Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19 20 ... 78
136
General Discussion / Re: Articles,Interviews,News
« on: August 24, 2016, 06:21:20 PM »
திருமதி சுலோசனா நடராஜன் அவர்கள் நேற்று (23/8/2016 செவ்வாய்க்கிழமை) பெங்களூரில் காலமானார்.
தமது 12 ஆவது வயதிலேயே (1949 ஆம் ஆண்டு) பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் திருமதி சுலோசனா நடராஜன். இவரது தகப்பனார் நீதிபதியான திரு. கே.எஸ். வேங்கடராமன் ஆவார்.
ஸ்ரீபகவான் சந்நிதியில் அமைதி நிலவியதை சுலோசனாவால் சிறுவயதிலேயே உணர முடிந்தது. ஸ்ரீபகவான் ஹாலில் பெற்றோருடன் அமர்ந்திருந்து கற்றுக்கொண்ட, ஸ்ரீமுருகன் பாடல்களை மனதிற்குள் பாராயணம் செய்வதும், கண்மூடி தியானத்திற்கு முயற்சிப்பதுமாக இருந்தவர் ஒருமுறை, கண்விழித்துப் பார்த்தபோது, ஸ்ரீபகவானது அநுக்கிரகப் பார்வை தம்மீதே பதிந்திருப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தார்.
சுலோசனாவிற்கு 1952ல் பிப்ரவரி மாதம், வருமான வரி அலுவலரான திரு. ஏ.ஆர்.நடராஜனுடன் திருமணம் நடந்தேறியது. இவரது பாட்டனார், நீதிபதி ஏ.எஸ் கிருஷ்ணசாமி அய்யரும் ஸ்ரீரமண பக்தரேயாவார்.
மணவாசி ராமசாமி ஐயர் அவர்களின் சரணாகதி பாடலே இவர் கற்றுக் கொண்ட முதல் பாடலாகும். டெல்லியில் இருந்தபோது பேராசிரியர் கே. சுவாமிநாதன் இவருக்கு ரமண சந்நிதிமுறை புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருந்து பாடல்களை கற்கும்படி அறிவுறுத்தியது இவரது சங்கீத ஆர்வத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்தப் புத்தகத்தை இவர் திறந்தபொழுது முதல் பாடலாக ரமண திருமந்திரம் என்ற தலைப்பில் நமோ ரமணாயவே என்று துவங்கும் பாடலைக் கண்டார். அதை தனது அடுத்த சத்சங்கத்திலேயே இசையமைத்துப் பாடவும் செய்தார். பின்னர் வைத்த பத்து துவங்கி தொடர்ந்து பல நூறு பாடல்களுக்கு இசை அமைத்துப் பாட ஆரம்பித்தார். ரமணாஞ்சலி என்ற இசைக்குழு தோன்றியது.
இசை அவருள் ஊறி அவரது வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்தது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ரமண பகவான் இயற்றிய மற்றும் அன்னாரைப் பற்றிய மற்ற பாடல்களில் திருமதி நடராஜன் அவர்களின் அயராத உழைப்பும் ஈடுபாடும் மிளிர்வதை அறியலாம். இவர் இசை உலகிற்கு பல கலைஞர்களை ரமணாஞ்சலி மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரமண உபதேசங்களை, இசைவடிவாக பெரும் முயற்சியுடன், பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி ஸ்வர-தாளக் குறிப்புகளுடன் ரமண சங்கீதம் என்ற பெயரில் நான்கு பாகங்களாக அளித்துள்ளார்.
தமது ஆன்மிக சாதனையின் மார்க்கமாக இசையைத் தேர்ந்தெடுத்து ரமண உபதேசத்தை இசைமூலம் பரப்பிவந்த திருமதி சுலோசனா நடராஜன் ஏனைய அன்பர்களையும் அதில் திளைக்கச் செய்து பாராட்டுதற்குரிய சீரிய தொண்டாற்றி வந்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பகவான் ரமண மகரிஷிகளைப் பிரார்த்திக்கிறோம்.

137
General Discussion / Re: Articles,Interviews,News
« on: August 24, 2016, 01:20:21 AM »
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 6.2.2017 (தை மாதம் 24) அன்று வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது

Tiruvannamalai Arulmigu Arunachaleshwarar Temple Kumbabishegam will Held on 6.2.2017

138
தனக்கு நேர்ந்த ஒளிமய (photism)அனுபவத்தை ஸ்விஸ் மாது ஒருவர் (ஸ்விட்சர்லாந்தினர்) ஸ்ரீ பகவானிடம் விவரித்தார்:

கண்களை அகலத் திறந்து அமர்ந்திருந்தபொழுது, ஸ்ரீ பகவானுடைய முகம் உன்னதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீகக் குழந்தையின் முகம்போன்று தோன்றியதை கண்டேன். அக்குழந்தை முகத்தின்பால் அன்பின் வயப்பட்டு ஈர்க்கப்பட்டேன்.
மகரிஷி: இக்காட்சி உங்கள் மனத்தில் இருக்கிறது. உங்களுடைய அன்பே (அதற்குக்) காரணம்.
மகரிஷி: காட்சிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். தூல உடலினை நீங்கள் காண்கிறீர்கள். ஆதலால் குறைபாடுகளை நீங்கள் காண்கிறீர்கள். காலமும் தேசமும் இந்தத் தளத்தில் வேலை செய்கின்றன. மாறாக, உண்மையான மகரிஷியைப் பற்றிய அறிவு கிடைத்ததெனில் அது அனைத்துச் சந்தேகங்களையும் போக்கிவிடும்.

இப்பொழுது, நீங்கள் இந்தியாவினுள் இருக்கின்றீர்களா? அல்லது இந்தியா உங்களுள் இருக்கிறதா? இந்தியாவில் நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் நினைப்பு அகல வேண்டும். இந்தியாதான் உங்களுள் இருக்கின்றது. இதை மெய்ப்பிக்க, உங்களது உறக்கத்தைக் கவனித்துப் பாருங்கள்.
உறக்கத்தில் இருந்தபொழுது நீங்கள் ஐரோப்பாவிலோ, இந்தியாவிலோ இருந்தீர்கள் என்றா உணர்ந்தீர்கள்? இடம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. தூல உடல்தான் இடத்தினுள் இருக்கின்றது. நீங்கள் இல்லை.
சில நிமிடங்கள் கழித்து, இதுபோன்ற காட்சிகள் காண்பது சாதகமா அல்லது பாதகமா என்று வினவினார்.
மகரிஷி: சாதகமே.
ஒருவேளை ஒரு குழந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அது காட்சியில் தோன்றியிருக்கிறது.

அன்பர்: ஆம். சிவனைப் பற்றியே, அவருடைய குழந்தை முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

மகரிஷி: அதுதான்.
அன்பர்: ஆனால், சிவனோ அழிப்பவர் ஆயிற்றே? (சிவன் குழந்தை இல்லையே என்பது பொருள்)
மகரிஷி: ஆம். அனைத்துத் துக்கத்தையும் அழிப்பவர்.

from the fb

139
சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும்
-------------------------------------------------
மகாதேவ ஐயர் என்ற பக்தர் ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மாத காலமாக விடாமல் விக்கல் ஏற்பட்டது. இதைப் பார்க்கச் சகியாமல் அவருடைய மகன் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குக் கடிதம் எழுதி, தன் தந்தையின் துன்பத்தை நீக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார். இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, மகனுக்குத் தந்தை மேல் இருந்த அக்கறை. இரண்டாவது, பகவான் இதைப் போக்கிவிடுவார் என்ற முழு நம்பிக்கை.
கடிதம் பகவான் கையை எட்டியது. பகவான் தம் அருகிலிருந்து டி.கே. சுந்தரேசய்யரிடம் காய்ந்த சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்னு கடிதாசு எழுது என்று கூறினார். பவரோகத்துக்கு மருந்து தரும் ஞானவைத்தியரான பகவான், தன் அன்பரின் உடல் ரோகத்துக்கும் மருந்து சொல்வதை அற்பமாகக் கருதவில்லை. பாசமுள்ள மகனின் அக்கறையும், நம்பிக்கையும் பகவானின் கருணை என்ற சர்வரோக நிவாரிணியைப் பெறத் தவறவில்லை.

பகவான் மருந்து சொன்னதோடு நிற்கவில்லை. அங்கே மாதவன் என்பவர் சேவை புரிந்துவந்தார். அவரைப் பார்த்து, இந்த மருந்து நம்மிடம் தயாராக இருக்குமே! அதைத் தேடி எடுக்க முடியுமா பார்! என்றார். மகரிஷிகள் மாதவனுக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை, வேண்டுகோள் விடுத்தார் என்பதை இந்த வார்த்தைகளில் நாம் கவனிக்க வேண்டும். நாமெல்லாம் செல்லுமிடத்தில் அதிகாரம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் மேலோர்களிடம் வினயம் மேலோங்கிக் காணப்படும். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்று இதைத்தான் வள்ளுவர் குறிப்பிட்டார். வித்யா வினய சம்பன்னே (கல்வி பணிவைத் தரும்) என்றும் பண்டித சமதர்சினஹ (எல்லோரையும் சமமாக நோக்குகிறவன் அறிஞன்) என்றும் பகவத் கீதை (5:18) குறிப்பிடுகிறது. எதனை அறிந்தபின் வேறெதையும் அறிய வேண்டுவதில்லையே அதனை அறிந்த பகவான் வினயமாக நடந்ததில் வியப்பேது!

பகவான் கேட்டதும் மாதவன் அந்த மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு சிறிய உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகவான் மிச்சத்தை எல்லோருக்கும் வினியோகிக்கச் சொன்னார். எவ்வளவு அரிய பொருளாயினும் பகவான் அதைத் தான்மட்டும் உண்ணும் வழக்கம் கிடையாது. அத்தகைய பாரபட்சங்களை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று(மரணமில்லா வாழ்க்கை தரும் அமுதத்தைக் கூட வேண்டமாட்டார்கள்) என்றல்லவா நம் முன்னோர் கூறினர். அப்படியிருக்க இந்த மருந்து எம்மாத்திரம்

பகவான் தாமும் சாப்பிட்டு எல்லோருக்கும் அந்த மருந்தை வினியோகித்த பின் சுந்தரேசய்யரிடம், சரி, இன்றைக்குச் சாயங்காலத் தபாலிலேயே மகாதேவ ஐயருக்குக் கடிதம் எழுதிவிடு என்றார். இனி அதற்கென்ன அவசியம் பகவானே! அவருக்காகத்தான் பகவான் மருந்து சாப்பிட்டாச்சே! என்று வேடிக்கையாக சுந்தரேசய்யர் கூற பகவான் பலமாகச் சிரித்தார். ஆனால், பகவான் கூறியபடிக் கடிதம் போயிற்று. இது அங்கே போய்ச் சேரும் நேரம், சென்னையிலிருந்து கடிதம் வந்துவிட்டது, அதில் பகவான் மருந்தை உட்கொண்ட அதே நேரத்தில், அதாவது முந்தைய நாள் மதியம் 1.00 மணி அளவில், தனது தந்தையின் விக்கல் நின்றுபோனது என்ற தகவல் இருந்தது.

140
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: August 21, 2016, 01:55:03 AM »
Arunachala Temple

141
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: August 21, 2016, 01:48:42 AM »
Arunachala Temple

142
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: August 21, 2016, 01:47:09 AM »
skandashramam

143
General Discussion / Re: sri nochur 's pravachanam at asram
« on: August 20, 2016, 06:54:34 PM »

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் அருண விஜய விழா மற்றும் ஸ்ரீ முருகனாரின் ஆராதனை விழாவினை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டை ஸ்ரீ ரமணாலயத்தில் ஆகஸ்ட் 26 & 27 வெள்ளி , சனி ஆகிய தினங்களில் மாலை 6..00 மணியிலிருந்து 7.30 மணி வரை பிரம்ம ஸ்ரீ ரமண சரண தீர்த்தர் நொச்சூர் வெங்கட ராமன் அவர்களின் சொற்பொழிவு நடைபெறும். ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பகவான் அருள் பெற வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு திரு. குமார ராஜ மொபைல் எண் 9444261296

144
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: July 29, 2016, 12:02:04 AM »
Aaadi Kiruthigai

145
Ashrams / Re: Ramana Ashram
« on: July 28, 2016, 11:56:51 PM »
Tamil Parayana

146
General Discussion / Re: sri nochur 's pravachanam at asram
« on: July 12, 2016, 01:21:02 PM »
Om Namo Bhagavate Sri Ramanaya.

With Anna's blessings, a YouTube channel has been started to make it easy for seekers to get all of Anna's pravachanams on YouTube in one place. You can access it at
https://m.youtube.com/channel/UCVPdg3L3kV-dNHDuLoceIjA
To begin with, we have uploaded 3 Pravachanams and are in the process of uploading more. Over a period of time, we plan to have all of Anna's Pravachanams in this Channel. Some will be free of cost and others paid.
Please feel free to subscribe to the Channel, if you would like to get ongoing updates (This will also help us in opening up more YouTube features). If you know others who may be interested, please forward the link to them too.
If you have any inputs or questions, please contact us at:
Email: voice.of.rishis@gmail.com or
Phone: Mouli (+91 98452 88941), Vidya (+91 90430 12134) or Ganesh (+91 96207 88358)
- Rishi Prakasana Sabha

from the fb

147
General topics / Re: Mathru Sri Sarada
« on: July 11, 2016, 01:38:02 PM »
Sri Lakshmna swami ashramam Thiruvanamalai

148
General topics / Re: Mathru Sri Sarada
« on: July 11, 2016, 01:27:15 PM »
Dear forum member

Here is a  web site for mathrusrisarada amma

http://mathrusrisarada.org/

149
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: July 05, 2016, 11:01:46 AM »
Sri Ramana pujai

150
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: July 05, 2016, 11:00:29 AM »
Bhagavan's birth place  Photo

Pages: 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19 20 ... 78