Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 ... 78
31
Who I am from fb

32
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  14
**********************************************
ஒருவன் மெய்ப்பொருளை அறிய விரும்புவானானால் , அவன் இந்த உலகத்தைத் துறந்துவிட்டு , யாரும் அணுகாத வனத்துக்குப் போய்விடவேண்டும் என்று யோகிகள் சொல்லுகிறார்கள். அதுபோன்ற ஒருவிஷயம் மேல்நாட்டில் எளிதாகச் செய்யக் கூடியதில்லை. எங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு மாறுபட்டது ! யோகிகள் சொல்லுவதைத் தாங்களும் ஒப்புக்கொள்ளுகிறீர்களா

மகரிஷி அருகில் இருந்த சிஷ்யர் ஒருவரைப் பார்க்கிறார். அவர் மகரிஷியின் வார்த்தைகளை எனக்கு மொழி பெயர்த்துக் கூறுகிறார்.

 மெய்ப்பொருளைத் தேடுபவன் கர்மத்தைத் துறந்துவிட வேண்டியதில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தியானித்தால் போதும். சொந்த வேலைகளையும் , கடமைகளையும் அவனவன் செய்துகொண்டே இருக்கலாம். தியானம் செய்வது மட்டும் சரியானமுறையில் இருந்தால் , தியானிக்கும்போது உண்டான உணர்ச்சி வேலையின்மத்தியிலும் பெருக்கிக்கொண்டே இருக்கும். ஒரே எண்ணத்தை இரண்டு வழிகளில் வெளியிடுவது போன்றது அது. தியானிக்கும் போது எந்த முறையைப் பின்பற்றுகிறோமோ அதுவே செயலிலும் பரிணமிக்கும்.

அவ்வாறு செய்வதால் என்ன பயன் படைக்கும்

 விடாது தொடர்ந்து தியானித்தால் மக்களைப் பற்றியும் மற்றுள்ள பொருள்களைக் குறித்தும் நீர் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் மாறுபடுவதை உணர்வீர். உம்முடைய செய்கைகள் தாமாகவே உமது தியான ஒழுங்கைப் பின்பற்ற ஆரம்பிக்கும்.

 ஆனால் தாங்கள் யோகிகள் கூறுவதை ஒப்புக்கொள்வதில்லையா

இந்தக் கேள்விக்கு மகரிஷி நேரான பதில் கொடுப்பதில்லை.

 மனிதன் அவனை உலகத்துடன் பிணைந்து வைக்கும் சுயநலத்தைத் துறந்துவிட வேண்டும். அதுவே உண்மைத் துறவு.

 உலக விவகாரங்களில் ஈடுபட்ட ஒருவன் எவ்வாறு சுயநலமற்றவனாக இருக்க முடியும்

 கர்மமும்ஞானமும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை அல்ல.

 ஒருவன் தன்னுடைய தொழிலுக்கான கர்மங்களை யெல்லாம் செய்து கொண்டே ஞானத்தையும் அடைய முடியும் என்பது தாங்கள் கூறுவதன் அர்த்தமா

 ஆமாம் ஆனால் , அப்போது முன் நினைத்திருந்தபடி ,  கர்மங்களைச் செய்பவன் நான்தான்  என்னும் எண்ணம் மாறுபட்டுப் போகும். ஏனென்றால் அவனுடைய பிரக்ஞை படிப்படியாக , இந்தச் சிறிய  நான்  என்னும் வஸ்துவிலிருந்து பிரிவுபட்டுச் சென்று மெய்ப்பொருளுடன் ஒன்றித்துவிடும்.

 தொழில் புரிந்துகொண்டிருக்கும் ஒருவன் தியானத்துக்காக அதிக நேரம் செலவழிக்க முடியாதல்லவா

 தியானத்துக்காக நேரத்தை ஒதுக்கி வைப்பதென்பது ஆரம்பத்தில்மட்டும் தான். போகப்போக அது அவசியமில்லை. வேலை செய்யும்போது , மற்ற வேளைகளிலும் சாதகன் ஆழ்ந்த சாந்தியை அனுபவிக்கத் தொடங்குவான். அவன் கைகள் உலக வேலையைச் செய்துகொண்டிருக்கும் போதே அவன் சிந்தனை தனிமையில் ஆனந்தத்தில் ஒன்றுபட்டு நிற்கும்.

 ஆகவே தாங்கள் யோகிகள் சொல்லும் முறையை அனுசரிக்கும்படி கூறுவதில்லை !

 இடையன் தடிகொண்டடித்து மாட்டை அவனுக்கு விருப்பமான பாதையில் போகச் செய்கிறான். அதுபோலத்தான் யோகிகள் செயலும். யோகி தன் மனத்தை அடக்கி வற்புறுத்தி லட்சியத்தை நோக்கிச் செலுத்துகிறான். ஆனால் நான் சொல்லும் முறையை அனுஷ்டிப்பவன் , புல்லைக்காட்டித் தட்டிக்கொடுத்துக் கஷ்டமில்லாமல் மாட்டைத் தன்னிஷ்டப்படி நடத்தும் ஒருவனுக்கு நிகரானவன் .

 அது செய்வது எப்படி !

 நான் யார் என்னும் பிரச்சனைக்கு விடை கண்டுபிடிக்க முயலுங்கள். அந்த ஆராய்ச்சியின் பயனாக முடிவில் , மனத்துக்கும் அப்பால் உமுக்குள் மறைந்து கிடக்கும் ஒரு வஸ்துவை உணர்ந்து கொள்வீர். மேற்சொன்ன பிரச்சனைக்கு விடை கண்டீரானால் , எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடைகண்டவராவீர்.

நான் மகரிஷி வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள முயற்சிக்கிறேன். இருபுறத்திலும் மௌனம் சுவரில் உள்ள துவாரத்தின் வழியாகக் கீழே மலைச்சரிவின் அழகிய தோற்றத்தைப் பார்க்கிறேன். சூரியனுடைய இளங்கதிர்கள் எங்கும் பரந்து வருகின்றன.

மகரிஷி மீண்டும் ஆரம்பிக்கிறார்.  எல்லா மனிதர்களும் துன்பம் கலவாத ஆனந்தத்தையே எப்போதும் விரும்புகின்றனர். முடிவில்லாத இன்பமே அவர்களுடைய நாட்டம். ஆனால் அனைவரும் தங்களையே எதனிலும் அதிகமாக நேசிக்கிறார்கள். இந்த விஷயம் எப்பொழுதாவது உமது மனதில் பட்டதுண்டா

 ஆமாம். அப்புறம்

 குடிப்பதனாலோ மதத்தின் மூலமாகவோ யாதோ ஒரு வழியில் மனிதர்கள் இன்பத்தை நாடுகிறார்கள் என்பதை , அனைவரும் தங்களையே மிகுதியும் நேசிக்கிறார்கள் என்ற விஷயத்துடன் பொருத்திப் பார்ப்பீராக ! அப்போது மனிதனுடைய உண்மையான தன்மையை அறிய ஒரு வழி தோன்றியாகும்.

 எனக்கு விளங்கவில்லை ,  என்று நான் சொல்லுகிறேன்.

நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே மகரிஷி உயர்ந்த குரலில் பேசத் தொடங்குகிறார்.

 ஆனந்தமே மனிதனுடைய உண்மையான தன்மை. ஆத்மாவில் ஆனந்தம் சுபாவமாக உள்ளது. மனிதன் ஆனந்தத்தைத் தேடுகையில் தன்னை யறியாமலேயே ஆத்மாவைத் தேடுபவனாகிறான். ஆத்மா அழிவற்றது. ஆகையால் , ஆத்மானுபூதி அடைந்தவன் , அழிவில்லாத ஆனந்தத்தை அடைகிறான்.

 ஆனால் உலகத்தில் துன்பமல்லவா நிறைந்திருக்கிறது !

 ஆமாம் ! ஆனால் உலகம் ஆத்மாவை அறிந்துகொள்ளாததே அதற்குக் காரணம். எல்லா மனிதர்களும் அறிந்தோ அறியாமலோ அந்த ஆனந்தத்தைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்.

 பாதகர்களும் , கொலையாளிகளும் கூடவா  என்று நான் கேட்கிறேன்.

 ஆமாம். அவர்களும் , அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் , ஆனந்தத்தை நாடுவதால்தான் பாதகம் செய்கிறார்கள். இந்த நாட்டம் மனிதர்கள் அனைவருக்கும். இயற்கையாக உள்ளது. ஆனால் பாதகர்கள் உண்மையில் தாங்கள் தேடுவது ஆத்மாவை என்று அறிந்துகொள்வதில்லை. ஆகவேதான் அவர்கள் இந்தக் கெட்ட வழிகளின் மூலமாக இன்பத்தை நாடுகிறார்கள். அவர்கள் கைக்கொள்ளும் முறை தப்பானதுதான். ஏனெனில் அவர்களுடைய வினைப்பயனை அவர்களே அனுபவிக்க வேண்டும் அல்லவா

 இந்த ஆத்மாவை உணர்ந்து கொண்டால் முடிவில்லாத ஆனந்தத்தை அடையலாம் என்று தானே சொல்லுகிறார்கள் !
ஆம் , என்று மகரிஷி தலையை அசைக்கிறார்.

### பிரன்டனின் பயணம் நிறைந்தது. ###

33
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  13
************************************************
கடைசி நாள். ஆனால் இன்னும் நான் மகரிஷியிடம் நெருங்கி விஷயங்களை அறிவது கைகூடவில்லை. சில சமயங்களில் என் மனத்தில் தூய்மையான இன்பம் நிரம்பி நிற்கிறது. மற்றும் சிலவேளைகளிலோ ஏமாற்றம்தான் நிறைந்திருக்கிறது. உட்கார்ந்திருக்கும் கூடத்தில் சுற்றிப் பார்க்கிறேன். நெஞ்சம் ஒருவாறு தளர்ச்சி அடைகிறது. அங்கே இருப்பவர்களில் அநேகர் எனக்கு அன்னியமான பாஷை பேசுபவர்கள் ; அவர்களுடைய எண்ணத்தின் போக்கும் எனக்கு அன்னியமானது தான். அப்படியிருக்க எவ்விதம் எங்களுக்குள் அன்னியோன்னிய உணர்ச்சி ஏற்படக் கூடும்  பிறகு , மகரிஷியையே பார்க்கிறேன். அவரோ , எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிலைத்திருக்கிறார். அங்கிருந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் அவர் வாழ்க்கை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் இதுவரை சந்தித்தவர்களில் ஒருவரிடமும் இல்லாத ஒருவித அற்புத சக்தி மகரிஷியிடம் குடிகொண்டிருக்கிறது. சாதாரண மனிதவர்க்கம் அவரை உறவு கொண்டாட முடியாதென்ற உணர்ச்சி என்னுள்ளே தோன்றுகிறது. இயற்கையின் தோழர் அவர். அதோ ஆச்ரமத்துக்குப் பின்னால் நிமிர்ந்து நிற்கும் தனித்த மலைச்சிகரமும் , பரந்த வனாந்தரமும் , விரிந்த வானவெளியுமே அவருக்கு உறவினங்கள்.

மகரிஷி திருவண்ணாமலையை விட்டுச் சிறிது போதும் பிரிவதற்கு இணங்குவதில்லை. அந்த மலையின் மேலேயே அவர் பல வருடங்கள் இருந்திருக்கிறார். ஆகவே அவரும் அந்த மலையின் தன்மையைப் பெற்றுவிட்டார் போலிருக்கிறது. அசையாது , உறுதிபெற்றுத் தனித்து நிற்கிறது அம்மலை. மகரிஷியும் அது போன்றவரே திருவண்ணாமலையின் மீது அவருக்கு வெகு பிரியம். அந்தப் பிரியத்தை வெளியிட்டு அவர் அழகிய பாடல்களும் எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை அகன்ற கானகத்தின் ஓரத்திலே ஆகாசத்தை ஊடுருவிக்கொண்டு தனிமையில் நிமிர்ந்து நிற்கிறது. அது போலவே மகரிஷியும் சாதாரண மனுஷ ஜாதிக்கு மேலாகத்தனிப்பெருமை விளங்க உயர்ந்து நிற்கிறார். திருவண்ணாமலை , தாறுமாறாகப் பரந்து கிடக்கும் மலைத் தொடரிலிருந்து பிரிவுபட்டுத் தனித்திருக்கிறது. மகரிஷியும் , அவருடனேயே நீண்டகாலம் வசித்து , அவரிடம் அன்பு பூண்டொழுகும் நெருங்கிய சிஷ்யர்கள் சூழ்ந்திருக்கும் போதும் எப்படியோ அவர்களிடம் ஒட்டாமல் விலகி இருக்கிறார். விவரித்து அளவிட முடியாதது இயற்கையின் தன்மை. அந்த இயற்கையின் தன்மை மகரிஷியிடம் அமைந்திருக்கிறது. அது அவரை ஏனைய சாதாரண மனிதர்களிடமிருந்து பிரித்து விட்டது. மகரிஷி அவ்வளவு உயர்ந்திராமல் , அணுகுவதற்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் கீழ்நிலையில் இருக்கக்கூடாதா என்று நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நமக்குச் சாதாரணமானவைகளாகத் தெரியும் குறைகளும் அவர் முன்னிலையில் பெருத்த தோல்விகளாகத் தோன்றுகின்றன. ஆனால் , அவர் உலகத்தார் அடையமுடியாத பெருஞானத்தை அடைந்திருப்பது உண்மையானால் , அவர் நம்மை ஒத்த மனிதர்களை எல்லாம் கடந்து நிற்பதும் இயற்கைதானே ! அதுவல்லவாமல் அவரும் நம்முடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கக்கூடும்  மகரிஷி என்னை நோக்கும் போதெல்லாம் கிடைத்தற்கரிய மகா வஸ்து வொன்று எனக்குக் கிடைக்கப் போகிற தென்ற உணர்ச்சி பெறுகிறேன். அதன் காரணம்தான் என்ன

ஆயினும் இப்போது என் நினைவிலே அழியாமல் பிரகாசித்துக் கொண்டிருப்பவை அந்த அற்புதக் கனவும் , அடிக்கடி நான் நிதரிசனமாக அனுபவித்த சாந்தியும்தான். வாய் வார்த்தையாகவோ , வேறு வழியிலோ நான் மகரிஷியிடமிருந்து பிறிதொன்றும் அறிந்தேனில்லை. ஆச்ரமத்துக்கு வந்து நாட்களோ அதிகமாய் விட்டன. இரண்டு வாரங்களில் மகரிஷியிடம் சிறிது நெருங்கிப் பேசியது ஒரே ஒரு தடவைதான். அப்போது அவர் நடுவில் திடீரென மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டார். அதுவே நான் அவரை அதிகம் அணுகாததற்கும் காரணமாகிறது. இது மாதிரி நடைபெறுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னை மகரிஷியிடம் அழைத்து வந்த சாது எவ்வளவு ஆசைகாட்டினாரென்பதை நான் இன்னும் மறந்து விடவில்லை. என்ன ஆனாலும் இப்போது மகரிஷியின் கருத்துக்களை அறிந்துகொள்வதே என் அவா. வழக்கமான கருத்தைவிட்டு அவர் வாய்திறக்க வேண்டுமென்பதே என் கோரிக்கை. அதற்கு அனுசரணையாக ,  இவர்  இந்த மகரிஷி பூரண விடுதலை அடைந்தவர். துன்பம் ஒன்றும் இவரை அணுக முடியாது ,  என்ற ஒரு எண்ணம் என் மனத்தைப்பற்றிக்கொண்டு விட்டது. நானாக அந்த எண்ணத்தைத் தோற்றுவித்துக் கொள்ளவில்லை. அது தானாகவே என் சிந்தையில் உதயமாகி நிற்கிறது.

ஆகவே , நான் மகரிஷியுடன் வார்த்தையாட மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்ளுகிறேன். அதற்காக அவருடைய பழமையான சிஷ்யர்களில் ஒருவரைத் தேடிச் செல்லுகிறேன். அடுத்திருந்த குடிசையில் அவர் ஏதோ வேலை செய்துகொண்டிருக்கிறார். என்மேல் அவருக்கு வெகு அன்பு. அவரிடம் என் ஆவலைத் தெரிவிக்கிறேன். கடைசிமுறையாக மகரிஷியுடன் பேச ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். மகரிஷியினிடமே நேரில் விஷயத்தைப் பிரஸ்தாபிக்க நான் சங்கோசப்படுவதையும் அவரிடம் சொல்லிவிடுகிறேன். சிஷ்யர் புன்முறுவல் செய்கிறார். போனவர் வெகு சீக்கிரத்திலேயே திரும்பிவருகிறார். மகரிஷி என் வேண்டுகோளுக்கு இணங்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

நான் விரைந்து செல்லுகிறேன். கூடத்துக்குப் போய் மகரிஷியின் அருகில் உட்கார்ந்துகொள்ளுகிறேன். உடனே மகரிஷி என் பக்கமாகத் திரும்புகிறார். அவருடைய வாயிலே புன்னகை தவழுகிறது. நானும் தைரியமடைகிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

34
On one occasion the youngest child of Seshagiri Iyer
approached Bhagavan and said,

"Thatha (Grandfather) touch me!"

Then Bhagavan narrates,
"Then I touched the child's hand like this..."

Then the child said,
"You touched only my hand. Did you touch me?"

Bhagavan said,
"I wondered at the child's retort"

( from Commentary... by Smt T.R. Kanakammal)

An attempt In a verse form in Tamil:

"என்னை தாத்தா தொடுங்களேன்!"
என்று சிறுமி கெஞ்சினாளாம்
சின்ன பிஞ்சு கைதனை
சற்றே தொட்டார் பகவானும்
"என்னைத் தொடவே காணோமே!
எந்தன் கையைத் தொட்டீரே!"
என்று கேட்க அச்சிறுமி
வியந்தனராம் நம் பகவானும்!!

from fb

35
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  12
***********************************************
நான் நினைவுபெறுகிறேன் , அற்புதமான அந்தக் கனவு கலைந்து விடுகிறது. ஆயினும் அதைக் குறித்த தூய உணர்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை. உடனே மகரிஷியின் கண்கள் என் கண்களைச் சந்திக்கின்றன. அவருடைய முகம் இப்போது என் பக்கமாகத் திரும்பி இருக்கிறது. என் கண்களையே அவர் உற்றுப் பார்க்கிறார்.

அந்தக்கனவின் பொருள் என்ன  என்னுடைய சொந்த வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகள் கொஞ்சநேரம் என் எண்ணத்தை விட்டு மறந்து பராமுகமாயிருக்கும் உன்னத உணர்ச்சியும் , உலக மக்களிடத்தே ஆழ்ந்த இரக்கமும் கூடிய ஒரு நிலைமை கனவின்போது என் உள்ளத்திலே தோன்றியதல்லவா ! அந்நிலைமை இப்போது நான் விழித்திருந்தாலும் , என்னைவிட்டு அகலுவதாக இல்லை. அபூர்வமான அனுபவம் !

ஆயின் அந்தக்கனவு உண்மையாகக் கூடுமானால் அதில் கண்ட அனுபவம் என் விஷயத்தில் நீடித்திருக்கமுடியாது. ஏனென்றால் நான் இன்னும் பக்குவம் அடையவில்லை.

வெகு நேரம் நான் கனவில் மூழ்கிக் கிடந்தேன் போலிருக்கிறது. ஒவ்வொருவரும் கூடத்திலிருந்து எழுந்திருந்து படுக்கப்போகிறார்கள். நானும் தூங்கச் செல்லுகிறேன்.

அந்த நீண்ட கூடத்தில் காற்றோட்டம் அவ்வளவு நன்றாக இல்லை. அங்கே தூங்க எனக்குப் பிடிப்பதில்லை. முற்றத்தை நாடிப் போகிறேன். உயர்ந்த தோற்றமும் , நரைத்த தாடியும் உள்ள சிஷ்யர் ஒருவர் என்னிடம் வருகிறார். விளக்கொன்றைக் கொடுத்து , விடியும்வரை எரியவைத்திருக்கும்படி சொல்லுகிறார்.

ஒவ்வொரு சமயம் பாம்புகளும் சிறுத்தைகளும் அவ்வழியாக வருவதுண்டு. விளக்கிருந்தால் அவைகள் விலகிப் போய் விடும்.

தரை கடினமாயிருக்கிறது. என்னிடம் படுக்கை இல்லை. ஆகவே சில மணி நேரம்வரையில் விழித்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் பாதகம் இல்லை. நினைத்துப் பார்க்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஏனெனில் நான் இதுவரையில் சந்தித்தவர்கள் எல்லாரிலும் மகரிஷிதான் மிகவும் அற்புதமானவர் என்று என் மனதிலேபடுகிறது.

மகரிஷியின் மூலம் அரியபொருளொன்றை நான் பெறுவேன் போலத் தோன்றுகிறது. ஆனால் அது இத்தன்மையது தான் என்று என்னால் சுலபமாக நிச்சயிக்கக் கூடுவதில்லை. அது அறிய முடியாதது ; எண்ணிப்பார்க்கவும் முடியாதது. ஒருவேளை அது ஆத்மீகமாயிருக்கலாம். இன்றிரவு அவரைப்பற்றி நினைக்கும் ஒவ்வொரு தடவையும் , அந்தத் தெளிவான கனவை ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அபூர்வமான உணர்ச்சி ஒன்று என்னுள் ஊடுருவிச் செல்லுகிறது. அப்போது இன்னதென்று தெரியமுடியாத , ஆனால் உன்னதமான சம்பவங்களை எதிர்நோக்கி என் இதயம் படபடவென்று துடிக்கிறது.

அதற்குப் பிறகு நான் மகரிஷியிடம் இன்னும் அதிகம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறேன். ஆனால் அம்முயற்சி வெற்றிபெறுகிறதில்லை. அதற்கு மூன்று காரணங்கள் உண்டு முதற்காரணம் மகரிஷியையே பொறுத்திருக்கிறது. அவரோ யாருடனும் அதிகம் கலந்து கொள்வதில்லை. பேச்சிலும் தர்க்கத்திலும் அவருக்குக் கொஞ்சமும் இஷ்டமும் கிடையாது. மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றியும் கொள்கைகளைக் குறித்தும் அவர் கவலை கொள்வதே இல்லை. மற்றவர்களைத் தம்முடைய கொள்கைகளுக்கு மாற்றுவதிலோ , தம்மைப் பின் பற்றுவோரின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலோ அவருக்குச் சிறிதும் ஆசையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது காரணம் விசித்திரமானது. அற்புதமான அந்தக் கனவு கண்ட நாள்முதல் , நான் மகரிஷியின்முன் போகும்போதெல்லாம் என் மனத்திலே மிகுதியும் பயம் உண்டாகிறது. தடதடவென்று கேள்விகள் போடும் என் சுபாவமும் ஒடுங்கிப்போகிறது. சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரையில் , மகரிஷியுடன் சரிசமானமாக இருந்துகொண்டு விவாதம் செய்யலாமென்று நினைப்பதும் முறையற்ற தன்மை எனத் தோன்றுகிறது.

மூன்றாவதாக , மகரிஷி இருக்கும் கூடத்தில் எப்போது பார்த்தாலும் அநேகர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் என் அந்தரங்க எண்ணங்களை வெளியிட எனக்கு விருப்பமில்லை. நான் அவர்களுக்குப் புதியவன் ; இடத்துக்கும் அன்னியன். நான் அவர்களில் சிலருக்குத் தெரியாத அன்னிய பாக்ஷை பேசுகிறே னென்பது ஒரு பொருட்டல்ல ; ஆனால் நான் எதிலும் நம்பிக்கையற்ற சந்தேகப்பிராணி என்பதும் , மத எழுச்சி இல்லாதவ னென்பதும் அவர்களுக்கு மிகவும் ஆகாதவைகளாகத் தோன்றுகின்றன. அவர்களுடைய மனத்தை அவர்கள் போற்றி வளர்க்கு சிந்தனைகளைப் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் என் மனத்துக்கு ருசிக்காமல் , அவர்களுக்குப் பிடித்தமான ஒரு முறையிலேயே விஷயங்களை விவாதிப்பதென்றாலும் எனக்கு விருப்பமில்லை. ஆகவே நான் மகரிஷியிடம் அதிகம் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

இந்த மூன்று தடைகளையும் கடந்து செல்ல எளிதில் ஒரு வழி புலனாகிறதில்லை. பலதடவைகளில் நான் மகரிஷியிடம் எதையேனும் கேட்கலாமென்று ஆரம்பிக்கும் சமயங்களில் எல்லாம் ஏதாவது ஒரு இடைஞ்சல் வந்து குறுக்கிடுகிறது.

நான் இங்கே தங்கி இருக்கலாம் என்று உத்தேசித்த ஒருவாரமும் கழிந்து போகிறது. இன்னும் ஒருவாரம் இருக்க நிச்சியக்கிறேன். முதல் முதலில் எனக்கும் மகரிஷிக்கும் நடந்த சம்பாக்ஷணைக்குப் பிறகு அவருடன் ஏதோ அப்படி இப்படிச் சில வார்த்தைகளே பேசமுடிகிறது. நெருங்கி நின்று கலந்து பேசுவது சாத்தியமாகிறதில்லை.

நாட்கள் கழிந்தோடுகின்றன. என் பிரயாணத்தை மீண்டும் ஒத்திப்போடுகிறேன். மகரிஷியின் சிந்தையிலே ஊறித் ததும்பிச் சூழ்ந்திருக்கும் காற்றிலும் பரவி நிற்கும் இனிய சாந்தியை ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

# கடைசி நாள்

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

36
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 11
***********************************************
கண்களை மூடிக்கொள்ளுகிறேன். மகரிஷியின் அருகே நான் இருக்கும் காரணத்தால் சூழ்ந்து நிற்கும் அமைதியில் என் மனம் மிகுதியும் ஆழ்ந்துவிடுகிறது. கலையாத அந்த அமைதியினால் வெகு சீக்கிரத்தில் நான் சிறிது தூங்கிவிடுகிறேன். கடைசியில் நினைவையும் இழந்து தெளிவான ஒரு கனவு காணுகிறேன்.

நான் ஐந்து வயதுக் குழந்தையாகி விடுகிறேன் போலத் தோன்றுகிறது. திருவண்ணாமலையைச் சுற்றி நெளிந்து வளைந்து மேலே செல்லும் கரடுமுரடான ஒரு பாதையில் நான் மகரிஷியின் கையைப்பிடித்துக் கொண்டு நிற்கிறேன். ஆனால் இப்பொழுது அவர் மிகவும் அபாரமான உருவத்துடன் காணப்படுகிறார். ஆசிரமத்தை விட்டு அவர் என்னை அழைத்துச் செல்லுகிறார்.

மையிருட்டாயிருந்தபோதிலும் அவர் பாதை அறிந்து வழிகாட்ட இருவரும் மெதுவாக நடந்துபோகிறோம். கொஞ்ச நேரத்துக்குப்பின் சந்திரனும் நட்சத்திரங்களும் மங்கிய பிரகாசத்துடன் தோன்றுகின்றன. எங்களைச் சுற்றிலும் சிறிது வெளிச்சம் உண்டாகிறது. பாறையின் மேடு பள்ளங்களிலும் , அபாயகரமாகத் தோன்றும் பெருத்த குண்டுக்கல்களுக்கிடையே , மகரிஷி மிகுந்த கவனத்துடன் என்னை அழைத்துக்கொண்டு போகிறார். குன்று செங்குத்தாக இருக்கிறது.

ஆகவே , நாங்கள் மெள்ள மெள்ளத் தான் மேலே ஏறுகிறோம். பாறைகளின் பிளவுகளுக்கு மத்தியிலும் , பாராங்கற்களின் இடையிலும் , புதர்களுக்கு நடுவிலும் மறைந்து கிடக்கும் சிறு சிறு ஆசிரமங்களும் , மனிதர்கள் வசிக்கும் குகைகளும் புலானகின்றன. நாங்கள் போகப் போக , அங்கு வசிப்பவர்கள் வெளிவந்து எங்களுக்கு உபசாரம் கூறுகிறார்கள். நட்சித்திர வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் சாயைபோலக் காணப்பட்டாலும் அவர்கள் பல்வேறு தரத்தினரான யோகிகள் என நான் உணர்ந்து கொள்ளுகிறேன். அவர்களிடம் நிற்காமலே நாங்கள் ஏறிச்சென்று முடிவில் மலை உச்சியை அடைகிறோம். எனக்குச் சம்பவிக்க இருக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை எதிர்பார்த்து என் இருதயம் படபடவென்று துடிக்கிறது.

மகரிஷி , திரும்பி என்முகத்தை உற்று நோக்குகிறார். நானும் ஆர்வத்துடன் அவரைப் பார்க்கிறேன். என்னுடைய இதயத்திலும் எண்ணத்திலும் வெகு வேகமாக இன்னதென்று சொல்லக் கூடாத ஒரு மாறுதல் உண்டாகிக்கொண்டிருக்கிறது. முன்னம் என்னை மயக்கிய பழைய சிந்தனைகள் என்னைவிட்டு நீங்கிப் போக ஆரம்பிக்கின்றன. அங்கும் இங்கும் என்னை அலையச் செய்த ஆசைகள் வெகு விரைவில் மறைந்துதோடுகின்றன.

சமூக வாழ்க்கையில் அனேகரிடம் நான் காட்டிக்கொண்ட விருப்பு வெறுப்புகளும் , வீண் மனஸ்தாபங்களும் , அன்பற்ற தன்மையும் , சுயநல நினைவும் சிதறுண்டு போகின்றன. சொல்லி முடியாத சாந்தி வெள்ளித்திலே நான் அமிழ்ந்து நிற்கிறேன். இனி வாழ்க்கையில் நான் வேண்டுவது ஒன்றும் இல்லை.

திடீரென்று மகரிஷி மலை அடிவாரத்தைப் பார்க்கும்படி என்னிடம் சொல்லுகிறார். நானும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆச்சரியம் ! பூமியின் மேற்குக்கோளம் கீழே வெகு தூரத்தில் பரந்து கிடப்பதைக் காணுகிறேன். லக்ஷக்கணக்கான ஜனங்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய வடிவங்கள் தெளிவாகத் தெரிவதில்லை இன்னும் காரிருள் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

மகரிஷி பேசுகிறார். ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக வெளி வருகிறது.  நீர் திரும்பி அங்கே போகும் பொழுதும் , இப்போது அனுபவிக்கும் சாந்தியை அனுபவிப்பீர். ஆனால் அதற்காக நீர் செய்ய வேண்டிய தொன்றுண்டு.  இந்த உடல்தான் , அல்லது அறிவு தான் நான்  என்னும் எண்ணத்தை ஒழித்து விடவேண்டும். இந்த சாந்தியை அடைந்து விட்டீரானால் உம்மையே நீர் அடியோடு மறந்துவிட வேண்டியிருக்கும். ஏனென்றால் அப்போது உமது வாழ்வு மெய்ப்பொருளுடன் ஒன்றுபட்டதாகி விடும்.

பிறகு , மகரிஷி வெள்ளிய பிரகாசமுள்ள ஒரு கிரணத்தின் நுனி ஒன்றை என் கையில் வைக்கிறார்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

37
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  10
******************************************
நான் கீழே கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பி வருகிறேன். ஏறி இருந்த குதிரை வண்டி வேகமாக ஓடுகிறது. மாலை நேரமும் விரைந்து வருகிறது. இயற்கையின் அழகு விளையாட்டை நான் நேரே காணுகிறேன். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அற்புதத் தோற்றம் ! அஸ்தமன சூரியன் மறையும் கோலாகலக் காட்சியைப் பார்ப்பதற்கு நான் எத்தனையோ முறை காத்துக் கிடந்ததுண்டு. கீழ் நாட்டில் , சந்தி வேளை மிகவும் ரம்மியமானது. அப்போது ஆகாசத்திலே தோன்றும் வர்ண வேறுபாட்டை என்னென்று வர்ணிப்பது ! ஆனால் இந்த அழகுக் காட்சி அதிக நேரம் நீடித்து நிற்பதில்லை. அரை மணி நேரத்துக்குள்ளாகவே எல்லாம் தீர்ந்துவிடுகிறது.

ஐரோப்பாவில் இலை உதிர் காலத்தில் மாலை நேரம் மிகுதியும் நீடித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மேற்குத் திசையிலே ஜவலிக்கும் தீப்பந்துபோலக் கதிரவன் மரங்களுக்கு நடுவிலே இறங்கி மறைகிறான். வான் வெளியைவிட்டு நீங்குவதற்குச் சற்று முன்னால் சூரியன் செக்கச் சிவந்து விடுகிறான். ஆகாசத்திலே வேறு வேறு நிறங்கள் தோன்றிக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சுற்றியிருக்கும் வயல்களிலும் தோப்புகளிலும் பூரணமான அமைதி குடிகொள்ளுகிறது. பறவைகளின் இன்னிசை ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. காட்டுக் குரங்குகளின் கூச்சலும் அடங்கிவிடுகிறது. சிவந்த சூரியனுடைய வட்ட வடிவம் சிறுகச் சிறுகக் குறைவுபட்டு முடிவில் அடியோடு மறைந்து போகிறது. இருள் சூழ்கிறது. சூழ்ந்துவரும் இருள் வானத்து நிறங்களையும் , செங்கதிர்களையும் மெள்ள மெள்ள விழுங்கிவிடுகிறது.

என் உள்ளத்திலே அமைதி குடியேறுகிறது. இயற்கை அழகின் இன்பம் என் மனதைப் பற்றிக் கொள்ளுகிறது. வாழ்க்கையில் கொடூரங்கள் உண்டு ; துன்பங்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கெல்லாம் புறம்பாக , அடிப்படையாக மறைந்து நிற்கும் கருணை வடிவான மெய்ப்பொருள் ஒன்று உண்டு என்னும் உணர்ச்சி பெறுகிறேன். அதுபோன்ற உணர்ச்சி தோன்றும் நேரத்தை மனிதன் எவ்வாறு மறந்து விடமுடியும் ! வீணாகக் கழியும் மற்ற நேரத்தைவிட அது எவ்வளவு பரிசுத்தமானது ! ஆழ்ந்த இருளின் நடுவே தோன்றும் ஜோதி போன்றது அந்நேரம். சோர்வுறும் மனத்திலே அது நம்பிக்கையே வளரச் செய்கிறது. பிறகு சட்டென மறைந்து விடுகிறது.

ஆசிரமத்தை நெருங்குகிறேன். நந்தவனத்தில் மின்மினிப் பூச்சிகள் அலைந்து திரிகின்றன. அவைகள் பறக்கும்போது உண்டாகும் வெளிச்சம் இருட்டிலே விநோதமாக இருக்கிறது. கடைசியாக நான் மகரிஷியிருக்கும் கூடத்துக்குள் போகிறேன். தூய்மையான அமைதி நிறைந்து நிற்கிறது. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் வரிசை வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் பேசுவதில்லை. வேறெவ்விதமான சத்தமும் கிடையாது. மூலையில் உள்ள பீடத்தின் மேல் மகரிஷி காலைமடக்கி வீற்றிருக்கிறார். அவர் கைகள் இரண்டும் முழந்தாள்களின்மேல் விழுந்து கிடக்கின்றன. மகரிஷியின் தோற்றம் எளிமையையும் அடக்கத்தையும் காட்டுகின்றது வசீகரமும் தான் என்ன ! பண்டைகாலத்து ரிஷிகளை ஒப்ப , அவருடைய சிரம் அழகு பொருந்த அமைந்து நிற்கிறது. அவர் கண்கள் கூடத்தின் ஒரு கோடியை அசையாமல் பார்த்த வண்ணமாக இருக்கின்றன. அந்த அபூர்வமான அசைவற்ற பார்வையைக் குறித்துச் சிந்தக்கையில் எப்போதும் போல என் மனம்தான் குழப்பமடைகிறது. அவர் ஜன்னல் வழியாக எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்  அஸ்தமன சூரியனுடைய கிரணங்கள் ஒவ்வொன்றாக வானத்தைவிட்டு அடியோடு மறைந்து போகும் காட்சியையோ  அல்லது வெளியுலகத்தில் ஒன்றையும் காணமுடியாதபடி கனவெனச் சொல்லக்கூடிய ஒரு நிலையிலே அவர் ஆழ்ந்து நிற்கிறாரா

வழக்கம்போல நறும்புகை கூடம் முழுவதும் மிதந்து செல்லுகிறது. நான் கீழே உட்கார்ந்து , மகரிஷியின் மீது என் கண்களை நாட்ட முயலுகிறேன். ஆனால் சிறிதுநேரம்தான் அவ்வாறு செய்ய இயலுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

38
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்
 9
**********************************************
 செய்ய வேண்டியது ஒன்றுதான் உளது. உம்மை நீர் உள்நோக்கி ஆராய்ந்து பாரும். இதை நீர் செம்மையாகச் செய்யின் ஐயங்கள் அனைத்தும் அகன்று போம்.

-------------- ஸ்ரீ பகவான்.

எதிர்மொழிக்கு இது ஒரு அதிசயமான மறுமொழி. ஆனால் நான் அவரை வினவுகிறேன் :

 ஒருவன் செய்யவேண்டியது என்ன  நான் ஒழுகக்கூடிய மார்க்கம் எது

 எதார்த்த சொரூபத்தைப் பற்றி ஆழ்ந்து விசாரம் பண்ணுவதாலும் , இடையறாத் தியானத்தாலும் உள் ஒளியைக் காணக்கூடும்.

 உண்மை எது என்பது பற்றி நான் அடிக்கடி தியானம் பண்ணி வந்திருக்கிறேன். ஆனால் முன்னேற்றம் அடைந்திருக்கும் அறிகுறி எதுவும் காண்கிறேனில்லை.

 முன்னேற்றம் அடையவில்லையென்று உமக்கு எப்படித் தெரியும்  ஆத்மிக விஷயத்தில் ஒருவன் அடைந்திருக்கும் அபிவிருத்தியைப் பற்றி அறிவது சுலபமன்று.

 குருவின் உதவி அவசியமா

 அவசியமென்றுதான் சொல்ல வேண்டும்.

 தாங்கள் குறிப்பிடுகிறவிதம் ஆத்ம தரிசனம் அடைவதற்கு குருவானவர் உதவிசெய்யக் கூடுமா

 சாதகனது நாட்டத்துக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவர் தரக் கூடும். சுவானுபவத்தில் இதை அறிந்துகொள்ளக்கூடும்.

 குருவின் உதவியைக் கொண்டு ஞானோதயம் பெறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் .

 சாதகனது பரிபக்குவத்தை அனுசரித்திருக்கிறது. வெடிமருந்து ஒருகணப் பொழுதில் தீப்பிடிக்கிறது நிலக்கரியில் தீப்பிடிக்க நெடுநேரமாகிறது.

குருவைப்பற்றியும் குரு கையாளும் வழிகளைப்பற்றியும் பேச இந்த மஹானுக்கு இஷ்டமில்லையென்று நான் ஏதோ ஒருவிதத்தில் உணர்கிறேன். எனினும் என்னுடைய பிடிவாதத்தன்மை இந்த உணர்ச்சியை மீறுகிறது. நான் மற்றுமொரு கேள்வி கேட்கிறேன். அவர் இதைக்காதில் போட்டுக்கொள்கிறாரில்லை. வெளியே பரந்துநிற்கும் மலையின் அழகை ஜன்னலின் வழியாக அசட்டையாகப் பார்க்கிறார். பேச்சொன்றுமில்லை. நானும் குறிப்பறிந்து இக்கேள்வியை விட்டுவிடுகிறேன்.

 உலகத்தின் இப்போதைய நிலைமை மிகவும் நெருக்கடியானதாக இருக்கிறது. எதிர்காலம் எப்படியோ  அதைக் குறித்துத் தாங்கள் ஏதாவது சொல்லக்கூடுமா  என்று வேறு விதத்தில் பேச்சை மாற்றுகிறேன்.

உடனே மகரிஷி ,  எதிர்காலத்தைக் குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும்
நிகழ்காலத்தைப் பற்றியே ஒருவரும் ஒன்றும் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. எதிர்கால விஷயமாக இப்போது கவலையே வேண்டியதில்லை ,  என்று சொல்லுகிறார்.

இரண்டாம் தடவை ! மகரிஷி , என் கேள்விக்கு நேரானபதில் கொடுக்க மறுதலிக்கிறார். ஆனால் இம்முறை அவரை நான் எளிதில் விடுகிறேனில்லை. ஏனென்றால் , மகரிஷியின் தனித்த அமைதி நிறைந்த ஆச்ரமத்தில் போல் அல்லாமல் , வாழ்க்கையின் கொடூரங்களும் கஷ்ட நஷ்டங்களும் செறிந்த வெளியுலகத்திலிருந்து வருபவன் அல்லவா நான்

 மக்களுக்குள் பரஸ்பர ஒத்தாசை பரவி , நேசப்பான்மை மிகுந்து , சீக்கிரத்தில் உலகம் புதிய சகாப்தமொன்றை நாடிச்செல்லுமா  அல்லது சண்டையிலும் குழப்பத்திலுமே கவிழ்ந்து கிடக்குமா !  என்று நான் கேட்கிறேன்.

பதில் சொல்ல மகரிஷிக்கு இஷ்டமே இல்லைபோல் தோன்றின போதிலும் , பேச முற்படுகிறார்.

 உலகத்தை இயக்கும் முதல்வன் ஒருவன் உண்டு. அதன் சுக துக்கங்களைக் கவனிப்பது அவன் தொழில். படைப்பவன் அவன் ; காக்கும் விதத்தையும் அறிவான் ; முழுப்பாரத்தையும் ஏற்பவன் அவன் ; நாம் அல்ல.

 ஆனால் , திறந்த மனத்துடன் சூழவும் பார்த்தால் அந்தப் பரம்பொருளின் காக்கும் கருணை தென்படுவதில்லையே ,  என்று நான் மறுத்துச் சொல்லுகிறேன்.

இதற்கும் மகரிஷி அரை மனதுடனே தான் விடைகூறுகிறார்.

 உலகமும் தனி நபர்களின் தன்மையையே பொறுத்திருக்கிறது. ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாமல் உலகத்தைத் தெரிந்துகொள்ள முற்படுவதில் என்ன பயன் இருக்கிறது  தத்துவத்தைத் தேடிச் செல்லுபவர்கள் வெளியுலகத்தின் பிரச்சனைகளைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. அவைகளைப் பற்றி நினைத்துத் தடுமாறுவதால் மனித சக்தி தான் வீணாகிறது. முதல் முதலில் அந்தர்முகமாக நோக்கித் தத்துவப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும். பிறகு உலக நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கும் உண்மையும் தானே தெரியலாகும்.

திடீரென்று மகரிஷி பேச்சை நிறுத்திக்கொள்கிறார். அங்கிருந்த ஒருவர் வந்து புதிதாக ஊதுவத்தி ஒன்றைக் கொளுத்துகிறார். மேலே சுருண்டு நெளிந்து செல்லும் ஊதுவத்திப் புகையை மகரிஷி கவனிக்கிறார். பிறகு முன்னால் கீழே வைத்த புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளுகிறார். அதைத் திறந்து பிடித்து மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார். என்னைப் பார்ப்பதே இல்லை. இவ்வாறு அவர் பராமுகமாயிருப்பது எனக்குப் பிடிக்கிறதில்லை. பின்னும் கால்மணி நேரம் உட்கார்ந்து பார்க்கிறேன். ஆனால் மகரிஷி என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதாக இல்லை. சம்பாக்ஷணை முடிவடைந்து விட்டதென உணர்ந்து இடத்தைவிட்டு எழுந்திருக்கிறேன். இரு கைகளையும் கூப்பி நமஸ்கரித்தபின் அவரைவிட்டுச் செல்லுகிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

39
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  8
*******************************************
அந்த மகான் நான் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார். அவரது முகத்தில் சாந்தம் குடிகொள்கிறது. சஞ்சலம் சிறிதேனுமில்லை. மேலும் பேசுகிறாரில்லை.

 நீர் கொண்டுள்ளது நல்ல உத்தேசந்தான் ,  என்று கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பகர்ந்தருள்கிறார்.

என் நோக்கத்தைப் பற்றி விஸ்தாரமாகப் பேச இக்கூற்று உற்சாகமளிக்கிறது.

 பெரியோய் , எங்களது மேல்நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களையும் பௌதிக சாஸ்திரங்களையும் நான் படித்திருக்கிறேன். எங்களது நெருக்குடைய நகரங்களில் மாந்தர்களுக்கிடையில் நான் வாழ்ந்தும் வேலை செய்தும் வந்திருக்கிறேன். அன்னவர்களது சுகபோகங்களை அனுபவித்தும் , பேராசைகளில் மூழ்கியும் பார்த்திருக்கிறேன். இன்னும் , ஏகாந்தத்தை நாடி , ஆழ்ந்த எண்ணம் எண்ணிக்கொண்டு அலைந்து திரிந்திருக்கிறேன். மேல்நாட்டு மேதாவிகளிடம் ஆறுதல் தேடியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் போதாது , இப்போது கீழ் நாட்டை நோக்கி நான் வந்திருக்கிறேன். நான் வேண்டுவது ஞானம்.

 ஆம் , நீர் நவிலுவது எனக்கு விளங்குகிறது  என்றாற்போல மகரிஷி தலையை அசைக்கிறார்.

மேலும் நான் பகர்கிறேன் :  எத்தனையோ அபிப்பிராயங்களை நான் கேட்டிருக்கிறேன். நான் செவிமடுத்த கொள்கைகளுக்கு முடிவில்லை ஒரு கோட்பாட்டுக்குத் தர்க்க ரீதியான அத்தாட்சிகள் என்னைச் சூழ்ந்து மூடிக்கொண்டிருக்கின்றன. அவைகளைப்பற்றி நான் அலுத்துக் கிடக்கிறேன். சுவானுபவமாக நிரூபித்துக் காட்ட முடியாதவைகளைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம். எனக்கு மதப் பற்றுதல் இல்லாதிருப்பதுபற்றி என்னை மன்னியுங்கள். புலனுலகுக்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா  இருக்குமாகில் அதைப் பற்றிய அனுபூதி எனக்கு எங்ஙனம் கிட்டும்

அக்கம் பக்கத்திலிருக்கும் இரண்டு மூன்று அன்பர்கள் ஆச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள். இங்ஙனம் அச்சமின்றி அசட்டையாகப் பேசிய நான் ஆஸ்ரமத்தின் அரும் விதியை மீறி நடந்து விட்டேனோ எனக்கு ஒன்றும் தெரியாது ; அதைப்பற்றிக் கவலையும் இல்லை. பல்லாண்டுகளாக என் உள்ளத்தில் சுமைபோன்று அழுந்திக் கிடந்த ஆசையானது இப்போது எதிர்பாராத முறையில் கட்டுக்கடங்காது வெளியே கிளம்பி விட்டது. மகரிஷி சீரியராயிருக்கும் பட்சத்தில் இச்சிறு பிழையைப் பொருட்படுத்தமாட்டார் என்பது உறுதி.

அவர் வாய் திறந்து பதில் ஒன்றும் விடுகிறாரில்லை ; ஆனால் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார் போலும். வேறு ஒன்றும் செய்வதில்லை யாகையாலும் , வாயாடத் துணிந்து விட்டேனாகையாலும் மூன்றாம் முறை நான் அவரிடம் நவிலுகிறேன்.

 மேல்நாட்டு மேதாவிகளும் பௌதிக சாஸ்திரிகளும் அவர்களது சாதுரியத்துக்காகப் பெரிதும் பாராட்டப்படுகின்றனர். எனினும் ஜீவியத்துக்கு அப்பாலுள்ள மர்மத்தைப்பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். எங்கள் மேல்நாட்டு ஞானிகள் விளக்க முடியாதவைகளை விளக்கியருளவல்லவர்கள் சிலர் உங்கள் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மைதானா எனக்கு உள்ளொளி பெருகும்படி நீங்கள் உதவி புரிந்தருள்வீர்களா  அல்லது இந்த அருள் நாட்டமே வெறும் ஏமாப்புத் தானோ

நான் கேட்க வேண்டியதை யெல்லாம் கேட்டாய் விட்டது. மகரிஷியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிந்தனையுடன் அவர் இன்னும் என்னை ஏறிட்டுப் பார்த்த வண்ணமாயிருக்கிறார். ஒரு வேளை என்னுடைய கேள்விகளை அவர் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கிறாரா  பத்து நிமிஷங்கல் மௌனமாய்க் கழிகின்றன.

கடைசியாக வாய் திறந்து நிதானமாக அவர் பேசுகிறார்.

 நான் , என்கிறீர். நான் அறிய விரும்புகிறேன்.  அந்த நான் யார் , எனக்குச் சொல்லும்

அவர் கேட்பதென்ன இப்போது அவர் மொழி பெயர்ப்பவரை நிறுத்தி விட்டுத் தாமே என்னோடு நேரில் ஆங்கிலத்தில் பேசுகிறார். என் உள்ளத்தில் வியப்பு உண்டாகிறது.

 உங்களுடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை ,  யென்று நான் திகைத்துப் பதில் விடுக்கிறேன்.

 விளங்கவில்லையா , மறுபடியும் சிந்தித்துப் பாரும் !  அவருடைய கூற்று என்னை மறுபடியும் கலக்கமுறச் செய்கிறது. ஒரு எண்ணம் திடீரென்று என் மனதில் உதிக்கிறது. என்னைச் சுட்டிக் காட்டி என் பேர் சொல்லுகிறேன்.

 அப்புருஷனை அறிந்திருக்கிறீரா

 நான் உயிர் வாழ்ந்த கால முழுதும் என்னை அறிந்திருக்கிறேன் ,  என்று புன்னகை பூத்துப் பதில் விடுக்கிறேன்.

 அது வெறும் தேகம் ! மறுபடியும் நான் கேட்கிறேன் ,  நீர்  யார்

இந்த நூதனமான கேள்விக்கு ஆயத்தமான உத்தரம் ஒன்றும் என்பால் இல்லை.

மீண்டும் மகரிஷி மொழிகிறார் :

 அந்த நான் என்பதை முதலில் அறியும். பின்பு உண்மை விளங்கும்.

மறுபடியும் எனக்குக் குழப்பந்தான். என்னுடைய திகைப்பு அதிகரிக்கிறது. மனக்கலக்கத்தை மொழியால் வெளிவிடுகிறேன். மகரிஷிக்கு இதற்குமேல் ஆங்கிலத்தில் பேச இயலுகிறதில்லை. மொழி பெயர்ப்பவரைத் திரும்பிப் பார்க்கிறார். அவரது திருவாய்மொழி ஒன்றன்பின் ஒன்றாக எனக்கு ஆங்கிலத்தில் பெயர்த்துச் சொல்லப்படுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

40
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  7
*****************************************
அவர் என்னைப் பார்த்து விடுகிறார். முதல் தடவை ! மகரிஷியின் அற்புதமான குளிர்ந்த நோக்கம் என்மீது விழுகிறது. அவர் இப்போது நீடித்திருந்த சமாதி நிலையிலிருந்து வெளிவந்து விட்டார் என்று அறிகிறேன்.

இடைப்புகுந்த என் நண்பர் நான் பதில் சொல்லாததைக்கண்டு , ஒருவேளை தாம் சொன்னது என்காதில் விழவில்லையோ என்று நினைத்து , முன் என்னிடம் கேட்டதையே மீண்டும் ஒருமுறை உரக்கக் கேட்கிறார். ஆனால் , என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மகரிஷியின் ஒளி ததும்பும் கண்கள் மற்றொரு கேள்வி என்னைக் கேட்பதுபோல் தோன்றுகிறது. சொல்லோசையற்ற கேள்வி அது :

 எல்லோரும் அடைதற்குரிய , இப்போதுதான் நீரும் சிறிதே அனுபவித்த மனச்சாந்தியை அறிந்த பின்னும் , உம்முடைய உள்ளம் சந்தேகங்களினால் சஞ்சலப்படுகிறதா  சஞ்சலப்படுவதும் சாத்தியமா

மௌனோபதேசம் என்பது இதுதானோ ! சாந்திக்கடலில் நான் ஆழ்ந்து விடுகிறேன். ஆதலால் என் நண்பரான சாதுவை நோக்கி ,  இல்லை , இப்போது நான் கேட்கவேண்டியது ஒன்றும் இல்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம் ,  என்று சொல்லுகிறேன்.

நான் அங்கு வந்த காரணத்தை எடுத்துக் கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன். ஆனால் மகரிஷிக்கல்ல ; அங்கு கூடியிருக்கும் அவருடைய அடியார்களுக்குத்தான். அதற்குள்ளாகவே அவர்கள் குசுகுசுவென்று ஏதோ தம்முள் பேசிக் கொள்ளுகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் அங்கேயே மகரிஷியுடன் இருப்பவர்கள் என்றும் , மற்றவர்கள் சுற்றுப் பிரதேசங்களிலிருந்து அப்பெரியாரின் தரிசனத்துக்கு வருபவர்கள் என்றும் என் நண்பர் மூலமாக நான் முன்னமேயே அறிந்திருக்கிறேன். நான் பேசுவதற்கு முன்பே , என் நண்பர் தாமாகவே எழுந்து நான் இன்னாரென அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறார். நான் வியப்புறுகிறேன். ஏனென்றால் விதவிதமாக அபிநயம் செய்துகொண்டு அவர் மட மடவென்று தமிழில் ஏதோ பேசுகிறார். அவர் என்னைப் பற்றி ஒன்றென்றால் நூறாக , உள்ளத்தையும் இல்லாததையும் சேர்த்துச் சொல்லுகிறார்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் மகரிஷியின் அடியார்கள் ஏன் அவ்வளவு ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்

மத்தியான சாப்பாடு முடிவுறுகிறது. வெயில் கொடூரமாக வாட்டுகிறது. இவ்வளவு உஷ்ணத்தையும் புழுக்கத்தையும் நான் முன்பு எங்கும் அனுபவித்தது கிடையாது. இத்தனைக்கும் காரணம் மத்திய ரேகைக்கு அருகாமையில் இப்பிரதேசம் இருப்பதுதான். ஓடியாடி வேலைசெய்ய வேண்டிய அவசியமொன்று மிலாதபடி அமைத்திருக்கும் இந்திய சீதோஷ்ண ஸ்திதிக்கு நான் இப்போது நன்றி பாராட்டுகிறேன். ஏனென்றால் இளைப்பாறுதற்குப் பெரும்பாலர் சோலை நிழல்களுக்கடியே சென்று விட்டார்கள். ஆகையினாலே நானும் ஆடம்பரமும் விளம்பரமும் ஒன்றுமின்றி , என் விருப்பப்படி அமரிக்கையாக மகரிஷியை அணுகமுடியும்.

அகன்ற கூடத்தினுள் பிரவேசித்து அவருக்கருகில் தரையின்மீது உட்கார்ந்து கொள்கிறேன். பீடத்தின் மீது போடப் பட்டிருக்கின்ற தலையணைகளின் மீது அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார். குற்றேவல் புரியும் சீடர் ஒருவர் ஓயாது ஒரே மாதிரியாகப் பங்காக் கயிற்றை இழுத்துக் கொண்டிருக்கிறார். கயிற்றின் மெல்லிய பர் - பர் ஓசையும் , வெப்பத்தில் இறுகிய காற்றிலே சாந்தமாக ஊசலாடும் பங்காவின் உஸ்  உஸ் ஒலியும் செவிக்கு இன்பம் தருகின்றன.

எழுத்துப் பிரதிப் புஸ்தகம் ஒன்றை மகரிஷி மூடிக் கையில் வைத்திருக்கிறார். மிகவும் மெதுவாக அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். நான் நுழைந்த சற்று நேரத்துக்குள் அவர் புஸ்தகத்தை அப்புறம் வைத்துவிட்டு சிஷ்யர் ஒருவரை அழைக்கிறார். அவர்களுள் தமிழில் ஏதோ கொஞ்சம் பேச்சு நடந்த பின்பு சிஷ்யர் என்னைப்பார்த்து , நான் அவர்கள் அளித்த உணவை உண்ண இயலாது போய்விட்டதற்காக மகரிஷி கொஞ்சம் கவலை யடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கிறார். தாங்களெல்லோரும் எளிய வாழ்வு வாழ்ந்து வருகிறார்களென்றும் முன்பு எப்போதும் ஐரோப்பியர்களுக்கு உபசாரம் செய்ததில்லை யாதலால் அவர்களுக்குப் பிடித்தமான உணவு எது என்பது தங்களுக்குத் தெரியவில்லையென்றும் அவர் எனக்கு விவரித்துச் சொல்லுகிறார். மகரிஷியின் அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவர்கள் அருந்தும் மசாலையில்லாத உணவை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேனென்றும் போதாததற்கு ஊரில் உள்ள கடையில் ஏதாவது வாங்கிக் கொள்வேனென்றும் நான் அவருக்குச் சொல்லுகிறேன். என்னை அவரது ஆஸ்ரமத்துக்கு இழுத்துவந்த அருள் நோக்கத்தைவிட உணவைப்பற்றிய கேள்வி எத்தனையோ மடங்குக் கீழாதென்றும் நான் மேலும் அவருக்குத் தெரிவிக்கிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

41
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  6
*****************************************
மௌன மஹான் என்னை வரவேற்றது போல்தான் இங்கும் இருக்கும் என்று என் நண்பர் என்னிடம் முன்கூட்டி எச்சரிக்கை செய்துவைக்க வில்லை. ஆகையால் இவ்வாறு மகரிஷி என்னைக் கவனிக்காமலே இருப்பது என்னைத் திகைப்புறச் செய்கிறது. எந்த ஐரோப்பியனும் முதல் முதலில் , இவர் , என்ன , தம்முடைய அடியார்கள் பார்க்கட்டும் என்று இவ்வாறு பாசாங்கு பண்ணி உட்கார்ந்திருக்கிறாரா  என்றுதான் எண்ணுவான் என் மனத்திலும் இரண்டொரு தடவை அதுபோன்ற எண்ணம் எழுகிறது. ஆனால் உடனுக்குடன் அதை அடக்கி விடுகிறேன். முன்னோடியே , என் நண்பர் , மகரிஷி அடிக்கடி சமாதியில் ஆழ்வது வழக்கமென்று சொல்லாவிட்டாலும் , இப்போது அவர் சமாதியில்தான் இருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறேன். இந்தப் பரவச நிலை பொருளற்ற வெறும் பாழ் நிலையா  என்று அடுத்தபடியாக நான் எண்ணமிட ஆரம்பிக்கிறேன். இந்தக்கேள்வி சிறிது நேரம் அதிகமாகவே என் மனதில் ஊசலாடுகிறதென்றாலும் இதற்குப் பதில் அளிப்பது என்னால் சாத்தியமில்லை. ஆகையால் , முடிவில் இந்த எண்ணத்தையும் விரட்டிவிடுகிறேன்.

இரும்பை இழுக்கும் காந்தத்தைப் போல ஏதோ ஒரு சக்தி என்னை மகரிஷியிடம் இழுக்கிறது. என் பார்வை அவரை விட்டு விலகமாட்டேன் என்கிறது. இந்த அற்புதமான சக்தி என்னை கெட்டியாகப் பற்றிக் கொள்ளத் தொடங்குகிறது. ஆதலால் இவர் என்னை அலட்சியம் பண்ணினாரென்று முதல் முதலில் ஏற்பட்ட திகைப்பும் குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகின்றன. ஆனால் நான் அங்குவந்து ஒருமணி கழிந்த பிறகுதான் , வெளிக்குத் தெரியாத , தடுக்க முடியாத மாறுதல் ஒன்று என் உள்ளத்தில் உண்டாகிறதென்று உணர்கிறேன். நான் ரயிலில் மிகவும் கவனத்துடன் நுட்பமாகத் தயார் செய்த கேள்விகள் எல்லாம் ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. அக்கேள்விகளை மகரிஷியிடம் கேட்பதும் கேட்காமல் இருப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. இதுவரையில் என்மனதை அலைத்து வந்த பிரச்சனைகளுக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவதும் தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த சன்னிதானத்துக்கு வந்த பிறகு அக்கேள்விகள் பிரமாதமாக எனக்குத் தோன்றவில்லை. என்னை நோக்கி அமைதி வெள்ளம் ஓடி வருகிறது. என் உள்ளத்தினுள்ளே மகத்தான சாந்தி வந்து குடிகொள்கிறது. பல்வேறு எண்ணங்களினால் வாட்டி வதக்கப் பெற்ற என் மூளை சிறிது ஓய்வடைகிறது.

இடைவிடாமல் என் சிந்தையை சிதைத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்விகளெல்லாம் எவ்வளவு அற்பமானவைகளாக இப்போது தோன்றுகின்றன ! கடந்த வருஷங்களில் பெரிதாகத் தோன்றிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாம் எவ்வளவு கேவலமாகி விடுகின்றன ! அறிவு தான் வீணான பிரச்சனைகளைக் கிளப்புகிறது ; பிறகு அவைகளுக்கு விடைகண்டு பிடிக்க முயன்று முயன்று அது வருத்தத்தை விளைவித்துக் கொள்ளுகிறது என்ற விவேகம் திடீரென்று என்னுள் உதயமாகிறது. இதுவரையும் அற்ப அறிவையே பிரதானமாகக் கருதிவந்த என் மனதில் இதுபோன்ற தெளிவு உண்டாவது நூதனமாகவே இருக்கிறது.

நான் உள்ளே வந்து இரண்டு மணி நேரம் ஆகிறது. படிப்படியாக ஓங்கி வரும் அமைதி உணர்ச்சியில் நான் வயப்பட்டுவிடுகிறேன். இப்பொழுது நேரம் கழிவது கஷ்டமாக இல்லை. ஏனென்றால் மனத்தில் பிறந்த சஞ்சலங்கள் எல்லாம் உடைபட்டுச் சிதறுவதாக நான் உணர்கிறேன் , பிறகு மெள்ள மெள்ளப் புதிய கேள்வி ஒன்று சித்தத்தின்கண் உருவெடுக்கிறது.

 மலர்ந்த புஷ்பம் வாசனை வீசுவது போல , இவர்  இந்த மகரிஷியும் ஆத்ம சாந்தி என்னும் நறுமணத்தைப் பரப்புகிறாரா

ஆத்மீக விஷயங்களைப்பற்றி உள்ளபடி உணரும் திறமை நான் வாய்க்கப் பெற்றவனென்று கருதுகிறேன் இல்லை. ஆனால் மற்றவர்களின் தன்மையை உணரும் சக்தி சிறிது எனக்கு உண்டு என்பதை அனுபவத்தால் நான் அறிந்திருக்கிறேன். என்னுள்ளே எழும் இந்த அபூர்வ அமைதி இப்பொழுது நான் இருக்கும் இடத்தைப் பொருத்து ஏற்படுகிறதோ என முதலில் சந்தேகிக்கிறேன். இல்லை ஒருவேளை , கண்ணுக்குப் புலனாகாமல் மகரிஷியினிடமிருந்துதான் வருகிறதோ இந்த என் மனச்சாந்தி என்று பிறகு வியப்படைகிறேன். ஆனால் அவரே நான் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் வார்த்த சிலைபோல் அசையாமல் வீற்றிருக்கிறார்.

இப்போது அமைதி கலையும்படி ஏற்படுகிறது. யாரோ ஒருவர் என்னை அணுகி ,  மகரிஷியிடம் கேள்விகள் கேட்க நீ உத்தேசித்திருக்கவில்லையா  என்று மெதுவாக என் காதில் ஓதுகிறார்.

அது என் நண்பரான சாது சுப்ரமண்யம். அவர் பொறுமை இழந்துவிட்டார் போலும். இல்லை , இல்லை ஒருவேளை நான் தான் பொறுமை இழந்திருக்கக்கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஏனென்றால் நான் துடிதுடிப்புள்ள ஒரு ஐரோப்பியனல்லவா  ஆனால் , பாவம் , அவர் உண்மையை அறியார். ஆமாம் , மகரிஷியிடம் கேள்விகள் கேட்கத்தான் வந்தேன். ஆயின் , இப்பொழுதோ எங்கும் சாந்தியைக் கண்டு சாந்தியுடன் உறவு பூண்டிருக்கும் நான் ஏன் கேள்விகளால் என் மூளையைக் கலக்கிக் கொள்ள வேண்டும்  உயர்ந்த வாழ்வு முறை ஒன்று இருக்கிறதென்று நான் இப்போது தெளிவாய் உணர்கிறேன். அற்புதமான ஆனந்த நிலைமை ஒன்று மனிதனுக்கு உண்டு. அதில் தேங்கி இளைப்பாற விரும்பிய என்னை ஒருவர் வந்துமீண்டும் சஞ்சலமற்ற இவ்வுலகத்துக்கு இழுக்க வேண்டுமா

அமைதி கலைந்து விடுகிறது. என் நண்பரின் சைகையை அறிந்து கொண்டு ஒவ்வொருவராகத் தரையிலிருந்து எழ ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேசும் குரலும் என்காதில் விழுகிறது. இது என்ன பேராச்சரியம் ! மகரிஷியும் இரண்டொரு தடவை கண் இமைக்கிறார். பிறகு தலையைத் திருப்புகிறார். அவர் முகம் மெதுவாக , மிகவும் மெதுவாக திரும்புகிறது. திரும்பிக் கீழ் நோக்கி ஒரு பக்கமாகப் பார்க்கிறார். இன்னும் சில வினாடிகள் ;

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

42
Ashrams / Re: Ramana Ashram
« on: March 06, 2018, 11:10:28 AM »
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் தந்தையார் ஸ்ரீசுந்தரம் ஐயரின் நினைவு தினம் இன்று (6/3/2018) ஆச்ரமத்தில் அனுசரிக்கப்பட்டது. தாயார் சந்நிதியில் அன்னாரின் புகைப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ரமண மகரிஷி போன்ற ஒரு ஞானசூரியனை இந்த வையகம் பெற்றிட அவரது குடும்பத்திற்கு இருந்த ஒரு சாபம் எவ்வாறு தொடர்புடையது என்று இங்குக் காண்போம்:

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாராயண அய்யர் குமாரர் வேங்கடேசுவர அய்யர் காலத்தில் இந்நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். அன்னாரின் இல்லத்திற்கு எங்கிருந்தோ ஒரு துறவி வந்து தனக்கு உண்டி
உறைவிடம் வேண்டி நிற்க அத்துறவியின் வேண்டுகோளை இல்லத் தலைவர் நிராகரிக்க அதனால் சினமடைந்த அத்துறவி தன்னைப்போல் அன்னாரின் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் துறவு பூண்டு உண்டிக்காக அலைய வேண்டுமென்று சாபமிட்டார்.

அந்த சாபத்திற்கேற்ப சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வேங்கடேச அய்யர் ஒருநாள் திருப்பரங்குன்றம் போவதாகச் சொல்லிச் சென்றவர் திரும்பி வரவில்லை. அவர் தில்லையில் சந்நியாசி உடையில் இருந்து அங்கு உழவாரப் பணி செய்து கோயிலைச் சுற்றியுள்ள முட்புதர்களையும் களைகளையும் நீக்கிப் பக்தர்கள் கோயிலைச் சுற்றுவதற்கு உதவி செய்தார் என்று சிலரும் இல்லையில்லை காசிக்குச் சென்றார் என்று வேறு சிலரும் கூறினர்.

அப்பொழுது சுந்தரம் ஐயர் தன்னுடைய குழந்தைகளில் யார் உலகத்தைத் துறந்துத் துறவறம் செல்லுவார் என்று சிறிதுகூட எண்ணியிருக்க மாட்டார்.

துர்வாசரின் சாபமும் நாரத முனியின் கலகமும் நல்லதில் முடியும் என்பார்கள். இத்துறவி இட்ட சாபம் பிற்காலத்தில் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போவதை அப்பொழுது யாரறிந்தார்?

from fb Ramana Mandiram Madurai

43
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 5
************************************************
என் நண்பர் அந்தப்பீடத்தை அணுகிப் பூமியின்மேல் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். அவரது கண்ணிரண்டும் கூப்பிய கைகளுக்கிடையில் பூமியில் புதைகின்றன.

பீடத்துக்கு எதிரே சுவரில் அகன்றதொரு ஜன்னல் இருக்கிறது. ஜன்னலுக்கும் பீடத்துக்கும் அதிகதூரம் இல்லை. மகரிஷியின்மேல் வெளிச்சம் நன்றாக விழுகிறது. ஆகவே அவருடைய முகத் தோற்றத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் பார்க்க முடிகிறது. அவர் ஜன்னலின் வழியாக , நாங்கள் காலையில் வந்த திசையிலேயே அசைவின்றி உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தலை அப்புறம் இப்புறம் திரும்புவதில்லை. நான் அவர் கவனத்தை இழுக்க திரும்புவதில்லை. நான் அவர் கவனத்தை இழுக்க எண்ணி ஜன்னலின் அருகே மெதுவாகப் போகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் பழங்களைச் சமர்ப்பிக்கும் போது , அவருக்கு என் வணக்கத்தையும் செலுத்தலாமென்று நினைக்கிறேன். ஜன்னலருகே போய் , பழங்களை அவர் முன் வைத்துவிட்டு இரண்டொரு அடி பின் வாங்குகிறேன்.

அவருடைய ஆசனத்தின் முன்பாக , சிவந்த தணல் நிறைந்த பித்தளைத் தூபக்கால் ஒன்றிருக்கிறது அதில் தூவியுள்ள சாம்பிராணி நறுமணம் வீசுகிறது. அதற்கு அடுத்துச் சில ஊதுவத்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. வெளுத்த புகை நூல் நூலாக மேலே கிளம்பிக் காற்றில் எங்கும் பரவி மிதங்குகிறது.

ஒரு மெல்லிய சால்வையை மடித்துத் தரை மீது விரித்து நான் அதன் மீது உட்கார்ந்து கொள்கிறேன். பீடத்தின் மேல் அசையாமல் சிலைபோன்று வீற்றிருக்கும் மகரிஷியை ஆவலுடன் உற்று நோக்குகிறேன். அவர் ஒரு கௌபீனம் மட்டுமே அணிந்திருக்கிறார். உடம்பின் மேல் வேறொரு ஆடையும் இல்லை. இத்தகைய கோலம் இந்தப் பிரதேசங்களில் சர்வ சாதாரணம். அவரது மேனி சற்று மாநிறம். எனினும் தென்னிந்தியர்களுள் அது சிரேஷ்டமானது. அவர் உயரமாக இருக்க வேண்டும் என்றும் மதிப்பிடுகிறேன். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். தலையும் நல்ல அமைப்பு ; கட்டையாக வெட்டி நரைத்த தலைமுடி. அகன்ற நெற்றி அவருடைய அறிவு விலாசத்துக்கு அறிகுறியாக விளங்குகிறது. மொத்தத்தில் தேக அமைப்பில் இந்தியர்களைவிட ஐரோப்பியர்களையே அவர் மிகுதியும் ஒத்திருக்கிறாரென நான் அனுமானிக்கிறேன்.

பீடத்தின் மேல் வெண்மையான திண்டுகள் இருக்கின்றன. பாதங்களை ஒரு நேர்த்தியான புலித்தோலின் மேல் ஊன்றிக்கொண்டு மகரிஷி அமர்ந்திருக்கிறார்.

அந்த அகன்ற மண்டபம் முழுவதும் நிசப்தம் குடிகொண்டிருக்கிறது. மகரிஷி ஆடாமல் அசையாமல் நாங்கள் வந்ததையும் கவனியாமல் ஒரேவிதமாக வீற்றிருக்கிறார். பீடத்துக்கு மறுபுறம் அவருடைய சிஷ்யர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு பங்காக் கயிற்றை இழுக்கிறார். பங்கா பர்.. பர்   என்று அசைவதுதான் அங்கே கேட்கக் கூடிய சத்தம். பங்கா , மேலே மரவிட்டத்தில் பொருத்தப் பெற்று , மகரிஷியின் தலைக்கு நேராகத் தொங்குகிறது. அது அசைவதால் ஏற்படும் மெல்லிய நாதத்தை நான் கவனித்துக் கேட்கிறேன். அத்துடன் , மகரிஷி என்னைப் பார்க்கவேண்டும் என்ற இச்சையுடன் அவர் கண்களையே உற்று நோக்குகிறேன். கண்கள் கருப்பு , நடுத்தரம் ; நன்றாகத் திறந்திருக்கின்றன.

நான் அங்கே இருப்பதை அவர் அறிந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஒன்றும் காணோம். அவர் தேகம் அதிசயிக்கத்தக்க முறையில் அசையாமல் கல் சிலைபோல் இருக்கிறது. ஒருதரமாவது அவருடைய பார்வை என்மேல் விழுவதில்லை. அவர் கண்கள் எங்கேயோ வெகு தூரத்தில் திறந்த வெட்ட வெளியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டே இருக்கின்றன. ஒரே அதீத மயமான தோற்றம். இதுபோன்றதொரு காட்சியை நான் முன்பு எவ்விடத்திலோ கண்டிருப்பதாக ஞாபகம் வருகிறது. எங்கே பார்த்திருக்கக் கூடும் என்று நினைவு கொண்டு வர முயற்சிக்கிறேன். ஞாபக சக்தி விரைந்து வேலை செய்கிறது. சென்னைக் கருகில் நான் போய் பார்த்த மௌன மஹானது உருவம் என்மனக் கண்ணுக்கு முன்னால் தோன்றுகிறது. தன்னந்தனியாகத் தபசு பண்ணிக்கொண்டிருந்த அப்பெரியாரும் கல் சிலைபோல அணுவளவும் அசையாமல் வீற்றிருந்தாரல்லவா  இருவர் இருக்கையும் அசைவற்ற தன்மையும் ஒத்திருப்பதை நினைத்து நான் கொஞ்சம் வியப்படைகிறேன். ஒருவனுடைய அக அழகை அவன் கண்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பது என் பழங்கொள்கை. ஆனால் மகரிஷியின் விழிகளுக்கு முன் என் உணர்வு தயங்குகிறது. குழப்பமடைந்து திகைத்துப் போகிறேன்.

காலன் அசையாது நின்று விட்டான் போலும். ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தோன்றுகிறது. சுவரில் இருக்கும் கடிகாரத்தைப் பார்க்கிறேன். நான் வந்து அரைமணி ஆகிறது. அதுவும் கடந்து , ஒரு மணி ஆகிறது. ஆயினும் அறையில் ஒருவராவது நகருவதில்லை ! பேசுவதும் இல்லை. நான் மகரிஷியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் அங்கு இருப்பதைப் பற்றிய உணர்ச்சியே எனக்கு இல்லாமல் போய்விடுகிறது. பீடத்தில் அமர்ந்திருக்கும் பெரியாரைப் பற்றிய எண்ணம் ஒன்றே உள்ளம் குடிகொள்கிறது. அவர் முன்னிலையில் ஒரு சிறிய மணையின் மேல் நான் வைத்த பழங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

44
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  4
***********************************************
மகரிஷியின் ஆசிரமத்தை நெருங்கி வந்து விட்டோம்  என்று நண்பர் கூறுகிறார். ரஸ்தாவைவிட்டு விலகி , ஒரு சிறு வண்டிப் பாதையில் போகிறோம். ஒரு அடர்ந்த தோப்புக்கு வந்துசேருகிறோம். மாமரங்களும் தென்னை மரங்களும் நிறைந்திருக்கின்றன. அதைக் கடந்து சிறிது தூரம் போனதும் திடீரென்று பாதை முடிவடைகிறது. எதிரே பூட்டப்படாத கதவொன்று தெரிகிறது. வண்டிக்காரன் இறங்கிக் கதவைத் திறக்கிறான். பிறகு ஒரு முற்றத்தின் வழியாக வண்டியை ஒட்டுகிறான். நான் கைகால்களை நீட்டிக் கீழே இறங்குகிறேன். இறங்கி நின்று சுற்று முற்றும் பார்க்கிறான்.

ஆசிரமத்தின் முன்புறத்தில் நெருக்கமான மரங்களும் அடர்ந்து செழித்த நந்தவனமும் இருக்கின்றன. பின்புறத்திலே , செடிகளும் புதர்களுமான வேலி ஒன்று காணப்படுகிறது. மேற்குப்பக்கத்திலே இருப்பது ஒரு அடர்ந்த காடு. மொத்தத்தில் ஆசிரமம் ஒரு நேர்த்தியான இடத்தில் அமைந்திருக்கிறது. தனிமையும் அமைதியும் பொருந்தி , அது தவசிகளுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.

முற்றத்தின் இடது புறத்தில் இரண்டு குடிசைகளும் , அவைகளை அடுத்து ஓடு போட்ட கட்டடம் ஒன்றும் இருக்கின்றன். முன்னால் நீண்ட தாழ்வாரம் ஒன்று தெரிகிறது.

முற்றத்தின் மத்தியில் ஒரு கிணறு இருக்கிறது. பையன் ஒருவன் அதிலிருந்து வாளி நிறைத்துத் தண்ணீர் சேர்ந்துகிறான். இடுப்புத் துணியைத் தவிர அவன் உடம்பில் மேல். வேறொன்றும் இல்லை. அவன் நிறமோ கறுப்பு.

நாங்கள் நுழைந்த அரவத்தைக் கேட்டு உள்ளே இருந்து சிலர் முற்றத்துக்கு வருகிறார்கள். அவர்கள் உடை பலவிதமாக இருக்கிறது. ஒருவர் இடுப்பில் மட்டும் ஒரு கந்தல் துணியை உடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னொருவரோ , அழகான வெண்பட்டு அணிந்திருக்கிறார். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அறிகுறியாக அவர்கள் எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டு நிற்பதைக் கண்டு என் நண்பரும் வாயைத் திறந்து பல்லைக்காட்டுகிறார். அவர்களிடம் போய் ஏதோ தமிழில் சொல்லுகிறார். உடனே அவர்கள் முகத்தோற்றம் , மாறுபடுகிறது.

புன்முறுவல் பூத்துக் களிப்புடன் என்னைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய தோற்றம் எனக்கு மிகவும் பிடித்தமாயிருக்கிறது.

 மகரிஷி இருக்கும் இடத்துக்குப் போகலாம்  என்று என் நண்பர் கூறுகிறார். தொடர்ந்து செல்லுகிறேன். தாழ் வாரத்தை அடைந்ததும் என் பூட்ஸீகளைக் கழற்றிவிடுகிறேன். காணிக்கையாகக் கொண்டு வந்த பழங்களை ஒன்று சேர்த்து எடுத்துக் கொள்ளுகிறேன். கதவைக்கடந்து மகரிஷியின் கூடத்துக்குள் நுழைகிறேன்.
சுமார் இருபது பேர் அங்கே தரையின் மேல் அரை வட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம். எல்லோரும் திரும்பி எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். கறுப்பும் பழுப்பும் கலந்த அத்தனை முகங்களும் என்னைப் பார்த்த வண்ணமாயிருக்கின்றன. கதவுக்கு வலப்புறமாக எட்டி இருக்கும் மூலையிலிருந்து கொஞ்சம் விலகி மரியாதையாக அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நாங்கள் போவதற்கு முன் அவர்கள் அந்த எட்டிய மூலைப்பக்கமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். நானும் அத்திசையில் சுற்றிப் பார்க்கிறேன். வெள்ளைத் துணி விரித்த நீண்ட பீடத்தின் மேல் ஒருவர் வீற்றிருக்கிறார். அவரே மகரிஷி என நான் தெரிந்து கொள்ளுகிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

45
Sri ramana mandiram 
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்
************************************************
வீடுகளின் நிலைமையிலிருந்து கொஞ்சம் பணக்கார ஊர்தான் என்று தெரிகிறது. ஒரு கோவிலின் இரு புறங்களை ஒட்டி வீதிகள் அமைந்திருக்கின்றன. கோவில் கால்மைல் நீளமாவது இருக்கும். சிறிது நேரத்தில் நாங்கள் கோவில் வாசலை அடைகிறோம். வாசல் அகன்றிருக்கிறது. அடுத்துவந்த பிறகு தான் கோவில் கட்டடம் எவ்வளவு பெரிய தென்பது தெரிகிறது ஒன்றிரண்டு நிமிஷங்கள் அங்கே நிற்கிறோம். நான் உள்ளே எட்டிப்பார்க்கிறேன். கோவில் பெரியதென்பது மட்டும் அல்ல ; அது எனக்கு விசித்திரமாகவும் தோன்றுகிறது. அதுபோன்ற கட்டடத்தை நான் அதற்கு முன்பு பார்த்ததேயில்லை. சுற்றிலும் சதுரமாக நான்கு பெரிய மதில் சுவர்கள் ; உள்ளே ஒழுங்கின்றிச் சிதறுண்டு கிடக்கும் சிறு சிறு கட்டடங்கள். நூற்றுக்கணக்கான வருஷங்களாகக் கடுமையான வெய்யில் பட்டுப் பட்டு அந்த உயர்ந்த மதில் சுவர்கள் கறுத்துப் போயிருக்கின்றன. ஒவ்வொரு மதிலின் நடுவிலும் ஒரு வாசலும் வாசலுக்கு மேலே ஒரு கோபுரமும் உண்டு. கோபுரத்தின் வடிவம் விநோதமாயிருக்கிறது. அதன் மேல் அலங்காரமான சிற்ப வேலை செய்திருக்கிறார்கள். கோபுரம் மேலே போகப் போகக் குவிந்து போகிறது. அதன் அடிப்புறம் கருங்க கல்லினாலும் மேல்புறம் செங்கல்லினாலும் கட்டப்பட்டிருக்கின்றன. அனேக அடுக்குகளாக அது பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலு பெரிய கோபுரங்களைத் தவிர உள்ளே இன்னும் ஐந்து கோபுரங்கள் இருப்பதாகக் கணக்கிடுகிறேன். அவைகளைப் பார்க்கும்போது எனக்கு எகிப்திய பிரமிட்களைப் பற்றிய ஞாபகம் வருகிறது. இன்னும் அங்கே , நீண்ட கூடங்களும் , வரிசையாக உயர்ந்த கணக்கில்லாத கல் தூண்களும் , மத்தியில் ஒரு பெரிய மண்டபமும் , மங்கிய வெளிச்சத்தை உடைய மூலஸ்தானங்களும் , இருண்ட பிரகாரங்களும் என் கண்களுக்குப் புலப்படுகின்றன. கூடிய சீக்கிரம் மற்றுமொரு முறைவந்து உள்ளே போய் எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுகிறேன்.

எருதுகள் சவாரி எடுக்கின்றன. மீண்டும் திறந்த வெளியில் போகிறோம் , சுற்றிலும் காட்சிகள் நேர்த்தியாக இருக்கின்றன. பாதை முழுதும் செம்மண் படிந்து கிடக்கிறது. இரண்டு பக்கங்களிலும் சிறு புதர்களும் , சில இடங்களில் உயர்ந்த மரக்கூட்டங்களும் இருக்கின்றன. மரங்களில் மறைந்து கொண்டு அனேகம் பறவைகள் இருக்கவேண்டும் ; ஏனென்றால் அவைகள் சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொள்ளும் ஓசை கேட்கிறது. அவைகளின் இனிய பாட்டும் என் காதில் விழுகிறது. உலகத்தில் எந்தப் பாகத்திலும் பறவைகளின் உதய சங்கீர்த்தனம் ஒரே விதந்தான்.

வழி நெடுக அங்கங்கே சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன. அவைகளின் அமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் கண்டு நான் முதலில் ஆச்சரியப்படுகிறேன். பிறகு , ஒருக்கால் அவை வேறு வேறு காலங்களில் கட்டப்பட்டவையாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

அவைகளிற் சில , வழக்கம்போல ஹிந்து முறையில் நேர்த்தியாகச் சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் , பெரிய கோவில்கள் எல்லாம் சவுக்கமான வேலைப் பாடில்லாத தூண்களினாலேயே முடிக்கப்பெற்றிருக்கின்றன. அது போன்ற தூண்களைத் தெற்கே தவிர இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது. இரண்டு மூன்று கோவில்கள் அமைப்பில் ( கிரீக் ) முறையை ஒத்திருக்கின்றன.

சுமார் ஐந்தாறு மைல்கள் பிரயாணம் செய்திருப்போம். நான் ஸ்டேஷனிலிருந்து பார்த்த மலையின் அடிவாரத்தை அடைகிறோம். காலை வெய்யிலில் மலை கம்பீரமாகத் தோன்றுகிறது. மூடுபனி விலகி , மலையின் சிகரத்துக்கு மேலே ஆகாயம் பளிச்சென்றிருக்கிறது. அந்தப் பிரதேசம் ஒரு தனித்த பீடபூமி ; செம் மண்ணும் பாறைகளும் செறிந்த பொட்டல் நிலம். மரங்களே இல்லாத இடங்களும் தென்படுகின்றன. பெரிய பெரிய பாராங்கற்கள் ஒழுங்கின்றித் தாறுமாறகச் சிதறுண்டு கிடக்கின்றன.

நான் பார்த்த திசையை என் நண்பர் கவனிக்கிறார்.  அருணாசலம் !  என்று உரக்கச் சொல்லுகிறார். அவர் முகம் பக்தியினால் பரவசமடைகிறது. புளகாங்கிதமுற்று ஆனந்தத்தில் மூழ்குகிறார்.

 அருணாசலம் என்று பெயர் வரக் காரணம் ஏதாவது உண்டா  அது எதைக் குறிப்பிடுகிறது   என்று நான் கேட்கிறேன்.

அவர் புன்னகை செய்கிறார்.  அருணாசலம் என்பதில் அருணம் , அசலம் என்று இரண்டு வார்த்தைகள் அடங்கி இருக்கின்றன. சிவந்தமலை என்பதே அவ்வார்த்தைகளின் பொருள். இங்கே எழுந்தருளியிருக்கும் கடவுளின் பெயரும் அதுவே.

 ஆனால் தீயைப்பற்றி இப்பெயரில் ஒரு குறிப்பும் இல்லையே. நெருப்புக்கும் இம்மலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகக் கேட்டிருக்கிறேன்  என்று சொல்லுகிறேன் நான்.

 ஓ , அதுவா  வருஷத்துக்கொரு முறை கோவிலில் திருவிழா நடைபெறும். அது ஆரம்பமானதும் மலை மேலே தீ மூட்டப்படுகிறது. அளவில்லாத நெய்யும் கற்பூரமும் அதில் கொட்டுகிறார்கள். தீ கொழுந்துவிட்டு வெகுநாள் எரியும். சுற்றிலும் பல மைலுக்குத் தீ எரிவது தெரியும். அதைப் பார்த்ததும் ஜனங்கள் கீழே விழுந்து நமஸ்கரிப்பார்கள். இந்த மலை ஈசனுக்கு இருப்பிடமென்பதையும் புனிதமான தென்பதையும் அது குறிப்பிடுகிறது.

அருணாசலம் , கம்பீரமாக ஆயிரக்கணக்கான அடிகள் ஆகாயத்தில் ஊடுருவிக் கொண்டு , எங்கள் தலைக்கு மேலே உயர்ந்து நிற்கிறது. மலை ஒரே செங்குத்தாக இருக்கிறது. ஆச்சரியத்துடன் நான் தலைநிமிர்ந்து பார்க்கிறேன். என் நண்பர் சொன்ன வார்த்தைகளினாலோ அல்லது வேறெக்காரணத்தினாலோ அறியேன் , அந்த மலையின் உருவத்தை நினைக்கவும் என் மனத்திலே ஒருவிதமான பயபக்தி உண்டாகிறது.

என் நண்பர் பின்னும் பேசுகிறார்.  இந்தமலை புனிதமானது என்பது மட்டும் அல்ல. இந்த இடந்தான் உலகத்துக்கெல்லாம் பேரின்பவீடு என்பதைக் குறிப்பிடவே தேவர்கள் இந்த மலையை இங்கே இருத்தினார்கள் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. இது ஒரு வெறும் கபடமற்ற கட்டுக்கதை யென்று எனக்குப் புலப்படுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

**************************************************************
கட்டுரை ஆங்கில மூலம் பால் பிரன்டன்

தமிழாக்கம் --- திருப்பராய்த்துறை ஸ்ரீ மத் சித்பவானந்த சுவாமி.

கட்டுரை : 1935 ஆம் ஆண்டு மார்ச் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில்  ஐரோப்பா இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை வருகிறது  என்ற தலைப்பில் வெளியானது.

Pages: 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 ... 78