.அந்த முதன்மைத் தன்மையை நினைவூட்டும் விதத்தில் அக்ஷர மணமாலை என்ற் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.
* பக்தியோடு ஓதும் பக்தர்களுக்கு சிவசாயூஜ்யம் என்ற முக்தி கிடைக்க பேருதவியாக இருக்கும் என்பதால் இது ஒரு மணம் பரப்பும் மாலை .
* அக்ஷரங்களாலான மணம் பரப்பும் மாலை இது.
* அருணாசலா என்று 108 முறை கூற வைக்கும் மாலையிது.
* அழியாப் பொருளான ஞான மார்கத்தை போதிப்பதால் இது அக்ஷர மணமாலை
* அக்ஷர மணமாலையில் பலப் பல பாவங்கள் வெளிப்படுகின்றன:
o தாஸ்ய பாவம்.
கெஞ்சியும் வஞ்சியாய் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றேயரு ளருணாசலா (21)
ஞமலியிற் கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறவே னருணாசலா (39)
பைங்கொடி யா நான் பற்றின்றி வாடாமற்
ப்ற்றுக்கோ டாய்க்கா வருணசலா (72)

மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்
வஞ்சி யாதருளெனை யருணாசலா (78)
மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
மாகாம்ற் காத்தரு ளருணாசலா (79)
o நட்புரிமை
ராப்பகலில்லாமல் வெறு வெளி வீட்டில்
ரமித்திடு வோம் வா வருணாசலா (91)

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
தூக்கி அணைந்தருளருணாசலா. (81)

மலைமருந் திட நீ மலைத்திட வோஅருண்
மலைமருந் தயொ ரருணாசலா . (76)


பீதியி லுனைச்சார் பீதியி லெனை சேர்
பீதி யுன் றனக்கே நருணாசலா? (67)

ரமணனென் றுரையத்தேன் ரோசங் கொளாதெனை
ரமித்திடச் செய வா வருணாசலா (90)
o நாயகா -நாயகி பாவம்
எனையழித் திப்போ எனைக்கலவவிடி
லிதுவோ வண்மை யருணாசலா (9)
கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா

ஏனிந்த வுறக்கமெனைப்பிற் ரிழுக்க
விதுங்க் கழகோ வருணாசலா (10)

ஆருக் காவெனை யண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா (4)

o வழக்காடுதல்
ஔவை போ லெனக்ககுன் னருளைத் தந்தெனை
யாளுவ துன்கட னருணாசலா (14)

முடியடி காணா முடிவிடுத் தெனைநேர்
முடிவிடக் கடனிலை யருணாசலா (80)

645
Ashrams / Re: Ramana Ashram
« on: January 20, 2014, 04:13:04 PM »
Surrounded by admirers, ‪#‎Abhigya‬, 9, of Mysore, beams after a mellifluous recitation of Chapter 11 of the ‪#‎BhagavadGita‬, immediately following the ‪#‎Ramana‬ ‪#‎Sadguru‬ ‪#‎Tamil‬ ‪#‎parayana‬ at the ‪#‎sannidhi‬ of ‪#‎Sri‬ ‪#‎RamanaMaharshi‬ in ‪#‎Ramanasramam‬ ‪#‎Tiruvannamalai‬. In the absence of guru or teacher, Abhigya learned by heart the entire 700 verses of the ‪#‎SongofGod‬ on his computer, while living in Melbourne. The Shankaracharya of Sringeri has given him a certificate. Abhigya first visited Ramanasramam at the age of one.

Pages: 1 ... 33 34 35 36 37 38 39 40 41 42 [43] 44 45 46 47 48 49 50 51 52 53 ... 74