Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - atmavichar100

Pages: 1 ... 98 99 100 101 102 103 104 105 106 107 [108] 109 110 111 112 113 114 115 116 117 118 ... 156
1606
Few Days back I had posted a poem from Saint Ramalingam asking for the explanation of a particular line given below :
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

The words எட்டும் இரண்டும் is a mystical word that occurs in Tamil Scriptures and many take the literal meaning of 8,2 and derive only superficial meaning for the same . I have found a deeper explanation for the term எட்டும் இரண்டும் given below from an online blog :


-

எட்டும் இரண்டும்
http://suthasivam.blogspot.in/2010/10/blog-post_29.html
 
       இதில் 8 என்பது அ என்பதை குறிக்கும். அ - அகராம் என்றால் உயிராகும். 2 என்பது தமிழ் எண் வடிவத்தில் ௨ என்பதாகும். ௨ - உகாரம் உடலை குறிக்கும்.

"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"

  - Thirumular's Thirumantiram

உடலையும் உயிரையும் சேர்க்கும் முறையை அறிவினால் அறிந்தால் உடலும் உயிரும் லிங்கம் (சிவம்) ஆகும் என்பது இறவாநிலை ஆகும். உயிர் உடலை பிரியவிட்டால் இறப்பு வராது.  இறப்பு வரவில்லை என்றால் பிறப்பு வராது.
 
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்.
- Vallalar in Thiruarutpa
 
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும். 10 வரும்.  நம் உடம்பில் ஒன்பது வாசல் உள்ளது இது எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் பத்தாவதாக ஒரு வாசல் இருக்கிறது.  அந்த வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.
 
எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே

 
இடது மூக்கு வழியாக செல்லும் காற்றுக்கு -  இடக்கலை என்றும். வலது மூக்கு வழியாக செல்லும் காற்றுக்கு -  வடகலை என்றும் சொல்லுவார்கள். மூலாதாரம் என்பது எல்லோரும் முதுகு தண்டின் அடிவோரத்தை சொல்லுவார்கள்.  ஆனால் உடம்பு எடுப்பதற்கு மூலகாரணமாகிய உயிர் ஆகிய ஆகாரமே மூலாதாரமாகும். உயிர் இருக்கும் இடமே சுழுமுனை (உத்திர ஞானசபை) . ஆக எட்டு என்பது புலன்கள் ஐந்தும்  ஆகாரம் ஒன்றும் இடகலை வடகலை இரண்டும் சேர்ந்த கூட்டுதொகை ஆகும். இந்த எட்டும் சேரும் போது சத்தம்( நாதம்)  உண்டாகும்.  அந்த சத்தம் சங்கின் ஓசை ஆகும் அதில் பிரணவ ஒலியாகிய ஓம் என்று ஒலிக்கும் பின்னர் சத்தம் அடங்கி சத்தம் இல்லாத இடத்தில  உகாரத்தில் என்ற உடம்பில் ஒடுங்கும். உடம்பு சித்தி பெரும்.
 தேகம் ஞானமடி- அகப்பை சித்தர் பாடல்.  ஞான வடிவம் பெற்றுகொள்ளலாம்.
 
       இதனால் தான் சிறு ஒளி கண்டு ஏமாந்து விடாதீர். அதற்கு பின்னல் நாதம் ஒலிக்கும் அது அடங்கும் பின்னரே சும்மாஇருக்கும் சுகம் கிடைக்கும்.

ஆடாதீர் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்
பொய் உலகைநம்பாதீர்
என்கிறார் வள்ளலார்
 
இது இறைவனாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மேல் அசையாத ஆடாத நம்பிக்கையுடன் மாறாத அன்புடன் இருந்தால் மட்டுமே விளங்கும்.
 
     சும்மா இருந்தால் சோத்துக்கு நஷ்டம் வரும்.  சும்மா இருந்தால் தானே சோத்துக்கு நஷ்டம் வரும்.  அப்போதுதான் சோற்றை மறந்து சுத்ததேகம் அடையலாம்.  ஆதலால் சும்மாயிருக்கும் வழி அறிந்து சும்மா இருக்க கற்போம்
 
          பெருமாள் கையில் சங்கு சக்கரம் எதற்கு நாமம் எதற்கு நாமத்தில் நடுகோடு சிவப்பு வர்ணம் ஏன். சிந்தியுங்கள்.
சங்கு - நாதம்.
சக்கரம் - ஒளி
நாமம் - இடகலை, வடகலை. நடு - ஆகாரம்(உயிர்) (பொன்னம்பலம்) (செவ்வொளி) செஞ்சுடர்.
 
     இப்போது இறைநிலையை அடையும் வழியை நம் முன்னோர்கள் காட்டிய குறிபேடுகள் இப்போது விளக்கும்.
 
என்றும் அன்புடன்,
உயிர்.
 

1607
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: July 13, 2013, 08:04:16 AM »
Here Kanchi Paramacharya talks about the futility of trying to convince Atheists / Rationalists about the existence of something beyond 5 senses that were discovered by our sages .


"The sages transcended the frontiers of human knowledge and became one with the Universal Reality. It is through them that the world received the Vedic mantras, “this is one of the basic concepts of our religion. If you do not accept that human beings can obtain such Atmic power as exemplified by these seers, any further talk on the subject would be futile. One could point to you great men whom you can see for yourself, great men who have perfected themselves and acquired powers not shared by the common people. But if you think of them to be cheats or fraudulent men, any further talk would again be useless. In your present state of limited understanding, the argument that denies the existence of anything beyond the range of human reason and comprehension itself betrays the height of rationalism.

Kanchi Paramacharya

1608
Tamil Poet Barathidasan's first song was on Mother Goddess and I am sharing it herehttp://silambukal.blogspot.in/2012/09/blog-post_1198.html
எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’

1609
This song Shanmugar Varugai of Vallalar in first Thirumurai is similar to Kalai Pattu from Sri Ramana Stuti Panchakam .Vallalar addresses this song to Lord Shanmuga while in Ramana Stuti Panchakam it is addressed to Bhagavan Ramana . Here both the poems have 10 verses each .

முதல் திருமுறை
51. சண்முகர் வருகை

Source :
http://thiruarutpa.vallalar.org/
( 538 )
வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்

( 539 )
சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முக நாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்

( 540 )
பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும்
மின்னார்முந் நூலரே வாரும்

( 541 )
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்

( 542 )
செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்

( 543 )
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில்அகத் தோரே வாரும்

( 544 )
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும்

( 545 )
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்

( 546 )
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்

( 547 )
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு தோளரே வாரும்
பொன்மலர்த் தாளரே வாரும்

( 548 )
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மாமயில் வீரரே வாரும்
தீமையில் தீரரே வாரும்

( 549 )
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிர மணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்

1610

This song called Shanugar Kommi of Vallalar in the First Thirumurai is addressed to Lord Shanmuga ( Muruga ) and this song is similar to the KummiPattu in Ramana Stuti Panchakam . Once I find the Unicode version of Ramana's song online ,I will copy paste it here so that people can study both the songs .Only difference here is that Vallar has given it in 15 verses while the Ramana one is given it in 10 verses .But the Ramana stuti Panchakam was written by one Sri  Satyamangalam Venkataramana Iyer on Bhagavan Ramana .


முதல் திருமுறை
50. சண்முகர் கொம்மி

Source :
http://thiruarutpa.vallalar.org/
( 523 )
குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி அடியுங்கடி

( 524 )
மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமையி லாத புகழாண்டி - அவன்
சீர்த்தியைப் பாடி அடியுங்கடி

( 525 )
பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி

( 526 )
வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
வேடர் தமைஎலாம் வென்றாண்டி
தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
தீரனைப் பாடி அடியுங்கடி

( 527 )
சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்

( 528 )
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்

( 529 )
ஆனந்த மான அமுதனடி - பர
மானந்த நாட்டுக் கரசனடி
தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நங்குரு சாமியடி

( 530 )
வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
வேதமு டிதிகழ் பாதனடி
நாத வடிவுகொள் நீதனடி - பர
நாதங் கடந்த நலத்தனடி

( 531 )
தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
தத்துவம் அன்றித் துடங்காண்டி
சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
சண்முக நாதனைப் பாடுங்கடி

( 532 )
சச்சிதா னந்த உருவாண்டி - பர
தற்பர போகந் தருவாண்டி
உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
உத்தம தேவனைப் பாடுங்கடி

( 533 )
அற்புத மான அழகனடி - துதி
அன்பர்க் கருள்செய் குழகனடி
சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி

( 534 )
சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி

( 535 )
வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை உருவாண்டி - அவன்
அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி

( 536 )
இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
இன்ப உளங்கொள் நடத்தாண்டி
அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
அண்ணலைப் பாடி அடியுங்கடி

( 537 )
ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
ஒன்றிரண் டாகா அளவாண்டி
மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி

1611
Dear All

Is there a place online where we can get all the Tamil works of Bhagavan Ramana and Muruganar online in Unicode format that is ideal for copy paste here . In Ramana Ashram website I am getting the free PDF Download version of Bhagavan Ramana's works ( but not Muruganara's ) but I want the online version in Unicode format like the ones available in Project Maduari and other sites that have all the great Tamil Classic works published online in different formats .
Kindly share the link if you have .

1612
The 2 songs of Bharati and Vallalar mentioned above are also featured in 2 Tamil Movies and I have given the links of the same here .Enjoy the musical rendering of the same .

Bharati Song :Manathil Uruthi Vendum song of Subramania Bharati from the Movie Sindu Bhairavi 
Sung by : Jesudas , Music : Illayaraja
http://www.youtube.com/watch?v=L90cvNSYXdoVallar Song :Orumaiyudan ninadhu thiru malaradi from the Movie KONJUM SALANGAI
Playback: Soolamangalam Rajalakshmi
Music: . S.M.Subbiah Naidu

http://www.youtube.com/watch?v=_c3BlQ5In6s

1613
We all know that Ozhvil Odukkam is a great Tamil text recommended by Bhagvan Ramana for reading .Here this post mentions the role of Saint Ramalingaswamigal in getting this book published and the importance of this work and also who should read this book .


145  கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும்
http://arundhtamil.blogspot.in/2013/02/145.html
கண்ணுடைய வள்ளலார் என்று ஒருவர் இருந்தார். அவர் ‘ஒழிவில் ஒடுக்கம்’ என்ற நூலை எழுதினார். அற்புதமான நூல். அதில் கிரியை கழற்றி, யோகக்கழற்றி என் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு ஞானபாதத்தை மட்டுமே வலியுறுத்தி பேசுகிறார். மிக உயர்ந்த நூல். இன்று கண்ணுடைய வள்ளலார் பெயரை உலகம் மறந்துவிட்டது.

இந்த நூலை இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய சொந்த பொறுப்பில் பதிப்பித்தார். அதாவது கண்ணுடைய வள்ளலார் நூலைக் கண்ணுற்ற வள்ளலார் பதிப்பித்தார். வள்ளலார் கையில் காசு ஏது? நிதி திரட்டி ஒழிவிலொடுக்கம் நூலைப் பதிப்பித்தார்.

வள்ளலார் சென்னையில் 35 ஆண்டுகள் இருந்தவர். தினந்தோறும் 3 முறை திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானைத் தரிசிப்பது வழக்கம். ஒருநாள் நெல்லிக்காய் பண்டாரத் தெரு வழியாகப் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே திண்ணையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். வள்ளலார் “என்ன புத்தகம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் நீங்கள் பதிப்பித்த ஒழிவில் ஒடுக்கம் புத்தகம்தான்” என்கிறார்.
வள்ளலார் அதை வாங்கிக் கொண்டார். அவருக்கு சந்தேகம் வருகிறது. நாம் படித்தது அந்தப் புத்தகம் தானா? இல்லை. அதற்குள் வேறு ஏதாவது வார இதழை வைத்து மேலே பெருமைக்காக ஏதாவது ஒரு புத்தகம் வைத்திருக்கிறோமோ  என்று வள்ளலார் சந்தேகிக்கிறாரோ என நினைக்கிறார். ‘இந்தாங்க’ என்று அவர் புத்தகத்தை நீட்டினார்.

வள்ளலார் அவரிடம் உள்ளே சென்று தீப்பெட்டியும் மண்ணெண்ணையும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்ததும் வள்ளலார் அந்த ஒழிவில் ஒடுக்கம் புத்தகத்தைக் கொளுத்தி விடுகிறார். “ஐயா! சாமி! என்ன காரியம் செய்தீர்கள்?” அவர் பதைக்கிறார்.

அப்போது வள்ளாலார் சொன்னாராம்: “புத்தகத்தைக் கொளுத்தியதற்காக வருத்தப்படாதே. இதைப் படிக்கும் பக்குவம் இன்னும் உனக்கு உண்டாகலை. இப்போது உள்ள பக்குவத்தில்நீ இதைப் படித்தாயானால் நீ நாத்திகனாகிவிடுவாய்.”

அப்படியானால் அந்த நூலைப் படிக்கணும்னா அத்ற்கே ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. அவ்வளவு உயர்ந்த நூல்.


இந்த் நூலுக்கு வள்ளலார் தாமே உரை எழுத வேண்டும் என்று நினைக்கிறார். அத்ற்கு முன்னாலேயே திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அதற்கு உரை எழுதி இருக்கிறார். அதைப்பார்க்கிறார். இதைவிட நாம் நன்றாக எழுத முடியாது என்று அந்த உரையை அப்படியே பதிப்பித்து விடுகிறார். வள்ளலாரால் மதிக்கப்பட்டவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

ஒழிவிலொடுக்கம் உரையில் வள்ளலார் தாம் எதையாவது சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் எல்லாமே மிக அழகாக தெளிவாக இருந்ததால் தாம் தனியே உரை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறார். ஆனால் அவ்வுரையில் சிறப்புப் பாயிரத்திற்கு சிதம்பர சுவாமிகளால் உரை செய்யப்படாமல் விடுபட்டுப் போய்விட்டது. இந்த சிறப்புப் பாயிர வெண்பாவிற்கு வள்ளலார் 17 பக்கம் உரை எழுதுகிறார். இந்த 17 பக்க உரை இருக்கிறதே அது ஈடு இணை இல்லாதது. 17 ஆயிரம் நூல் படித்து ஞானம் பெற்றவர்களால்தான் அந்த 17 பக்க உரையைஎழுத முடியும்.

(திரு.மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச் சிந்தனைகள் புத்தகத்தில் இருந்து)

1614
We all have various desires and pray to God to fulfill those desires .This post is from an online blog and takes 2 poems each of Bharati and Vallalar that describes about their  desires   using the word வேண்டும்  .Here Subramania Bharati prays to Goddess Parasakthi and Vallalar Prays to Lord Subramania of Kandakottam .

வள்ளலாரும் பாரதியும் நாமும்
http://blog.richmondtamilsangam.org/2012/09/blog-post.html

நமக்கு எப்பவுமே ஒரு இலக்கு இருந்து கொண்டே இருக்கும்.  நாம் வைத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஒரு இல'க்கு' வைத்து விடும்.  இதற்கு சிலபல உதாரணங்கள் இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் காணலாம்.

ஒரு பள்ளி சிறந்த பள்ளி என்று பெயரெடுத்துவிட்டால் போதும், அவர் பையனை அங்கு விட்டார் என்று, இவரும் விடுவார்.  இவர் ஏழையாக இருந்தாலும், சமூக உந்துதல் இவரை விடாது.  இதே போல சைக்கிளுக்கே வழியில்லாதவராக இருந்தாலும், அவர் வைத்திருக்கிறார் என இவர் கார் வாங்குவார்.  இப்படித் தொடங்கிய பயணம் ஒரு முடிவுக்கே வராது, அது வேண்டும், இது வேண்டும் என்று தவிதவிக்கும்.

பாரதியாரும் அவர் பங்கிற்கு எழுதிய பாடல் எத்துனை சான்று.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


அவர் வேண்டியவற்றை, நாம் அப்படியே பின்பற்றி, காணி நிலம் என்ன, கண் காணும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு(ம்) இருக்கிறோம்.  பாரதியார் கேட்டவை ஒரு சிறு காணி நிலமும், அதனைச் சுற்றி அழகிய சுற்றுப் புறமும், ஒரு மாளிகையும், அன்பு மனைவியும், கத்தும் குயிலோசையும்.  படிக்கக் கேட்க பாடல் அற்புதம்.  அதில் சிறு மாற்றுக் கருத்தும் இல்லை.  ஆனால், இந்த நிலையில் நில்லாது, அடுத்து அடுத்து எனத் தாவி இன்று எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பது எவருக்குமே தெரியும்.

இத்தனையும் வேண்டும் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே உதவாது என்பதை நாம் உணரவேண்டும்.  உணர்ந்தால், நமது இலக்கை நமக்கு அடுத்தவர் எப்படி அமைக்க முடியும்?!  வேடிக்கை என்னவென்றால், இந்தக் காலத் தலைமுறையினர், பொய் சொல்வது குற்றம் என்றோ, பெரியவர்களை அவமதிப்பதைத் தவறு என்றோ உணர்ந்தார்களில்லை.  எல்லா 'வேண்டும்'களுக்கும் பின்னே, பெற்றோர் அலைவதால் ஏற்பட்ட கொடுமை தானோ இது ?!!!

அன்றைய காலகட்டத்தில், பலரும் தத்தமது 'வேண்டும்'களைப் பாடல்களில் தெரிவித்து இருக்கலாம்.  அப்படி, வள்ளலாரின் 'வேண்டும்'கள் சமீபத்தில் கேட்ட பொழுது உடல் சற்றே சிலிர்க்கத் தான் செய்தது.  மேற்கண்ட 'வேண்டும்'களில் இருந்து மிகவே மாறுபட்டு, நல்லறிவும், நல்உறவும், நற்சிந்தனையும் வேண்டும் என்கிறார்.

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!


Note :
 I am adding this piece from Brahati's Poetry which is again a poem wishing for positive and healthy things in life to make us mentally strong and more efficient in our day to day activities . This can also be used as a daily prayer . This poem was not in the original post but I have added it here . Others can point our similar poems by other great poets of Tamil Nadu

வேண்டுவன

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்    1

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

1615
Dear Ravi

Thanks for the link to Bharati's life and also other facts shared by you regarding Bharatiar's influence .Will keep that in my mind .

To Everyone
Here is a link to all of Bharati's poetry that I found useful .

http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

1616
Quote
In The Gospel of Sri Ramakrishna,there is an interesting conversation:
Master:Do you think the Brahmo Samaj will develop in the future into a sort of social-reform organization?"
M: "The soil of this country is different. Only what is true survives here."
MASTER: "Yes, that is so. The Sanatana Dharma, the Eternal Religion declared by the rishis, will alone endure. But there will also remain some sects like the Brahmo Samaj.Everything appears and disappears through the will of God."

Dear Ravi

Thanks for your replies and for sharing this beautiful piece of Saint Ramakrishna . He has hit the nail on the head when he says that the soil of this country is different and only Sanatana Dharma survives and that is the reason we find even Buddhism , Jainism which were popular once and threatened sanathana Dharma have lost their way here .
Even Osho ,JK who took a radical approach to spirituality acknowledged in the end that the soil of this country is different and inspite of all its problems , poverty etc there is an invisible spiritual field on this soil that is not available anywhere in the world .In fact both JK /Osho used the same words of Sri Ramakrishna that "the soil of this country is different" .
Why even saint Vallalar who brought about a revolutionary approach to spirituality acknowledged the same in a different way .
I feel every religion needs the rebels but the rebels will not survive long but rebels will help point out the flaws of native religion and this will help members of the native religion to make their own corrections in course of time . For eg . Animal sacrifice was very common in early Vedic period but it came down after the impact of Buddhism .Also  Sannayasa which was not given directly to all  people  in early Vedic period saw a Change after Buddhist impact here as Buddha gave Sannayasa to all .So Buddhist impact did help Sanathana Dharma remove some of its outdated practices but Buddhism did not survive here much .
Same can be said of the Brahmo Samaj , Arya Samaj , Sanmarga Sangam of Vallalar etc ( in fact these 3 organizations came around nearly the same time ) .They will not survive long as Organizations  but many of their principles will find its way to Sanathana Dharma for eg. you can see Saint Ramalingam's statue in many Shiva temples and his songs are being sung in many Tamil concerts , his famous verses "Kadai virithen Kolvar Illai " , "Vaadiya Payir Kandabothelam Manam vaadinen " etc find place in the talks of almost all Tamil speakers and his poem "Orumaiyudan ninathu thirumalaradi " is found in most school text books as well as school prayers and on temple walls .I hope you read the earlier detailed article posted by me on "Bharati and Vallalar " and how Vallalar's influence can be seen in Bharati's works with regard to the type of Tamil being used by Bharati .
So while Sanathana Dharma holds supreme yet I feel Ishwara brings in some rebels to give some shock treatments to people to come out of their slumber and make necessary course corrections .

Coming back to Vallalar songs I feel the first 5 Thirumurais deal with personal God and the Sixth Thirumurai deals with formless God ( Arutperum Jyothi ) and Vallar himself acknowledged the shift in his poems . I have started to study Vallalar because I found his tamil quite easy and the songs simple and musical to study and chant .I will continue to share what I find very interesting and would be happy if others also share their feedback with reference to other great texts in their replies .


1617
Subramaniam Sir

Thanks for ur reply . Happy that you got hold of all 7 volumes of your Thiruarutpa books .They are actually a great treasure .I have the 2 volumes of Thiruarutpa published by the Vallalar Sanmargam Temple in Vadalur and they have only the source text with no meaning .I use the online resource of Avvai Duraiswamy Pillai to get the meaning of the same . But I do not know how far correct his meaning would be . He is a great Scholar no doubt but these divine texts have an indepth meaning and only people on the spiritual path could understand the depth of the same and hence I am sharing these poems here .
So Subramaniam Sir you need not worry about posting here must and I will  keep posting selected verses after learning them ( with their meaning ) but I need your help /others familiar with Classical Tamil to see whether the given meaning is correct and is there any reference to the spirit of the above verses in other divine works like Thiruvachagam / Thevaram etc as I feel you are quite familiar with those texts .So just provide supportive meaning / references ( if any ) to the verses quoted by me here .By the way I wish to point out that one expert on Thiruarutpa said that to find the meaning of a verse in Thiruarutpa we can find the same from another poem i.e the meaning for Thiruarutpa is itself in Thiruarutpa and the Saint has given keys at various points in various poems .


1618
Subramaniam Sir

Thanks for the explanation on  எட்டோடே இரண்டு quoting Thiruvachakam . In fact in one spiritual talk on Thiruarutpa I heard one speaker say that Thiruarutpa  is actually a commentary of Thiruvachakam as Saint Ramalingaswamy kept that book ( Thiruvachagam ) as his holy book and also kept Saint Jnanasambandhar as his jnana Guru .

1619
I have taken one verse from sixth thirumurai for study .Given below is the verse with its meaning but the verse highlighted in red is bit mystical and I am not sure whether the meaning given here is correct . Subramaniam Sir /Ravi / Others can give more explanation if they have on this .

132. உலகர்க்கு உய்வகை கூறல் Sixth Thirumurai

    அஃதாவது, உலகத்து நன்மக்களுக்கு இம்மை மறுமைகட்கு நலம் பயக்கும் நல்லுரைகளைக் கூறுதல்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5556.

     கட்டோ டேகனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
          கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
     பட்டோடே பணியோடே தரிகின்றீர் தெருவில்
          பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
     கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
          குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
     எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே
.


உரை:

     உலகியற் பித்துக் கொண்ட பெருமக்களே! கட்டும் கனவுமாக வாழ்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்; ஆனால் கண்ணும் கருத்துமாக இறைவனை நினைக்கின்றீர் இல்லை; பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்; ஆயினும் தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்; கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்களே அன்றி நற்குணங்களோடும் நல்ல கருத்துக்களோடும் பெரியோர்களே குறித்துரைப்பதை நினைக்கின்றீர்கள் இல்லை; எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணத் தெரியாத வர்களாகிய நீங்கள் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள். எ.று.


   கட்டு - இனத்தோடு கூடிச் சாதி ஆசாரக் கட்டோடு அன்பு கொண்டு வாழ்தல். கனம் - பெருந்தன்மை. கருத்தன் - கருத்தில் உறையும் இறைவன். பட்டு - பட்டாடை. படி - பொன்னால் செய்த ஆபரணங்கள். கொட்டும் முழக்கம் என்பது பல்வகை வாத்தியங்களைக் குறிப்பது. குணம் - நற்குணம். குறிப்பு - நல்ல அறிவுரைகள். இவற்றைக் குறிப்பவர்கள் பெரியோர்கள் ஆதலால் “குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்” என்று கூறுகின்றார். சில விடயங்களையும் அறியாது ஒழிகின்றனர் என்பதற்கு, “எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்” என்று அறிவிக்கின்றார். பித்துலகீர் - உலகியல் வாழ்வில் ஆசையுற்று வாழ்கின்றவர்கள். கட்டும் கனமும், பட்டும் துணியும், கொட்டும் முழக்கமும் இம்மை மறுமைகளுக்குத் துணை செய்வன அல்ல என்பது கருத்து. எட்டும் இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர் என்பதற்கு எட்டும் இரண்டும் சேர்த்துப் பத்தாம் என்று அறியா தொழிகின்றீர். பத்தாவது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பது இறைவன் பால் கொள்கின்ற பற்றே இருமைக்கும் துணையாவது என்பதாம்.


1620
Part-2  of the above article contd here
னீனீனீ

இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பொருள் குறித்தோ வைப்புமுறை குறித்தோ எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. ஆனால் திருவருட்பா பதிப்பு வரலாற்றில் இவற்றையெல்லாம் அமைத்து விரிவான ஆய்வுக் கூறுகளுடன் ஒரு செம்பதிப்பைக் கொண்டுவந்த பெருமை ஆ. பாலகிருஷ்ண பிள்ளையை (1890-1960) சாரும். திருவருட்பா கொடுமுடிப் பதிப்பு என்று ஆ.ப.ரா.வின் பதிப்பைச் சுட்டலாம். எனவேதான், "அருட்பாவின் பிழையற்ற வெளியீட்டுக்கென்றே கடவுள் உங்களை இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார்"19 எனத் தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை இவரைப் பாராட்டுகிறார்.

பல்வேறு பதவிகளோடு இந்து அறநிலையத் துறை ஆணையராகவும் பதவி வகித்த ஆ.பா. தனது உத்தியோகச் செல்வாக்கைப் பயன்படுத்தியும் நட்பு பூண்டும் வடலூர் சத்தியஞான சபையின் பூசகராயிருந்த உ.ப. பாலசுப்பிரமணிய சிவாசாரியரிடமிருந்து திருவருட்பா மூல ஏடுகள், வள்ளலாரின் அன்பர்கள் நேரிடையாக எழுதிவைத்த நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி எழுத்தெண்ணிப் பதிப்பித்தார் (இப்பதிப்பிற்காக ஆ.பா.வும் சிவாசாரியாரும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உண்டு. எனினும் சிவாசாரி யாரின் பெயரைத் தமது பதிப்பின் ஓரிடத்திலும் ஆ.பா. குறிக்காமல் இருட்டடிப்பு செய்தது தனிக்கதை).

1931இல் தொடங்கி 1958 வரை திருவருட்பா பதிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மொத்தம் பன்னிரண்டு நூல்களை பகுதிப் பகுதியாக, ஆனால், முழுமையாக வெளியிட்டவர் ஆ.பா. திருமுறைகள் பன்னிரண்டு என்பதை மனத்தில் கொண்டே அவர் இவ்வாறு வெளியிட்டார்போலும். அவை:

கீர்த்தனைப் பகுதி (1.2.1931), வசனப்பகுதி (23.5.1931), வியாக்கியானப் பகுதி (9.10.1931), உபதேசப் பகுதி (23.1.1932), திருமுகப்பகுதி (12.5.1932), தனிப்பாசுரப் பகுதி (2.2.1933), முதல் திருமுறை அல்லது பெருநூல் பகுதி (13.1.1956), இரண்டாம் திருமுறையும் மூன்றாம் திருமுறையும் அல்லது திருஒற்றியூர்ப்பகுதி (28.12.1956), ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி (25.9.1957), நான்காம் திருமுறையும் ஆறாம் திருமுறை முன்பகுதியும் அல்லது பூர்வஞான சிதம்பரப் பகுதி (5.1.1958), ஆறாம் திருமறை இடைப்பகுதி அல்லது உத்தரஞான சிதம்பரப் பகுதி (14.7.1958), ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்திவளாகப் பகுதி (20.10.1958).

ஆ.பா.வின் பன்னிரண்டு புத்தகங்களில் முதல் ஆறு புத்தகங்கள் மட்டுமே அடுத்தடுத்து ஓரிரு பதிப்புகளைக் கண்டன. அதிலும் அதிகப் பதிப்புகளைக் கண்டது வசனப்பகுதி மட்டுமே (ஐந்து பதிப்புகள்). அடுத்த ஆறு புத்தகங்கள் முதல் பதிப்போடு நின்றுவிட்டன. இவை மறுபதிப்பு காணாதது தமிழர்களுக்குப் பெருத்த இழப்பே.

தொழுவூராரின் பதிப்பை அடுத்து சில புதிய செய்திகளைச் சேர்த்துப் பதிப்பித்தவர் ச.மு. கந்தசாமி பிள்ளை. ஆனால் அதையும் தாண்டி வள்ளலாரின் கடிதங்கள், வள்ளலார் தமது அன்பர்கட்கு இட்ட கட்டளைகள், அழைப்பிதழ்கள், உபதேசங்கள், உரைகள் மற்றும் சிறுகுறிப்புகள் என்று அரிய பல செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் ஆ.பா. அத்துடன் பதிப்பு விடயங்களிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டவர் அவர். 1867-1824 வரை வெளிவந்த திருவருட்பா பதிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இப்பதிப்பு. அதனைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.

- தலைப்பின்றி இருந்த திருமுறைகளுக்குத் தலைப்புகள் இட்டமை.

- தலைப்புகள் இல்லாத பதிகங்கள் சிலவற்றிற்குத் தலைப்புகள் கொடுத்தும் சில தலைப்புகளை மாற்றியும் பதிப்பித்தமை.

- நான்காம் திருமுறையை ஆறாம் திருமுறையுடன் சேர்த்துப் பதிப்பித்தமை.

- ஆறாம் திருமுறையை மூன்று நூல்களாகப் பகுத்துப் பதிப்பித்தமை. பொருளடிப்படையிலும் கால அடிப்படையிலும் நுணுகி ஆய்ந்து பதிப்பித்தமை.

- ஏறக்குறைய 3443க்கும் மேற்பட்ட அடிக்குறிப்புகளைத் தந்துள்ளமை.

ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளையின் பதிப்புப் பணி நடைபெற்றுவந்த அதே நேரத்தில் இராசமாணிக்கம் பிள்ளை என்பவர் சென்னை சமசர சுத்த சன்மார்க்கத்தின் வாயிலாக 1932இல் திருவருட்பா முதல் ஐந்து திருமுறைகளை ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறையை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியிட்டார் (இதன் அடுத்த பதிப்பு 1942இல் வெளிவந்தது). இதே காலகட்டத்தில் 'திருவருட்பா திரு ஆயிரம்' என்னும் நூலையும் (24.1.1932) இச்சங்கம் வெளியிட்டது. இதன் மறுபதிப்பு 1969இல் வெளிவந்தது. இந்த வரிசையில் திருவொற்றியூர் இராமலிங்கசாமி மடாலயம் 1964இல் வேப்பேரி அச்சகத்திலிருந்து வெளியிட்ட திருவருட்பா நூலும் குறிப்பிடத்தக்கது. இது முதல் ஐந்து திருமுறைகள் ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியானது.

ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளையின் பதிப்பை அடியொற்றி 1972இல் வரலாற்று முறைப் பதிப்பாக திருவருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் ஊரன் அடிகளார். ஆ.பா.விற்குக் கிடைக்காத மூல ஏடுகள் சில இவருக்குக் கிடைத்ததால் மேலும் 29 பாடல்களைச் சேர்த்து 5818 பாடல்களை அவர் வெளியிட்டார். சன்மார்க்க உலகிலும் ஆய்வுலகிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இவரது பதிப்பே. இப்பதிப்பில் நான்கு உரைநடை விண்ணப்பங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றவை இடம்பெறாமைக்குக் காரணம், திருவருட்பா - உரைநடைப்பகுதி (1978) என்னும் நூலைத் தனியே வெளியிட்டதே (ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை வெளியிட்ட வசனபாகம், வியாக்கியானப் பகுதி, உபதேசப் பகுதி, திருமுகப் பகுதி ஆகிய நான்கு நூல்களையும் ஒன்று சேர்த்து இவ்வுரைநடைப் பகுதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1981இல் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தாலும் 1977இல் சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தாலும் 2001இல் வடலூர் தெய்வ நிலையத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன).

பதிப்பில் ஊரன் அடிகள் செய்துள்ள மாற்றங்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டலாம்.

- திருவருட்பாவின் பாடல்தொகை இதுவரை சரியாகக் கணிக்கப்படாதபோதும் அதனை 5818 எனக் காரணத்தோடு நிறுவியமை.

- பாடல்களுக்குத் தொடர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளமை.

- திருமுறைகளும் பதிகங்களும் அவை எழுதப்பட்ட கால அடிப்படையில் வரிசையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை.

- நூல் முழுவதும் பாவினம் குறித்தும் சந்தி பிரித்தும் பதிப்பித்துள்ளமை.

- பாட்டுமுதற்குறிப்பு அகராதி தந்துள்ளமை.

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள திருவருட்பா பதிப்புகளும் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை. இப்பதிப்பை மரபு முறைப் பதிப்பு என்பர்.

தொழுவூர் வேலாயுத முதலியார் 1867இல் பதிப்பித்த முதல் பதிப்பை அடியொற்றி அதில் உள்ளவாறே முதல் நான்கு திருமுறைகளை ஒரு நூலாகவும் (23.1.1997), அவரே 1885இல் பதிப்பித்த திருத்தணிகைப் பதிகத்தை அடியொற்றி ஐந்தாம் திருமுறையையும் (10.2.1998), ஊரன் அடிகள் பதிப்பை அடியொற்றி ஆறாம் திரு முறையையும் (5.10.1999) இந்நிலையம் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர்கள் யார் என்பது நூலில் இல்லையாயினும் சீனி. சட்டையப்பன், இராம. பாண்டுரங்கன் ஆகியோர் முதன்மைப் பதிப்பாசிரியர்கள் என்பது கள ஆய்வில் தெரியவந்தது.

o o o

திருவருட்பா மூலப் பதிப்பு மட்டுமின்றி அவற்றின் உரைப் பதிப்புகளும் கவனத்தில் கொள்ளத்தக்கன. அந்த வகையில் உரைவேந்தர் ஔவை. துரைசாமிப் பிள்ளை உரை எழுதிப் பதிப்பித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த திருவருட்பா பத்துத் தொகுதிகள் தனிமுத்திரை இதுவே (இவ்வுரைப் பதிப்பை அடியொற்றிப் பேரா. சு. மாணிக்கம் வர்த்தமானன் பதிப்பகத்தின் வாயிலாக 'திருவருட்பா மூலமும் உரையும்' என்னும் நூலை எட்டுத் தொகுதிகளில் இதுவரை வெளியிட்டுள்ளார்).

இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட பதிப்புகள் தவிரச் சில தனிநபர்களும் நிறுவனங்களும் திருவருட்பாவை முழுவதுமாக/பகுதியாக வெளியிட்டுள்ளனர். அவை யெல்லாம் மறு அச்சுகளாகவே பெரும்பாலும் உள்ளன. எனினும் அவை குறித்துத் தனி ஆய்வு தேவை. அப்போதுதான் சமூகம் சார்ந்த வெளிப்பாடு புலப்படும்.

படைப்பாளர் ஒருவரின் படைப்பு, இருக்கிற சமூகத்தை அப்படியே அடியோடு புரட்டிப்போடும் வல்லமையுடன் திகழுமானால் அது குறித்த பதிவுகள் வரலாற்றில் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ்ச் சிந்தனை மரபில் வள்ளலாரின் பாடல்களுக்குத் தனியொரு இடம் உண்டு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவேதான் மதம் கடந்தும் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. படைப்பாளனின் படைப்புப் பணியைவிட பதிப்பாளரின் பதிப்புப் பணி அதி சிரமத்தைக் கொண்டது. அவன் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்வதும் இதனூடேதான் நிகழ்கிறது. திருவருட்பா பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தை இவ்வாறுதான் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால் நிலைநிறுத்தப்பட வேண்டிய அடையாளங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. எந்த ஒரு முழுமையான பதிப்பும் அடுத்த பதிப்புக்குத் தொடக்கமே!

சான்றுக் குறிப்புகள்:

1. ம.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, 1963, ப. 231

2. வள்ளலாரின் பாடல்களுக்கு இருந்த செல்வாக்குக் குறித்து மாமண்டூர் தியாகேச முதலியார் பெயரில் ஆறுமுக நாவலர் எழுதி விடுத்த போலியருட்பா (1868) என்னும் துண்டுப் பிரசுரத்தில் "சிலர் தேவார முதலி அருட்பா ஐந்தனோடும் இராமலிங்கப் பிள்ளைப் பாடலைச் சமமாகப் பாராட்டியும் சிலர் அப்பாடலைப் பாராட்டித் துரபிமானத்தினாலே தேவராதிகளைத் தூஷித்தும் எரிவாய் நரகத்துக்கு இரையாகுகின்றனர்" என்று எழுதியிருப்பதைக் காண்க.

3. ஊரன் அடிகள் பதிப்பில் உள்ள தெய்வமணிமாலைப் பதிகம் வள்ளலார் பாடிய முதல் பாடலன்று. 'உலகெலாம் உதிக்கின்ற ஒளிநிலை மெய்யின்பம்' என்று தொடங்கும் அருட்பிரகாச மாலைப் பதிகமே வள்ளலார் முதலில் பாடியது. விரிவான தகவலுக்குக் காண்க: ப. சரவணன், அருட்பா வூ மருட்பா, 2001, பக். 21-23

4. ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை, ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி, 1957, ப. 136

5. ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை (ப.ஆ.), திருவருட்பா - திருமுகப்பகுதி, 1959, ப. 38

6. மேற்படி, ப. 59

7. மேற்படி, ப. 61

8. காண்க: தொழுவூர் வேலாயுத முதலியாரின் திருவருட்பா வரலாறு, பா.எண். 34-35

9. ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு, 1971, ப. 44

10. இரா. மாணிக்கவாசகம், திருவருட்பா ஆராய்ச்சி, 1985, ப. 56

11. திருவருட்பா - திருமுகப்பகுதி, 1959, ப. 60

12. மேற்படி. ப. 68

13. பா. அருட்செல்வி, சமரச சுத்த சன்மார்க்க நெறி (ஆய்வு) 1991, ப. 27

14. விளம்பரச் செய்தி: இப்புத்தகம் வேண்டியவர்கள் மயிலாப்பூரிலிருக்கும் ராயல் ஹோட்டல்- புதுவை வேலு முதலியாரிடத்திலும் சென்னப்பட்டணத்தில் ஏழு கிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில் 38வது கதவிலக்கமுள்ள வீட்டில் இ. இரத்தின முதலியாரிடத்திலும் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்கிரஹாரம் வண்ணாரச் சந்தில் 20வது கதவிலக்கமுள்ள வீட்டில் சி. செல்வராய முதலியாரிடத்திலும் கூடலூரில் முத்துகிருஷ்ண ராமசாமி செட்டியார் குமாரர் மு. அப்பாசாமி செட்டியாரிடத்திலும் ராயவேலூரில் மண்ணடி- அ. வேலு முதலியாரிடத்திலும் இதன் விலை ரூ.3 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். வெளிதேசத்தார்களுக்கு இப்புத்தகம் வேண்டுமானால் மேல் விலாசத்துடன் புத்தக கிரயத்தையும் தபால் செலவையும் ... அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

15. சரவணானந்தா, வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வு, 1974, ப. 38

16. ஊரன் அடிகள் (ப.ஆ.), திருஅருட்பா, 1972, ப. 52

17. ம.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஓருமைப்பாடு, 1963, ப. 234

18. ஊரன் அடிகள் (ப.ஆ.), திருஅருட்பா, 1972, ப. 56

19. ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை பதிப்பித்த ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதிக்கு வ.சு. செங்கல்வராயப்பிள்ளை எழுதிய முன்னுரை.

குறிப்பு: ப. சரவணன் சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளி ஒன்றில் முதுகலைத் தமிழாசியராகப் பணியாற்றுகிறார். திருவருட்பா தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

நன்றி - காலச்சுவடு 2007

Pages: 1 ... 98 99 100 101 102 103 104 105 106 107 [108] 109 110 111 112 113 114 115 116 117 118 ... 156