Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - atmavichar100

Pages: 1 ... 76 77 78 79 80 81 82 83 84 85 [86] 87 88 89 90 91 92 93 94 95 96 ... 153
1276
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: April 23, 2014, 10:15:33 PM »
CHADWICK REMEMBERED

One night in the Hall there was some talk about reincarnation. Just as Bhagavan was getting up from his couch to go for his evening meal, I, as a joke, said, ?But Alan Chadwick has not been born before.?
?What, what did he say?? asked Bhagavan sharply. ?He said that he had never been born before,? someone wrongly interpreted. Of course I had not said that at all. I had meant that whatever form the ego took formerly it had never had the name and form Alan Chadwick, but had been some entirely different person. But Bhagavan replying to the wrong interpretation quickly replied, ?Oh, yes he had been, for what has brought us all together here again??

He never asked us what had brought us to him, but what had brought us again to Arunachala. He had so completely identified himself with the Mountain. This answer, though caused by a mistake, was very gratifying to me, as Bhagavan admitted the old connection between us. So must I always be with him until Self-realization, after which there will be no more he and I. I used to say that I must attain Self-realization in this life or Bhagavan would have to be born again so that I might be with him. So for his own good he must see that I gain my end in this life. Bhagavan would just smile. Though this was only said as a joke, there was a fundamental truth behind it.

A SADHU'S REMINISCENCES

1277
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: April 23, 2014, 09:43:53 AM »

1278
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: April 23, 2014, 08:24:57 AM »
(Day by day with bhagavan)
20-4-46 a.noon


A Muslim visitor put some questions and got all the following answers.

Q : This body dies. But there is another imperishable body. What is it?

Bhagavan :
Imperishable body is a contradiction in terms. The term sariram means that which will perish. Of course, there is something imperishable, something which exists even after the body dies.

Q : It is said the Lord's light resides in the eye.

Bhagavan :
The eye does not see. That which gives light to it is the reality, whether we call it Lord's light or anything else.

Q : The lord has created all this, has He not? What was created first? It is said light or sound was created first.

Bhagavan :
All these things, which you say have been created have to be seen by you before you say they exist. There must be a seer. If you find out who that seer is, then you will know about creation and which was created first. Of course various theories as to what came into existence first from God are given out. Most, including scientists, agree that all has come from light and round.

Q : Can we call anything created, like this piece of wood, for example, God? It is said it is very wrong to do so.

Bhagavan :
Even this piece of wood, does it exist apart from God? Can we confine God to any time or space, since He is everywhere and in everything? We should not see anything as apart from God. That is all.

D.Mudaliar

1279
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: April 22, 2014, 02:47:55 PM »
Periva Jayanthi Celebrations 2014

Dear Members,

For all devotees of the Mahaswami, the Anuradha (Anusham) Nakshatra is precious to us as Sri Maha Periva Himself.

This year, we would be celebrating His 121st Jayanthi. This year's Jayanthi of Maha Periva is all the more special as it is the exact year ('Jaya' Varsham) of the avatar of the Living God.

1894 - was the first 'Jaya' varsha that brought the God to earth, and got us His personal blessings
1954 - was the next 'Jaya' varsha when HIS 'SashtiyapthaPoorthi' was celebrated in a simple manner at Kanchi
This year 2014 is the third occurrence of the 'Jaya' varsha.

Many of us have not had the privilege and bhagyam to partake in the earlier two occurrences of 'Jaya' varshams. Let us atleast make the best use of this opportunity, and get together to celebrate HIS Jayanthi is great grandeur this year.

Details of the event:

Date: Thursday 12th June 2014
Time: Event Commencement by 0800 AM IST
Venue: Kanchi Mahaswamy Anantha Mandapam, adjacent to Sri Anantha Padmanabha Swamy Temple, Adyar, Chennai

The trustees of Dharma Paripalana Sabha and Guhananda Charitable Trust have come forward to join us in this great celebration yet again and we have decided to conduct this in a grand fashion, thanks to the Sabha.

We request you to come in large numbers and obtain Periva's blessings on this special 'Jaya' Varsha Vaikasi Anusham day.

We also require volunteers to assist us with the pooja arrangements, crowd management, distribution of prasadam etc. To confirm participation and volunteering, we have published a survey form which we request you to complete.

Request you all to take part in this grand celebrations. Please take a minute to fill up the below form.
docs.google.com/forms/d/1zQta7o9Ra-fMuGJoyj-yYKGvPwfzMdQu8r4MQ3c6Z7k/viewform?usp=send_form

Read more: http://periva.proboards.com/thread/7156/periva-jayanthi-celebrations-2014?page=1&scrollTo=12397#ixzz2zbYjXNUV

1281
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: April 22, 2014, 09:06:39 AM »
"Are you in India now? Or is India in you? Even now this notion that you are in India must go. India is in you. In order to verify it, look to your sleep. Did you feel that you were in Europe or in India while asleep? You were nevertheless existing then the same as now."

(Bhagavan in 'Talks with Sri Ramana Maharshi' 304)

1282
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: April 21, 2014, 09:34:00 AM »
DEVOTEE: What then is the mind?

RAMANA MAHARSHI: Mind is consciousness which has put on limitations. You are originally unlimited and perfect. Later you take on limitations and become the mind.

D : It is 'avarana' (veiling) then. How does this happen?

M : To whom is the 'avarana'? It is the same as 'avidya' (ignorance), ego or the mind.

D : 'Avarana' means obscuration. Who is obscured? How does it arise?

M : The limitation is itself obscuration. No questions will arise if limitations are transcended.

~ from Talk-473

- Om Namo Bhagavate Sri Ramanaya !

1283
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: April 20, 2014, 10:51:27 PM »
Christ is the ego. The Cross is the body. When the ego is crucified, and it perishes, what survives is the Absolute Being and this glorious survival is called Resurrection.

6th November, 1935
Talk 86.

1284
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: April 01, 2014, 01:39:01 PM »
மஹா பெரியவா "நிம்மதிக்கு வழி":

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.

* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.

1285
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: April 01, 2014, 01:25:35 PM »
ராம நாம மகிமை?மஹா பெரியவா-(ஆர். சங்கரநாராயணன்)

?நடமாடும் கடவுள்? மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது ?நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா ?ராமா, ராமா? என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்? என்றருளினார்.
இப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் ! இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.
பரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், ?ரா? என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், ?ம? என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய ?தேவாம்ருதவர்ஷணி? ராகத்திலமைந்த ?எவரனி? என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே ? ?சிவமந்த்ரமுனகு மஜீவமு? என்றும் ?மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு? என்றும் பாடியருளியிருக்கிறார்.
?ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் ? வானதி பதிப்பகம் வெளியீடு)
தொடர்புடைய பதிவு: ஸ்ரீ ராம நாம மஹிமை

1286
General topics / Re: A Word To All Members of the Forum
« on: April 01, 2014, 01:21:45 PM »
Sure Subramaniam Sir . I still find many of your old posts quite interesting and inspiring . Do what best suits you .
Om Namo Bhagavate Sri Ramanaya

1287
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: April 01, 2014, 01:17:48 PM »

1288
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: March 29, 2014, 12:35:28 PM »
ஆன்மிக சிந்தனைகள் ? (காஞ்சி மகா பெரியவர்)

நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை .
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும் . போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும் . மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல் , ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது . மாறாக , மனம் அடங்கும் போது , சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும் .
* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது . மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம் . மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும் .
* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும் . திருவள்ளுவரும் எதைக்காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

1289
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: March 28, 2014, 03:55:42 PM »
ஜோதிதான் லிங்கம்? லிங்கம்தான் ஜோதி -பற்றி மகாபெரியவர்!

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.
அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் ?ஹநுமான் சாலீஸா?வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் ஹநுமான் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ?ராமேஸ்வரத்தில் உள்ள ஹநுமான்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்? என்றார்.

அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

?பெரியவா? ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ?அப்னே ஆப் ஹுவா!?ன்னு தானாகவே உண்டானது? ?சுயம்பு?ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா? அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே??

அதற்கு ஸ்வாமிகள், ?ஜ்வாலாமுகியை பார்த்திருக்கியா?? என்று கேட்டார். ?நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!? என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ?சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே? பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?? என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

?வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்? என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்?

?அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:||

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது?

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்? நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்? மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல? லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்? லிங்கம்தான் ஜோதி? என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

1290
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: March 28, 2014, 03:53:14 PM »
சங்கரரின் காலத்தைத் தேடி(Dr.R.நாகசுவாமி)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னர் இராமநாதபுரம் மாவட்டம் இளையாத்தங்குடியில் காஞ்சி மாமுனிவர் தாமே முன்னின்று மகத்தான "ஆகம சில்ப ஸதஸ்" ஒன்று நடத்தினார். அன்றிருந்தே தமிழ் கோயில் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அம் மகத்தான சதஸில் ஒரு நாள் மாலையில் பிரஞ்சு நாட்டு பேராசிரியர் பிலியோசா அவர்கள் "கடல் கடந்த நாடுகளில் ஹிந்து சமயத் தொடர்பு" என்ற பொருள் பற்றி பேசினார். ஆங்கிலத்தில் இருந்த அவரது சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் பேராசிரியர் டாக்டர் ராகவன். ஏராளமான அறிஞர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடி அப்பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.
பிலியோசா
பேராசிரியர் பிலியோசா தமது உரையில் "கம்போடியா நாட்டில் ஒரு கல்வெட்டில் ஆதி சங்கரர் குறிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார். அதை மொழிபெயர்த்த டாக்டர். ராகவன் "யோனாதீதானி சாஸ்திராணி பகவத் சங்கராஹ்வயாத்" என்று கம்போடியா நாட்டில் சங்கரர் குறிக்கப் பட்டுள்ளார் எனக் கூறினார். பரமாச்சாரியார் ராகவனை அழைத்து அந்தக் கல்வெட்டுச் செய்யுளின் மறு அடியையும் எடுத்துரைக்க கூறினார். திடீர் என்று கேட்டதால் டாக்டர். ராகவன் சற்று யோசித்தார். உடனே பரமாச்சாரியார் தாமே அந்த அடியை முழுமையாக எடுத்துக்கூறினார். பரமாச்சாரியாருக்கு கல்வெட்டில் இருக்கும் ஈடுபாடும் நினைவாற்றலும் அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் அப்படியே வியப்பில் திளைக்க வைத்தது.

கூட்டம் முடிந்ததும் டாக்டர். பிலியோசாவை சென்று பார்த்தேன். அந்தக் கம்போடியா கல்வெட்டின் முழு வாசகமும் கிடைக்குமா என்று கேட்டேன். ஸதஸ் முடிந்ததும் நான் அங்கிருந்து சென்னை திரும்பினேன். பிலியோசா அவர்கள் கம்போடியா நாட்டுக் கல்வெட்டிலுள்ள வாசகம் முழுவதையும் எழுதி எனக்கு அனுப்பிவைத்திருந்தார். கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பாடலாக உள்ளது. கல்வெட்டை மீண்டும் மீண்டும் படித்தேன். பேராசிரியர்கள் குறிப்பிடுவது போல் அது நமது ஆதிசங்கரரைக குறிக்கவில்லை போலிருக்கிறதே? கல்வெட்டை முழுமையாகப் படிக்காமல் சங்கரரைக் குறிக்கிறது என்று எழுதியுள்ளனரோ என்று ஐயம் எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட ஐயத்தை இரண்டு பக்கங்களில் எழுதி பரமாச்சாரியாருக்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அதைபற்றி மறந்துவிட்டேன்.
பங்காரு காமாக்ஷி
ஒராண்டுக்குப் பிறகு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பங்காரு காமாக்ஷி கோயிலில் காஞ்சி பெரியவர் தெய்வம் போல் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. என்னை அருகில் அமரச் சொன்னார். "நீ எழுதியிருக்கையே கட்டுரை நன்றாக இருந்தது" என்றார்கள். நான் என்ன என்று தெரியாமல் விழித்தேன். "நீ பகவத்பாதாளைப் பற்றி கம்போடியா கல்வெட்டிலிருந்து எழுதியிருந்தாயே அதைத்தான் சொல்றேன். அச்சுப் போட்டுடு" என்றார்கள். நான் எழுதியிருந்ததை நானே மறந்துவிட்டேன். ஆனால் பரமாச்சாரியார் ஓர் ஆண்டுக்குப் பிறகு என்னைப் பார்த்தவுடன் அதை குறிப்பிட்டது என்னை மெய்மறக்க செய்தது. அவர்கள் குறிப்பிட்டபடி பரோடாவில் உள்ள ஒரியண்டல் இன்ஸ்டிட்யூட் இதழில் வெளியிட்டேன்.
பேராசிரியர் சீதெஸ்
1963ல் நான் பிரான்சு நாட்டுக்கு சென்றேன். கம்போடியா கல்வெட்டை பிரஞ்சு நாட்டை சார்ந்த பேராசிரியர் சீதெஸ் என்பவர் தான் முதன்முதலில் பதிப்பித்தார். சங்கரர் காலத்தைக் கேட்கவேண்டும் என்பதற்காவே நான் பாரீஸ் மாநகர் சென்றபோது அவரைச் சென்று பார்த்தேன். அப்பொழுது அவருக்கு 83 வயது. அவரிடம் நான் என் ஐயத்தைக் கூறினேன். "தாங்கள் கம்போடியா கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சங்கரர் இந்திய நாட்டில் அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கரரயிருக்கலாம் என்று எழுதியிருக்கிறேர்களே எனக்கு ஐயப்பாடாக உள்ளதே" என்று கூறினேன். எனது ஐயங்களை எழுப்பினேன். பரந்த அனுபவமும் முதிர்ந்த வயதும் நிரம்பிய பேராசிரியர் சீதெஸ் "என் இளைய நண்பரே முதன் முதலில் அந்த கல்வெட்டைப் படித்தபோது, பகவத் சங்கரர்" என்ற பெயர் வந்ததும் அந்த உணர்ச்சியின் ஆர்வத்தில் நான் அவ்வாறு எழுதினேன். ஆனால் இப்பொழுது நீர் கூறும் ஐயப்பாட்டுக்கு உண்மையிலேயே இடமுள்ளது. ஆராயப்பட வேண்டியதுதான். ஆனால் நான் மிகவும் வயது முதிர்ந்துள்ளேன். உம்போன்ற ஆராய்சியாளர் மேலும் இதை ஆராய்தல் வேண்டும்" என்று அன்போடு கூறினார். இப்பொழுது பேராசிரியர் சீதெஸ் நம்மிடையே இல்லை. சங்கரர் காலத்தைப் பற்றி நான் எழுப்பிய ஐயம் அவரையும் ஐயத்தில் ஆழ்த்தியது என்பது மட்டும் இங்கே குறிக்க விரும்புகிறேன். பின்னர் எனது கட்டுரை பரோடா இதழில் பதிப்பிக்கபட்டது.
நான் அன்றிலிருந்து சங்கரர் காலத்தைச் சான்றுகளுடன் அறிய பல கட்டுரைகளைப் படித்தும் தொகுத்தும் வைத்தேன். பல பேராசிரியர்கள் பிறர் கருத்தை அப்படியே ஏற்றுத் தாமாக ஏதும் ஆயாமலேயே எழுதியுள்ளனர். சில ஆசிரியர்கள் இவ்வாறு இருக்ககூடும் என ஐயத்துடன் கூடிய கணிப்பாக கூறியுள்ளனர். ஒரு சிலர் முடிந்த முடிவாக எழுதியுள்ளனர். அனைத்து கட்டுரைகளையும் பார்க்கும் போது சங்கரர் காலத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் சான்றுகள் இல்லை என்பது தெளிவாகியது.

கம்போடியா கல்வெட்டு

கம்போடியா கல்வெட்டில் என்ன இருக்கிறது? அதில் உள்ள ஐயம் என்ன என்று காணவேண்டாமா? கம்போடியாவில். "பிரசாத் கண்டோல் தோம்" என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் அந்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் சகவருஷம் குறிக்கப்பட்டுள்ளது. அது ஏறக்குறைய கி.பி. 866ல் எழுதப்பட்டது. ஆதலால் அக்கல்வெட்டின் காலமும் அதில் குறிக்கப்பட்ட காலமும் திட்டவட்டமாக தெரிகிறது. இந்திரவர்மன் என்று அங்கு ஆண்ட அரசனுக்கு சிவசோமன் என்று ஒரு ராஜகுரு இருந்தார். அவரைப்பற்றி அந்த கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சிவசோமன் என்ற அந்த ராஜகுரு பல பெரியோர்களிடமிருந்து கல்வி கற்றிருக்கிறார். அவர்களில் சிலருடைய பெயர்களைக குறிக்கிறார். அத்துடன் தான் எந்த கல்விகளைக் கற்றார் என்பதையும் குறிக்கிறார். அந்த இடத்தில்தான் எல்லா அறிஞர்களாலும் போற்றபடும் "பகவத் சங்கரரிடமிருந்து கல்வி கற்றேன்" என்று சிவசோமன் கூறுகிறார். இங்கு "பகவத் சங்கரர்" என்று குறிக்கப்படுபவர் "ஆதிசங்கர பகவத்பாதர்" என்றும் சிவசோமன் காலமும் சங்கரர் காலமும் உறுதிப்படுகின்றன என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதலின் சங்கரர் கி.பி. 800ஐ ஒட்டி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் கணிக்கின்றனர்.
அந்தக் கல்வெட்டில் சிவசோமனைக குறிக்கும் முழுப் பகுதியையும் இங்கு காணலாம். இந்தச் செய்யுள்களில் மேலும் என்ன சொல்லியுள்ளார்? முதலில் சங்கரரிடமிருந்து கற்றதாகக் கூறுகிறாரல்லவா? அடுத்த செய்யுளில் வேதங்களை அறிந்தவரும் விப்ரரும் எல்லா வித்தைகளையும் அறிந்த வருமான "பகவான் ருத்ரரிடமிருந்தும்" கல்வி கற்றேன் என்று சிவசோமன் கூறுகிறர். இந்த ஆசிரியரை குறிக்குமிடத்து பகவான் ருத்ரர் என்று குறிப்பது காணத் தகுந்தது. ஆதலின் பகவான் என்ற சொல் பொதுவாக மரியாதையைக் குறிக்க இக்கல்வெட்டில் பயன்பட்டுள்ளது. இதுபோல் "பகவத் சங்கரர்" என்பதும் மரியாதையைக் குறிக்கும் பொருளிலேயே பயன்பட்டுள்ளது என்று தெளிவாகிறது.
இவர் வேறு அவர் வேறு
மேலும் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த பிற ஆசிரியர்களையும் அண்டி சிவசோமன் கல்வி கற்றதாக மூன்றாவது செய்யுளில் கூறுகிறார். இதையடுத்து தாம் எந்தக் கல்விகளைக் கற்றார் என்பதையும் சிவசோமன் கூறுகிறார். தர்க்கம் காவ்யம் முதலான சாஸ்திரங்களையும், புராணங்கள், பாரதம், அனைத்து சைவ சாஸ்திரங்களையும், வியாக்கரண சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் கற்று மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றார் என்று கல்வெட்டு கூறுகின்றது. மீண்டும் அவர் படித்த சாஸ்திரங்களின் பட்டியலைப் பாருங்கள். சிவசோமன் படித்ததாக கூறும் கல்விப பட்டியலில் காவ்யம், வ்யாகரணம், புராணம் முதலிய பல துறைகளும் உள்ளன. ஆனால் அத்வைத வேதாந்தமோ அல்லது மீமாம்ஸையோ குறிக்கப்படவில்லை. சங்கரரிடம் இவர் கல்வி கற்றிருந்தால் எந்த கல்வி கற்றிருப்பார்? அத்வைத வித்தை அல்லவா கற்றிருப்பார்! இது வியப்பாக இருக்கிறது.
மேலும் ஆதிசங்கரர் கடல் கடந்து பிற நாடுகளுக்கு சென்றதாகக் குறிப்பு இல்லை. அது தர்மத்துக்கு விரோதமாகவே கருதப்பட்டது. ஆதலின் சில ஆராச்சியாளர்கள் சிவசோமன் என்பவர் இந்தியாவுக்கு சென்று ஆதிசங்கரரிடம் கல்வி பயின்றார் என்று கூறுவர். இவ்வளவு அரும்பாடுபட்டு கற்ற வித்தையைக் குறிக்காமல் பிற கல்விகளை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளதிலிருந்து அக்கல்வெட்டில் வருபவர் ஆதிசங்கர பகவத்பாதர் அல்லர். என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கலாம். மேலும் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றைக குறிக்கும் பல நூல்கள் நம் நாட்டில் உள்ளன. இவற்றில் எந்த ஒரு நூலிலும் கம்போடியா நாட்டிலிருந்து ஒரு சீடர் இங்கு வந்து சங்கரரிடம் கல்வி பயின்றதாக குறிப்பு கிடையாது. ஆதலின் அந்த சங்கரருக்கும் அத்வைத சங்கரருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றே தோன்றுகிறது. அதனால் தான் இந்திய வரலாற்று அறிஞர்களிலே தலைசிறந்தவராக கருதப்படும் ஆர்.சி. மஜும்தார் என்ற பேராசிரியர் கம்போடியா கல்வெட்டுகள் பதிப்பிக்குமிடத்து மிகவும் ஐயப்பாட்டுடன் இதைக் குறித்துள்ளார். அவ்வாறு குறிக்குமிடத்து சங்கரரின் காலத்தைக கணிக்க இந்திய நாட்டு இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ ஆதாரபூர்வமான சான்றுகள் ஏதுமில்லை என்றும் எழுதியுள்ளார். இந்த ஒரே ஒரு கல்வெட்டைக் காரணமாக கொண்டு ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார் என்று கொள்வதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
சங்கர விஜயம்
நம் நாட்டில் ஆதிசங்கரருடைய வரலாற்றைக் குறிக்கும் பல நூல்கள் உள்ளன. இவற்றில் அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சில முரண்பாடுகள் உள்ளன. இதை மேலைநாட்டு அறிஞர்கள் சுட்டிக்காட்டி இந் நூல்கள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். இங்கு ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் ஆன்றோர் வரலாற்றை காவிய வடிவில் எழுத முற்படும்போது சில கருத்துக்களைப் பக்தியின் அடிப்படையிலும் எழுதும் மரபு உண்டு. ஆங்காங்கே பல தலபுராணங்களில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிவோம். நமது நூல்களை அந்த அடிப்படையில் அணுக வேண்டுமே அல்லாது இவை சரித்திரத்தை மட்டும் எழுத வந்த நூல்கள் அல்ல என்பதை மனதில் கொள்ளல் வேண்டும். ஆங்காங்கு ஆன்றோர்கள் கொண்டிருந்த வழி வழியாக அறிந்திருந்த கருத்துகள் இவற்றில் இடம் பெறுகின்றன.
வரலாற்று நியதி
ஆனால் வரலாற்றுக்கு என்று ஒரு நியதி உண்டு. அது அடிப்படை சான்றுகளைக் கொண்டு ஐயம் திரிபற எழுதுவது. பிறவற்றை ஊகமாக எழுதுவது என்பது தான் மரபு. சங்கரருடைய காலத்தை திட்டவட்டமாகக் கணிக்க நம் நாட்டில் எந்த நூலிலும் சான்றுகள் இல்லை. எந்த கருத்தை எடுத்து காட்டினாலும் அதற்கு மாறான கருத்தை வேறுறொரு நூலிலிருந்து எடுத்துக் காட்ட முடியும். ஆதலால் நம் நாட்டிலுள்ள சங்கரர் வரலாற்று நூல்களிலிருந்து அவரது காலத்தை கணிக்க முற்படுவது பயன் தருமா என்பது கேள்வி. அண்மையில் ஜப்பானிய பேராசிரியர் ஹாஜிமே நாகாமூரா என்பவர் இதுகாரும் சங்கரர் காலத்தைப் பற்றி எழுதிய அனைத்துக கட்டுரைகளையும் ஆராய்ந்து கி.பி. 788லிருந்து 820 வரை சங்கரர் வாழ்ந்தார் என்ற கருத்து முற்றிலும் தவறானது. ஏற்புடையது அல்ல என்று எழுதியிருக்கிறார்.
காலத்தை கணிப்பதை ஆராய்சியாளரிடையே சர்ச்சைக்கும் சண்டைக்கும் விட்டுவிடலாம். அது அவர்களுக்கு சூடாகக்கூட இருக்கும்! சங்கரரை அறிவது என்பது அவரது காலத்தை அறிவது மட்டும்தான? அவர் விட்டுச் சென்றுள்ள ஏறாளமான நூல்கள் உள்ளன. அவர் அறிவின் சிகரமாக திகழ்ந்தவர். உலக அரங்கிலே சமயத்திற்கும் பக்திமரபுக்கும் அவர் செய்துள்ள தொண்டு இமயம் போன்றது என அண்மைக்கால ஆராய்சியாளர் கூறுகின்றனர். அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்துள்ளது. "விஞ்ஞான பிரும்ம" என்ற உபநிடத கருத்துகளின் அடிப்படையிலாகும். அவரது நூல்களின் நடை "சிங்க ஏறு" போன்ற நடை. அவரது நூல்களை அவர் கூறியுள்ள மூலத்திலேயே படிக்கும் போது அவர் ஆற்றலைக் கண்டு அறிஞயர்கள் வியக்கிறார்கள். அவர் கூறியுள்ள கருத்துக்கள் காலத்தை கடந்து, தேசத்தைக் கடந்து என்றும் எங்கும் நிலைத்து நிற்பவையாக உள்ளன. தாங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் அவருக்கு பின் வந்த சமுதாயம் அவரது கருத்துகளை ஏதாகிலும் ஒரு வகையில் எற்றுக்கொண்டு தம்மில் அடக்கியே வளர்ந்துள்ளது. இவைகளையெல்லாம் படிக்கலாமே! ஆசிரியர்கள் மாணாவர்களுக்கு எப்படி கல்வி கற்றுத்தர வேண்டும் என்பதை சங்கரர் கூறுகிறார். மாணவர் உள்ளம் பிஞ்சு உள்ளம். மீண்டும் மீண்டும் ஐயங்கள் எழாலாம். அவர்கள் மீது கடிந்து கொள்ளாது எவ்வளவு முறை கேட்டாலும் அவர்கள் அறியும்வரை அன்போடு புகட்ட வேண்டும் என்கிறாரே அதையும் படிக்கலாம். சித்தத்தைத் தூய்மைப்படுத்த எழுந்தவையே சடங்குகள். உண்மை நிலையை அறிவதற்கு அல்ல. உண்மை என்பது ஆய்ந்த அறிவின்பால்பட்டது.
சித்தஸ்ய சுத்தயே கர்ம நது வஸ்தூபலப்தயே
வஸ்து ஸித்திர் விசா&#

Pages: 1 ... 76 77 78 79 80 81 82 83 84 85 [86] 87 88 89 90 91 92 93 94 95 96 ... 153