Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 ... 76
16
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 11
***********************************************
கண்களை மூடிக்கொள்ளுகிறேன். மகரிஷியின் அருகே நான் இருக்கும் காரணத்தால் சூழ்ந்து நிற்கும் அமைதியில் என் மனம் மிகுதியும் ஆழ்ந்துவிடுகிறது. கலையாத அந்த அமைதியினால் வெகு சீக்கிரத்தில் நான் சிறிது தூங்கிவிடுகிறேன். கடைசியில் நினைவையும் இழந்து தெளிவான ஒரு கனவு காணுகிறேன்.

நான் ஐந்து வயதுக் குழந்தையாகி விடுகிறேன் போலத் தோன்றுகிறது. திருவண்ணாமலையைச் சுற்றி நெளிந்து வளைந்து மேலே செல்லும் கரடுமுரடான ஒரு பாதையில் நான் மகரிஷியின் கையைப்பிடித்துக் கொண்டு நிற்கிறேன். ஆனால் இப்பொழுது அவர் மிகவும் அபாரமான உருவத்துடன் காணப்படுகிறார். ஆசிரமத்தை விட்டு அவர் என்னை அழைத்துச் செல்லுகிறார்.

மையிருட்டாயிருந்தபோதிலும் அவர் பாதை அறிந்து வழிகாட்ட இருவரும் மெதுவாக நடந்துபோகிறோம். கொஞ்ச நேரத்துக்குப்பின் சந்திரனும் நட்சத்திரங்களும் மங்கிய பிரகாசத்துடன் தோன்றுகின்றன. எங்களைச் சுற்றிலும் சிறிது வெளிச்சம் உண்டாகிறது. பாறையின் மேடு பள்ளங்களிலும் , அபாயகரமாகத் தோன்றும் பெருத்த குண்டுக்கல்களுக்கிடையே , மகரிஷி மிகுந்த கவனத்துடன் என்னை அழைத்துக்கொண்டு போகிறார். குன்று செங்குத்தாக இருக்கிறது.

ஆகவே , நாங்கள் மெள்ள மெள்ளத் தான் மேலே ஏறுகிறோம். பாறைகளின் பிளவுகளுக்கு மத்தியிலும் , பாராங்கற்களின் இடையிலும் , புதர்களுக்கு நடுவிலும் மறைந்து கிடக்கும் சிறு சிறு ஆசிரமங்களும் , மனிதர்கள் வசிக்கும் குகைகளும் புலானகின்றன. நாங்கள் போகப் போக , அங்கு வசிப்பவர்கள் வெளிவந்து எங்களுக்கு உபசாரம் கூறுகிறார்கள். நட்சித்திர வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் சாயைபோலக் காணப்பட்டாலும் அவர்கள் பல்வேறு தரத்தினரான யோகிகள் என நான் உணர்ந்து கொள்ளுகிறேன். அவர்களிடம் நிற்காமலே நாங்கள் ஏறிச்சென்று முடிவில் மலை உச்சியை அடைகிறோம். எனக்குச் சம்பவிக்க இருக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை எதிர்பார்த்து என் இருதயம் படபடவென்று துடிக்கிறது.

மகரிஷி , திரும்பி என்முகத்தை உற்று நோக்குகிறார். நானும் ஆர்வத்துடன் அவரைப் பார்க்கிறேன். என்னுடைய இதயத்திலும் எண்ணத்திலும் வெகு வேகமாக இன்னதென்று சொல்லக் கூடாத ஒரு மாறுதல் உண்டாகிக்கொண்டிருக்கிறது. முன்னம் என்னை மயக்கிய பழைய சிந்தனைகள் என்னைவிட்டு நீங்கிப் போக ஆரம்பிக்கின்றன. அங்கும் இங்கும் என்னை அலையச் செய்த ஆசைகள் வெகு விரைவில் மறைந்துதோடுகின்றன.

சமூக வாழ்க்கையில் அனேகரிடம் நான் காட்டிக்கொண்ட விருப்பு வெறுப்புகளும் , வீண் மனஸ்தாபங்களும் , அன்பற்ற தன்மையும் , சுயநல நினைவும் சிதறுண்டு போகின்றன. சொல்லி முடியாத சாந்தி வெள்ளித்திலே நான் அமிழ்ந்து நிற்கிறேன். இனி வாழ்க்கையில் நான் வேண்டுவது ஒன்றும் இல்லை.

திடீரென்று மகரிஷி மலை அடிவாரத்தைப் பார்க்கும்படி என்னிடம் சொல்லுகிறார். நானும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆச்சரியம் ! பூமியின் மேற்குக்கோளம் கீழே வெகு தூரத்தில் பரந்து கிடப்பதைக் காணுகிறேன். லக்ஷக்கணக்கான ஜனங்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய வடிவங்கள் தெளிவாகத் தெரிவதில்லை இன்னும் காரிருள் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

மகரிஷி பேசுகிறார். ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக வெளி வருகிறது.  நீர் திரும்பி அங்கே போகும் பொழுதும் , இப்போது அனுபவிக்கும் சாந்தியை அனுபவிப்பீர். ஆனால் அதற்காக நீர் செய்ய வேண்டிய தொன்றுண்டு.  இந்த உடல்தான் , அல்லது அறிவு தான் நான்  என்னும் எண்ணத்தை ஒழித்து விடவேண்டும். இந்த சாந்தியை அடைந்து விட்டீரானால் உம்மையே நீர் அடியோடு மறந்துவிட வேண்டியிருக்கும். ஏனென்றால் அப்போது உமது வாழ்வு மெய்ப்பொருளுடன் ஒன்றுபட்டதாகி விடும்.

பிறகு , மகரிஷி வெள்ளிய பிரகாசமுள்ள ஒரு கிரணத்தின் நுனி ஒன்றை என் கையில் வைக்கிறார்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

17
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  10
******************************************
நான் கீழே கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பி வருகிறேன். ஏறி இருந்த குதிரை வண்டி வேகமாக ஓடுகிறது. மாலை நேரமும் விரைந்து வருகிறது. இயற்கையின் அழகு விளையாட்டை நான் நேரே காணுகிறேன். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அற்புதத் தோற்றம் ! அஸ்தமன சூரியன் மறையும் கோலாகலக் காட்சியைப் பார்ப்பதற்கு நான் எத்தனையோ முறை காத்துக் கிடந்ததுண்டு. கீழ் நாட்டில் , சந்தி வேளை மிகவும் ரம்மியமானது. அப்போது ஆகாசத்திலே தோன்றும் வர்ண வேறுபாட்டை என்னென்று வர்ணிப்பது ! ஆனால் இந்த அழகுக் காட்சி அதிக நேரம் நீடித்து நிற்பதில்லை. அரை மணி நேரத்துக்குள்ளாகவே எல்லாம் தீர்ந்துவிடுகிறது.

ஐரோப்பாவில் இலை உதிர் காலத்தில் மாலை நேரம் மிகுதியும் நீடித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மேற்குத் திசையிலே ஜவலிக்கும் தீப்பந்துபோலக் கதிரவன் மரங்களுக்கு நடுவிலே இறங்கி மறைகிறான். வான் வெளியைவிட்டு நீங்குவதற்குச் சற்று முன்னால் சூரியன் செக்கச் சிவந்து விடுகிறான். ஆகாசத்திலே வேறு வேறு நிறங்கள் தோன்றிக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சுற்றியிருக்கும் வயல்களிலும் தோப்புகளிலும் பூரணமான அமைதி குடிகொள்ளுகிறது. பறவைகளின் இன்னிசை ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. காட்டுக் குரங்குகளின் கூச்சலும் அடங்கிவிடுகிறது. சிவந்த சூரியனுடைய வட்ட வடிவம் சிறுகச் சிறுகக் குறைவுபட்டு முடிவில் அடியோடு மறைந்து போகிறது. இருள் சூழ்கிறது. சூழ்ந்துவரும் இருள் வானத்து நிறங்களையும் , செங்கதிர்களையும் மெள்ள மெள்ள விழுங்கிவிடுகிறது.

என் உள்ளத்திலே அமைதி குடியேறுகிறது. இயற்கை அழகின் இன்பம் என் மனதைப் பற்றிக் கொள்ளுகிறது. வாழ்க்கையில் கொடூரங்கள் உண்டு ; துன்பங்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கெல்லாம் புறம்பாக , அடிப்படையாக மறைந்து நிற்கும் கருணை வடிவான மெய்ப்பொருள் ஒன்று உண்டு என்னும் உணர்ச்சி பெறுகிறேன். அதுபோன்ற உணர்ச்சி தோன்றும் நேரத்தை மனிதன் எவ்வாறு மறந்து விடமுடியும் ! வீணாகக் கழியும் மற்ற நேரத்தைவிட அது எவ்வளவு பரிசுத்தமானது ! ஆழ்ந்த இருளின் நடுவே தோன்றும் ஜோதி போன்றது அந்நேரம். சோர்வுறும் மனத்திலே அது நம்பிக்கையே வளரச் செய்கிறது. பிறகு சட்டென மறைந்து விடுகிறது.

ஆசிரமத்தை நெருங்குகிறேன். நந்தவனத்தில் மின்மினிப் பூச்சிகள் அலைந்து திரிகின்றன. அவைகள் பறக்கும்போது உண்டாகும் வெளிச்சம் இருட்டிலே விநோதமாக இருக்கிறது. கடைசியாக நான் மகரிஷியிருக்கும் கூடத்துக்குள் போகிறேன். தூய்மையான அமைதி நிறைந்து நிற்கிறது. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் வரிசை வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் பேசுவதில்லை. வேறெவ்விதமான சத்தமும் கிடையாது. மூலையில் உள்ள பீடத்தின் மேல் மகரிஷி காலைமடக்கி வீற்றிருக்கிறார். அவர் கைகள் இரண்டும் முழந்தாள்களின்மேல் விழுந்து கிடக்கின்றன. மகரிஷியின் தோற்றம் எளிமையையும் அடக்கத்தையும் காட்டுகின்றது வசீகரமும் தான் என்ன ! பண்டைகாலத்து ரிஷிகளை ஒப்ப , அவருடைய சிரம் அழகு பொருந்த அமைந்து நிற்கிறது. அவர் கண்கள் கூடத்தின் ஒரு கோடியை அசையாமல் பார்த்த வண்ணமாக இருக்கின்றன. அந்த அபூர்வமான அசைவற்ற பார்வையைக் குறித்துச் சிந்தக்கையில் எப்போதும் போல என் மனம்தான் குழப்பமடைகிறது. அவர் ஜன்னல் வழியாக எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்  அஸ்தமன சூரியனுடைய கிரணங்கள் ஒவ்வொன்றாக வானத்தைவிட்டு அடியோடு மறைந்து போகும் காட்சியையோ  அல்லது வெளியுலகத்தில் ஒன்றையும் காணமுடியாதபடி கனவெனச் சொல்லக்கூடிய ஒரு நிலையிலே அவர் ஆழ்ந்து நிற்கிறாரா

வழக்கம்போல நறும்புகை கூடம் முழுவதும் மிதந்து செல்லுகிறது. நான் கீழே உட்கார்ந்து , மகரிஷியின் மீது என் கண்களை நாட்ட முயலுகிறேன். ஆனால் சிறிதுநேரம்தான் அவ்வாறு செய்ய இயலுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

18
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்
 9
**********************************************
 செய்ய வேண்டியது ஒன்றுதான் உளது. உம்மை நீர் உள்நோக்கி ஆராய்ந்து பாரும். இதை நீர் செம்மையாகச் செய்யின் ஐயங்கள் அனைத்தும் அகன்று போம்.

-------------- ஸ்ரீ பகவான்.

எதிர்மொழிக்கு இது ஒரு அதிசயமான மறுமொழி. ஆனால் நான் அவரை வினவுகிறேன் :

 ஒருவன் செய்யவேண்டியது என்ன  நான் ஒழுகக்கூடிய மார்க்கம் எது

 எதார்த்த சொரூபத்தைப் பற்றி ஆழ்ந்து விசாரம் பண்ணுவதாலும் , இடையறாத் தியானத்தாலும் உள் ஒளியைக் காணக்கூடும்.

 உண்மை எது என்பது பற்றி நான் அடிக்கடி தியானம் பண்ணி வந்திருக்கிறேன். ஆனால் முன்னேற்றம் அடைந்திருக்கும் அறிகுறி எதுவும் காண்கிறேனில்லை.

 முன்னேற்றம் அடையவில்லையென்று உமக்கு எப்படித் தெரியும்  ஆத்மிக விஷயத்தில் ஒருவன் அடைந்திருக்கும் அபிவிருத்தியைப் பற்றி அறிவது சுலபமன்று.

 குருவின் உதவி அவசியமா

 அவசியமென்றுதான் சொல்ல வேண்டும்.

 தாங்கள் குறிப்பிடுகிறவிதம் ஆத்ம தரிசனம் அடைவதற்கு குருவானவர் உதவிசெய்யக் கூடுமா

 சாதகனது நாட்டத்துக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவர் தரக் கூடும். சுவானுபவத்தில் இதை அறிந்துகொள்ளக்கூடும்.

 குருவின் உதவியைக் கொண்டு ஞானோதயம் பெறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் .

 சாதகனது பரிபக்குவத்தை அனுசரித்திருக்கிறது. வெடிமருந்து ஒருகணப் பொழுதில் தீப்பிடிக்கிறது நிலக்கரியில் தீப்பிடிக்க நெடுநேரமாகிறது.

குருவைப்பற்றியும் குரு கையாளும் வழிகளைப்பற்றியும் பேச இந்த மஹானுக்கு இஷ்டமில்லையென்று நான் ஏதோ ஒருவிதத்தில் உணர்கிறேன். எனினும் என்னுடைய பிடிவாதத்தன்மை இந்த உணர்ச்சியை மீறுகிறது. நான் மற்றுமொரு கேள்வி கேட்கிறேன். அவர் இதைக்காதில் போட்டுக்கொள்கிறாரில்லை. வெளியே பரந்துநிற்கும் மலையின் அழகை ஜன்னலின் வழியாக அசட்டையாகப் பார்க்கிறார். பேச்சொன்றுமில்லை. நானும் குறிப்பறிந்து இக்கேள்வியை விட்டுவிடுகிறேன்.

 உலகத்தின் இப்போதைய நிலைமை மிகவும் நெருக்கடியானதாக இருக்கிறது. எதிர்காலம் எப்படியோ  அதைக் குறித்துத் தாங்கள் ஏதாவது சொல்லக்கூடுமா  என்று வேறு விதத்தில் பேச்சை மாற்றுகிறேன்.

உடனே மகரிஷி ,  எதிர்காலத்தைக் குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும்
நிகழ்காலத்தைப் பற்றியே ஒருவரும் ஒன்றும் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. எதிர்கால விஷயமாக இப்போது கவலையே வேண்டியதில்லை ,  என்று சொல்லுகிறார்.

இரண்டாம் தடவை ! மகரிஷி , என் கேள்விக்கு நேரானபதில் கொடுக்க மறுதலிக்கிறார். ஆனால் இம்முறை அவரை நான் எளிதில் விடுகிறேனில்லை. ஏனென்றால் , மகரிஷியின் தனித்த அமைதி நிறைந்த ஆச்ரமத்தில் போல் அல்லாமல் , வாழ்க்கையின் கொடூரங்களும் கஷ்ட நஷ்டங்களும் செறிந்த வெளியுலகத்திலிருந்து வருபவன் அல்லவா நான்

 மக்களுக்குள் பரஸ்பர ஒத்தாசை பரவி , நேசப்பான்மை மிகுந்து , சீக்கிரத்தில் உலகம் புதிய சகாப்தமொன்றை நாடிச்செல்லுமா  அல்லது சண்டையிலும் குழப்பத்திலுமே கவிழ்ந்து கிடக்குமா !  என்று நான் கேட்கிறேன்.

பதில் சொல்ல மகரிஷிக்கு இஷ்டமே இல்லைபோல் தோன்றின போதிலும் , பேச முற்படுகிறார்.

 உலகத்தை இயக்கும் முதல்வன் ஒருவன் உண்டு. அதன் சுக துக்கங்களைக் கவனிப்பது அவன் தொழில். படைப்பவன் அவன் ; காக்கும் விதத்தையும் அறிவான் ; முழுப்பாரத்தையும் ஏற்பவன் அவன் ; நாம் அல்ல.

 ஆனால் , திறந்த மனத்துடன் சூழவும் பார்த்தால் அந்தப் பரம்பொருளின் காக்கும் கருணை தென்படுவதில்லையே ,  என்று நான் மறுத்துச் சொல்லுகிறேன்.

இதற்கும் மகரிஷி அரை மனதுடனே தான் விடைகூறுகிறார்.

 உலகமும் தனி நபர்களின் தன்மையையே பொறுத்திருக்கிறது. ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாமல் உலகத்தைத் தெரிந்துகொள்ள முற்படுவதில் என்ன பயன் இருக்கிறது  தத்துவத்தைத் தேடிச் செல்லுபவர்கள் வெளியுலகத்தின் பிரச்சனைகளைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. அவைகளைப் பற்றி நினைத்துத் தடுமாறுவதால் மனித சக்தி தான் வீணாகிறது. முதல் முதலில் அந்தர்முகமாக நோக்கித் தத்துவப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும். பிறகு உலக நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கும் உண்மையும் தானே தெரியலாகும்.

திடீரென்று மகரிஷி பேச்சை நிறுத்திக்கொள்கிறார். அங்கிருந்த ஒருவர் வந்து புதிதாக ஊதுவத்தி ஒன்றைக் கொளுத்துகிறார். மேலே சுருண்டு நெளிந்து செல்லும் ஊதுவத்திப் புகையை மகரிஷி கவனிக்கிறார். பிறகு முன்னால் கீழே வைத்த புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளுகிறார். அதைத் திறந்து பிடித்து மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார். என்னைப் பார்ப்பதே இல்லை. இவ்வாறு அவர் பராமுகமாயிருப்பது எனக்குப் பிடிக்கிறதில்லை. பின்னும் கால்மணி நேரம் உட்கார்ந்து பார்க்கிறேன். ஆனால் மகரிஷி என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதாக இல்லை. சம்பாக்ஷணை முடிவடைந்து விட்டதென உணர்ந்து இடத்தைவிட்டு எழுந்திருக்கிறேன். இரு கைகளையும் கூப்பி நமஸ்கரித்தபின் அவரைவிட்டுச் செல்லுகிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

19
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  8
*******************************************
அந்த மகான் நான் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார். அவரது முகத்தில் சாந்தம் குடிகொள்கிறது. சஞ்சலம் சிறிதேனுமில்லை. மேலும் பேசுகிறாரில்லை.

 நீர் கொண்டுள்ளது நல்ல உத்தேசந்தான் ,  என்று கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பகர்ந்தருள்கிறார்.

என் நோக்கத்தைப் பற்றி விஸ்தாரமாகப் பேச இக்கூற்று உற்சாகமளிக்கிறது.

 பெரியோய் , எங்களது மேல்நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களையும் பௌதிக சாஸ்திரங்களையும் நான் படித்திருக்கிறேன். எங்களது நெருக்குடைய நகரங்களில் மாந்தர்களுக்கிடையில் நான் வாழ்ந்தும் வேலை செய்தும் வந்திருக்கிறேன். அன்னவர்களது சுகபோகங்களை அனுபவித்தும் , பேராசைகளில் மூழ்கியும் பார்த்திருக்கிறேன். இன்னும் , ஏகாந்தத்தை நாடி , ஆழ்ந்த எண்ணம் எண்ணிக்கொண்டு அலைந்து திரிந்திருக்கிறேன். மேல்நாட்டு மேதாவிகளிடம் ஆறுதல் தேடியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் போதாது , இப்போது கீழ் நாட்டை நோக்கி நான் வந்திருக்கிறேன். நான் வேண்டுவது ஞானம்.

 ஆம் , நீர் நவிலுவது எனக்கு விளங்குகிறது  என்றாற்போல மகரிஷி தலையை அசைக்கிறார்.

மேலும் நான் பகர்கிறேன் :  எத்தனையோ அபிப்பிராயங்களை நான் கேட்டிருக்கிறேன். நான் செவிமடுத்த கொள்கைகளுக்கு முடிவில்லை ஒரு கோட்பாட்டுக்குத் தர்க்க ரீதியான அத்தாட்சிகள் என்னைச் சூழ்ந்து மூடிக்கொண்டிருக்கின்றன. அவைகளைப்பற்றி நான் அலுத்துக் கிடக்கிறேன். சுவானுபவமாக நிரூபித்துக் காட்ட முடியாதவைகளைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம். எனக்கு மதப் பற்றுதல் இல்லாதிருப்பதுபற்றி என்னை மன்னியுங்கள். புலனுலகுக்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா  இருக்குமாகில் அதைப் பற்றிய அனுபூதி எனக்கு எங்ஙனம் கிட்டும்

அக்கம் பக்கத்திலிருக்கும் இரண்டு மூன்று அன்பர்கள் ஆச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள். இங்ஙனம் அச்சமின்றி அசட்டையாகப் பேசிய நான் ஆஸ்ரமத்தின் அரும் விதியை மீறி நடந்து விட்டேனோ எனக்கு ஒன்றும் தெரியாது ; அதைப்பற்றிக் கவலையும் இல்லை. பல்லாண்டுகளாக என் உள்ளத்தில் சுமைபோன்று அழுந்திக் கிடந்த ஆசையானது இப்போது எதிர்பாராத முறையில் கட்டுக்கடங்காது வெளியே கிளம்பி விட்டது. மகரிஷி சீரியராயிருக்கும் பட்சத்தில் இச்சிறு பிழையைப் பொருட்படுத்தமாட்டார் என்பது உறுதி.

அவர் வாய் திறந்து பதில் ஒன்றும் விடுகிறாரில்லை ; ஆனால் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார் போலும். வேறு ஒன்றும் செய்வதில்லை யாகையாலும் , வாயாடத் துணிந்து விட்டேனாகையாலும் மூன்றாம் முறை நான் அவரிடம் நவிலுகிறேன்.

 மேல்நாட்டு மேதாவிகளும் பௌதிக சாஸ்திரிகளும் அவர்களது சாதுரியத்துக்காகப் பெரிதும் பாராட்டப்படுகின்றனர். எனினும் ஜீவியத்துக்கு அப்பாலுள்ள மர்மத்தைப்பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். எங்கள் மேல்நாட்டு ஞானிகள் விளக்க முடியாதவைகளை விளக்கியருளவல்லவர்கள் சிலர் உங்கள் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மைதானா எனக்கு உள்ளொளி பெருகும்படி நீங்கள் உதவி புரிந்தருள்வீர்களா  அல்லது இந்த அருள் நாட்டமே வெறும் ஏமாப்புத் தானோ

நான் கேட்க வேண்டியதை யெல்லாம் கேட்டாய் விட்டது. மகரிஷியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிந்தனையுடன் அவர் இன்னும் என்னை ஏறிட்டுப் பார்த்த வண்ணமாயிருக்கிறார். ஒரு வேளை என்னுடைய கேள்விகளை அவர் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கிறாரா  பத்து நிமிஷங்கல் மௌனமாய்க் கழிகின்றன.

கடைசியாக வாய் திறந்து நிதானமாக அவர் பேசுகிறார்.

 நான் , என்கிறீர். நான் அறிய விரும்புகிறேன்.  அந்த நான் யார் , எனக்குச் சொல்லும்

அவர் கேட்பதென்ன இப்போது அவர் மொழி பெயர்ப்பவரை நிறுத்தி விட்டுத் தாமே என்னோடு நேரில் ஆங்கிலத்தில் பேசுகிறார். என் உள்ளத்தில் வியப்பு உண்டாகிறது.

 உங்களுடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை ,  யென்று நான் திகைத்துப் பதில் விடுக்கிறேன்.

 விளங்கவில்லையா , மறுபடியும் சிந்தித்துப் பாரும் !  அவருடைய கூற்று என்னை மறுபடியும் கலக்கமுறச் செய்கிறது. ஒரு எண்ணம் திடீரென்று என் மனதில் உதிக்கிறது. என்னைச் சுட்டிக் காட்டி என் பேர் சொல்லுகிறேன்.

 அப்புருஷனை அறிந்திருக்கிறீரா

 நான் உயிர் வாழ்ந்த கால முழுதும் என்னை அறிந்திருக்கிறேன் ,  என்று புன்னகை பூத்துப் பதில் விடுக்கிறேன்.

 அது வெறும் தேகம் ! மறுபடியும் நான் கேட்கிறேன் ,  நீர்  யார்

இந்த நூதனமான கேள்விக்கு ஆயத்தமான உத்தரம் ஒன்றும் என்பால் இல்லை.

மீண்டும் மகரிஷி மொழிகிறார் :

 அந்த நான் என்பதை முதலில் அறியும். பின்பு உண்மை விளங்கும்.

மறுபடியும் எனக்குக் குழப்பந்தான். என்னுடைய திகைப்பு அதிகரிக்கிறது. மனக்கலக்கத்தை மொழியால் வெளிவிடுகிறேன். மகரிஷிக்கு இதற்குமேல் ஆங்கிலத்தில் பேச இயலுகிறதில்லை. மொழி பெயர்ப்பவரைத் திரும்பிப் பார்க்கிறார். அவரது திருவாய்மொழி ஒன்றன்பின் ஒன்றாக எனக்கு ஆங்கிலத்தில் பெயர்த்துச் சொல்லப்படுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

20
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  7
*****************************************
அவர் என்னைப் பார்த்து விடுகிறார். முதல் தடவை ! மகரிஷியின் அற்புதமான குளிர்ந்த நோக்கம் என்மீது விழுகிறது. அவர் இப்போது நீடித்திருந்த சமாதி நிலையிலிருந்து வெளிவந்து விட்டார் என்று அறிகிறேன்.

இடைப்புகுந்த என் நண்பர் நான் பதில் சொல்லாததைக்கண்டு , ஒருவேளை தாம் சொன்னது என்காதில் விழவில்லையோ என்று நினைத்து , முன் என்னிடம் கேட்டதையே மீண்டும் ஒருமுறை உரக்கக் கேட்கிறார். ஆனால் , என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மகரிஷியின் ஒளி ததும்பும் கண்கள் மற்றொரு கேள்வி என்னைக் கேட்பதுபோல் தோன்றுகிறது. சொல்லோசையற்ற கேள்வி அது :

 எல்லோரும் அடைதற்குரிய , இப்போதுதான் நீரும் சிறிதே அனுபவித்த மனச்சாந்தியை அறிந்த பின்னும் , உம்முடைய உள்ளம் சந்தேகங்களினால் சஞ்சலப்படுகிறதா  சஞ்சலப்படுவதும் சாத்தியமா

மௌனோபதேசம் என்பது இதுதானோ ! சாந்திக்கடலில் நான் ஆழ்ந்து விடுகிறேன். ஆதலால் என் நண்பரான சாதுவை நோக்கி ,  இல்லை , இப்போது நான் கேட்கவேண்டியது ஒன்றும் இல்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம் ,  என்று சொல்லுகிறேன்.

நான் அங்கு வந்த காரணத்தை எடுத்துக் கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன். ஆனால் மகரிஷிக்கல்ல ; அங்கு கூடியிருக்கும் அவருடைய அடியார்களுக்குத்தான். அதற்குள்ளாகவே அவர்கள் குசுகுசுவென்று ஏதோ தம்முள் பேசிக் கொள்ளுகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் அங்கேயே மகரிஷியுடன் இருப்பவர்கள் என்றும் , மற்றவர்கள் சுற்றுப் பிரதேசங்களிலிருந்து அப்பெரியாரின் தரிசனத்துக்கு வருபவர்கள் என்றும் என் நண்பர் மூலமாக நான் முன்னமேயே அறிந்திருக்கிறேன். நான் பேசுவதற்கு முன்பே , என் நண்பர் தாமாகவே எழுந்து நான் இன்னாரென அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறார். நான் வியப்புறுகிறேன். ஏனென்றால் விதவிதமாக அபிநயம் செய்துகொண்டு அவர் மட மடவென்று தமிழில் ஏதோ பேசுகிறார். அவர் என்னைப் பற்றி ஒன்றென்றால் நூறாக , உள்ளத்தையும் இல்லாததையும் சேர்த்துச் சொல்லுகிறார்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் மகரிஷியின் அடியார்கள் ஏன் அவ்வளவு ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்

மத்தியான சாப்பாடு முடிவுறுகிறது. வெயில் கொடூரமாக வாட்டுகிறது. இவ்வளவு உஷ்ணத்தையும் புழுக்கத்தையும் நான் முன்பு எங்கும் அனுபவித்தது கிடையாது. இத்தனைக்கும் காரணம் மத்திய ரேகைக்கு அருகாமையில் இப்பிரதேசம் இருப்பதுதான். ஓடியாடி வேலைசெய்ய வேண்டிய அவசியமொன்று மிலாதபடி அமைத்திருக்கும் இந்திய சீதோஷ்ண ஸ்திதிக்கு நான் இப்போது நன்றி பாராட்டுகிறேன். ஏனென்றால் இளைப்பாறுதற்குப் பெரும்பாலர் சோலை நிழல்களுக்கடியே சென்று விட்டார்கள். ஆகையினாலே நானும் ஆடம்பரமும் விளம்பரமும் ஒன்றுமின்றி , என் விருப்பப்படி அமரிக்கையாக மகரிஷியை அணுகமுடியும்.

அகன்ற கூடத்தினுள் பிரவேசித்து அவருக்கருகில் தரையின்மீது உட்கார்ந்து கொள்கிறேன். பீடத்தின் மீது போடப் பட்டிருக்கின்ற தலையணைகளின் மீது அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார். குற்றேவல் புரியும் சீடர் ஒருவர் ஓயாது ஒரே மாதிரியாகப் பங்காக் கயிற்றை இழுத்துக் கொண்டிருக்கிறார். கயிற்றின் மெல்லிய பர் - பர் ஓசையும் , வெப்பத்தில் இறுகிய காற்றிலே சாந்தமாக ஊசலாடும் பங்காவின் உஸ்  உஸ் ஒலியும் செவிக்கு இன்பம் தருகின்றன.

எழுத்துப் பிரதிப் புஸ்தகம் ஒன்றை மகரிஷி மூடிக் கையில் வைத்திருக்கிறார். மிகவும் மெதுவாக அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். நான் நுழைந்த சற்று நேரத்துக்குள் அவர் புஸ்தகத்தை அப்புறம் வைத்துவிட்டு சிஷ்யர் ஒருவரை அழைக்கிறார். அவர்களுள் தமிழில் ஏதோ கொஞ்சம் பேச்சு நடந்த பின்பு சிஷ்யர் என்னைப்பார்த்து , நான் அவர்கள் அளித்த உணவை உண்ண இயலாது போய்விட்டதற்காக மகரிஷி கொஞ்சம் கவலை யடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கிறார். தாங்களெல்லோரும் எளிய வாழ்வு வாழ்ந்து வருகிறார்களென்றும் முன்பு எப்போதும் ஐரோப்பியர்களுக்கு உபசாரம் செய்ததில்லை யாதலால் அவர்களுக்குப் பிடித்தமான உணவு எது என்பது தங்களுக்குத் தெரியவில்லையென்றும் அவர் எனக்கு விவரித்துச் சொல்லுகிறார். மகரிஷியின் அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவர்கள் அருந்தும் மசாலையில்லாத உணவை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேனென்றும் போதாததற்கு ஊரில் உள்ள கடையில் ஏதாவது வாங்கிக் கொள்வேனென்றும் நான் அவருக்குச் சொல்லுகிறேன். என்னை அவரது ஆஸ்ரமத்துக்கு இழுத்துவந்த அருள் நோக்கத்தைவிட உணவைப்பற்றிய கேள்வி எத்தனையோ மடங்குக் கீழாதென்றும் நான் மேலும் அவருக்குத் தெரிவிக்கிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

21
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  6
*****************************************
மௌன மஹான் என்னை வரவேற்றது போல்தான் இங்கும் இருக்கும் என்று என் நண்பர் என்னிடம் முன்கூட்டி எச்சரிக்கை செய்துவைக்க வில்லை. ஆகையால் இவ்வாறு மகரிஷி என்னைக் கவனிக்காமலே இருப்பது என்னைத் திகைப்புறச் செய்கிறது. எந்த ஐரோப்பியனும் முதல் முதலில் , இவர் , என்ன , தம்முடைய அடியார்கள் பார்க்கட்டும் என்று இவ்வாறு பாசாங்கு பண்ணி உட்கார்ந்திருக்கிறாரா  என்றுதான் எண்ணுவான் என் மனத்திலும் இரண்டொரு தடவை அதுபோன்ற எண்ணம் எழுகிறது. ஆனால் உடனுக்குடன் அதை அடக்கி விடுகிறேன். முன்னோடியே , என் நண்பர் , மகரிஷி அடிக்கடி சமாதியில் ஆழ்வது வழக்கமென்று சொல்லாவிட்டாலும் , இப்போது அவர் சமாதியில்தான் இருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறேன். இந்தப் பரவச நிலை பொருளற்ற வெறும் பாழ் நிலையா  என்று அடுத்தபடியாக நான் எண்ணமிட ஆரம்பிக்கிறேன். இந்தக்கேள்வி சிறிது நேரம் அதிகமாகவே என் மனதில் ஊசலாடுகிறதென்றாலும் இதற்குப் பதில் அளிப்பது என்னால் சாத்தியமில்லை. ஆகையால் , முடிவில் இந்த எண்ணத்தையும் விரட்டிவிடுகிறேன்.

இரும்பை இழுக்கும் காந்தத்தைப் போல ஏதோ ஒரு சக்தி என்னை மகரிஷியிடம் இழுக்கிறது. என் பார்வை அவரை விட்டு விலகமாட்டேன் என்கிறது. இந்த அற்புதமான சக்தி என்னை கெட்டியாகப் பற்றிக் கொள்ளத் தொடங்குகிறது. ஆதலால் இவர் என்னை அலட்சியம் பண்ணினாரென்று முதல் முதலில் ஏற்பட்ட திகைப்பும் குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகின்றன. ஆனால் நான் அங்குவந்து ஒருமணி கழிந்த பிறகுதான் , வெளிக்குத் தெரியாத , தடுக்க முடியாத மாறுதல் ஒன்று என் உள்ளத்தில் உண்டாகிறதென்று உணர்கிறேன். நான் ரயிலில் மிகவும் கவனத்துடன் நுட்பமாகத் தயார் செய்த கேள்விகள் எல்லாம் ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. அக்கேள்விகளை மகரிஷியிடம் கேட்பதும் கேட்காமல் இருப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. இதுவரையில் என்மனதை அலைத்து வந்த பிரச்சனைகளுக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவதும் தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த சன்னிதானத்துக்கு வந்த பிறகு அக்கேள்விகள் பிரமாதமாக எனக்குத் தோன்றவில்லை. என்னை நோக்கி அமைதி வெள்ளம் ஓடி வருகிறது. என் உள்ளத்தினுள்ளே மகத்தான சாந்தி வந்து குடிகொள்கிறது. பல்வேறு எண்ணங்களினால் வாட்டி வதக்கப் பெற்ற என் மூளை சிறிது ஓய்வடைகிறது.

இடைவிடாமல் என் சிந்தையை சிதைத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்விகளெல்லாம் எவ்வளவு அற்பமானவைகளாக இப்போது தோன்றுகின்றன ! கடந்த வருஷங்களில் பெரிதாகத் தோன்றிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாம் எவ்வளவு கேவலமாகி விடுகின்றன ! அறிவு தான் வீணான பிரச்சனைகளைக் கிளப்புகிறது ; பிறகு அவைகளுக்கு விடைகண்டு பிடிக்க முயன்று முயன்று அது வருத்தத்தை விளைவித்துக் கொள்ளுகிறது என்ற விவேகம் திடீரென்று என்னுள் உதயமாகிறது. இதுவரையும் அற்ப அறிவையே பிரதானமாகக் கருதிவந்த என் மனதில் இதுபோன்ற தெளிவு உண்டாவது நூதனமாகவே இருக்கிறது.

நான் உள்ளே வந்து இரண்டு மணி நேரம் ஆகிறது. படிப்படியாக ஓங்கி வரும் அமைதி உணர்ச்சியில் நான் வயப்பட்டுவிடுகிறேன். இப்பொழுது நேரம் கழிவது கஷ்டமாக இல்லை. ஏனென்றால் மனத்தில் பிறந்த சஞ்சலங்கள் எல்லாம் உடைபட்டுச் சிதறுவதாக நான் உணர்கிறேன் , பிறகு மெள்ள மெள்ளப் புதிய கேள்வி ஒன்று சித்தத்தின்கண் உருவெடுக்கிறது.

 மலர்ந்த புஷ்பம் வாசனை வீசுவது போல , இவர்  இந்த மகரிஷியும் ஆத்ம சாந்தி என்னும் நறுமணத்தைப் பரப்புகிறாரா

ஆத்மீக விஷயங்களைப்பற்றி உள்ளபடி உணரும் திறமை நான் வாய்க்கப் பெற்றவனென்று கருதுகிறேன் இல்லை. ஆனால் மற்றவர்களின் தன்மையை உணரும் சக்தி சிறிது எனக்கு உண்டு என்பதை அனுபவத்தால் நான் அறிந்திருக்கிறேன். என்னுள்ளே எழும் இந்த அபூர்வ அமைதி இப்பொழுது நான் இருக்கும் இடத்தைப் பொருத்து ஏற்படுகிறதோ என முதலில் சந்தேகிக்கிறேன். இல்லை ஒருவேளை , கண்ணுக்குப் புலனாகாமல் மகரிஷியினிடமிருந்துதான் வருகிறதோ இந்த என் மனச்சாந்தி என்று பிறகு வியப்படைகிறேன். ஆனால் அவரே நான் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் வார்த்த சிலைபோல் அசையாமல் வீற்றிருக்கிறார்.

இப்போது அமைதி கலையும்படி ஏற்படுகிறது. யாரோ ஒருவர் என்னை அணுகி ,  மகரிஷியிடம் கேள்விகள் கேட்க நீ உத்தேசித்திருக்கவில்லையா  என்று மெதுவாக என் காதில் ஓதுகிறார்.

அது என் நண்பரான சாது சுப்ரமண்யம். அவர் பொறுமை இழந்துவிட்டார் போலும். இல்லை , இல்லை ஒருவேளை நான் தான் பொறுமை இழந்திருக்கக்கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஏனென்றால் நான் துடிதுடிப்புள்ள ஒரு ஐரோப்பியனல்லவா  ஆனால் , பாவம் , அவர் உண்மையை அறியார். ஆமாம் , மகரிஷியிடம் கேள்விகள் கேட்கத்தான் வந்தேன். ஆயின் , இப்பொழுதோ எங்கும் சாந்தியைக் கண்டு சாந்தியுடன் உறவு பூண்டிருக்கும் நான் ஏன் கேள்விகளால் என் மூளையைக் கலக்கிக் கொள்ள வேண்டும்  உயர்ந்த வாழ்வு முறை ஒன்று இருக்கிறதென்று நான் இப்போது தெளிவாய் உணர்கிறேன். அற்புதமான ஆனந்த நிலைமை ஒன்று மனிதனுக்கு உண்டு. அதில் தேங்கி இளைப்பாற விரும்பிய என்னை ஒருவர் வந்துமீண்டும் சஞ்சலமற்ற இவ்வுலகத்துக்கு இழுக்க வேண்டுமா

அமைதி கலைந்து விடுகிறது. என் நண்பரின் சைகையை அறிந்து கொண்டு ஒவ்வொருவராகத் தரையிலிருந்து எழ ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேசும் குரலும் என்காதில் விழுகிறது. இது என்ன பேராச்சரியம் ! மகரிஷியும் இரண்டொரு தடவை கண் இமைக்கிறார். பிறகு தலையைத் திருப்புகிறார். அவர் முகம் மெதுவாக , மிகவும் மெதுவாக திரும்புகிறது. திரும்பிக் கீழ் நோக்கி ஒரு பக்கமாகப் பார்க்கிறார். இன்னும் சில வினாடிகள் ;

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

22
Ashrams / Re: Ramana Ashram
« on: March 06, 2018, 11:10:28 AM »
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் தந்தையார் ஸ்ரீசுந்தரம் ஐயரின் நினைவு தினம் இன்று (6/3/2018) ஆச்ரமத்தில் அனுசரிக்கப்பட்டது. தாயார் சந்நிதியில் அன்னாரின் புகைப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ரமண மகரிஷி போன்ற ஒரு ஞானசூரியனை இந்த வையகம் பெற்றிட அவரது குடும்பத்திற்கு இருந்த ஒரு சாபம் எவ்வாறு தொடர்புடையது என்று இங்குக் காண்போம்:

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாராயண அய்யர் குமாரர் வேங்கடேசுவர அய்யர் காலத்தில் இந்நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். அன்னாரின் இல்லத்திற்கு எங்கிருந்தோ ஒரு துறவி வந்து தனக்கு உண்டி
உறைவிடம் வேண்டி நிற்க அத்துறவியின் வேண்டுகோளை இல்லத் தலைவர் நிராகரிக்க அதனால் சினமடைந்த அத்துறவி தன்னைப்போல் அன்னாரின் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் துறவு பூண்டு உண்டிக்காக அலைய வேண்டுமென்று சாபமிட்டார்.

அந்த சாபத்திற்கேற்ப சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வேங்கடேச அய்யர் ஒருநாள் திருப்பரங்குன்றம் போவதாகச் சொல்லிச் சென்றவர் திரும்பி வரவில்லை. அவர் தில்லையில் சந்நியாசி உடையில் இருந்து அங்கு உழவாரப் பணி செய்து கோயிலைச் சுற்றியுள்ள முட்புதர்களையும் களைகளையும் நீக்கிப் பக்தர்கள் கோயிலைச் சுற்றுவதற்கு உதவி செய்தார் என்று சிலரும் இல்லையில்லை காசிக்குச் சென்றார் என்று வேறு சிலரும் கூறினர்.

அப்பொழுது சுந்தரம் ஐயர் தன்னுடைய குழந்தைகளில் யார் உலகத்தைத் துறந்துத் துறவறம் செல்லுவார் என்று சிறிதுகூட எண்ணியிருக்க மாட்டார்.

துர்வாசரின் சாபமும் நாரத முனியின் கலகமும் நல்லதில் முடியும் என்பார்கள். இத்துறவி இட்ட சாபம் பிற்காலத்தில் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போவதை அப்பொழுது யாரறிந்தார்?

from fb Ramana Mandiram Madurai

23
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 5
************************************************
என் நண்பர் அந்தப்பீடத்தை அணுகிப் பூமியின்மேல் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். அவரது கண்ணிரண்டும் கூப்பிய கைகளுக்கிடையில் பூமியில் புதைகின்றன.

பீடத்துக்கு எதிரே சுவரில் அகன்றதொரு ஜன்னல் இருக்கிறது. ஜன்னலுக்கும் பீடத்துக்கும் அதிகதூரம் இல்லை. மகரிஷியின்மேல் வெளிச்சம் நன்றாக விழுகிறது. ஆகவே அவருடைய முகத் தோற்றத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் பார்க்க முடிகிறது. அவர் ஜன்னலின் வழியாக , நாங்கள் காலையில் வந்த திசையிலேயே அசைவின்றி உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தலை அப்புறம் இப்புறம் திரும்புவதில்லை. நான் அவர் கவனத்தை இழுக்க திரும்புவதில்லை. நான் அவர் கவனத்தை இழுக்க எண்ணி ஜன்னலின் அருகே மெதுவாகப் போகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் பழங்களைச் சமர்ப்பிக்கும் போது , அவருக்கு என் வணக்கத்தையும் செலுத்தலாமென்று நினைக்கிறேன். ஜன்னலருகே போய் , பழங்களை அவர் முன் வைத்துவிட்டு இரண்டொரு அடி பின் வாங்குகிறேன்.

அவருடைய ஆசனத்தின் முன்பாக , சிவந்த தணல் நிறைந்த பித்தளைத் தூபக்கால் ஒன்றிருக்கிறது அதில் தூவியுள்ள சாம்பிராணி நறுமணம் வீசுகிறது. அதற்கு அடுத்துச் சில ஊதுவத்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. வெளுத்த புகை நூல் நூலாக மேலே கிளம்பிக் காற்றில் எங்கும் பரவி மிதங்குகிறது.

ஒரு மெல்லிய சால்வையை மடித்துத் தரை மீது விரித்து நான் அதன் மீது உட்கார்ந்து கொள்கிறேன். பீடத்தின் மேல் அசையாமல் சிலைபோன்று வீற்றிருக்கும் மகரிஷியை ஆவலுடன் உற்று நோக்குகிறேன். அவர் ஒரு கௌபீனம் மட்டுமே அணிந்திருக்கிறார். உடம்பின் மேல் வேறொரு ஆடையும் இல்லை. இத்தகைய கோலம் இந்தப் பிரதேசங்களில் சர்வ சாதாரணம். அவரது மேனி சற்று மாநிறம். எனினும் தென்னிந்தியர்களுள் அது சிரேஷ்டமானது. அவர் உயரமாக இருக்க வேண்டும் என்றும் மதிப்பிடுகிறேன். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். தலையும் நல்ல அமைப்பு ; கட்டையாக வெட்டி நரைத்த தலைமுடி. அகன்ற நெற்றி அவருடைய அறிவு விலாசத்துக்கு அறிகுறியாக விளங்குகிறது. மொத்தத்தில் தேக அமைப்பில் இந்தியர்களைவிட ஐரோப்பியர்களையே அவர் மிகுதியும் ஒத்திருக்கிறாரென நான் அனுமானிக்கிறேன்.

பீடத்தின் மேல் வெண்மையான திண்டுகள் இருக்கின்றன. பாதங்களை ஒரு நேர்த்தியான புலித்தோலின் மேல் ஊன்றிக்கொண்டு மகரிஷி அமர்ந்திருக்கிறார்.

அந்த அகன்ற மண்டபம் முழுவதும் நிசப்தம் குடிகொண்டிருக்கிறது. மகரிஷி ஆடாமல் அசையாமல் நாங்கள் வந்ததையும் கவனியாமல் ஒரேவிதமாக வீற்றிருக்கிறார். பீடத்துக்கு மறுபுறம் அவருடைய சிஷ்யர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு பங்காக் கயிற்றை இழுக்கிறார். பங்கா பர்.. பர்   என்று அசைவதுதான் அங்கே கேட்கக் கூடிய சத்தம். பங்கா , மேலே மரவிட்டத்தில் பொருத்தப் பெற்று , மகரிஷியின் தலைக்கு நேராகத் தொங்குகிறது. அது அசைவதால் ஏற்படும் மெல்லிய நாதத்தை நான் கவனித்துக் கேட்கிறேன். அத்துடன் , மகரிஷி என்னைப் பார்க்கவேண்டும் என்ற இச்சையுடன் அவர் கண்களையே உற்று நோக்குகிறேன். கண்கள் கருப்பு , நடுத்தரம் ; நன்றாகத் திறந்திருக்கின்றன.

நான் அங்கே இருப்பதை அவர் அறிந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஒன்றும் காணோம். அவர் தேகம் அதிசயிக்கத்தக்க முறையில் அசையாமல் கல் சிலைபோல் இருக்கிறது. ஒருதரமாவது அவருடைய பார்வை என்மேல் விழுவதில்லை. அவர் கண்கள் எங்கேயோ வெகு தூரத்தில் திறந்த வெட்ட வெளியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டே இருக்கின்றன. ஒரே அதீத மயமான தோற்றம். இதுபோன்றதொரு காட்சியை நான் முன்பு எவ்விடத்திலோ கண்டிருப்பதாக ஞாபகம் வருகிறது. எங்கே பார்த்திருக்கக் கூடும் என்று நினைவு கொண்டு வர முயற்சிக்கிறேன். ஞாபக சக்தி விரைந்து வேலை செய்கிறது. சென்னைக் கருகில் நான் போய் பார்த்த மௌன மஹானது உருவம் என்மனக் கண்ணுக்கு முன்னால் தோன்றுகிறது. தன்னந்தனியாகத் தபசு பண்ணிக்கொண்டிருந்த அப்பெரியாரும் கல் சிலைபோல அணுவளவும் அசையாமல் வீற்றிருந்தாரல்லவா  இருவர் இருக்கையும் அசைவற்ற தன்மையும் ஒத்திருப்பதை நினைத்து நான் கொஞ்சம் வியப்படைகிறேன். ஒருவனுடைய அக அழகை அவன் கண்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பது என் பழங்கொள்கை. ஆனால் மகரிஷியின் விழிகளுக்கு முன் என் உணர்வு தயங்குகிறது. குழப்பமடைந்து திகைத்துப் போகிறேன்.

காலன் அசையாது நின்று விட்டான் போலும். ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தோன்றுகிறது. சுவரில் இருக்கும் கடிகாரத்தைப் பார்க்கிறேன். நான் வந்து அரைமணி ஆகிறது. அதுவும் கடந்து , ஒரு மணி ஆகிறது. ஆயினும் அறையில் ஒருவராவது நகருவதில்லை ! பேசுவதும் இல்லை. நான் மகரிஷியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் அங்கு இருப்பதைப் பற்றிய உணர்ச்சியே எனக்கு இல்லாமல் போய்விடுகிறது. பீடத்தில் அமர்ந்திருக்கும் பெரியாரைப் பற்றிய எண்ணம் ஒன்றே உள்ளம் குடிகொள்கிறது. அவர் முன்னிலையில் ஒரு சிறிய மணையின் மேல் நான் வைத்த பழங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

24
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  4
***********************************************
மகரிஷியின் ஆசிரமத்தை நெருங்கி வந்து விட்டோம்  என்று நண்பர் கூறுகிறார். ரஸ்தாவைவிட்டு விலகி , ஒரு சிறு வண்டிப் பாதையில் போகிறோம். ஒரு அடர்ந்த தோப்புக்கு வந்துசேருகிறோம். மாமரங்களும் தென்னை மரங்களும் நிறைந்திருக்கின்றன. அதைக் கடந்து சிறிது தூரம் போனதும் திடீரென்று பாதை முடிவடைகிறது. எதிரே பூட்டப்படாத கதவொன்று தெரிகிறது. வண்டிக்காரன் இறங்கிக் கதவைத் திறக்கிறான். பிறகு ஒரு முற்றத்தின் வழியாக வண்டியை ஒட்டுகிறான். நான் கைகால்களை நீட்டிக் கீழே இறங்குகிறேன். இறங்கி நின்று சுற்று முற்றும் பார்க்கிறான்.

ஆசிரமத்தின் முன்புறத்தில் நெருக்கமான மரங்களும் அடர்ந்து செழித்த நந்தவனமும் இருக்கின்றன. பின்புறத்திலே , செடிகளும் புதர்களுமான வேலி ஒன்று காணப்படுகிறது. மேற்குப்பக்கத்திலே இருப்பது ஒரு அடர்ந்த காடு. மொத்தத்தில் ஆசிரமம் ஒரு நேர்த்தியான இடத்தில் அமைந்திருக்கிறது. தனிமையும் அமைதியும் பொருந்தி , அது தவசிகளுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.

முற்றத்தின் இடது புறத்தில் இரண்டு குடிசைகளும் , அவைகளை அடுத்து ஓடு போட்ட கட்டடம் ஒன்றும் இருக்கின்றன். முன்னால் நீண்ட தாழ்வாரம் ஒன்று தெரிகிறது.

முற்றத்தின் மத்தியில் ஒரு கிணறு இருக்கிறது. பையன் ஒருவன் அதிலிருந்து வாளி நிறைத்துத் தண்ணீர் சேர்ந்துகிறான். இடுப்புத் துணியைத் தவிர அவன் உடம்பில் மேல். வேறொன்றும் இல்லை. அவன் நிறமோ கறுப்பு.

நாங்கள் நுழைந்த அரவத்தைக் கேட்டு உள்ளே இருந்து சிலர் முற்றத்துக்கு வருகிறார்கள். அவர்கள் உடை பலவிதமாக இருக்கிறது. ஒருவர் இடுப்பில் மட்டும் ஒரு கந்தல் துணியை உடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னொருவரோ , அழகான வெண்பட்டு அணிந்திருக்கிறார். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அறிகுறியாக அவர்கள் எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டு நிற்பதைக் கண்டு என் நண்பரும் வாயைத் திறந்து பல்லைக்காட்டுகிறார். அவர்களிடம் போய் ஏதோ தமிழில் சொல்லுகிறார். உடனே அவர்கள் முகத்தோற்றம் , மாறுபடுகிறது.

புன்முறுவல் பூத்துக் களிப்புடன் என்னைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய தோற்றம் எனக்கு மிகவும் பிடித்தமாயிருக்கிறது.

 மகரிஷி இருக்கும் இடத்துக்குப் போகலாம்  என்று என் நண்பர் கூறுகிறார். தொடர்ந்து செல்லுகிறேன். தாழ் வாரத்தை அடைந்ததும் என் பூட்ஸீகளைக் கழற்றிவிடுகிறேன். காணிக்கையாகக் கொண்டு வந்த பழங்களை ஒன்று சேர்த்து எடுத்துக் கொள்ளுகிறேன். கதவைக்கடந்து மகரிஷியின் கூடத்துக்குள் நுழைகிறேன்.
சுமார் இருபது பேர் அங்கே தரையின் மேல் அரை வட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம். எல்லோரும் திரும்பி எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். கறுப்பும் பழுப்பும் கலந்த அத்தனை முகங்களும் என்னைப் பார்த்த வண்ணமாயிருக்கின்றன. கதவுக்கு வலப்புறமாக எட்டி இருக்கும் மூலையிலிருந்து கொஞ்சம் விலகி மரியாதையாக அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நாங்கள் போவதற்கு முன் அவர்கள் அந்த எட்டிய மூலைப்பக்கமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். நானும் அத்திசையில் சுற்றிப் பார்க்கிறேன். வெள்ளைத் துணி விரித்த நீண்ட பீடத்தின் மேல் ஒருவர் வீற்றிருக்கிறார். அவரே மகரிஷி என நான் தெரிந்து கொள்ளுகிறேன்.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

25
Sri ramana mandiram 
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்
************************************************
வீடுகளின் நிலைமையிலிருந்து கொஞ்சம் பணக்கார ஊர்தான் என்று தெரிகிறது. ஒரு கோவிலின் இரு புறங்களை ஒட்டி வீதிகள் அமைந்திருக்கின்றன. கோவில் கால்மைல் நீளமாவது இருக்கும். சிறிது நேரத்தில் நாங்கள் கோவில் வாசலை அடைகிறோம். வாசல் அகன்றிருக்கிறது. அடுத்துவந்த பிறகு தான் கோவில் கட்டடம் எவ்வளவு பெரிய தென்பது தெரிகிறது ஒன்றிரண்டு நிமிஷங்கள் அங்கே நிற்கிறோம். நான் உள்ளே எட்டிப்பார்க்கிறேன். கோவில் பெரியதென்பது மட்டும் அல்ல ; அது எனக்கு விசித்திரமாகவும் தோன்றுகிறது. அதுபோன்ற கட்டடத்தை நான் அதற்கு முன்பு பார்த்ததேயில்லை. சுற்றிலும் சதுரமாக நான்கு பெரிய மதில் சுவர்கள் ; உள்ளே ஒழுங்கின்றிச் சிதறுண்டு கிடக்கும் சிறு சிறு கட்டடங்கள். நூற்றுக்கணக்கான வருஷங்களாகக் கடுமையான வெய்யில் பட்டுப் பட்டு அந்த உயர்ந்த மதில் சுவர்கள் கறுத்துப் போயிருக்கின்றன. ஒவ்வொரு மதிலின் நடுவிலும் ஒரு வாசலும் வாசலுக்கு மேலே ஒரு கோபுரமும் உண்டு. கோபுரத்தின் வடிவம் விநோதமாயிருக்கிறது. அதன் மேல் அலங்காரமான சிற்ப வேலை செய்திருக்கிறார்கள். கோபுரம் மேலே போகப் போகக் குவிந்து போகிறது. அதன் அடிப்புறம் கருங்க கல்லினாலும் மேல்புறம் செங்கல்லினாலும் கட்டப்பட்டிருக்கின்றன. அனேக அடுக்குகளாக அது பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலு பெரிய கோபுரங்களைத் தவிர உள்ளே இன்னும் ஐந்து கோபுரங்கள் இருப்பதாகக் கணக்கிடுகிறேன். அவைகளைப் பார்க்கும்போது எனக்கு எகிப்திய பிரமிட்களைப் பற்றிய ஞாபகம் வருகிறது. இன்னும் அங்கே , நீண்ட கூடங்களும் , வரிசையாக உயர்ந்த கணக்கில்லாத கல் தூண்களும் , மத்தியில் ஒரு பெரிய மண்டபமும் , மங்கிய வெளிச்சத்தை உடைய மூலஸ்தானங்களும் , இருண்ட பிரகாரங்களும் என் கண்களுக்குப் புலப்படுகின்றன. கூடிய சீக்கிரம் மற்றுமொரு முறைவந்து உள்ளே போய் எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுகிறேன்.

எருதுகள் சவாரி எடுக்கின்றன. மீண்டும் திறந்த வெளியில் போகிறோம் , சுற்றிலும் காட்சிகள் நேர்த்தியாக இருக்கின்றன. பாதை முழுதும் செம்மண் படிந்து கிடக்கிறது. இரண்டு பக்கங்களிலும் சிறு புதர்களும் , சில இடங்களில் உயர்ந்த மரக்கூட்டங்களும் இருக்கின்றன. மரங்களில் மறைந்து கொண்டு அனேகம் பறவைகள் இருக்கவேண்டும் ; ஏனென்றால் அவைகள் சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொள்ளும் ஓசை கேட்கிறது. அவைகளின் இனிய பாட்டும் என் காதில் விழுகிறது. உலகத்தில் எந்தப் பாகத்திலும் பறவைகளின் உதய சங்கீர்த்தனம் ஒரே விதந்தான்.

வழி நெடுக அங்கங்கே சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன. அவைகளின் அமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் கண்டு நான் முதலில் ஆச்சரியப்படுகிறேன். பிறகு , ஒருக்கால் அவை வேறு வேறு காலங்களில் கட்டப்பட்டவையாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

அவைகளிற் சில , வழக்கம்போல ஹிந்து முறையில் நேர்த்தியாகச் சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் , பெரிய கோவில்கள் எல்லாம் சவுக்கமான வேலைப் பாடில்லாத தூண்களினாலேயே முடிக்கப்பெற்றிருக்கின்றன. அது போன்ற தூண்களைத் தெற்கே தவிர இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது. இரண்டு மூன்று கோவில்கள் அமைப்பில் ( கிரீக் ) முறையை ஒத்திருக்கின்றன.

சுமார் ஐந்தாறு மைல்கள் பிரயாணம் செய்திருப்போம். நான் ஸ்டேஷனிலிருந்து பார்த்த மலையின் அடிவாரத்தை அடைகிறோம். காலை வெய்யிலில் மலை கம்பீரமாகத் தோன்றுகிறது. மூடுபனி விலகி , மலையின் சிகரத்துக்கு மேலே ஆகாயம் பளிச்சென்றிருக்கிறது. அந்தப் பிரதேசம் ஒரு தனித்த பீடபூமி ; செம் மண்ணும் பாறைகளும் செறிந்த பொட்டல் நிலம். மரங்களே இல்லாத இடங்களும் தென்படுகின்றன. பெரிய பெரிய பாராங்கற்கள் ஒழுங்கின்றித் தாறுமாறகச் சிதறுண்டு கிடக்கின்றன.

நான் பார்த்த திசையை என் நண்பர் கவனிக்கிறார்.  அருணாசலம் !  என்று உரக்கச் சொல்லுகிறார். அவர் முகம் பக்தியினால் பரவசமடைகிறது. புளகாங்கிதமுற்று ஆனந்தத்தில் மூழ்குகிறார்.

 அருணாசலம் என்று பெயர் வரக் காரணம் ஏதாவது உண்டா  அது எதைக் குறிப்பிடுகிறது   என்று நான் கேட்கிறேன்.

அவர் புன்னகை செய்கிறார்.  அருணாசலம் என்பதில் அருணம் , அசலம் என்று இரண்டு வார்த்தைகள் அடங்கி இருக்கின்றன. சிவந்தமலை என்பதே அவ்வார்த்தைகளின் பொருள். இங்கே எழுந்தருளியிருக்கும் கடவுளின் பெயரும் அதுவே.

 ஆனால் தீயைப்பற்றி இப்பெயரில் ஒரு குறிப்பும் இல்லையே. நெருப்புக்கும் இம்மலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகக் கேட்டிருக்கிறேன்  என்று சொல்லுகிறேன் நான்.

 ஓ , அதுவா  வருஷத்துக்கொரு முறை கோவிலில் திருவிழா நடைபெறும். அது ஆரம்பமானதும் மலை மேலே தீ மூட்டப்படுகிறது. அளவில்லாத நெய்யும் கற்பூரமும் அதில் கொட்டுகிறார்கள். தீ கொழுந்துவிட்டு வெகுநாள் எரியும். சுற்றிலும் பல மைலுக்குத் தீ எரிவது தெரியும். அதைப் பார்த்ததும் ஜனங்கள் கீழே விழுந்து நமஸ்கரிப்பார்கள். இந்த மலை ஈசனுக்கு இருப்பிடமென்பதையும் புனிதமான தென்பதையும் அது குறிப்பிடுகிறது.

அருணாசலம் , கம்பீரமாக ஆயிரக்கணக்கான அடிகள் ஆகாயத்தில் ஊடுருவிக் கொண்டு , எங்கள் தலைக்கு மேலே உயர்ந்து நிற்கிறது. மலை ஒரே செங்குத்தாக இருக்கிறது. ஆச்சரியத்துடன் நான் தலைநிமிர்ந்து பார்க்கிறேன். என் நண்பர் சொன்ன வார்த்தைகளினாலோ அல்லது வேறெக்காரணத்தினாலோ அறியேன் , அந்த மலையின் உருவத்தை நினைக்கவும் என் மனத்திலே ஒருவிதமான பயபக்தி உண்டாகிறது.

என் நண்பர் பின்னும் பேசுகிறார்.  இந்தமலை புனிதமானது என்பது மட்டும் அல்ல. இந்த இடந்தான் உலகத்துக்கெல்லாம் பேரின்பவீடு என்பதைக் குறிப்பிடவே தேவர்கள் இந்த மலையை இங்கே இருத்தினார்கள் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. இது ஒரு வெறும் கபடமற்ற கட்டுக்கதை யென்று எனக்குப் புலப்படுகிறது.

--- பிரன்டனின் பயணம் தொடரும்.

**************************************************************
கட்டுரை ஆங்கில மூலம் பால் பிரன்டன்

தமிழாக்கம் --- திருப்பராய்த்துறை ஸ்ரீ மத் சித்பவானந்த சுவாமி.

கட்டுரை : 1935 ஆம் ஆண்டு மார்ச் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில்  ஐரோப்பா இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை வருகிறது  என்ற தலைப்பில் வெளியானது.

26
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  2
---------------------------------------------------------
நான் கண் அயற்கிறேன் , பலவிதமான கனவுகள் காணுகிறேன். தூக்கம் இடையிடயே கலைந்துபோகிறது. என்றாலும் நித்திரை முழுவதும் நீங்குவதில்லை. சில மணிநேரம் தூங்கிவிடுகிறேன். முடிவில் என் நண்பர் என்னை எழுப்புகிறார். இரண்டு பேரும் ஒரு சிறு ஸ்டேஷனில் இறங்குகிறோம். நல்ல இருட்டு ; எங்கும் நிச்சப்தம். கீச். என்று கூச்சல் போட்டு விட்டு வண்டு தடதடவென்று உருண்டோடி மறைகிறது. பொழுதுவிடிய இன்னும் நேரம் செல்லும். ஆகவே , நாங்கள் பிரயாணிகள் தங்கும் அறைக்குப் போகிறோம். அந்த அறையிலே உட்காரப்படுக்க ஒன்றுமே கிடையாது. விளக்குக்கூட இல்லை. நாங்கள் போய்த்தான் அங்கிருந்த விளக்கைக் கொளுத்துகிறோம்.

எப்போதும் இருள் நீங்கும் , பொழுது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருளை வெளிச்சம் எடுத்து விழுங்குகிறது. கிழக்கு வெளுத்து வருகிறது. அறையின் பின்புறத்தில் உள்ள சிறு ஜன்னலின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சம் நுழைந்து வருகிறது. நான் எட்டிப் பார்க்கிறேன். சுற்றிலும் உள்ள பொருள்களில் சிற் சில என் கண்களுக்குப் புலனாகின்றன. சில மைல்களுக்கு அப்பால் தனித்த ஒரு குன்றின் உருவம் மங்கலாகக் காணுகிறது. அதன் அடிவாரம் மிகவும் பரந்து தோன்றுகிறது. குன்றும் பருத்த தோற்றத்தையே காட்டுகிறது. ஆனால் அதன் சிகரம் மூடு பனியிலே மறைந்து கிடக்கிறது. இன்னும் நன்றாகப் பொழுது புலரவில்லை ; மப்பு நீங்கவில்லை.

என் நண்பர் வெளியே போகிறார். வண்டி ஒன்று வேண்டும் அல்லவா  ஒரு மாட்டுவண்டியில் வண்டிக்காரன் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறான். நண்பர் இரண்டொருதரம் சத்தமிட்ட பின்பே அவனுக்கு விவகார உலகத்தைப்பற்றியே நினைவு வருகிறது. வண்டிக்கு ஆள் வந்திருப்பதை தெரிந்து கொள்ளுகிறான். நாங்கள் போக வேண்டிய இடத்தைக் குறிப்பிடுகிறோம். வேறு வார்த்தை இல்லை , உடனே ஆவலுடன் சம்மதிக்கிறான். நான் அவன் வண்டியைப் பார்க்கிறேன். இரண்டு சக்கரங்கள் ; அவைகளின்மேல் பொருத்திய ஒரு மூங்கில் கூடு. இவ்வளவுதான் வண்டி. அதில் ஏறலாமா என்று கொஞ்சம் யோசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது  வேறு வழியில்லை. நாங்கள் ஏறிக் கொள்ளுகிறோம். வண்டிக்காரன் எங்கள் சாமான்களை எடுத்து வண்டியில் போடுகிறான். என் நண்பர் அப்படி இப்படி நெருக்கிக் கையகல இடத்தில் மூட்டை கட்டினாற்போல் உட்கார்ந்து கொள்ளுகிறார். எப்படித்தான் அவ்வளவு சிறிய இடம் அவருக்குப் போதுமானதாக இருக்கிறதோ எனக்குப் புரியவில்லை. நானும் குனிந்து உட்கார்ந்து கொண்டு காலைத் தொங்கவிட்டுக்கொள்கிறேன். வண்டிக்காரன் ஏர்க்காலின்மேல் குந்திக் கொள்ளுகிறான். அவனது கால்கள் இரண்டும் ஊசலாடுகின்றன. இப்படியாக எல்லாரும் ஒருவாறு இடம்பிடித்துக்கொண்ட பிறகு வண்டி புறப்படுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கிறோம்.

மாடுகள் இரண்டும் தங்களால் முடிந்த மட்டும் வேகமாகவே போகின்றன. ஆயினும் என்ன  வழி சீக்கிரம் தீருவதாகக் காணோம். இந்தியாவில் , உள்பிரதேசங்களில் எருதுகள் மிகவும் உபயோகமானவை உஷ்ணத்தைப் பொறுத்துக் கொள்வதில் அவை குதிரைகளைக் காட்டிலும் சிறந்தவை. அவைகளின் பரமாரிப்புக்காகச் செலவும் அதிகம் ஆவதில்லை. தீனி விஷயத்தில் குதிரைகளைப் போல அவை அவ்வளவு சொகுசுடையவைகளல்ல. கிராமங்களிலும் சிறு பட்டணங்களிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பழக்க வழக்கங்கள் மாறுபடவே இல்லை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்போலவே இன்றைக்கும் மாட்டு வண்டிகள் போக்கு வரத்துச் சாதனமாய் இருந்து வருகின்றன.

எங்கள் வண்டிக்காரன் மாநிறம் , தனக்கும் ஒரு ஜோடி எருதுகள் இருக்கின்றன வென்று அவனுக்குக் கொஞ்சம் பெருமை போல் இருக்கிறது. அவைகளின் கொம்பின் முனைகளின் முனையில் கொப்பிகளும் கால்களில் சிறு சதங்கைச் சரங்களும் பூட்டியிருக்கிறான். எருதுகளின் மூக்கின் வழியாகக் கோர்க்கப்பெற்ற கயிறுகளின் உதவியால் அவன் அவைகளைச் செலுத்திக்கொண்டு போகிறான். பாதையில் புழுதி படிந்து கிடக்கிறது. எருதுகள் அசைந்து ஒய்யாரமாய்க் கால்வீசி நடக்கின்றன , நான் வேகமாய் வருகிற சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எங்களுக்கு இரண்டு பக்கங்களிலும் நிலத்தோற்றம் ரம்மியமாக உருக்காட்டுகிறது. வெறும் சம வெளியாக அல்லாமல் , அங்கங்கே மேடுகளும் குன்றுகளும் தோன்றுகின்றன. அந்தப் பிரதேசம் செம்மண்பூமி. சாலை அதனுள் பிளந்துகொண்டு போகிறது. சிற்சில இடங்களில் முள் செடிகளும் புதர்களும் இருக்கின்றன. அழகிய பசுமையான நெல்வயல்கள் சிலவற்றையும் பார்க்கிறேன்.

ஒரு குடியானவன் எங்களைக் கடந்து போகிறான். நீண்ட கால உழைப்பினால் அவன் முகம் அழுத்துக் காணுகிறது. வழக்கம்போல அன்றும் வேலைக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறான். இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு சிறுமி தண்ணீர் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறோம். அவள் தலைமேல் ஒரு செப்புக்குடம் இருக்கிறது. ரத்தம் போலச் சிவந்த மூக்குத்தி ஒன்று அணிந்து கொண்டிருக்கிறாள். கைகளில் இரண்டு தங்கக் காப்புகள் இள வெய்யிலில் மின்னுகின்றன. அவள் நிறம் கருப்பு. அதனால் அவள் திராவிடப்பெண் என்று ஊகிக்கிறேன். இந்தத் திராவிடப் பெண்கள் இயற்கையாகவே உல்லாசமான சுபாவத்தையுடையவர்கள். பேச்சு வளர்ப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். அதில் , மற்ற இந்தியப் பெண்கள். அவர்களுக்கு நிகராக நிற்க முடியாது. அவர்களுடைய சாரீரம் மிகவும் இனிமை பொருந்தியது.

அந்தப்பெண் ஆச்சரியத்துடன் இமை கொட்டாமல் எங்களை உற்றுப் பார்க்கிறாள். வெள்ளைக்காரர்கள் அந்தப் பக்கங்களில் போவது மிகவும் அபூர்வம்.

கடைசியில் ஊர்வந்து சேருகிறோம்.

---- பிரன்டனின் பயணம் தொடரும்.

from fb ramana mandiram madurai

27
ஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்  1
-----------------------------------------------------
எல்லா மேன்மைகளும் மேல் நாடுகளில்தான் இருக்கின்றன என்கிற கொள்கை இப்போது மாறி வருகிறது ; தங்களுடைய நாகரீகம் எவ்விதத்திலும் ஏனையவைகளுக்குக் குறைந்ததல்ல என்பதை இந்துக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தியா ஒன்றுதான் புண்ணிய பூமியென்று , வாழ்வின் முடிவான லட்சியத்தை அடைய விரும்பும் வெளி தேசத்தவர்கள் இங்குதான் வந்து சேர வேண்டும் என்றும் சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தர் பகர்ந்தருளியுள்ளார். நாளேற ஏற அக்கூற்றும் பலவிதங்களில் நிரூபிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம்.

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு பால் பிரன்டன் என்னும் பெரியார் இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை வந்தார். கோவில் குளங்களைப் பார்க்க வேண்டுமென்று அவர் வரவில்லை. மேல் நாட்டு வாழ்வில் அவருக்கு ஆத்ம சாந்தி உண்டாகவில்லை. எல்லாம் வெறும் பகட்டும் பதைபதைப்புமாகவே அவருக்கு விளங்கின. இந்தியாவில் மறைந்து கிடக்கும் யோகிகள் தமக்கு ஏதாவது சாந்தியளிக்க முடியுமா வென்று அவர் பன்முறை எண்ணிப் பார்த்தார். பிறகு தாமே நேரில் சென்று பார்க்கவேண்டுமென்று தீர்மானித்தார். படாத பாடு பட்டுச் சில பெரியார்களை அவர் வந்து தரிசிக்க நேர்ந்தது , தமது அனுபவங்களை யெல்லாம் ஒரு நூலாக எழுதி அவர் வெளியிட்டிருக்கிறார். அதிற் சில பாகங்களை அவரது அனுமதிபெற்று மொழி பெயர்த்து ஈண்டு வெளியிடுகிறோம்.

என்னை அழைத்துச் செல்ல ஏற்றுக் கொண்ட சாது சுப்ரமண்யமும் நானும் சென்னை எழும்பூரில் ரயில் ஏறுகிறோம். வண்டி ஓட ஆரம்பிக்கிறது. நேரமும் பறக்கிறது. இரண்டு பக்கங்களிலும் வேறுவேறான காட்சிகள் பல தோன்றுகின்றன ; பசுமையான பரந்த நெல்வயல்கள் ; சிறிய செங்குன்றுகள் ; நீண்டு நிழல் நிறைக்கும் தென்னந்தோப்புகள் ; மனிதர்கள் உழைக்கும் வயல்புறங்கள்.

மாலை வேளை விரைந்து வருகிறது. இருள் குவிகிறது. வெளியே உள்ள பொருள்களின் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகிறது. ஜன்னலை விட்டுத்திரும்பி நான்வேறு யோசனையில் ஈடுபடுகிறேன். பிரமன் என்ற அட்டயோகி கொடுத்த தங்கமோதிரத்தை அணிந்து கொண்ட பிறகு நடந்த விந்தையான சம்பவங்களை எண்ணி நான் ஆச்சரியப்படுகிறேன். ஏன் , என் பிரயாணத்திட்டமே அடியோடு மாறுபட்டு விடவில்லையா  எதிர்பாராத விதமாக ஒன்றன்பின் ஒன்றாக வந்த நிகழ்ச்சிகள் நான் எண்ணியபடி வட கிழக்கே போக முடியாமல் செய்துவிட்டன. அதற்கு மாறாகத் தெற்குநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். அந்த யோகி சொன்னபடி , இத்தங்க மோதிரத்தின் நடுவில் பதிந்து கிடக்கும் கல்லுக்கு அற்புத சக்தி ஏதாவது உண்டா  அப்படி ஏதாவது ஒன்று இருக்க முடியுமா என்று என் நெஞ்சிலே கேள்விகள் எழுகின்றன. மோதிரம் ஒன்று மனிதனது ஜீவியத்தை மாற்ற வல்லதா

பௌதிக சாஸ்திர முறையில் பயிற்சி பெற்ற உள்ளத்தையுடைய மேல் நாட்டான் ஒருவன் இதில் அவ்வளவு சுலபமாக நம்பிக்கை வைக்கமாட்டான். ஆயினும் உண்மையை ஏற்றுக் கொள்ள என் மனம் எப்போதும் தயாராய் இருக்கிறது. மோதிரத்தில் அற்புதம் உண்டு என்ற நம்பிக்கையை விரட்டி அடிக்க முயற்சிக்கிறேன் , என்றாலும் அது முழுவதும் என்னைவிட்டு அகலுவதாக இல்லை. என் எண்ணத்துக்கு மாறாக நான் ஏன் இப்போது திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்  காஷாயம் தரித்த அந்த இரண்டு துறவிகளும் மஹரிஷியிடம் போகுபடி என்னை ஏன் வற்புறுத்த வேண்டும்  தெய்வாதீனமா இது  தெய்வாதீனம் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. ஆனால் வேறு விதமாக இதைக் கருதவும் வகை அறியேன். அற்பமானவைகளாகக் காணப்படும் சிறுசிறு சம்பவங்களும் சில சமயங்களும் சில சமயங்களில் ஒருவனது வாழ்க்கை அமைப்பைப் பெரிதும் மாற்றக்கூடும் என்று நான் கடந்த அனுபவத்தினால் நன்றாக அறிந்திருக்கிறேன்.

விழுப்புரத்தில் நாங்கள் ரயிலை விட்டு இறங்குகிறோம். புதுச்சேரி இங்கிருந்து நாற்பது மைல் தூரம். இதுதான் இன்னும் பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமாக மிஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு துண்டு நிலம். நாங்கள் இறங்கின இடத்தில் வண்டி மாற்றவேண்டும். உள் பிரதேசத்தில் ஓடும் கிளைப்பாதையை நோக்கிச்செல்லுகிறோம். அந்தப்பாதையில் போக்குவரத்து என்பதே இல்லைபோல் இருக்கிறது. எல்லாம் ஒரே அமைதி. நாங்கள் சுமார் இரண்டு மணிநேரம் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். பிரயாணிகள் தங்கும் அறை இருளடைந்து கிடக்கிறது. நான் அதில் உட்கார்ந்துகொள்ளுகிறேன். என்னை அழைத்து வந்து சாது வெளியே உலாவிக் கொண்டிருக்கிறார் வெளிப்புறமோ அறையைவிட இருளடைந்து தோன்றுகிறது. நட்சத்திர வெளிச்சத்தில் அவருடைய உயர்ந்த உருவம் சாயைபோன்று தென்படுகிறது. அவர் மனிதர்தானோ அல்லது பூதகணமோவென்று சந்தேகப்படவேண்டும். அரிதாக ஏதோ சிலதடவை மட்டும் ஓடும் வண்டியும் கடைசியாக அகால வேளையில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது. வண்டிகள் பிரயாணிகள் வெகு சிலரே இருக்கின்றனர்.

---- பிரன்டனின் பயணம் தொடரும்.

from fb ramana mandiram madurai

28
With deep feeling Suri Nagamma read out her poem to us:

Arunachala Ramana!
Ever since at your feet I myself laid
My mind sought not another abode.
Never had I prayed for any physical gain.
'Bestower of Boons' I do so now in pain.
Cancer forged in me a dwelling,
Killing me without killing.
I crave not that it disappear
But that I bravely forebear and surrender.
Grant me the calm with which you bore a tumor,
Make me your daughter, fit to have forever.
Loath to see thee suffer, asked I for a share.
And now that it is given, my strength has left me.
Besides the pain, a share of thy peace
Grant me, O Lord, 'The Slayer of Disease'.

Needless to say, Suri Nagamma's prayer was again answered, and more. She was given the calm and her 'Slayer of Disease' did his part too. A remarkable cure ensued, she was enabled to reside in Ramanasramam several months after she had regained her strength. Then, when on a visit to Bangalore, she left her mortal frame on March 31st, 1980, after a short illness.

from the newsletter march april 2018 of Arunachala Ramana New york ashramam

29
Reminiscences of R. Naryana Iyer

0ne hot Sunday afternoon an old devotee placed before Bhagayan some palmyra fruits (nongu). Bhagavan severely remarked: "Why do you do this daily? You are a sanyasi .You must beg of others the wherewithal to procure these. You must say that they are for me. You know that I cannot eat them without others present sharing them and so you have to get some quantity and this you do using my name as though I desire it. Can't you keep quiet and mind your own business? You prostrate before me and think that you have won me over. Every prostration is like a blow on my head. All sorts of things are done outside these four walls with impunity, as though these walls hide and protect them. Who likes these prostrations? And on and on he went in a tirade against all and sundry who posed like pious men but were hiding a lot of impurity. It was not one individual that was attacked. The atmosphere in the hall was tense, and one by one, the devotees sneaked out .But such moods were only momentary, and he could switch to his wonted geniality the next instant.

from Boundless Ocean of Grace Arunachala Ramana

30
Find devotees in your area / Re: Devotees from Dallas,TX
« on: February 28, 2018, 05:00:43 PM »
Mr gopal pl see the satsang centres.

https://www.sriramanamaharshi.org/centres/directory/

Pages: 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 ... 76