Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 584 585 586 587 588 589 590 591 592 593 [594] 595 596 597 598 599 600 601 602 603 604 ... 3074
8896
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 11:03:45 PM »
Verse 486:


மருகல் அமர்ந்து நிறைந்த கோலர்
    மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
    பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
    உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார்
    அங்கமும் வேதமும் என்றெ டுத்து.When the beauteous form of the Lord who willingly
Abode at Marukal turned out as the very glorious form
Of the Lord of Ganapaticcharam, melting love began
To swell in him the more; impelled by a merciful feeling
To instruct the men on earth,
With tears cascading from his eyes, he sang a decade
Beginning with the words: "Angkamum Vedamum?"

Arunachala Siva.

8897
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 11:01:13 PM »
Verse 485:


புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
    பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
    திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
    மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
    காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.He entered and prayed before the Lord; to him
That adored the sempiternal form of the Lord
Of Marukal the blue-throated Lord who is concorporate
With His Consort-- the Lord who wears the holy ash
And sports on His ruddy matted hair the billowy Ganga
And the crescent, the Lord of Ganapaticcharam,
The Holder of fire in His hand --, gave darshan;
The divine child witnessed this.

Arunachala Siva.


8898
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:58:39 PM »
Verse 484:


மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
    மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
    செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
    பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
    சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.


He gave the couple leave to depart; he sojourned
In that town; glorious Sirutthondar who had quelled
The cruel Paasa, came to Marukal and beseeched him
To visit again Chengkaattangudi; love in him
Welled up more and more; contemplating the grace of Siva,
And circled by the rare tapaswis on all sides,
To adore the feet of the Lord who wields
The blazing Mazhu, he entered the temple.


Arunachala Siva.

8899
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:56:11 PM »
Verse 483:


பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
    பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
    கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
    நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
    மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.


Cured of swelling venom he stood up; the peerless devotees
That stood encircling, raised a glorious uproar;
Folding their hands above their heads, the couple
Fell at the feet of the grace-abounding child of Kaazhi;
The Prince of Pukali-girt-with-cloud-capped gardens,
Blessed them with the great life of marital felicity
To flourish in love and joy in this fourfold world.

Arunachala Siva.

8900
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:49:36 PM »
Verse  482:


சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
    சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
    விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
    பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
    ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.சடையை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவராகிய சங்கரரை, பிறைச் சந்திரன் தங்கும் முடி உடைய வரை, ஆனேற்றை ஊர்தியாக உடையவரை, வேதியரை, திருவெண் ணீற்றை உடையவரை, பகைவரின் முப்புரங்கள் எரியுமாறு அழித்த படைக்கலமுடையவரை, தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும், பாம்பணையில் துயிலும் திருமாலும் போற்றுகின்ற கோலம் உடைய வரை, திருவாயால் அழைத்து, `பெருமானே! இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ?' என்று தொடங்கிப் பாடினார்.


(English translation not available.)


Arunachala Siva.
 

8901
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:46:15 PM »
Verse 481:


மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
    மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
    துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
    கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
    பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்."And this one died, stung by bright serpent;
I stand here bewildered like one whose ship is
Sunk in the billowy mid-ocean; you have come
To me like my true kin and done away with my misery."
When she spake thus, the Prince of Kaazhi,
Hailed by the learned, moved by mercy, began to invoke
In hymns the Lord of Marukal-girt-with-green-fields,
To bestow on her the boon of cure for the snake-bite.   


Arunachala Siva.

8902
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:42:30 PM »
Verse 480:


வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
    மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
    இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
    ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
    கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்."Thaaman, the chief of Vaippoor girt
With bountiful gardens, is my father; this one is
His nephew; seven are my father's daughters,
Verily seven young she-elephants; he plighted
His word to this one that he would give his eldest
To him in marriage; but he received much wealth
To his heart's content, from a stranger
And married her to him; even so he gave in marriage
All but myself, to others; I fostered love
For this one who well-nigh perished in languishment;
So, unknown to them, I eloped with this one."

Arunachala Siva.8903
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:39:18 PM »
Verse  479:


சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
    சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
    பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
    கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
    போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.


The Brahmins of Sirapuram stood beside her, who
Even in her languishing invoked the grace
Of Lord Siva; he addressed her thus: "Fear not.
Unfold to us the happenings and the cause
Of your distress." Thus told, folding her flower-hands
Above her head and tears cascading from her eyes
She fell at the roseate feet of the protector
Of the Vedas who hailed from Kaazhi, and began
To narrate how they came there and how
They were by misery overtaken:   


Arunachala Siva.

8904
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:35:48 PM »
Verse 478:


இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
    இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
    ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
    மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
    மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.இங்ஙனம் சிவபெருமானின், அருளையே எண்ணிய வண்ணமாய் வருந்தும் இளங்கொடியைப் போன்ற துவ ளும் இடைகொண்ட ஏழையான அம்மங்கையின் துன்பத்தின் வயப்பட்ட முறையீடு, எம் இறைவரான சீகாழி ஆண்டகையார் இறை வரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின் மெய்த்தன்மை யுடைய செவிகளில் சேரப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள் பக்கத் தில், அடியார்கள் சூழ்ந்து வர எழுந்தருளி வந்தார்.

(English translation not available.)


Arunachala Siva.
 

8905
General topics / Re: Tevaram - Some select verses.
« on: July 14, 2016, 10:29:44 PM »
Verse  477:வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
    வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
    சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்   
    யான்இடுக்கட் குழிநின்றும்ஏறு மாறும்
அந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி
    அணிமருகற் பெருமானே அருளாய் என்றும்.

உம்மிடம் வந்தடைந்த சிறு மறையவனான மார்க்கண்டேயனின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் வடிவனைய சிவந்த கொடுங்கண்ணையும், வெண்மையான பற்களையும் கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத் தருளிய சிவந்த திருவடியை யுடையவரே! இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும், நான் துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே! அருள் செய்வீராக! என்றாள். மேலும்,

(English translation not available.)

Arunachala Siva. 

8906
Verse  14:வெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்
    துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்
    பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
    கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத
    களியெனக்கே.O Lord of aeviternal Uttharakosamangkai !
Like the tongue That is dry though amidst a flood,
I too,
notwithstanding Your gift of mercy to me,
am not freed of misery.
O One be together in loving devotees !
Will You forsake me?
Will You not grace me who am poised in slyness,
Grace me with the bliss,
till now to me unknown?


Arunachala Siva.

8907
Verse  13:கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
    கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
    லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
    கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
    மதுவெள்ளமே.O sempiternal Uttharakosamangkai`s King who abides housed in the bodies of devotees
who are attached to You !
O Honey suffusing the petals of flowers !
O Nectar !
O my ambrosial Flood !
Like a dog that laps little by little the sea-water,
I too,
partake,
in small doses Of Your Ocean of Mercy.
Will You forsake me?

Arunachala Siva.

8908
General topics / Re: Abhirami Andati - verses and meanings:
« on: July 14, 2016, 10:08:26 AM »
Verse  62:62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.

O Abhirami!  Your husband kept the golden mountain as the bow and burned the Tripura.  He also
wore the skin of the elephant with red eyes.  You have fixed your kurumbai like breasts on His chest,
and made You and Him go tired.  You who is having gold like hands, has got sweet cane bow and flowers
as arrows!  You ever remain in my heart.

contd.,

Arunachala Siva.   

8909
Verse  145:

Supreme  Bliss is not separate from you.  It is your true Being.  That which arises with the sense objects
is bliss also, but it is not the pure consciousness in which bliss itself is annihilated.  In that state both
kinds of bliss are annihilated.

Since our true nature is bliss only, a degree of bliss is experienced through contact with the objects of sense,
but this bliss is not to be mistaken for the bliss which is experienced through transcending the senses
entirely, and which precedes its own annihilation in the state of realization.  The meaning is not entirely
clear.  In this translation it has been taken to mean that the Jnani, having freed himself from the bliss
of the world of the senses, then experiences supreme bliss at the point of merging with the Self.  However,
for this merger to take place, even this supreme bliss,  which still contains a trace of duality, must be lost.
It could also mean that the first kind of bliss is lost because it is only temporary, and when it passes away,'
the experiencer is returned once more to  the sufferings of the phenomenal world, whilst the second kind
of bliss, supreme bliss, is lost because the duality of experiencer and the thing experienced cease on merging
permanently with the Self.

contd.,

Arunachala Siva.       

8910
38.  The notion 'I am the body' is verily the ideation of real and unreal.  In all the three periods of time
it is not.  All is Brahman alone.

39.  The notion 'I am the body' is referred to here as the world of five elements.  In all the three periods
of time it is not.  All is Brahman alone.

40.  The notion 'I am the body' -- that itself is ignorance, it is said.  In all the three periods of time
it is not.  All is Brahman alone.

41.  The assertion 'I am the body' is said to be impurities and impressions from past lives.  In all the
three periods of time it is not. All is Brahman alone.

42.  The assertion 'I am the body' -- truly that alone is the individual soul.  In all the three periods
of time it is not.  All is Brahman alone.

43.  The notion 'I am the body' is proclaimed as the supreme hell.  In all the three periods of time
it is not.  All is Brahman alone.

44.  The assertion 'I am the body' is defined as mind only.  In all the three periods of time it is not.
All is Brahman alone.

contd.,

Arunachala Siva.       

Pages: 1 ... 584 585 586 587 588 589 590 591 592 593 [594] 595 596 597 598 599 600 601 602 603 604 ... 3074