Recent Posts

Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10
1
General topics / Manikkavadakar
« Last post by ramanaduli on June 18, 2018, 02:59:58 PM »
*பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணமும் சிவஞான சுவாமிகளின் காஞ்சி புராணமும்*

*மாணிக்கவாச பெருமான் துதி*

குறிப்பு: இன்று *"ஆனிமகம் - மணிவாசகரது முத்தி திருநாள்"*

அதிசயமாக இந்த ஆனி மாதத்தில் இரண்டு முறை மகம் நட்சத்திரம் வருகிறது. *"பெருமானின் ஐக்கியத் தலமான தில்லையில் இரண்டாவதாக வரும் மகமான 15/07/18 அன்று குருபூசைத் திருநாள் அனுட்டிக்கப்பட இருக்கிறது"*

 சைவப்பெருமக்கள் யாவருக்கும் கோயில் என்றாலே சிதம்பரம்தான், அவ்வகையில் *"தில்லை கூத்தபிரான் சன்னதியில் நடக்கும் வழமைகளைத்தான் நாம் பிரமாணமாக கொள்ள வேண்டும், என்றாலும் திருப்பெருந்துறையில் மணிவாசகப் பெருமானது குருபூசை நாளையொட்டி நடக்கும் பத்து நாள் பக்தோற்சவத்தில் இன்றுதான் குருபூசை அனுட்டிக்கப்படுகிறது*
எப்படி இருந்தாலும் இரண்டுமே கொண்டாத்தக்க நாட்களேயாம்!! கரும்புதின்ன கசக்குமா என்ன!?🙏🏻

*"வினையேன் அழுதால் உன்னை பெறலாமே"* என்ற மாணிக்க வாசகத்தின் படி பெருமானை *"அழுது அடியடைந்த அன்பன்"* என்று குறித்து வணங்கும் திருவிளையாடற் புராணத்தின் மணிவாசகர் துதியும் *"கரைந்து கரைந்து இருகண்ணீர் மழைவார துரியநிலை கடந்த வாதவூரர்"* என்று பாடி வணங்கும் காஞ்சி புராணத்தின்  துதியும் இந்நந்நாளில் நம் சிந்தனைக்கு

*பாடல்*

எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீது ஏறத் துளும்பு கண்ணீருள் மூழ்கி
அழுதடி யடைந்த அன்பன் அடியவர்க்கு அடிமை செய்வாம்.

பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கி, கரைந்து கரைந்து இருகண்ணிர் மழைவாரத் துரிய நிலை கடந்து போந்து , திருந்துபெரும் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து , இருந்து அருளும் பெருங்கிர்த்தி வாதவூர் அடிகள் அடி இணைகள் போற்றி

*பொருள்*

பலகாலம் எழுதப்படாமல் வாய்வழி  ஓதப்பட்ட வேதங்களும் தேர்ந்துணராத இறைவனை இரவும் பகலும் ஒரு பொழுதும் விடாது பூசனை செய்து கரங்களை சென்னி சேர்த்து வணங்கி கண்ணீர் ததும்ப அழுது அடியடைந்த அன்பின் வடிவமானவருக்கு அடிமை செய்வோம்

திருப்பெருந்துறையில் சிவபிரான் அருளியாட் கொண்ட பெரும் பெற்றிமையை எண்ணி எண்ணி கரைந்து கண்ணீர் பெருக்கி உருகி உருகி ஜீவன்முத்தர் நிலையை எய்தி தேன்போன்ற திருவாசகத்தையும் பாடி இறைவன் திருவடியில் செம்மாந்து இருக்கும் பெரும்புகழுடைய வாதவூரரின் திருவடிகள் போற்றி

Ramanaduli
2
The teachings of Bhagavan Sri Ramana Maharshi / Re: Our Bhagavan-Stories
« Last post by Balaji on June 18, 2018, 11:53:11 AM »

பகவான் ஸ்ரீ ரமணரிடம் போனால் , அமைதியாக இருக்கிறது. ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது. மலையைவிட்டுக் கீழே இறங்கினால் , பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. நோய் ஆட்டம் போடுகிறது. ஆனால் , அந்த இடத்தில் எதுவுமே இல்லையே , ஏன் அப்படி பசிகூட எடுக்கவில்லையே , ஏன் அப்படி  ஆச்சரியமாக இருக்கும். அந்த மகான் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும். தேடுதலின் விளைவாகக் காதல் அல்லது அன்பு ; அதன் பின்விளைவாக நம்பிக்கை ; மகான்களின் மீது நம்பிக்கை ஏற்பட , அவர்களின் உபதேசம் உள்ளுக்குள் மெல்ல மெல்ல இறங்கும். அவர் அண்மையில் இருந்தது , அவரின் அதிர்வைப் பெற்றது , அவர் தொடலில் ஆனந்தம் கண்டது , அவர் பார்வையில் உள்ளுக்குள் திரும்பியது என்றெல்லாம் நடக்க , மனம் உள்நோக்கி நிற்க , ஓர் அமைதி ஏற்படும்.

இப்போது மனம் வெற்றி  தோல்விகளைப் பற்றி குடும்பச் சூழல் பற்றி , தன் உடல் நிலை பற்றி , அடுத்தவரின் துரோகம் பற்றி , தனது அடுத்த நடவடிக்கை பற்றி எந்த கவலையும் படாது.  ஆற்றில் போகும் சருகுகளில் , நானும் ஒரு சருகு. இத்தனை காலம் தாண்டி வந்திருக்கிறேன். இனி , சொச்ச காலமும் தானாகத் தாண்டும்  என்ற எண்ணம் ஏற்பட , உள்ளே அமைதி கெட்டிப்படும். அந்த அமைதி , எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலைக்குக் கொண்டுபோய் , உள்ளுக்குள்ளே  நான் யார்   என்ற கேள்வியை பலமாக எழுப்பும். அப்போது அது வெறும் கேள்வியாக , தேடலாக இருக்காது. மிகச் சரியான பாதையில் முன்னேறி , எங்கு எண்ணங்கள் தோன்றுகின்றனவோ , எங்கு நான் என்கிற எண்ணம் மிக பலமாக இருக்கிறதோ , அந்த இடத்தைப் போய் ஆக்கிரமித்துக்கொள்ளும். இங்கிருந்துதானே எல்லாம் வருகிறது ; இங்கிருந்துதானே நான் என்ற எண்ணம் தோன்றுகிறது ; இங்கிருந்தானே என் செயல்களெல்லாம் வடிவு பெறுகின்றன என்று அந்த எண்ணத்தை முழுவதுமாகப் பற்றி நிற்க.. உள்ளே மெல்ல மெல்லப் பற்றி நின்றது , பற்றியதால் இழுக்கப்படும். பற்றியதும் பற்றப்பட்டதும் இரண்டறக் கலக்கும் இதைச் சொல்லால் விளக்க முடியாது. மிகப் பெரிய உண்மை. சத்தியம்.

இது கணிதம் அல்ல ; 16 நாட்கள் இந்தப் பயிற்சி , அடுத்த 16 நாட்கள் அந்தப் பயிற்சி என்கிற ஆட்டமெல்லாம் இங்கு கிடையாது. எந்தக் கணக்கு வழக்கிலும் இது அடங்காது. இது உங்கள் தலை எழுத்து. முன்ஜென்ம வினை. மூத்தோர் புண்ணியம் இவை கலந்து திரட்சியாகி உள்ளுக்குள்ளே இறங்கவேண்டும். அப்போதுதான்  நான் யார்   என்று தேடலை ஆரம்பிக்கவே முடியும். அப்படி ஆரம்பித்தவர்கள் , இது பற்றி தெளிவாகப் பேசுபவர்களிடம் போய் நிற்கிறார்கள் ; ஈர்க்கப்படுகிறார்கள். மகான்களிடம் சாதகர்கள் ஈர்க்கப்படுவது இவ்விதமே ! சாதகருடைய உண்மையான தேடலைப் பொறுத்து , மகான் அவருக்கு ஸ்பரிச தீட்சையோ , நயன தீட்சையோ அளிக்கிறார். மனிதர்களும் , பறவைகளும் , மிருகங்களும் அமைதியாக உலவும் அந்த மகானின் சந்நிதியில் , மனித மனம் அடங்குகிறது ; என்ன கேட்க வந்தோம் என்று தெரியாமல் சரி , என் துணை நீயே என்று கைகூப்பி முழுவதுமாக சரணாகதி அடைகிறது.

சரணாகதி என்பது கர்வம் அழித்தல் ; அகந்தை அகற்றுதல். அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளி வேடங்கள். அந்தத் துறவு காவி உடுத்தாது. தங்க ருத்ராட்சம் , வெள்ளியில் கோத்த துளசி மாலை , சிவப்பு கல் சுற்றி வைரம் பதித்த ப்ரேஸ்லட் , பொங்கும் முடி , கட்டைச் செருப்பு என்றெல்லாம் அணியாது. துறவு என்பது தோற்றமல்ல ; அது உள் நடப்பு. சொத்துக் குவிப்பு அல்ல ; எல்லாம் விட்ட சுகம் ; இடையறாத பரம சந்தோஷம் உள்ளே மிதந்துகொண்டிருக்கும் நிலை.

மகான்களின் தீண்டலால் உள்ளே பல கதவுகள் திறக்கும் ; உள்ளே பல இடங்களில் தீப்பற்றி எரியும்.  அடடே. இதுதான் விஷயமா !  என்று உண்மைகள் தெரிய வரும்.  இப்படித்தான் மரணம் நிகழப்போகிறதா , இங்கிருந்து இடம் மாறுவதுதானா , இந்த இடத்திலிருந்து நகருமோ , இதுதானா !  என்று மிகப் பெரிய விடையைத் தரும் ; பெரிய நிம்மதி ஏற்படும். தன்னை அறிந்தவருக்கு மரண பயம் இல்லை. அந்த விடுதலை அடைந்தவரின் முகம் , ஆனந்த பரவசத்தில் மின்னும். கண்களில் ஒளி மிகும். அவர்கள் தொடர்ந்து அந்த நிலையிலேயே இருப்பர். ஏதேனும் தொழில் செய்வர். இல்லறம் நடத்துவர். இல்லறமே இல்லாது தனியே திரிவர். பிச்சைக்காரனாக இருப்பர். பெரும் செல்வந்தராக இருப்பர். சமைத்துச் சாப்பிடுவர். சாப்பிடாமலும் இருப்பர். கிழிந்த உடையுடன் இருப்பர். சீராக உடுத்துவர். பேசுபவர்களாக இருப்பார்கள் ; பேசாதவர்களாகவும் இருப்பார்கள். எப்படியிருப்பினும் அந்த முகத்திலிருந்து. அந்த உடம்பிலிருந்து சத்தியம் மிக அற்புதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.

புலி , புலிக்குட்டியை நக்கித்தான் புலியாக்கும். புலிக்குட்டி பெரிய புலியான பிறகு , இன்னொரு குட்டியைப் பேணத் துவங்கிவிடும். ஞானப் பரம்பரை இப்படித்தான் உருவாகும். உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் இந்த லட்சணம் வந்து விடாது. கோடியில் ஒருவருக்கே இந்த உத்தம ஞானம் கிடைக்கும் இது ஒரே ஜென்மத்தில் முடியும் விஷயம் அல்ல ; இந்த ஜென்மத்தில் உள்வாங்கி , உள்ளே உரமிட்டு வளர்த்து , இறந்த பிறகு , அடுத்த ஜென்மத்தில் பிறக்கும்போதே வீரியத்தோடு பிறப்பவர்கள் உண்டு. உள்ளே என்னது என்று புரிந்து மௌமாகி , தன் மௌனத்தை ஞானமாக மாற்றி , குடும்பத்தோடு ஒட்டி இருந்து , மடிந்து போவாரும் உண்டு. அப்பா இறந்து போனார் என்று மகன் சொல்வான். அப்பா ஞானியானார் என்பது சுற்றியுள்ளவருக்கே தெரியாமல் போகும்.எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்களுடைய பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ( விகடன் வெளியீடு ) என்னும் நூலிலிருந்து.

from fb Ramana Mandiram
3
Dear Devotees,

 Sri Sadhu Om has written that it is not necessary for sincere aspirants to name before-hand the feeling-'I' either as ego or as the Self. I am totally one with this insight, for Sri Bhagwan Ramana has Himself taught there are not two persons, ego and the Self, in the aspirant. Besides, everyone of us has the experience 'I am one and not two'. Have we not?
Therefore, from the stage of practice itself, we should not give room to an imaginary dual feeling--one 'I' seeking for another 'I'- by differentiating ego and Self as lower and higher self respectively.
Are there two selves, one to be an object known by the other? For, the true experience of all is 'I am one'. For, the experience of Jnani is 'I am I'.


In the lighter vein: however, Sri Beloved Abstract here alone seems to have many selves, each with a separate fantastic tale to tell, even if one is not willing to listen.

Thanks very much.
   Pranam,
       Anil

4
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on June 18, 2018, 10:31:16 AM »
Verse  3:

ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
    சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
    அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
    திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.


He is of Tiruvaaroor.
He abides in my mind.
With the dart still in the bow,
He burnt the triple towns.
He is God.
He is Brahmin.
He is Deity.
He wields the trident of pure,
dazzling rays.
He has for His three eyes the three fires.
He rules me-- His bonded slave.;
He bathes in the fire.
He is Nectar to His servitors.
in His divine body blazing like fire,
He has a patch that is coal-black.

Arunachala Siva.
5
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on June 18, 2018, 10:25:12 AM »
Verse 2:


ஊனேறு படுதலையி லுண்டி யான்காண்
    ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண்
    அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
    மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.


He is of Tiruvaaroor.
He abides in my mind.
A fleshy, severed head is His alms-bowl.
He is the Om.
He is the Author of the eon.
He is Ayyaaran who roams about riding a Bull.
He is the macrocosm.
He is beyond the macrocosm.
He is our Manikantan whose hand sports a deer.
He is a great tapaswi.
He is the fruit of great tapas.
He wears a melliferous chaplet of Konrai flowers.

Arunachala Siva.
6
how many selves do we have ?
7
thank you

namasthe

namo ramana
8
Dear Sri drsundaram,

Sri Bhagwan's Vichara is not the meditation as we know it. In meditation, there is the ego and the object meditated upon. This is the indirect method in which the subject and object differ. However, we must understand that in the Self-enquiry, or the Vichara, both subject and the object meditated upon are the same and It is the Self.

Pramana,
   Anil
9
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on June 17, 2018, 10:37:32 AM »
Tiru Arur: (1)

Verse  1:


கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
    கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
    அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
    எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனியான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.


He is of Tiruvaaroor.
He abides in my mind.
He has mantled Himself in the hide of the ichorous tusker with a large trunk.
He is blue-throated.
He has an eye In His forehead.
He is the Chief.
He causes a snake to dance.
He dances in the fire.
He has a sharp trident.
He is our Chief;
He becomes the seven worlds.
He is a bright-rayed lamp.
He wields a radiant Mazhu.
His hue is like that of the crimson sky.

Arunachala Siva.


10
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on June 17, 2018, 10:29:32 AM »
Verse  10:


அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
    ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
    சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவர்க்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
    பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.


He is the bridegroom abiding at Maraikkaadu.
He is the noble One who so joyously stretched Himself as a blazing column of fire that neither Brahma nor Vishnu could know Him.
He pressed His radiant toe and caused the King of Lanka to tremble.
Later He blessed him with great grace.
He gave him a name and great weaponry.
He will cure the malady of cruel karma that causes delusion.

Padigam on Tiru Maraikkadu completed.

Arunachala Siva.
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10