Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - atmavichar100

Pages: 1 ... 74 75 76 77 78 79 80 81 82 83 [84] 85 86 87 88 89 90 91 92 93 94 ... 153
1246
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 22, 2014, 08:16:29 AM »

1247
Pointer-16

TEACHING THE SIMPLE MINDED

When one group of villagers who had just been given Arunachala Stuti Panchakam [Bhagavan's five poems about Arunachala] to recite left the hall, a devotee asked,
'How can such uneducated people understand the literary Tarnil in these poems?
"They don't have to understand the meaning," replied Bhagavan, "they will get some benefit from merely repeating the verses."

I can think of another similar case. Whenever Echammal's
granddaughter came to see Bhagavan, he would ask her to read out loud Upadesa Undiyar [a thirty-verse philosophical work by Bhagavan in Tamil]. If she made any mistakes Bhagavan would correct her pronunciation.

Since she seemed to be a rather worldly girl I once asked
Bhagavan, This girl does not look as if she has any desire for
jnana. Why do you ask her to repeat Upadesa Undiyar each time she comes?'

Bhagavan explained: 'In future, when troubles come to her.
the remembrance of these verses will help her.'


This girl is now an old woman. When I saw her a few months ago?we had not seen each other for many years?I reminded her about these lessons that Bhagavan had given her.

She told me. The verses have stayed in my memory all my life,
hut it is only recently, by the grace of Bhagavan, that I have begun
to understand their meaning.'

ANNAMALAI SWAMI in:
'Living by the Words of Bhagavan', p 115

------------------------------------------------------------------------


Here is the thread where you can discuss about what you read here :
It is called Pointers from Bhagwan - For Discussion

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7565.0

1248
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 20, 2014, 09:59:06 AM »

1249
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 20, 2014, 09:57:41 AM »

1250
General Discussion / Re: Wandering Swami of Tiruvannamalai
« on: May 16, 2014, 12:56:18 PM »
Dear Abhilash

The sadhu has been discussed earlier in this thread .Kindly go through it . He adopts the same antics with most people :

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=6969.msg26014#msg26014

1251
General topics / Re: Reality of Shiva, Vishnu and other forms
« on: May 16, 2014, 08:12:24 AM »
From my personal experience, as well as from that of others within my knowledge, I can say that before recommending any path to an aspirant Bhagavan would first find out from him what aspect, or form, or path he was naturally drawn to and then recommend him to follow it. He would sometimes endorse the traditional stages of sadhana, advancing from worship (puja) to incantation (japa), then to meditation (dhyana), and finally to Self-enquiry (vichara). However, he also used to say that continuous and rigorous practice of any one of these methods was adequate in itself to lead to Realization. Thus, for instance, when one adopts the method of worship, say of the Shakti, one should, by constant practice and concentration, be able to see the Shakti everywhere and always and in everything and thus give up identification with the ego. Similarly with japa. By constant and continuous repetition of a mantra one gets merged in it and loses all sense of separate individuality. In dhyana again, in constant meditation, with bhavana or deep feeling, one attains the state of Bhavanatheeta, which is only another name for pure Consciousness. Thus, any method, if taken earnestly and practiced unremittingly, will result in elimination of the "I" and lead to the goal of Realization.


Concentrate on the Original Purpose by Kunju Swami( source:From the Mountain Path, July 1966)


1252
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 15, 2014, 12:10:24 AM »
மஹா பெரியவா தந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.

மஹா பெரியவா தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.


1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்.
2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்.
3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,
4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு.
5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு.
7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்.
8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்.
9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்.
10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.

இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.

இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ?ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி? என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே!
இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.
கோவிந்த நாமம்தான் அது! ?கோவிந்தா? கோவிந்தா? கோவிந்தா?? ? இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்!

கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.
?பஜகோவிந்தம்? என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.
இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ?பரமாத் மாவை பஜியுங்கள்? என்று பொதுவாகச் சொல்லாமல், ?கோவிந்தனைப் பஜியுங்கள்? என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?
கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ?அச்சுத, அனந்த, கோவிந்த? என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ?பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்? என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.
?கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா? என்று ஒரு இடத்திலும், ?குறைவொன்றுமில்லாத கோவிந்தா? என்று இன்னொரு இடத்திலும், ?இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா? என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.?
இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ?எல்லாம் போச்சு? கோவிந்தா? எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ?கோவிந்தா கோவிந்தா? என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.

1253
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: May 13, 2014, 10:45:29 AM »
வீண் பகை தீர்க்கும் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர்


இன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பக்த பிரஹல்லாதன்
ஹிரண்யகசுபுவின் மகன் பிரஹல்லாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி என்னும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை ஹிரண்யகசுபுவுக்கு ?தான்? தான் பரம் பொருள் என்று வாதிடுவார். நாரயணனை துதிக்கும் தன் மகனை பல சோதனைக்கு உள்ளாக்கினான். எல்லா சோதனைகளிலும் இறை அருளால் வெற்றி கண்டான் பிரஹல்லாதன். இதை அவன் தந்தையால் பொருக்க முடியவில்லை. இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரஹல்லாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்லை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரஹல்லாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை ?இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார்.

ஆச்சரியம்! பாதி மனிதனாகவும் [நரன்] பாதி சிங்கமாகவும் [சிம்ஹா] இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேலும்[ஆகாசம்] இல்லாமல் தனது மடியிலேயே, மனிதனும், விலங்குமில்லா நரஸிம்ஹராக ஹிரண்யகசுபுவை வதம் செய்தார் ஹரி.

லக்ஷ்மி நரசிம்மர் [நரஸிம்ஹர்]

ஹரியின் எல்லா அவதாரங்களிலும் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் பெருமை சற்றே அதிகம். தனது பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக பக்தன் வேண்டிய உடன் அவதரித்ததினால் ஹரி பக்தர்களால் ஸ்ரீநரசிம்மர் சற்று உயர்வாக கொண்டாடப்படுகிறார். ஆனால் ஸ்ரீநரசிம்மர் ?உக்ராவதாரம்? என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லக்ஷ்மியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் இவரை ? ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்? என்று பூசனைச் செய்கிறார்கள்.

அதனால் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது தின்னம். ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர். இப்படிப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் தமிழ்நாட்டில் திருத்தணியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோளிங்கரில் கண்டு தரிசிக்கலாம். சோழசிங்கபுரம் என்னும் பெயர் மருவி சோளிங்கர் என்று ஆயிற்று. ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் கொண்டது. நாழிகையை கடிகை என்றும் குறிப்பிடுவர். இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீயோக நரசிம்மரை ஒரு கடிகை தியானம் செயதால் முக்தி கிடைப்பது உறுதி. அதனால் இத்க்ஷேத்திரத்திற்கு ?கடிகாசலம்? என்று ஒரு சிறப்பு திருநாமம் உண்டு.

சோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம்.
ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம், ?நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.? எனக்கு நல்வழி காட்டுங்கள்? என்று மலை வேண்டியது. ?மலையே.. நீ உயர்ந்து கொண்டே வா. இங்கு எல்லா வல்லமை படைத்த இருவர் வரப் போகிறார்கள். அதனால் நீ அவர்கள் பெருமைப்படும் அளவில் வளர்ந்துவா.? என்று மலைக்கு கட்டளையிட்டார். அதன்படி மலையும் வளர்ந்து கொண்டே வந்தது. அதன் வளர்ச்சி தேவலோகத்தையே முட்டிவிடும் போல் இருந்தது. இதை கண்ட இந்திரன் பயந்து பலராமனை கொண்டு மலையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினார். கோயில் உருவான கதை வடமதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர், கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது, அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீநரசிம்மரின் தீவிர பக்தர். ?அரசர் இந்திரத்துய்மன், நரசிம்மரை மட்டும் வணங்குவதால்தான் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க சொல்லலாம்.? என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். ?அரசே.. நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அதுவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம், செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது சந்தோஷம். அந்த சந்தோஷத்தை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர்? என்றார் அமைச்சர். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பதை போல் அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீயோகநரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒருநாள், அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று, பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர், அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி, மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன்மான், மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர், ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அந்த பொன்மான், மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறியது. இதை கண்ட அரசர் இந்திரத்துய்மன் ஆச்சரியப்பட்டார். அந்த ஜோதி ஸ்ரீஆஞ்சநேயனாக காட்சிகொடுத்து. ?நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.? என்று கூறி மறைந்தார் ஸ்ரீஅனுமன். தமக்கு ஸ்ரீஅஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்றால் எல்லாம் ஸ்ரீயோக நரசிம்மரின் அருளால்தான் என்று ஆனந்தம் கொண்டார் அரசர். சில நாட்கள் சென்றது. அப்போது கும்போதரன் என்ற அசுரன், வடமதுரையை ஆட்டிபடைத்தான். அந்த அசுரனிடம் இருந்து தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றமாறு ஸ்ரீயோக நரசிம்மரிடமும், ஸ்ரீஆஞ்சனேயரிடமும் வேண்டினார் அரசர் இந்திரத்துய்மன். ஸ்ரீஅனுமன், அரசரின் வேண்டுதலை நிறைவேற்ற, அசுரன் கும்போதரனிடம் போர் செய்து அவனை வீழ்த்தி கொன்றார். இதனால் அரசர் மகிழ்ந்து, ஸ்ரீஅனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். இந்த மலைக்கு சக்தி வாய்ந்த இருவர் வருவார்கள் என்றாரே பைரவேஸ்வரர், அதன்படி ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சனேயரும் அந்த மலை கோயிலில் இருக்கிறார்கள். ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சனேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது. விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை அதாவது ஒருநாழிகை (24 நிமிடம்) நேரத்தில் ஸ்ரீநரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார் கடிகை என்றால் வடமொழியில் ஒருநாழிகை என்ற பொருள். இந்த ஆலயத்தில் ஒருநாழிகை நேரம் இருந்தாலே எல்லா கஷ்டகாலமும் விலகும் என்கிறார்கள். சப்த ரிஷிகளும், வாமதேவர் என்ற முனிவரும், திருமங்கை ஆழ்வாரும் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கியுள்ளனர். பேய் பிடித்ததாக நம்பப்படுகிறவர்களையும் சித்த பிரமை பிடித்தவர்களையும் இங்கே அழைத்துவந்து, மலையின் மேலே உள்ள அனுமந்த தீர்த்தத்தில் மூழ்கி எழச் செய்து, அனுமார் சந்நிதியில் அமரவைத்தால், கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டாலும் பிறகு அவர்களுக்கு தூக்கம் வந்து தூங்கி விடுவார்கள். தூக்கம் கலைந்து கண் திறந்த பிறகு அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் குணம் அடைகிறார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை. ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சநேயரும் பக்தர்களின் நோய்களையும், வீண் பகைகளையும் தீர்த்து நிம்மதி அருளி சிறப்பாக வாழ வைக்கிறார்கள்.

1254
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: May 13, 2014, 10:26:46 AM »

Today i.e Tue 13 May 2014 is Sri Narasimha Jayanthi and hence sharing this info here .
Nanganallur Lakshmi Narasimha temple

AN ANCIENT temple, which had totally disappeared due to the ravages of time but was restored to its glory is the Lakshmi Nrisimha, Navaneethakrishnan Temple in modern Nanganallur, a suburb of Chennai, whose original name according to scholars was Nangainallur or the place where Goddess Mahalakshmi is enshrined and worshipped. It abounds with numerous temples, the most important among them being the Lakshmi Narasimha Navaneethakrishnan Temple, the Anjaneyar Temple with the over 30-ft high statue of Ramadhootha in it, and the Ardhanareeswarar Temple, where an ancient Sivalingam, found in a temple tank and identified by the Paramacharya of Sri Kanchi Kamakoti Peetam, as that of Ardhanareeswara, has been enshrined. While the last two mentioned are strictly modern structures, the Narasimha temple has been built over the remnants of what was an ancient temple, which existed during the pre-Pallava period.

The Narasimha temple, which has been built on a 10-ground site, was over 1,500 years old, according to the "Ashtamangala Prasnam" conducted by Sri Narayana Namboodiri of Guruvayur. The Prasnam revealed that the original temple had shrines for Lords Lakshmi Narasimha, Navaneethakrishnan, Rama and Srinivasa and new shrines for these deities should be built. It also said the entire temple complex was razed to the ground in a fire centuries ago and "Bhoomi Sankarshana" should be performed there. It was also predicted that the digging would bring up some idols and puja articles along with the ruins of the ancient temple.

The levelling of the temple site started on April 5, 1974, and a bell, a plate and a lamp were recovered. The bell is said to be of rare kind as its top portion contains the images of both Sudharsana ( and the Panchajanya one inlaid in the other. A stone with an inscription was also found and it said that a land gift was made by "Kaveri Thenkarai Ravichathiran" to keep the two "Nandavilakkus" going. These articles as well as the five-and-a-half feet high idol of Mahavishnu found made the archaeologists conclude that the temple was built in the eighth century during the Pallava rule.

The members of the Krishna Bhakta Jana Sabha took the photos of the recovered articles and idols to Kanchipuram and met the Paramacharya on May 2, 1974, and explained the same to him. The sage of Kanchi blessed them. Sudarsana Homam, Sri Suktha Homam and Bhoomi Sankarshana Puja were conducted at the site on May 24 and Thirukkallam Sri Narasimha Raghavachariar, a renowned scholar, conducted the "Sthala Puja." Efforts of the Sabha bore fruit when the Lakshmi Narasimhar Temple was constructed and the Ashtabandana Mahasamprokshanam was performed on December 14, 1975. The "Sudarsana Yantram," which was kept in the Chakarathazhwar shrine at Kancheepuram, was brought to Nanganallur and installed under the Peetam of the idol by Sri Jayendra Saraswathi. Yagasala puja and other rituals preceded the Samprokshanam and the temple was then consecrated. The Sabha also introduced the "Pidi Arisi Thittam" by collecting one handful of rice and one rupee from the public for conducting the daily puja and other rituals.
The temple complex slowly took shape with the construction of the Veera Anjaneya shrine through public donations and the Samprokshanam was performed in December 1976. "Koti Archanai" was conducted for Sri Lakshmi Narasimhar from June 19, 1978 and special "Thirumanjanam" with 473 Kalasams was performed to the Lord and His Consort. In course of time, the shrines of Sri Rukmani-Sathyabhama Sametha Sri Navaneethakrishnan, Sri Kothandarama, Sri Srinivasa, Sri Andal, Azhwars and Acharyas, including Sri Ramanuja and Sri Vedanta Desika, were established.

Sri Mukkur Lakshminarasimhachariar was a great source of inspiration for the Sabha members and the Lord was said to have appeared in his dream and told him that the temple existed in the Thretha Yuga and was known then as "Dakshina Deepalaya." It was here that Sage Jamadhagni, father of Parasurama, an incarnation of Lord Narayana, conducted the Narasimha Mahayagnam when the Lord appeared before him and he requested Him to stay in the place and bless the devotees.

The temple is a complete complex now with the Sudarsana shrine in the form of a car with "Vedachakra Vimanam." The idol of Sudarsana carries all the 16 weapons and on the other side is the image of Narasimha, seated on "Panchamuka Adisesha". Another speciality in the temple is that the Lord's Holy Disc, which was in "Prayoga Chakra" form and was unearthed during the digging operations, has been installed in front of the Chakarathazhwar shrine.

The temple has a 55 feet high and 30 feet wide Rajagopuram with five tiers and seven Kalasams. As one enters the temple through the Rajagopuram, he can worship Lord Ranganatha and Lord Krishna and then the 44th and 45th Jeeyars of Ahobila Math and Sri Mukkur Lakshmi Narasimhachariar in the Muka Mandapam. The doors of the Rajagopuram contain intricately carved floral designs and images of the Lord's incarnations.

Many annual and monthly festivals are conducted in the temple of which the most important is the Narasimha Jayanthi celebrated for five days. The temple needs funds for its Vahanams and "Kannadi Maaligai." Donations may be sent to Sri Krishna Bhakta Jana Sabha, Sri Lakshmi Nrisimha Navaneetha Krishnan Temple, MMTC Colony, Nanganallur, Chennai, 600061.

1255
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 12, 2014, 05:23:50 PM »

1256
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 10, 2014, 07:17:33 PM »

1257
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 10, 2014, 10:30:08 AM »
ஜோதிர்லிங்கம்னா என்ன?? (காஞ்சி மகாபெரியவர்)

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.
அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் ?ஹநுமான் சாலீஸா?வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் ஹநுமான் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ?ராமேஸ்வரத்தில் உள்ள ஹநுமான்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்? என்றார்.
அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
?பெரியவா? ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ?அப்னே ஆப் ஹுவா!?ன்னு தானாகவே உண்டானது? ?சுயம்பு?ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லயா? அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே??
அதற்கு ஸ்வாமிகள், ?ஜ்வாலாமுகியை பார்த்திருக்கியா?? என்று கேட்டார். ?நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!? என்றார் அவர்.
அதற்கு ஸ்வாமிகள், ?சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டுமில்லே? பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?? என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.
?வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்? என்றார் கண்ணன்.
உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்?
?அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?
மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:||

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது?
விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்? நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்? மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல? லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர்லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்? லிங்கம்தான் ஜோதி? என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

1258
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 10, 2014, 09:53:51 AM »
மகா பெரியவா- சொன்ன பரிகாரம்

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, ? என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்?னு சொல்லிவிட்டு அழுதாள்.
***-
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, ?அழாதே அம்மா ! உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்? என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது.
( பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களுக்கு நன்றி?)

1259
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 07, 2014, 07:40:21 PM »
?மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது. - By பட்டு சாஸ்திரிகள்.

ஒரு மாலை நேரம்? அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார்.
?என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹாபெரியவாளோட பாதுகையையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்ரஹகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே??ன்னு என்னைக் கேட்டார்.
அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ?மஹாபெரியவாளின் பஞ்சலோக விக்ரஹகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க? என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணினார்கள்.
அப்புறம்? மஹாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்ரஹகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே? கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ?இத்தனை வயசுக்குப் பிறகும், மஹாபெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே?ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார்.
ஒரு நல்ல நாள் பார்த்து, விக்ரஹகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்ரஹம்தான், அவர் பண்ணின கடைசி விக்ரஹகம்).
இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்ரஹத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ?எல்லாம் பெரியவா பார்த்துப்பா?னு தைரியமா இருந்தேன்.
திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.
?மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ?அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு?ன்னு அதிகாலைல, மஹா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்?னு கணேஷ்குமார் சொல்லிருக்கார்.
சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ?இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்?னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!
பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன்.
இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை.
ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மஹாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!
பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.
பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா? ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்? வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு.
அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.
எங்ககிட்ட வந்த அந்த விவசாயி, ?என்ன நடந்துது??ன்னு கேட்டார். ?ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை?ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!
?மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப? அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்?னார்.
அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ?ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர?ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலேயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்ரஹத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.
மஹா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மஹான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்ரஹகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார்.
இப்ப? பாதுகையோடு பஞ்சலோக விக்ரஹகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!
ஒண்ணு மட்டும் சத்தியம்! ?இன்னது நடக்கணும்?னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார்.
அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!? என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மஹானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.

1260
General topics / Re: Quotes from Shankaracharya's
« on: May 07, 2014, 07:18:39 PM »
வெறும் சப்தத்திற்கும், வேத சப்தத்திற்கும் உள்ள மதிப்பு"(காஞ்சி பரமாசார்யாள்)

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம்.
பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான்.
அவனுக்கு வேதம் தெரியாது. ?
?என்னவோ அர்த்தமில்லாமல் முணுமுணுக்கிறதே இந்த கோஷ்டி.
இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே? என்று கூறினானாம்.
இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது. நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம்.
வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார்.
?இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார்.
அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது.
"ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணுமுணுத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன். நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார்.
"அவன் என்ன முணுமுணுத்தான் என்று தெரியுமா?" என்று.
"அது காதில் விழவில்லை. ஆனால் முணுமுணுத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் அந்தப் பிராம்மணன்.
"அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணுமுணுப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணுமுணுப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.
வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை ஆசார்யாள் சொல்லுகிற மாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

Pages: 1 ... 74 75 76 77 78 79 80 81 82 83 [84] 85 86 87 88 89 90 91 92 93 94 ... 153